9.6.10

ரணம்



புரியக்கூடும் ஓர்நாள்
மரமிழந்த கூவலின் தவிப்பு.
காரணமின்றித் தாக்கப்பட்ட 
குரைப்பின் வலி.
நிழலின்றிப் பொசுங்கும் 
பாதங்களின் சூடு.
இல்லாதவனுக்கும்
இருப்பவனுக்குமான
சீழ் பிடித்த இடைவெளி.

பரிவின்றித் துரத்தப்படுபவனின் 
அன்புக்கேங்கும் தாகம்.
உணவற்று உறங்காது நீளும்
பசித் தீயின் கொடும் நாக்கு.
நிராதரவாய் விடப்பட்ட 
தேசமிழந்தவனின் ரணம்.

புரியக்கூடும்
மற்றொரு பாதத்தின் கீழ்
மற்றொரு நிலப்பரப்பு 
சரிய நேர்கையில்.

16 கருத்துகள்:

Madumitha சொன்னது…

புரிதல் தாமதமாகிப் போனால்...?

ஹேமா சொன்னது…

புரியும் சுந்தர்ஜி...புரியாது அதைத் தானே அனுபவிக்கும்வரை !

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி
-மதுமிதா.புரிதல் தாமதித்தல் குறையல்ல.புரியாதது போல் வேடம் கட்டுதல் நெடுநாள் நீடிக்காது.

-ஹேமா.தனக்கு வந்தால் தானே தெரியும்.அப்படித்தானே?

பா.ராஜாராம் சொன்னது…

வலி ரொம்ப நல்லாருக்கு என்று சொல்லலாமான்னு தெரியலையே சுந்தர்ஜி.

:-( இந்த குறியீடில் எப்படி சொல்வேன் இத்தருணத்தை?

சுந்தர்ஜி சொன்னது…

குறியீடு சொல்லாததை உங்கள் வார்த்தைகள் சொல்லிவிட்டதே பா.ரா.

Matangi Mawley சொன்னது…

"ரணம்" அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் வலி புரியும். வீணாக வேதனை பகிர்ந்து கொள்கிறேன் என்ற பெயரில் பரிதாபம் கூறி நடிப்போருக்கு புரிவதில்லை- அவர்கள் எதை பகிர்ந்துகொள்கிறார்கள்என்பது! அருமை!

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மாதங்கி.

கமலேஷ் சொன்னது…

அருமையான கவிதை நண்பரே...
கவிதையின் கடைசி வரிகளில்
மனமும், கவிதையும்
இன்னும் கனமாகி விடுகிறது.

//குறைப்பின் வலி //
எங்கே எதுவும் எழுத்து பிழை
இருக்கிறதா தோழரே.?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கமலேஷ்.பிழை திருத்தியமைக்கும்.”குரை”ப்பு ”குறை”ப்பாகிவிட்டது.

Anonymous சொன்னது…

மிரட்டிவிட்டன நிலப்பரப்பு சரிந்தபின் கிடைக்கும் வெகுமதிகள்.மூர்ச்சையானேன் சுந்தர்ஜி ஸார்.கவிதை ப்ரமாதம்.
-ப.தியாகு.

Anonymous சொன்னது…

பேரிழப்பின் வலி சாட்டையடி வரிகளால் தேகத்தில் இறங்கித் துடிக்கவைத்தது.யாருக்கும் வரக்கூடாதென ப்ரார்த்தனை செய்தது ஆன்மா.
-தனலக்ஷ்மி பாஸ்கரன்.

Anonymous சொன்னது…

நிச்சயம் ஒரு நாள் புரியக்கூடும் சார்.
-ராஜீவ் காந்தி.

Anonymous சொன்னது…

அற்புதம் நிகழ்த்துகிறீர்கள் உங்கள் கவிதை வரிகளால்.உங்கள் சிந்தனை ஜீவனை சிலிர்க்க வைக்கிறது.கோடிக்கோடி வாழ்த்துக்கள்.
-விநாயகமூர்த்தி.

Anonymous சொன்னது…

புரியவைத்த கவிதை.
-மீனாதேவி

Anonymous சொன்னது…

பரிவைச் சுரக்கும் சிறு சிறு பதைப்புகளை அடையாளமிட்டுச் செல்லும் கவிதை இறுதி முடிப்பில் திடுமென ஆழிப் பேரலையாய் எழும்பி கண்ணீர்க் கடலுக்குள் மூழ்கடிக்கிறது.காயங்களால் நமது குருதி வெளியாகுகையில்தானே கதறலும் பரிதவிப்பும்.அதுவரை அது வேடிக்கை காணச் சொல்லும் அடுத்தவனின் துயரம். குறி தவறாது எய்துதலின் வலிவும் தீர்க்கமும் உங்கள் சொல்லம்பிற்கு.
-உஷா.

Anonymous சொன்னது…

மனிதத் தோலை ஊடுருவி ஈரம் தேடும் நல்பதிவு.
-ஜே.ஃப்ராங்க்ளின் குமார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator