21.11.10

தலையெழுத்து


நமது மொத்த பலவீனமே நமது நாட்டின் பரப்பளவுதான்.மிகப் பெரிய நாடும் அதற்கேற்ப பொறுப்புணர்ச்சி இல்லாத மக்கள்தொகையும் தொலைநோக்குப்பார்வையில்லாத் தலைவர்களும்தான் நம் எல்லா இன்னல்களுக்கும் காரணம்.

ஒரு பிரச்சனை எப்படித் தொடங்கும் எப்படி முடிக்கவேண்டும் என்ற விவேகம் இல்லாமல் தொடங்கியபின் அதற்குப் போராடும் தலைவர்களைக் கொண்டுதான் எல்லாக் கட்சிகளும் இருக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தெருவில் வந்து போராடும் எந்தக் கட்சி 60களிலும் 70களிலும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பொறுப்போடு நடந்துகொண்டது? நமக்கு பரபரப்பான மக்களைக் கவரக்கூடிய விவாதங்களும் பிரச்சனைகளும் போதும்.

ஊழலைப் பின்தொடர்வதிலும் அடுத்தவனின் தலையை உருட்டுவதிலும் நம் சக்தி வீணாகிக்கொண்டிருக்கிறது. முதலில் தெருவில் சிறுநீர் கழிக்காத, காறி உமிழாத, தன் வீட்டிற்கிணையான இது என் நாடு என்ற அக்கறைகொண்ட , சாலைகளில் குப்பை போடாத மக்களிலிருந்து துப்புரவு தொடங்கட்டும்.

ரத்தத்தில் இது வந்துவிட்டால் அப்புறம் உனக்கு ஏன் லஞ்சம் தரவேண்டும் என்ற கேள்வி தானாய்ப் பிறக்கும். பேருந்துகள் எரிக்கப்படாது. கற்கள் வீசப்படாது. வசனங்களில் காலத்தை ஓட்டும் தலைவர்கள் வீட்டுக்கு அல்லது கல்லறைக்குச் செல்வார்கள். ஊரெல்லாம் நாசமாக்கும் மாநாடுகளும் தேவையற்றுச் செலவழியும் எரிபொருள் தொடங்கிய அனைத்து செலவுகளும் காணாது போய்விடும். ஆனால் நாம் எப்போதுமே சிறியவற்றிலிருந்து பெரியவை நோக்கி நகரப் பழகியதில்லை. எல்லாக் கதைகளிலும் ஊழலையும் கையூட்டையும் கருப்புப்பணத்தையும் கருவாகக்கொண்டு வாழும் ஷங்கர் தொடங்கி சாமானியன் வரை இதுதான் கதை.

சரி. திசை மாறுகிறது. தொடங்கிய பாதைக்குத் திரும்புகிறேன்.

வினோபா பாவே கொண்டு வந்த பூதான் அந்தோலன் ஏன் எடுத்துச் செல்லப்படவில்லை?இன்றைய நகரமயமாதலுக்கு அது பெரும் தீர்வாய் இருந்திருக்குமே?

வயல்களுக்கு பேக்டம்பாஸையும் எண்டோசல்பானையும் பயன்படுத்த நிறுவனங்கள் 70களில் தெருமுனைப் பிரச்சாரங்கள் சினிமாக்கள் காட்டி மக்களை முட்டாளாக்கி விளைநிலங்களை குட்டிச்சுவராக்கிச் சென்ற பின் இன்றைக்கு ஆர்கானிக் காய்கறிகளைப் பற்றிப் பேசுகிறோம்?ஏன் எந்தக் கட்சியும் அது பற்றி அப்போது குரலெழுப்பவில்லை?

கோக்கும் பெப்சியும் எல்லா வளங்களையும் சுரண்டிப்போன பின்பும்- ப்ளாஸ்டிக் உபயோகத்தால் வரும் நாசங்களையும் பற்றிச் சொல்லவும் எல்லாம் தலைக்கு மேல் போனபின்புதான் விஞ்ஞானிகளுக்கும் தலைவர்களுக்கும் தெரிகிறது.

இந்த நாட்டின் கல்வி நமக்கு எந்த விதத்திலும் உதவாத நாடுகளுக்கு மருத்துவர்கள் மூலமோ பொறியாளர்கள் மூலமோ கணிணி வல்லுநர்கள் மூலமோ கடத்தப்பட்டு அந்த நாடும் அந்தக் குடும்பங்களும் வளர உதவுகிறது.

போதும்.ரத்தம் சூடேறுகிறது.பட்டுத்தெரிந்து கொள்ளும் நாடும் அதன் தலைவர்களும் வர்த்தக நோக்கு ஊடகங்களும், படிப்பதற்குச் சுவாரஸ்யத்துக்குதவும் வலைப்பூக்களில் மட்டும் வெளியே முகம் காட்டும் போலிச் சூடேற்றிகளும், மோசமான போராளிகளும்.

நம் தேவை மற்றுமொரு கட்சியோ தேர்தலோ அல்ல.ஒன்று திரண்டு தேர்தல்களைப் புறக்கணித்து இயக்கத்தை வழிநடத்தும் அறிவாளிகளை இந்திய அளவில் ஒருங்கிணைத்து சட்டம் கல்வி விவசாயம் நிர்வாகம் வெளிவிவகாரம் போன்றவற்றில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டுவரும் வரை போராடுவதுதான்.

இந்தப் போராட்டத்துக்கு விலை மிக அதிகம். எத்தனை பேர் இதற்கு யோசிக்காமல் விலை கொடுக்கத் தயார்?

10 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

//ஆனால் நாம் எப்போதுமே சிறியவற்றிலிருந்து பெரியவை நோக்கி நகரப் பழகியதில்லை//
சரியான புள்ளியை சுட்டியுள்ளீர்கள். விமர்சனம், நம்பிக்கை இழப்பு என்பதாக வினையாற்றுகிறோம் பொதுவாக. நமது கடமை என்பது சமூக உணர்வாக, செயலாக, வளரும் பிள்ளைகளின் முன் நாம் உதாரணமாக இருக்க வேண்டியதன் அவசியம் என micro level இல் யோசிக்க, அலச, மாற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதற்கான தளங்கள் நிச்சயம் தேவை.

சுந்தர்ஜி சொன்னது…

மிக்க நன்றி சைக்கிள்.நான் மிக நம்பிக்கையுடன் இருந்தேன் இதற்கான முதல் எதிர்வினையின் குரலுக்காக.உங்களிடமிருந்து வந்த முதல் குரல் எனக்குள் மேலும் எதிரொலிகளை எழுப்பி மற்றுமொரு படி செல்ல உதவியிருக்கிறது.மறுபடியும் நன்றிகளுடன்.

ரிஷபன் சொன்னது…

பொருத்தமான படமும்!
இந்தக் கட்டுரை எழுப்பும் கேள்விகளுக்கு பதில் தரத்தான் நேர்மையான அரசியல்வாதி இல்லை.. நமக்கோ நாட்டின் தலையெழுத்து அரசியல்வாதிகளிடம்தான் என்கிற மூட நம்பிக்கை எப்போதும்.

vasan சொன்னது…

இந்த‌ "எரிம‌லை"யை இவ்வ‌ள‌வு நாள் எப்ப‌டி க‌விதைப் ப‌னியில் ம‌றைத்திருந்தீர்க‌ள், சுந்த‌ர்ஜீ?
இந்த `நாகாஸ்திர‌த்தை'யும் அர‌சிய‌ல் க‌ண்ண‌ன்க‌ள் தேரை கீழே அழுத்தி அத‌ர்ம‌த்தை தப்பிக்க‌ விட்டு விடுவார்க‌ள். நில‌த்தை வீண‌க்கி, நம் நெற்க‌ளை அமெரிக்காவிற்கு அடிமை சாச‌ன‌ம் எழுதிக்கொடுத்த‌ எம் எஸ் சுவாமிநாத‌ன் இன்னும் அர‌சிய‌லில் ப‌த‌விக‌ளில். அந்நிய‌ நாடுக‌ளில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ இரசாய‌ன கொலை ம‌ருந்துக‌ள் இந்தியாவில் ம‌ட்டும் விற்ப‌னை. பிளாஸ்டிக் கேடு தெரிந்திருந்தும், தும்பை (ப‌ண‌த்திற்காய்) விட்டு விட்டு, வாலைப் பிடிப்ப‌தாய் பாவ‌னை.
நம்ம ஊர் பாட்டில் கோக், பெப்சியை, அய‌ல்நாட்டான் குடிப்ப‌தில்லை, டின் கோக், பெப்சி ம‌ட்டும் தான் குடிப்பான், தெரியுமா? நாட்டை எப்போதோ ஆட்சிய‌ள‌ர்க‌ளும், பொரும் வ‌ணிக‌ர்க‌ளும் ப‌ங்கிட்டு விற்று வ‌ருகின்ற‌ன‌ர். நான் இந்தியா சூப்ப‌ர் ப‌வ‌ர் ஆக‌ப் போகுதுன்னு க‌னவு காணுவோம்,
அன்றைய‌ ம‌க்க‌ள் ஜ‌னாதிப‌தி அப்துல்க‌லாம் சொன்ன‌ மாதிரி.

Harani சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி..
காலையில் படித்ததுமே முதல் கருத்துரையாக தெரிவித்தவை அனைத்தும் என் கணிப்பொறியுடன் ஏற்பட்ட தகராறினால் அழிந்துவிட்டது. இருப்பினும் இதற்குப் பின்னுர்ட்டம் அவசியம் என்பதால் என்னால் நிறுத்த முடியவில்லை.
மிகவும் சரியான பதிவு சுந்தர்ஜி. இங்கே யாரும் தலைமைக்குத் தகுதியானவர்கள் இல்லை. அதற்கான தகுதியையும் அவர்கள் பேணவில்லை. மதிப்புமிகு அப்துல் கலாம் போன்றவர்கள் சிலரே தப்பித் தவறி கண்ணில் பட்டுவிடுகிறார்கள்.
தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலை அத்தனை மோசமாக உள்ளது. அதன் வழியே அத்தனை அரசியல்வாதிகளும் போய் வந்துகொண்டிருக்கிறார்கள். அதில் சாலையை சரிசெய்து தெருவிளக்குகள் பொருத்தவேண்டும் என்பது உறைக்கவேயில்லை. ஆனாலும் இருட்டில் இருந்தாலும் எதுவுமேயில்லாத மக்கள் கொடுப்பதை சத்தம்போடாமல் வாங்கிக்கொண்டு ஓட்டுபோடுவதற்கு முனைப்புக் காட்டும் அவலம் அருவருக்கத் தக்கதுதான். தற்போது ஆண்களை விட பெண்கள் அதிகம் எச்சில் உமிழ்கிறார்கள்.

எந்தக் கட்சியினர் மாநாடு நடத்தினாலும் மின்சாரத்தை அரசாங்கக் கம்பத்திலிருந்து எடுத்துக் கொள்வது.. முற்போக்கு, பிற்போக்கு... இலக்கியம்... சமூக அக்கறை, எதார்த்தம் என்று பேசும் எல்லாம் உள்ளுக்குள் சாதி சாக்கடையை ஓடவிட்டுக் கொண்டிருக்கும் அசிங்கமும் இங்குதான் நடக்கிறது. ரத்தத்தில் வரவேண்டும் என்றீர்களே இதைவிட சாட்டை வார்த்தை தேவையில்லை.
அருமை.
கல்வி ஒன்றை மட்டுமே தரமாக, பண்புடன்,வியாபாரம் இல்லாமல் ஒழுங்குபடுத்துகிற ஒரு சரியான அரசியல் நிலைப்பாடு வந்துவிட்டால் போதும்.

மக்கள் ரத்தத்திலிருந்து இலவசம் என்கிற ஒரு சொல்லை உறிஞ்சி எடுத்துவிட்டு புது ரத்தம் ஏற்றவேண்டும். சரியான சமயத்தில் பொறுப்புணர்வான பதிவு. அடிப்படையிலிருந்து இவற்றைச் சரிப்படுத்தவேண்டிய கட்டாயம் ஒரு இராணுவ அதிகாரத்தின் ஆணையைப்போல வரவேண்டும்.

நன்றி சுந்தர்ஜி.

santhanakrishnan சொன்னது…

தலையெழுத்துகளின் மீது
எனக்கு நம்பிக்கையில்லை
சுந்தர்ஜி.
புதுப்புனல் நுரைத்து
வரும்போது கசடுகளும்
சேர்ந்தே வரும் என்பது நியதி.

Vel Kannan சொன்னது…

கால தேவையான பதிவு
//இந்தப் போராட்டத்துக்கு விலை மிக அதிகம்//
விலை என்று நீங்கள் சொல்வது காலம் தானே ஜி..

Vel Kannan சொன்னது…

தவிர்க்க முடியாத சில காரணங்களால் இணைய பக்கம் வர முடியவில்லை ஜி,
இதோ வந்தும் விட்டேன் படித்தும் விட்டேன். அகம் மிகவும் கவர்ந்தது
ஒரு விண்ணப்பம் ஜி ... நீங்கள் சில சமயம் வைக்கும் back-ground picture -ஆல் தெளிவாக எழுத்து தெரியவில்லை. மற்றபடி படங்கள் அருமை தான்.
இதனை சற்று கவனத்தில் கொள்ளவும் (ஒரு வேளை இந்த இடர்பாடு எனக்கு மட்டுமா என்றும் தெரியவில்லை அவ்வாறு இருப்பின் என் விண்ணப்பத்தை தவிர்த்து விடவும்)

நிலா மகள் சொன்னது…

சரியான கோணத்தில் சிந்தையை தூண்டும் பதிவோடு நின்றிடாமல், ஒருங்கிணைத்து செயல்பட ஏதேனும் செய்ய விழைவோம் ஜி.

தமிழ்க் காதலன். சொன்னது…

வாழத் தெரியாதவன் வாழுகிற நாட்டில்........ ஆளத்தெரியாதவன் ஆள்வான்......., நிசத்தில் மாற்றம் வர நம் சந்ததிகள் தேசம் மீதான தெளிந்த பார்வைக்கு பழக்க பட வேண்டும். நம்முடைய சாபக் கேடு.... நான் படிக்க வேண்டும். பொறியாளர், மருத்துவர்., மற்றும் உள்ள உயர்வாழ்வு ( பொருளாதாரத்தில் ) கல்வி கற்று..., வெளி நாடுகளில் செட்டில் ஆவதுதானே நம்முடைய ஒரே நோக்கம்.

இந்த தேசம் எக்கேடு கெட்டால் எனக்கேன்ன? அது என் வேலை அல்ல. அதற்குதான் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என எண்ணும் "படித்த முட்டாள்களைத்" தானே நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். படிக்காத அரசியல்வாதி, படித்த முட்டாள் கூட்டத்தின் பிடியில்.... இந்த தேசம்.

இங்கு தவறுகளுக்கு பெரும்பங்கு வகிப்பது "படித்தவர்கள்" மட்டுமே. படிப்பதே சமூக விரோதமாக செயல்படவே என்பது போல் செயல்படும் நம்முடைய "அடிமை அறிவாளிகள்" நம் தேசத்தின் பலவீனம்.

என்ன பேசி என்ன...? நிசத்தில் ஒரு புல்லின் முனையளவு மாற்றம் நிகழ எதையாவது செய்ய முடியுமா...?

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator