24.11.10

பெரும்பான்மை


சொற்பக் கவிதைகள் மட்டும் எழுதிச் செத்த கவிஞனை- சில பாடல்கள் மட்டும் பாடிப்பறந்தவனை என்று எத்தனை பேரை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்? குடிசை ஜெயபாரதி-இசைமேதை எம்.பி.சீனுவாசன்-நடிகைகள் ஷோபா-ஸ்மிதா பாட்டில்-அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாம்- எழுத்தாளர் மௌனி-ஜி.நாகராஜன் என்று இந்தப் பட்டியல் நீளக்கூடும் என் நினைவு ஒத்துழைத்தால். தஞ்சை ப்ரகாஷுக்கு இன்று அவர் பெயரை வைத்து நடக்கும் களேபரங்களும் உறவு பாராட்டலும் தெரியக் கூடுமானால் இருக்கும் வரை எங்கே போனீர்கள் என்ற முதல் கேள்வியுடன் தன் அஸ்திரத்தை ஏவக்கூடும்.

நமக்கு எதையும் தனியே நின்று சாதிக்கும் புதியவர்களை அல்லது புதிதாய்த் துவக்கம் கொள்ளும் எதையும் அதன் தரத்தின் அடிப்படையில் எடைபோடவோ ரசிக்கவோ துணிவில்லை. மரணத்துக்குப் பின் அங்கீகரிக்கவோ அடையாளப்படுத்தவோ இடையூறாக சம்பந்தப்பட்டவன் வரப்போவதில்லை என்ற சௌகர்யம்.

எதை நுகர்வதற்கும் சான்று அல்லது அதன் brand image துணைக்கு வரவேண்டியிருக்கிறது. சுயமாய் எதையும் தேர்வு செய்யும் பட்டறிவு குறித்தும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது

ஒரு புது ருசியை உணரவோ அங்கீகரிக்கவோ நமக்குப் பழக்கம் கிடையாது. ஒரு பெருங்கூட்டம் செல்லும் பழகிய பாதையில் போவதும் எல்லோரின் கைத்தட்டல்களில் தன்னுடையதும் கரைந்து போவதிலும்தான் ஆர்வம் அதிகம். தடம் தெரியாத பாதைக்குப் பின் தெரியும் அடர்நிழலின் இருளை விரும்புவதும் இல்லை.

இதையெல்லாமும் தாண்டிப் பறக்கும் அபூர்வப் பறவைகளின் சிறகசைப்பும் நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது. அந்தப் பறவைகள் கூவும் கூவலின் மொழி காலங்கள் தாண்டிப் புரிந்துகொள்ளும் அவலம் மறுபடி மறுபடி நிகழ்ந்தபடியே இருக்கிறது.

பாரதியின் காலத்தில் அவரோடு தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்ளவோ அவரின் மேதமையைப் புரிந்து கொள்ளவோ யாருமில்லை. இன்று உணர்ச்சியற்ற சிலையாய் காக்கை எச்சத்தோடு பிறந்த நாள் இறந்த நாளுக்கு அரசியல்வாதிகளின் மாலைகளுக்காகக் காத்து நிற்பதையும், தன் கூட்டத்திற்கு வர நேரமில்லை என்ற காந்தியையே அவசியமில்லை.கூட்டம் குறித்த நேரத்தில் நீங்கள் இல்லாமலே நடக்கும் என்ற கர்ஜித்தவன் பிணங்களுக்குச் சமமாய்க் குளிரூட்டப்பட்ட அறைகளில் தன் பாடல்கள் எந்திரங்கள் போன்ற கவியுணர்வற்ற கூலிக்கு மாரடிக்கும் மனிதர்களால் பாராட்டப்படுவதையும் நினைத்தும் பார்த்திருக்கமாட்டான்.

ஆக இருக்கும் போது நெருப்பின் தன்மையுடன் திரியும் இதுபோன்ற சுடர்களை நெருங்கத் துணிவின்றி இறந்தபின் தலையில் வைத்துக் கொண்டாடும் பெருங்கூட்டம் இதைவிட மோசமாய் அவர்களை அவமதிக்கமுடியாது.

6 கருத்துகள்:

vasan சொன்னது…

இது ப‌ட‌த்திற்கு...
ஆட்டு ம‌ந்தைக‌ளாய், மேய்ப்ப‌ர்,
(பி)பச்சை புல் காட்ட‌,
காட்டில் மேய்ந்து விட்டு,
தேர்த‌ல் ச‌ந்தையில்
வோட்டு ஈனும் ஈன‌ப் பிற‌விக‌ளாய் ம‌க்க‌ள்.
ஒவ்வொரு மேய்ப்ப‌ர்க‌ளுக்குள்ளும் ஒரே குண‌ம்,
அணிவ‌து ம‌ட்டும் வெவ்வேறு நிற‌க் கோம‌ண‌ம்,
ஏசுவாய், க‌ண்ண‌னாய் வேஷ‌ம்,
செய்வ‌தெல்லாம் ப‌ஞ்ச‌மா பாவ‌ம்.
இது ப‌திவுக்கு...
'பாவித்தால் போதும் ப‌ர‌மநிலை யெய்துத‌ற்கே'
என எல்லாமாய் வாழ்ந்த‌ பார‌திக்கு ஏன் இந்த‌
வீண‌ர்க‌ளின் அணிவ‌குப்பு. நிலம‌திர‌ சிரிப்பான் பார‌தி
இந்த‌ நிலை கெட்ட‌ ம‌னித‌ரை நினைத்தாலே.

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

தகுதியுள்ளவை தப்பிப்பிழைக்கும் எனும் ஆதிமந்திரம் சில நேரங்களில் பொய்யாவதுண்டு,,ஆயினும் நல்லவை/தகுதியுள்ளவை நீரில் மூழ்கிய ரப்பர் பந்தைப்போன்று கண்டிப்பாக வெளிவந்துவிடும்

சைக்கிள் சொன்னது…

உண்மைதான்.அதனால்தான் ''கடை விரித்தேன் கொள்வாரில்லை'' என்றார்கள் போல.நல்லவற்றை தேடுவதும் கூட ஒரு பயிற்சி இலக்கிய வாசிப்பில் ஒருவர் படிகளை கடப்பது போல.சொல்லித் தர இங்கே தளங்கள் குறைவு திரு.சுந்தர்ஜி.

ரிஷபன் சொன்னது…

//இதையெல்லாமும் தாண்டிப் பறக்கும் அபூர்வப் பறவைகளின் சிறகசைப்பும் நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது. அந்தப் பறவைகள் கூவும் கூவலின் மொழி காலங்கள் தாண்டிப் புரிந்துகொள்ளும் அவலம் மறுபடி மறுபடி நிகழ்ந்தபடியே இருக்கிறது.//
அனல் பறக்கிறது.. அதில் உண்மையும்.

santhanakrishnan சொன்னது…

ஜெயபாரதி
எம்.பி.சீனுவாசன்
ஷோபா-ஸ்மிதா பாட்டில்
ஜான் ஆப்ரஹாம் மௌனி
ஜி.நாகராஜன்
ப்ரகாஷ்.
பட்டியல் மனசை
நெகிழவைக்கிறது.
நீர்த்துப் போனவைகளை
ரசிப்பதே பெரும்பான்மையின்
முதல் தகுதியாகும்.

நிலா மகள் சொன்னது…

//எதையும் அதன் தரத்தின் அடிப்படையில் எடைபோடவோ ரசிக்கவோ, ஒரு புது ருசியை உணரவோ அங்கீகரிக்கவோ நமக்குப் பழக்கம் கிடையாது. தடம் தெரியாத பாதைக்குப் பின் தெரியும் அடர்நிழலின் இருளை விரும்புவதும் இல்லை. இதையெல்லாமும் தாண்டிப் பறக்கும் அபூர்வப் பறவைகளின் சிறகசைப்பும் நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது.//

வாழுங் காலத்திலேயே கொண்டாடப்படும் பேறு வெகு சிலருக்கே வாய்ப்பதென்னவோ உண்மைதான். முன்னெடுக்க வேண்டியவர்களின் தன்னலத்தின் வெளிப்பாடோ...

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator