20.12.10

முன்னோடி


எனக்குப் பிடித்தமான என் உயிரில் கலந்த கவிதையும் இசையும் சிரிப்பும் என்னை விட்டுச் சில காலம் வேறெங்கோ சென்றுவிட்ட ஓர் உணர்வு.
கொஞ்ச நாள் இப்படியும் அப்படியுமாகத்தான் இருக்கிறேன்.

எப்போதும் எனக்குத் தோன்றும் ஒரு விஷயம் ஒருவன் ஒரு நல்ல கவிஞனாகவோ இசைஞனாகவோ ஏதோ ஒரு சிறப்பியல்பு உடையவனாகவோ இருப்பதையும் விட சமூகத்தின் மீது அக்கறை கொண்டவனாக பிறரின் உணர்வுகளை மதிப்பவனாக என்ன சொல்கிறானோ அதைச் செயலிலும் கடைப்பிடிப்பவனாக எவன் இருக்கிறானோ அவனே உயர்ந்தவன்.

என் எழுத்தின் ஓசையை விடவும் என் செயலின் நிசப்தத்தை மிகவும் நான் விரும்புகிறேன். என் செயலுக்கு திசையைக் காட்டவும் என்னை அடையாளப் படுத்திக்கொள்ளவும் என் எழுத்தை நான் நம்புகிறேன். தனியாளாய் நிற்பதை விடவும் ஒத்த சிந்தனையுள்ள பல ஆயிரம் என் சக தோழர்களுக்காக என் எழுத்தின் மூலமாக என்னைக் காட்டிக்கொள்ளவும் அதன் மூலமாக நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவும்தான் விரும்புகிறேன்.

என்னோடு பழகி என்னை அறியாத என்னைப் படித்து கருத்துக்களைச் சொல்லத் தயங்குபவர்களுக்காகச் சொல்ல விரும்புகிறேன்.

என் எழுத்து இல்லாத என் எதிரியைக் கூட மரியாதை குறைவாக மதிப்பிடாது. எந்தக் காலத்திலும் எந்த விஷயத்தையும் வன்முறையால் அடைய முயலாது. எந்த எதிர்கருத்தையும் குறைவாக எடை போடாது. எனக்குத் தெரியாத பல விஷயங்களை என் இறுதி மூச்சுள்ள வரையிலும் கற்க நான் தயாராக இருக்கிறேன். இது சிந்திப்போருக்கான தளமாகவும் இயக்கமாகவும் இருக்கும். பேச்சு எழுத்தின் மூலமாகவும் என்றைக்கும் மெருகு குலையாத அஹிம்சாவாதத்தின் மூலமாகவும் முரட்டுத்தனமான புறக்கணிப்பின் மூலமாகவும்தான் நம் இலக்கை அடையமுடியும்.

அநேகமாக எல்லாத் தளங்களிலும்- ஊடகங்களோ பத்திரிகைகளோ வலைத்தளங்களோ கட்சிகளோ சிந்தனாவாதிகளோ- நான் காண்பது பிறரின் குறைகளைக் காரசாரமாக விவாதித்து குற்றச்சாட்டை ஊர்ஜிதப் படுத்துகிற சுவாரஸ்யத்தோடு அவற்றை விட்டு விடும் தன்மையையே. இதுபோல் எத்தனை ஊழல்களையும் முறைகேடுகளையும் பொறுக்கவழியற்ற அராஜகங்களையும் நாம் தாண்டி வந்திருக்கிறோம்? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.

இது நாம் செய்து கொண்டிருக்கிற மிகப் பெரிய குற்றம். என் பதிமூன்று வயதுள்ள- அரசியல் துப்புரவில் இப்போதிருந்தே ஆர்வம் காட்டும்-என் எல்லாப் பதிவுகளையும் படித்து அவற்றிற்கான பின்னூட்டங்களையும் தொடர்ந்து படித்துவரும்-
என்னுடன் இணைந்துகொள்ள விருப்பம் காட்டும்-மகன் ரமணா கேட்கிறான்: ”அப்டீன்னா இதை யார்தாம்ப்பா சரி பண்ண முடியும்?”. இந்தக் கேள்வி அவனின் மூலமாக எல்லோராலும் ஏதோ ஒரு அவமானத்தை ஒரு அசிங்கத்தைக் கண்ணுற நேரும்போதும் நமக்குள்ளேயே கேட்டுக் கொள்கிற பதிலற்ற கேள்வி.

யாரால் இதை சரி செய்ய முடியும்?

நான் அதற்குச் சொல்கிறேன் நம்மால் முடியும். நிச்சயமாக முடியும்.

இந்த முயற்சி என்னை முன்னிறுத்திக்கொள்ளும் முயற்சியல்ல. அதையெல்லாம் நான் கடந்துவிட்டேன் என் கடந்த நாட்கள் எனக்களித்த தேடலில்.

நல்ல மாற்றத்தை- புரட்சி புரட்சி என்று எதுவும் செய்யாமல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமே- எல்லோரின் வழியாகவும், எல்லோரையும் உந்தும் ஒரு சக்தியாகவும்தான் என்னுடைய நிலைப்பாடு இருக்கும். என் கருத்துக்களை நம் கருத்துக்களோடு பொருத்தும் போது தேவையான பதில்களும் தெளிவும் கிட்டும் என் நான் நினைக்கிறேன்.

நண்பர்களே-

தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் தூசு போல் தட்டிவிட்டு, தினந்தோறும் தான் ஏமாற்றப் படுவதையும் அலைக்கழிக்கப்படுவதையும் தனக்குள்ளேயே பூட்டிவைத்துக் கொண்டு அலைபாயாமல் எண்பது வயதிலும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தில் கீரையோ வெண்டையோ பயிரிட்டு அதைத் தெருத் தெருவாக விற்றுத் தன் குடும்பத்துக்குத் தன் பொறுப்பை நிறைவேற்றும் மூதாட்டியும், கடலோர கிராமங்களில் இன்றும் தன் குடும்பத்தின் வயிற்றுப்பிழைப்புக்காக வலை வீசிக்கொண்டிருக்கும் முதியவனும்தான் நம் முன்னோடிகள். அம்பானியும் டாட்டாவும் நாராயணமூர்த்திகளும் அல்ல.

கோடிக்கணக்கான முகவரியற்றவர்களுக்காக நமக்காக
உங்களிடம் நான் கேட்கும் உதவிதான் இது.

வருடத்துக்கு மூன்று முறை ரத்ததானம் செய்யும் நல்ல உள்ளங்களிடம் கண் தானமோ உறுப்பு தானமோ செய்யும் மக்களிடம் ரோட்டரி லயன்ஸ் க்ளப் போன்ற பொறுப்புகளில் உள்ளவர்களிடம் நமக்குப் பரிச்சயமான நேர்மையானவர்களிடம் இது பற்றிப் பேசத் தொடங்குவோம்.

நமக்கென்று அமைத்துக் கொண்டிருக்கும் வட்டவடிவமான வாழ்க்கை முறையிலிருந்து கொஞ்சம் பெரிய வட்டமாக இதை மாற்ற முயல்வோம். காப்பீட்டுத் துறையில் உள்ள முகவர்கள் தினமும் அதிகமான மக்கள் தொடர்புள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் மூலம் எடுத்துச் செல்வோம் மாறுதலுக்கான வடிவத்தை.

இது பொருட்செலவு எதையும் தூண்டாதவாறு இதை வடிவமைத்துக் கொள்வோம். நம் வட்டம் பெரிதாகும்போதும் நம் அணுகுமுறையை மேலும் நவீனமாகவும் விரைவில் அதிகம் பேரைச் சென்றடையும் போக்குள்ளதாகவும் அதுவே தன்னை மற்றிக்கொள்ளும்.

இந்த வாழ்வில் நாம் எடுத்துச் செல்லப் போவது எதுவுமில்லை. ஆனால் காலத்துக்கும் அழியாத பெயரை விட்டு செல்ல நம்மால் முடியும்.

சூர்யோதயங்கள்
நிற்பதுமில்லை.
சப்தமெழுப்புவதுமில்லை.
கவனிக்கப்படுவதுமில்லை.

21 கருத்துகள்:

dineshkumar சொன்னது…

அண்ணா கண்டிப்பா உங்கவழியில் பயணிக்க நான் தயாராக உள்ளேன்

Harani சொன்னது…

நாம் செய்வோம் சுந்தர்ஜி. இன்னும் எனது சிந்தனையைத் துரிதப்படுத்தி இருக்கிறேன். உங்களோடும் நம் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்வேன்.

பாரத்... பாரதி... சொன்னது…

நீங்கள் எழுப்பும் வினாக்கள் நியாயமானவை. ஆனால் அது நீர்த்துப்போய்விடக்கூடாது. உங்கள் எண்ணங்கள் திசையெங்கும் பரவ நாங்களும் துணை நிற்போம்.

ரமணாவுக்கு எமது வந்தனங்கள்.

பாரத்... பாரதி... சொன்னது…

தமிழ்மணம், இன்ட்லியுடன் இணையுங்கள் . உங்களின் நல்ல
எண்ணங்கள் நிறைய பேரை சென்றடையட்டுமே...

ஹேமா சொன்னது…

தேவையான பயணம்.கை கோர்த்துக்கொள்கிறேன் சுந்தர்ஜி !

ஹேமா சொன்னது…

பலரது மனதைக் கிளறிப் பதப்படுத்தும் பதிவு.ஒரு அப்பாபோல பக்கமிருந்து கையணைத்துச் சொல்லும் அன்பு உங்கள் வார்த்தைகளில்.என்னால் முடிந்தததை நான் என் மக்களுக்குச் செய்துகொண்டுதானிருக்கிறேன் சுந்தர்ஜி.இன்னும் செய்வேன் !

சுந்தர்ஜி சொன்னது…

உங்களைத் தவிர்த்துவிட்டு நம் பயணம் துவக்காது தினேஷ். காத்திருக்கிறேன் விலகும் மேகங்களுக்காக.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹரணி. எழுதிக் கொண்டே இருக்கையில் நிறைய எண்ணங்கள் பிறக்கிறது ஹரணி.

தவறு நேர்கையில் என்னைத் திருத்துங்கள்.

சீக்கிரம் நமக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளத் துவங்குவோம்.

முதலில் கல்வியைத் தொடலாம் என நினைக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களின் ஆதரவு என்னை மகிழ்வூட்டுகிறது பாரத் பாரதி.

எனக்குப் பிடிக்காத முறையில் அதன் வடிவமைப்பு இருக்கிறது. ஓட்டுப் பட்டை இல்லாது அதை அமைக்க முடியுமானால் நல்லது.

உங்களுக்காக நமக்காக இன்றைக்குள் முயல்கிறேன்.

ரமணா இன்றிரவு என்னுடன் இதைப் படிக்கும்வேளையில் உங்கள் வந்தனங்களை ஏற்றுக்கொள்வான்.

அவன் சார்பில் என் நன்றிகள்.

சிவகுமாரன் சொன்னது…

இணைவோம்

kashyapan சொன்னது…

சுந்தர்ஜி! 1956ம் ஆண்டு காப்பீட்டுக்கழகத்திற்கு ஆள் செர்த்தார்கள். 57ம் ஆண்டு தேர்வானேன். அந்தஊழியர்களின் சங்கத்தோடு ஐக்கியமானேன். ஊதிய உயர்வு,பதவி உயர்வு என்பதைவிட மக்களுக்கான போராட்டத்தை முக்கியமாகக் கருதுகிறார்கள் அவர்கள். முதலில் கலந்து பேசுங்கள். முடியுமானல் கொடிக்கணக்கில் கையெழுத்து வாங்கி அரசுக்கு அனுப்புவோம். எல்.ஐ.சி.ஊழியர்களை அணுகிப்பாருங்கள்--- காஸ்யபன்

G.M Balasubramaniam சொன்னது…

என் கருத்துகளை பின்னூட்டமாக இல்லாமல் சற்றே விரிவாக என் தளத்தில் எழுதுகிறேன்.கொஞ்சம் அவகாசம் ப்ளீஸ்..!

vasan சொன்னது…

உங்க‌ளின் உதாரண புருஷர்க‌ள், கீரை விற்றும் மீன் பிடித்தும் உற‌வின் வ‌யிறு நிர‌ம்ப‌ த‌ன் ம‌ன‌ம் குளிரும் எளிய‌ ம‌க்க‌ள். தான் ம‌ட்டும் வாழ‌ நிராடியாவுட‌ம் கெஞ்சும் ப‌ணப் பேய்க‌ள் அல்ல‌.
'போதும் என்ற ம‌ன‌மே பொன் செய்யும் ம‌ருந்து' என்ற‌ வாழ்க்கை சூத்திர‌ம் அறிந்த‌வ‌ர்க‌ள் நாம்.
எளிமையே வ‌லிமை. முத‌லில் ம‌க்க‌ளாட்சியின் துருப்பு சீட்டாகிய வாக்குச்சீட்டின் வ‌லிமையை அது அறியாது விற்கும்/வீணாக்கும் செய‌லை நமது சுற்ற‌த்திலிருந்து தொட‌ங்குவோம். ம‌ந்திரிக‌ள் நமக்கு நாட்டுக்கு ப‌ணி செய்ய‌ ந‌ம்மால் அம‌ர்த்த‌ப்ப‌டும் வேலைகார‌ர்க‌ள் என்ப‌தை எடுத்துச் சொல்வோம். "நம்மிட‌மே பிச்சை வாங்கி, நம்மிட‌மே அதிகார‌ம் செலுத்துப‌வ‌ர‌கள் இர‌ண்டு பேர்க‌ள். 1) காத‌ல‌ன் (காத‌ல் கிடைக்கும் வ‌ரை, கிடைத்த‌ பின்) 2) அர‌சிய‌ல்வாதி (ஓட்டு வாங்கும் வ‌ரை, வாங்கிய‌ பின்) பேசுவோம், இணைவோம், தொட‌ர்வோம்.

ரிஷபன் சொன்னது…

மாற்றம் ஆரோக்கியமாய் மலரட்டும். அவரவர் பங்களிப்பில் இன்னும் சிறப்பு கூடும்.

சுந்தர்ஜி சொன்னது…

தொடர்ச்சியான வாசிப்புக்கு நன்றி சிவா.

சுந்தர்ஜி சொன்னது…

ஆலோசனைக்கு நன்றி காஸ்யபன் சார்.

தொடர்ந்து உங்களைக் கலந்துகொள்வேன்.

சுந்தர்ஜி சொன்னது…

எழுத்தின் மையம் தொட்டது வாசன் உங்கள் அம்பு.

நன்றி வாசன்.

நிச்சயம் நாம்தான் இதைச் சாதிக்கப் போகிறோம்.தொடர்ந்து எழுதி பேசி சந்தித்து சாதிப்போம்.

சுந்தர்ஜி சொன்னது…

இதுதான் சரியான முயற்சி.

காத்திருக்கிறேன் புதிய சிந்தனைகளுக்காக பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ரிஷபன் இதமான வார்த்தைகளுக்கு.

paarkkadal sakthi சொன்னது…

//என் எழுத்தின் ஓசையை விடவும் என் செயலின் நிசப்தத்தை மிகவும் நான் விரும்புகிறேன்//

வரியல்ல உணர்வு

சுந்தர்ஜி சொன்னது…

இத்தகைய கூர்மையான பார்வைகள் கொண்ட இளைஞர்களிடம்தான் ஒளிந்திருக்கிறது மாற்றத்தின் திறவுகோல்.

ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி பாற்கடல்சக்தி.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator