9.1.11

என் மொழிஒரு சவ ஊர்வலத்தின்
பின்னே சுவடுகள் பதிக்கும் 
துயரம் படிந்த அமைதியல்ல-

ஒரு பிரார்த்தனைச் சாலையின்
பெருஞ் சுமையாய்க் கனக்கும் 
சுமக்க இயலா அமைதியல்ல-

பேசத் தடை விதிக்கப்பட்ட
ஒரு நூலகத்தின் இருக்கைகளில்
உறைந்து கிடக்கும் அமைதியல்ல-

பேச யாருமற்றுப்போன
தனிமையின் மெழுகால்
உருகி வழியும் அமைதியல்ல-  

சர்வாதிகாரியின் ஆயுதங்கள்
புதைத்து வைத்திருக்கும்
முனை மழுங்கிய அமைதியல்ல-

இசைக்கப் படாத ஒரு வாத்தியத்தின் 
ஒட்டடை படிந்த அமைதியல்ல-

வெடித்துக் கிளம்ப இருக்கும்
புரட்சிக்கு முந்தைய 
முணுமுணுப்பின் அமைதியல்ல-

பேரலைகளின் 
இடைவெளிகளுக்கிடையே 
ஊசலாடும் அமைதியல்ல-

யாரின் பாதங்களும் படும்முன்
கரை ஒதுங்கிய சங்கினுள்ளே
ததும்பிக் கிடக்கும் அமைதி

கோர்க்கிறது
என் கவிதைகளின் மொழியை.

38 கருத்துகள்:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஸார்...சூப்பர்...


அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

காமராஜ் சொன்னது…

அந்தச்சங்கு உரக்க ஊதட்டும்.கேளாச்செவிகளின் செவிப்பறை கிழிய ஊறிக்கிடக்கும் நமுத்த சிந்தனைகள் மீது கொஞ்சம் கங்கு அள்ளிப்போடட்டும்.

ரிஷபன் சொன்னது…

ஆஹா..

தினேஷ்குமார் சொன்னது…

அண்ணா நல்லாருக்கு ....

அமைதியின் முழக்கம்
சற்றே ஆழ முழங்கட்டும்
சங்கே முழங்கு...
ஆளுமை அரக்கர்களின்
செவிதனில் செந்நீர்
வடிக்க சங்கே முழங்கு...

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

வலம்புரிச்சங்கின் மொழி

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இனியதொரு சங்கு ஒலி போலவே தங்களின் இந்தக் கவிதையும்

சிவகுமாரன் சொன்னது…

காதுகளைத் தீட்டி வைத்திருக்கிறேன் உங்கள் கவிதைச் சங்கொலி கேட்க.

Matangi Mawley சொன்னது…

No Words!

The "Silence" you describe here- "echoes" all over your poetry!

கமலேஷ் சொன்னது…

தேர்வு செய்திருக்கும் அமைதியின் மூலங்கள் அனைத்தும் ஒரு தபோவனத்திர்க்குள் கைபிடித்து அழைத்து செல்கிறது குருஜி.

ஹேமா சொன்னது…

பேரமைதிக்குப் பிறகு எழும் சத்தம் நிச்சயம் ஒரு புரட்சியைச் செய்யும் !

க ரா சொன்னது…

நல்லா இருக்கு சுந்தர்ஜீ..

G.M Balasubramaniam சொன்னது…

சுந்தர்ஜி, ஏன் அமைதியாய் இருக்கிறார் என்று எண்ணும்போது புரியாதது இப்போது புரிகிறார்ப்போல் தோன்றுகிறது. அமைதிக்குப்பின் ஆரவாரமாய் வெளியாகப்போகும் ஓசை, கேட்பவர் உள்ளங்களில் கேள்விகள் கேட்க வைக்கட்டும்.பதில் கிடைக்கும்போது மனம் தெளிவாகட்டும். தெளிவில் கிடைக்கப்போகும் அமைதியும் பின்னொரு ஓசைக்குவழி வகுக்கும்.வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam சொன்னது…

சங்கு ஊதப்படவேண்டும். அதுதான் முக்கியம்

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

நல்லாயிருக்கு கவிதை... ஒரு கட்டியம் போல.

சுவாமி புறப்பாடுக்கு முன்னால் வரும் இரட்டை நாயன மல்லாரியாய்... நாட்டையில் இரண்டாய் பிளக்கிறது... சிவனுமை...

அன்புடன்
ராகவன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சங்கை காதில் வைக்கும் போது வரும் ஓசை போல, உங்கள் கவிதைகளையும் சுவைக்க காத்திருக்கிறேன்! நல்ல கவிதை.

மிருணா சொன்னது…

கரை ஒதுங்கிய சங்குக்குள்ளே ஒலிக்கிற சுழலிசையாய் இனி உங்கள் கவிதை வெளிப்படும் என்று புரிந்து கொண்டேன்.

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள...

ஆழ்ந்த கடலில் இருந்து சங்கை கடல் வெளியேற்றுவதுபோல காத்திருந்ததன் அர்த்தம் புரிகிறது. உலகின் கடலில் இருந்து சங்காய் வெளிவந்து யாரின் பாதம் படாமலும் காத்திருக்கிறீர்கள். ஆனால் சங்கின் உள்ளே இருப்பது அமைதியல்ல.. யாராலும் அளவிடமுடியாதய ஒரு கடலின் அடக்கம் உள்ளிருக்கிறது. அந்த கடலின் ஆர்ப்பரிப்பும் ஆழமும் இடைவிடாத ஓசையும் அதனுள்ளே சுழன்றுகொண்டிருக்கிறது.
வாருங்கள் சங்காய். ஆனாலும் அந்த சங்கு கவனத்திற்கு வந்து இடம்பெறபோகும் நிலையில் இருக்கிறது. ஊதப்படாமல் சாமியறையில் வணக்கத்திற்குரியதாய் ஆவதற்கும்...அல்லது ஷோகேசில் அழகுப்பொருளாய்க் காட்சிகொள்வதற்கும்..யாருடைய விளையாட்டுப்பொருளாய் ஆவதற்கும்..இப்படி பல சந்தர்ப்பங்களை அந்த சங்கு உள்ளடக்கியிருக்கிறது. ஆனாலும் நிச்சயம் இந்த சங்கை அநீதிகள் உச்சத்தில் அதனை வதம் செய்து அவதாரமெடுத்து அமைதிகொள்ளும் ருத்ரனின் சங்காக அது இனிவரும் சமூகத்தின் எல்லா இருள்பக்கங்களை ஒலித்து கிழித்து வெளிச்சமாக்கட்டும். வாழ்க சுந்தர்ஜி.

vasan சொன்னது…

மனித‌த்தை நான்காய் பிரித்தூதிய‌து பார‌தி ச‌ங்கு.
த‌மிழின‌ம் வெல்க‌ என்றூதிய‌து அவன‌து தாச‌ன் ச‌ங்கு.
த‌ர்ம‌த்திற்காய் நின்றூதிய‌து பார்த்திப‌ன் வ‌லம்புரி வெண்ச‌ங்கு.
காலடி காணா, க‌ட‌ற்க‌ரையில் க‌ண்டெடுத்த‌ சுந்த‌ர்ஜீயின்
ச‌ங்கு உண்மைகாய் ஊத‌ட்டும் திக்கெட்டும்.
ச‌ங்கே முழ‌ங்கு....................

Toto சொன்னது…

அட‌ர்த்தியான‌ வ‌ரிக‌ள்.. அருமை.

-Toto.

சுந்தர்ஜி சொன்னது…

ருசித்தமைக்கு நன்றி ஆர்.ஆர்.ஆர். சார்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி காமராஜ்.

நம் போன்ற எழுத்தைப் பிடித்துத் தொங்குபவர்களின் வேலைதான் இது.

சுந்தர்ஜி சொன்னது…

தினேஷ்!உங்க பாராட்டே தனி.

உணர்ச்சிப்பூர்வமான மனிதர் நீங்கள்.நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

சில நேரங்களில் சுருக்கமான வார்த்தையாலும் அதைச்சொல்பவரின் நேர்த்தியாலும் பாராட்டு பெருமை சேர்க்கும்.

உங்களுடையதும் அப்படித்தான் ரிஷபன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி திருநாவுக்கரசு.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கோபு சார்.

முதல் வருகை என்னைக் களிப்பில் ஆழ்த்துகிறது.

அடிக்கடி வாருங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

காதருகில் ஒலிக்கும் பாராட்டுக்கு நன்றி சிவா.

சுந்தர்ஜி சொன்னது…

வார்த்தைகளால் மயங்குகிறது மனம்.மறுபடியும் சுதாரித்துக் கொள்கிறது.

நன்றி கமலேஷ்.

என்ன பெரிய இடைவெளி கமலேஷ்?காத்துக்கொண்டிருக்கிறோம்.

சுந்தர்ஜி சொன்னது…

அப்படித்தான் நானும் நம்புகிறேன் ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ராமசாமி.

சுந்தர்ஜி சொன்னது…

நிறைய யூகிக்கிறீர்கள் பாலு சார்.ரொம்ப நன்றி தொடர்ந்த வருகைக்கும் வாசிப்புக்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

காட்சியை அழகுபடுத்துவதில் மன்னன் நீங்கள் ராகவன்.

சொல்லணுமா என்ன?

சுந்தர்ஜி சொன்னது…

ஹப்பாடா!

வெங்கட் நாகராஜ்.வாங்க வாங்க.ரொம்பத் தயங்கித் தயங்கி வந்திருக்கீங்க.

பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாங்க சார்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் புரிதல் என் கவிதைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது சைக்கிள்.மிக்க நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் பின்னூட்டத்திலேயே சங்கின் நாதம் கம்பீரமாக வெளிப்படுகிறது ஹரணி.

பக்கத்திலேயே இருங்கள் கையெட்டும் தொலைவில்.

சுந்தர்ஜி சொன்னது…

பராட்டுக்களுக்கு நன்றி டோடோ.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வாசன்.

தமிழை அழகாய் உபயோகிக்கிறீர்கள்.

எனக்கு ரொம்ப நாள் ஆசை.சீக்கிரம் கவிதை எழுதுங்க வாசன்.

கமலேஷ் சொன்னது…

இதே மாதிரி மொழியை தலைப்பாக வைத்து
மிகவும் அழகான ஒரு கவிதையை யாரோ எழுதி
நான் படித்தது ஞாபகத்தில் அரித்துக் கொண்டே இருந்தது.
அது யாரென்பதை நேற்றைய இரவு
எதேட்சையாக எனக்கு திறந்து காட்டியது..
இங்கு நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக....
---------------------------

மொழி

அவரவரின்
மொழியில்
உருப்பெறுகிறது
கவிதை.
சிலருக்குப்
பருகக் காத்திருக்கிறது
கவிதையின் லாகிரி.
வடிவமைக்கும்
சவப்பெட்டியிலேயோ
ஆடைகளிலேயோ
பிறருக்கு.
வெவ்வேறு
கோர்வைகளில்
உயிருறுகிறது இசை.
உனக்கு
வாய்க்கிறது
கடவுளின் சங்கீதம்.
எனக்குக்
கீரைவிற்பவளின் குரலாகவோ.
வானொலி அறிவிப்பாளனின்
விடாத பேச்சாகவோ.
ஒவ்வொரு ஜதியிலும்
வடிவுறுகிறது நடனம்.
அவனுக்கு
அடவிலும் முத்திரையிலும்.
இவனுக்கு
சாலைக்காவலனின்
லாவகத்திலேயோ.
சாணைக்காரனின்
கூரேற்றும் இயக்கத்திலேயோ.
அவரவரின்
மொழி அவரவர்க்கு.
அவரவரின் வேலியும்.

- சுந்தர்ஜி பிரகாஷ் -

சுந்தர்ஜி சொன்னது…

எனக்குப் படபடப்பாக இருக்கிறது கமலேஷ்.

என் வார்த்தைகளையே எனக்கு மேற்கோள் காட்டும்போது பெறும் லாகிரியைப் போல் வேறேதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இது செல்லவிருக்கும் பாதையின் தொலைவுக்கு ஊட்டமாக இருக்கிறது.

நன்றியைத் தாண்டிய மொழி என்னிடம் இல்லை கமலேஷ்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator