4.3.11

வீழ்வேனென்று நினைத்தாயோ?


மற்றொரு ஐந்து வருடக் கூத்துக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. பேரங்கள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. கடந்த ஐந்து வருடங்களாக யாரை யார் என்ன சொன்னார்கள்? என்ன மாறுதல்கள் செய்வதாகச் சொன்னார்கள்? போன தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டனவா?

விலைவாசி குறிப்பாக பெட்ரோல்-டீசல்-எரிவாயு இவற்றின் மீதான விலையேற்றமும்-பால்-பருப்பு-அரிசி-காய்கறி வகைகள்-குறிப்பிடத்தக்க அளவுக்கும் அதிகமாக விலையேற்றப் பட்டன.

ஐந்து ஆண்டுகளில் செவிடாக நடித்த அரசு தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக விற்பனைவரியைக் குறைத்து ஓட்டளிப்பவர்களின் வயிற்றில் பெட்ரோலை வார்த்தது. கல்விக்கட்டண நிர்ணயம் தீர்மானமாகாமலேயே ஆட்சிக்கு முடிவுக்கு வந்து விட்டது.

துவரம் பருப்புக்கும் கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாதவர்களால் செய்யப்படும் யூகவாணிபம் பற்றி அரசுக்குக் கவலையில்லை. குடிநீர் என்று விற்கப் படத் துவங்கியதோ அன்று தொடங்கியது நம் சீரழிவு. யாரையும் தட்டிக்கேட்கும் ஆன்ம பலமுள்ளதாய் இருக்கவேண்டிய அரசு தன் பங்கைப் பெற்றுக்கொண்டு வேடிக்கை பார்க்கும் அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

தொண்ணூறுகளில் ஏற்பட்ட தகவல் தொழில் நுட்ப மறுமலர்ச்சி விஞ்ஞான வளர்ச்சிக்கும்-தொழில் புரட்சிக்கும் பெருத்த அளவில் உதவியிருப்பதைப் பார்ப்பவர்கள் நம் உறவுமுறைகளில் ஏற்பட்டுள்ள சீரழிவு பற்றியும் பெருகிப்போன முதியோர் இல்லங்கள் பற்றியும் கவலை கொள்வதில்லை.

படித்து முடித்தவுடன் கேம்பஸ் தேர்வு செய்யப் பட்டுத் தன் அப்பாவை விடக் கொழுத்த சம்பளம் பெறும் மகன் குடும்பத்தின் அளவுகோல்களைத் தீர்மானிக்கத் துவங்கி பெற்றவர்களின் சுயமரியாதையை எடைபோடத் துவங்கியதையும் பார்க்கத் தவறினார்கள்.

கொள்கைகளுக்காக ஜாதிகலந்து திருமணங்கள் செய்து கொண்டது அதிசயமாயிருந்த காலம் போய் வேலையிடத்தில் கிடைத்த சுதந்திரத்தால் சரியான கலந்தாலோசிப்பு இல்லாமல் நிகழ்ந்த அவசர கதித் திருமணங்களையும் அவசர கதி விவாகரத்துக்களையும் அவற்றின் பின்விளைவுகளையும் பார்க்கத் தவறினார்கள்.

இவர்களால் அன்பின்றிக் கைவிடப்பட்ட-கடமைக்காக வளர்க்கப்பட்ட குழந்தைகள் இப்போது ஓட்டுப் போடும் வயதுக்கு வந்துவிட்டாலும் முடிவெடுக்கும் தெளிவின்றி மனப்புழுக்கங்களுடன் காலத்தைக் கழிப்பதைப் பார்க்கத் தவறினார்கள்.

மக்களை வீடுகளுக்குள் முடக்கும் முடக்குவாதத்தை இந்தத் தொழில்நுட்பம் கொண்டுவந்தது. தொலைக்காட்சிகளிலும் கணிணிகளிலும் தொலைபேசிகளிலும் தங்கள் போலியான அன்பைத் தேடித் திரிய இந்தத் தொழில் நுட்பம் உதவியது.

இதன் வீச்சு தெரிந்த ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகளாய் இருந்ததனால் இதை உபயோகித்துத் தங்கள் வருமானத்தைப் பெருக்கவும் மக்களை எந்த விதமான கூர்மையுமில்லாத மழுங்கல் கூத்துக்களை அரங்கேற்றி எந்த நேரமும் போதையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள். இதில் சிக்காதவர்களை டாஸ்மாக்கிலும் அதில் சிக்காதவர்களை இலவசங்களிலும் சிக்க வைத்து உழைக்கும் முனைப்பையே அதன் முதுகெலும்பையே உடைத்தார்கள்.

இன்றைக்குக் கடுமையாய் உழைக்கும் ஆட்களைத் தேடி பீகாருக்கும் ஜார்கண்டிற்கும் போக வைத்தார்கள். வெட்டித்தனமான செலவுக்கும் தன் பை நிரம்பவும் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்துக்கே வேலை செய்ய பீகாரிலிருந்துதான் கூலிகளைக் கூட்டிவந்தார்கள். சொன்ன நேரத்தில் வேலையை முடித்ததற்கு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி அதில் முதல்வரும் கலந்து கொண்ட தமாஷ் சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் நடந்தது. நம் மாநிலத்தில் உடல் உழைப்புக்குப் பஞ்சமா என்று கேட்டால் புறநானூற்றிலிருந்து மேற்கோள் காட்டி தலைவர் பொழியும் பொழிப்புரையில் என்ன கேட்டோம் என்பதையே கேட்டவர் மறந்திடுவார். வெட்கம் கெட்டவர்கள்.

எல்லோருக்கும் இலவசமாகத் தொலைக்காட்சியும் நிலமும் கொடுப்பதற்குள் ஆட்சியே முடிந்துபோய்விட்டது என்றால் அது யார் குற்றம்? எத்தனை கலைநிகழ்ச்சிகள்? எத்தனை பாராட்டுவிழாக்கள்?

ஒரு ரூபாய்க்கு இந்தியா முழுதும் பேச வைத்ததை விட ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடிக்குப் பேச வைத்ததுதான் சாதனை. அதுவும் இன்னும் ஒரு ஆண்டுக்குள் என்ன ஆனது என்று தெரியாமல் கைவிடப் படும்.

கால்நடைத் தீவன ஊழலில் கிரிமினல் குற்றவாளியாக நினைவிலிருப்பதை விட ரயில்வே மந்திரி ஆகி நிர்வாகத்தை லாபமீட்டவைத்து ஒரு பெரும் பொருளாதார மேதையாய்க் கருதப் பட்டு ஐஐஎம் மற்றும் ஐஐடி போன்றவற்றில் வகுப்புக்கள் நடத்திய எக்ஸ் கிரிமினல் குற்றவாளி லாலு ப்ரஸாத்தை நாடு நினைவில் வைத்துப் பெருமை கொள்ளும்.

மாற்றங்கள் எல்லாவற்றையும் இருப்பதிலிருந்து மாற்ற முயல்வதும் அது மேலும் சீரழிவிற்கு இட்டுச் செல்வதும்தான் நம் சாபக்கேடு. அடிமட்டத்திலிருந்து மாற்றங்கள் துவங்கப்படவேண்டும். அஸ்திவாரமே ஆட்டம் கண்ட ஒரு கட்டிடத்தை எத்தனை நாள் மராமத்துப் பார்த்து புதுப்பிக்க முடியும்?

நமக்கென்று அக்கறை கொள்ளத் தலைவர்கள் இல்லை. எல்லா நியாயங்களையும் பேசும் எல்லாக் கட்சிகளும் தேர்தல் முடியும் வரை அணிக்கேற்ப தங்கள் குற்றச்சாட்டுக்களையும் பணத்தையும் அள்ளி வீசி மக்களின் பொழுதுபோக்கிற்கும் கலகலப்புக்கும் பஞ்சமில்லாமல் பார்த்துக்கொள்ளும். இதைத் தவிர இந்தத் தேர்தல்களால் இம்மியளவும் பயனில்லை.

இதிலும் எனக்கு இன்னும் வேடிக்கையாய்த் தெரிகிற இன்னொரு அம்சம் இந்தத் தேர்தல்களின் மீது நம்பிக்கை இல்லாத அல்லது புறக்கணிக்க ஆர்வம் கொள்ளும் வாக்காளர்கள் மீதான உளுத்துபோன குற்றச்சாட்டு. நூறு சதம் ஓட்டளிக்காததால் ஜனநாயகம் செத்துபோய்விட்டது போலவும் இருக்கும் கிரிமினல்களுக்கும் குண்டர்களுக்கும் எல்லோரும் வந்து வாக்களித்துவிட்டால் ஜனநாயகம் மீட்கப்பட்டுவிடும் என்பதுபோலவும் அது.

தேர்தல்களே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தேவையான மாறுதல்களையும் திருத்தங்களையும் நம் அரசியலமைப்புச் சட்டத்தில் விவாதித்துக் கொண்டு வராத வரை எந்த மாறுதலும் நிகழாது. இது இயல்பாய் நிகழாது. இதைச் செய்வதற்கு நாம் ஒன்று கூட வேண்டும். தியாகங்களுக்கு நாம் தயாராக வேண்டும். அதற்கான முன்வரைவுகள் விவாதிக்கப்பட்டு செயலாக்க முனைய நாம் தயாராக வேண்டும்.

எத்தனை இடர் வந்தாலும் துவக்கம் ஏற்படுத்த நான் தயாராக இருக்கிறேன். தொடர்ந்து வரவும் இதில் பங்கெடுக்கவும் நம் வலைத் தளத்தைப் பயன்படுத்தவும் யாரெல்லாம் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இதில் இணைந்து கொள்ளட்டும். விவாதங்களை உண்டாக்குவோம். சீர்திருத்தம் குறித்த கருத்துக்களை உருவாக்குவோம்.

கடந்த பதினைந்து வருடங்களுக்கு முந்தைய ஒரு நாளில் ஒரு இளைஞன் கொண்டிருந்த இலக்கு இன்றைக்கு எகிப்தில் எட்டப்பட்டிருக்கிறது.

தகவல் தொடர்பற்ற காலத்தின் மோகன் தாஸை உலகம் என்றுமே மறக்காதிருக்க ஐம்பது ஆண்டுகளுக்குள் தான் தேவைப்பட்டது.

உறுதியுடன் நாமெடுத்துவைக்கப் போகும் சுவடுகளுக்கும் இன்னொரு பத்தாண்டுகள் போதும்.

இது நடக்காது என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும்.

நமக்குத் தேவை ஒரு நொடியா எதிர்காலமா?

19 கருத்துகள்:

Ramani சொன்னது…

பாரதியின் வாக்கோடு
காலத்தின் கட்டாய பணியான
இப்பணியை வலைத்தலத்தில்
துவங்கியமைக்கு வாழ்த்துக்கள்
எத்தணை நாள்தான்
போர்வாள் கொண்டு வெங்காயம்
நறுக்கிக்கொண்டிருப்பது
நானும் விரிவான கட்டுரையோடு
இதில் என்னை இணைத்துக்கொள்ள
தயாராகிக்கொண்டிருக்கிறேன்
வாழ்த்துக்களுடன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

பொறி பறக்கிறது ஸார், உங்கள் எழுத்தில்!

ramanaa சொன்னது…

அப்பா இதை படிக்கும் பொழுது எனக்கு இவை தினமும் உன்னால் சொல்லிச் சொல்லி அரசியல் என்றால் என்ன, நம் நாடு எந்த பாதையில் செல்கிறது என்று நானே விமர்சிக்கும் அளவில் தலைவர்கள் இருக்கிறார்கள்.

அரசியலுக்கு நான் வரவேண்டும் என்கிற என் லட்சியத்துக்கு இது நெருப்பில் நெய்யூற்றியது போல.

இந்த நாடு ஒரு மாற்றத்துக்காகக் காத்திருக்கிறது.அந்த மாற்றம் நானாக இருக்க ஆர்வம் கொள்கிறேன்.

நானும் இதற்குத் தயாராகிவிட்டேன் அப்பா.

இது நடக்கும் என்று சொல்லவும் எனக்கு ஒரு நொடி போதும் அப்பா.

மோகன்ஜி சொன்னது…

சிங்கக்குட்டியின் சீற்றத்தை பார்த்தால் ஒரு முடிவுக்கு வந்துட்டீங்கன்னு தோணுது...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ramanaa said...
இந்த நாடு ஒரு மாற்றத்துக்காகக் காத்திருக்கிறது.அந்த மாற்றம் நானாக இருக்க ஆர்வம் கொள்கிறேன்.

நானும் இதற்குத் தயாராகிவிட்டேன் அப்பா.

இது நடக்கும் என்று சொல்லவும் எனக்கு ஒரு நொடி போதும் அப்பா.//

சபாஷ் ரமணா !

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

வீறு கொண்டு எழுந்துள்ள ரமணாக் குட்டிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

தலைவரான உன் அப்பாவும், தளபதியான நீயும் காட்டும் வழியில் தடி குச்சியை எடுத்துக்கொண்டாவது வந்திட நானும் ரெடி.

வெற்றி நமதே! வாழ்த்துக்கள்.

காமராஜ் சொன்னது…

இந்தப்பட்டியல் சத்தியப்படிக்கு நேர்மையானது.என் தேசத்தை நிர்வகிக்கிற மனிதர்கள், மனிதாபிமானமுள்ள மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்.எப்படி இனங்காணுவது.கண்டவர்களை வெகுஜனத்துக்குச்சொல்ல என்ன ஏஏற்பாடுகள் இருக்கிறது.இல்லாத ஊருக்கு இலுப்பைபூசர்க்கரை.இருக்கிற ஊரிலும் அப்படியே தானா ?

RVS சொன்னது…

அனல் பறக்கிறது..
எவ்வளவோ அப்பா பதவியில் இருந்து பிள்ளையை அரசியலில் இழுத்து விடுகிறார்கள்... ரமணா வருகிறேன் என்கிறார்.. இளைய பாரதம் இனிமையான பாரதமாக மலரட்டும் ஜி. ;-))))

சிவகுமாரன் சொன்னது…

நானும் பின் வருகிறேன். ரமணாவோடு கைகோர்த்துக் கொண்டு

bandhu சொன்னது…

அனைத்தும் ஸத்யம் ததும்பும் வார்த்தைகள். என்னால் இந்த முயற்ச்சிக்கு எந்த அளவு பயன் சேர்க்க முடியுமோ அந்த அளவிற்கு முயற்சி செய்ய நானும் உங்களுடன் இணைகிறேன்!

சுந்தர்ஜி சொன்னது…

இனித் தாமதிக்காது இது குறித்து தொடர் சிந்தனையாய் நாம் எழுதி விழிப்புணர்வை உண்டாக்குவோம். அது மெல்ல அடுத்த கட்டத்துக்கு நம்மை எடுத்துச் செல்லும்.

நன்றி ரமணி அண்ணா முதல் கருத்துக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

நல்ல யோசனைகளைச் சொல்லுங்கள் ஆர்.ஆர்.ஆர். சார்.

இன்னும் கூர் தீட்டிக் கொள்வோம் நம் எழுத்தை. இந்தப் பயணம் அயராது தொடரட்டும்.

சுந்தர்ஜி சொன்னது…

மோஹன்ஜி!இதை நான் எதிர்பார்க்கவில்லை உங்களிடமிருந்து. இதற்கும் மேலான வார்த்தைகளும் சிந்தனையும் கொண்டவர் நீங்கள்.

நாம் பயணிக்க இருக்கும் திசைக்கு வெளிச்சம் சேர்ப்பீர்கள் உங்கள் எண்ணங்களால் என் நம்புகிறேன்.

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

அடுத்த அடி என்ன? என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நல்லா எழுதியிருக்கீங்க! எனக்கு இவ்வளவு தீவிரமா எழுத வராது.

துவக்கம் கொண்டு வாருங்கள் சுந்தர்ஜி!நிறைய பேர்கள் இருக்கிறார்கள் இணைய... சுந்தரராமசாமி ஒருமுறை சொன்னது ஞாபகம் வருகிறது.

செயலே உன்மையான வார்த்தை.

அன்புடன்
ராகவன்

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி கோபு சார்.

ஆனால் ஒரு பெரும் விளக்கம்.

நான் தலைவனுமல்ல. என் மகன் தளபதியுமல்ல.

இந்தக் கருமாந்திரங்கள் இன்றைய அரசியல்வாதிகளுடன் ஒழியட்டும்.

எங்கெல்லாம் இப்படி இது இருந்தால் நன்றாக இருக்கும் நம் நாட்டுக்கு என்று யோசித்திருப்போம்.

உங்களின் சிந்தனையில் உதிக்கும் அப்படிப்பட்ட விஷயங்களை உங்கள் தளத்தில் எழுதத் தொடங்குங்கள்.

இந்தத் தீ வலையெங்கும் பரவட்டும்.

சுந்தர்ஜி சொன்னது…

யாரைத் தேடுகிறீர்கள் காமராஜ்?

இனிமேல் ஒருவர் பிறந்துவந்து மாற்றங்களை நமக்குக் கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கிறீர்களா?

நம்மிலிருந்துதான் அவை தொடங்கப்பட வேண்டும். இனி எந்தக் கட்சியுமோ எந்தத் தலைவர்களுமோ நம் தேசத்தைக் கரையேற்றக்கூடும் என்று கனவிலும் நான் நம்பத் தயாரில்லை.

இலுப்பைப் பூக்கள் இனி நமக்குத் தேவையில்லை காமராஜ்.

எல்லோரின் பசியையும் போக்கக் கூடிய தினைமாவும் கொம்புத் தேனும் நம் வசம் இருக்கிறது.

பகிர்ந்துகொள்வோம்.

சுந்தர்ஜி சொன்னது…

இல்லை. நீங்கள் சொல்வது தவறு ஆர்.வி.எஸ்.

என்னையும் ரமணாவையும் விடுங்கள்.இனிய பாரதம் ரமணாவும் நானும் சேர்ந்து உருவாக்கும் திரைப்படம் அல்ல இது.

இதில் நீங்களும் இருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் அநியாயத்துக்குக் குமுறும் ஒவ்வொருவரும் இதில் இருக்கிறார்கள்.

இன்னும் சத்தியம் வெல்லும் என்று நம்பும் இளைஞர்களிடம் வரப் போகிற மாற்றங்கள் பற்றிப் பேசுவோம்.

வெறுமனே ப்ளாக்கில் எழுதி நாலு பேர் கைதட்டும் செயலைக் கொஞ்சம் மாற்றிக்கொள்வோம்.

களமிறங்குவோம்.

சுந்தர்ஜி சொன்னது…

வாருங்கள் சிவா.

இந்த வருடம் மாற்றங்களின் வருடமாக இருக்கட்டும்.

தமிழில் எழுதுபவர்களின் வலைதளங்களில் எல்லோரின் தளங்களிலும் தேர்தலைப் புறக்கணிக்கும் வாசகங்களோடு முதல் கட்டம் துவக்குவோம்.

இது குறித்து இன்று எழுத இருக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

மிக்க நன்றி பந்து.

உங்களின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.

உங்கள் கரங்களைப் பற்றிக் கொள்கிறேன்.

இறுதிவரை வாருங்கள் பந்து.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு நன்றிகள் ராகவன்.

சொல்லை விட செயல் என்பதை என் பல கவிதைகளிலும் உரைகளிலும் சொல்லியிருக்கிறேன் ராகவன்.

என்ன செய்யப் போகிறோம்? எனக் கேட்டிருந்தீர்கள் ராகவன்.

மாற்றத்துக்கான வலுவான ஆயுதம் வலுவான புறக்கணிப்புத்தான். இந்தத் தேர்தல்கலைப் புறக்கணிப்பதிலிருந்து தொடங்குவோம்.

இன்று இது குறித்து எழுத இருக்கிறேன்.

வலையில் தமிழில் எழுதும் எல்லோரும் ஒருமித்து ஒரே திசையில் யோசித்து அவரவர் தளங்களில் முனைப்பாக இதைக் கொண்டு சென்றால் நிச்சயம் திருப்பம் நிகழும்.அதற்கான கணக்கு என்னிடம் இருக்கிறது.

சரிதானே ராகவன்?

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator