8.3.11

காத்திருக்கிறேன்


புறக்கணிப்பால் நாட்டுக்குத் தேவையான மாற்றத்தை மறுமலர்ச்சியை சாதித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவே நான் இன்னமும் நினைக்கிறேன்.

ஆனாலும் மாற்று வழிகளை யோசிப்பதற்காகவும் வயதிலும் சிந்தனையிலும் மூத்த பெரியோரின் ஆலோசனைகளுக்காகவும் காத்திருக்கிறேன்.

ஊர் கூடாவிட்டால் தேரை இழுக்க முடியாது. வலையில் நாம் ஏற்படுத்தப் போகும் சிந்தனை மாற்றம் வலைகளுக்கு வெளியே அதன் வீச்சை விரிக்கவேண்டும் என்பதே என் ஆசை. எந்த வடிவிலாவது நாம் இயங்கத் துவங்குவது தள்ளிப் போடவே முடியாத நிர்பந்தம்.

நீ செல்லும் பாதையில் ஊரை அடைய முடியாது எனச் சொல்லும் போது நம் கண்களில் நிச்சயமாய் வேறொரு பாதைக்கான தடத்தின் நுனி புலப்படுவதாகத் தான் அர்த்தம்.

மாற்றுப் பாதையை யோசிப்போம்.
உங்கள் ஆலோசனைகளுக்காகக் காத்திருக்கிறேன்.

15 கருத்துகள்:

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

வாழ்த்துகள் கனவுகள் நிறைவேற..

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

நாமும் இணைவோம்..நல்ல செயலுக்கு

சமுத்ரா சொன்னது…

??

Ramani சொன்னது…

நான் பகுத்தறியத் தெரிந்தவன்
சமூகத்தின்பால் அக்கறை கொண்டவன்
எனவே நான் விற்பனைக்கில்லை
என்கிற வாசகங்களை அச்சிட்டு
வினியோகிக்கலாமா?
அதனை வீட்டு வாசலில்
அனைவரும் அறியும்படியாக
ஒட்டிவைத்து சமூக உண்ர்வை
தூண்டும் பணியைச் செய்யலாமா?
அனைத்து பதிவுகளிலும்
தேர்தல் முடியும்வரை இருக்குபடியாக
முகப்பில் பதிந்து வைக்கலாமா?

Nagasubramanian சொன்னது…

புறக்கணிப்பின் மூலம் எதையும் சாதிக்க முடியும்.
உதாரணத்திற்கு, ஒரு பையன் ஒருத்தியை காதலிக்கிறான்.
ஆனால், அந்த பெண்ணுக்கு விருப்பம் இல்லை எனில் அவள் கையேந்தும் ஆயுதம்
"மௌனம்" என்னும் புறக்கணிப்பு.

"49 ஓ" பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இருப்பின் புறக்கணிப்பு சுலபமாகும்.
(Ref : ஞானியின் "ஓ பக்கங்கள்")

G.M Balasubramaniam சொன்னது…

அன்பு சுந்தர்ஜி, திருந்தச்செய் திருந்துவதற்குச்செய்,என்ற என் பதிவில் ஏற்கனவே சில வழிமுறைகள் தெரிவித்திருந்தேன். அரசியல் வாதிகள் யாராயிருந்தாலும், தவறு செய்கிறார்கள் என்றால் அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்து அவர்களுக்கு களவாணித்தனம் செய்ய வழிகளை காட்டுவிப்பது அரசுப்பணியில் இருப்பவர்களே. அரசுப் பணியில் இருப்பவர்களின் கூட்டு இல்லாமல் அராஜகம் செய்வது மிகவும் கடினம். ஆக, நம் தார்மீக கோபம், நம்மில் உள்ள அரசுப் பணியில் அமர்ந்திருப்பவர் மீதும் திரும்புவது நியாயம்.எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதிகம்போனால் ஒரு முறையில் ஐந்து வருடம் ஆளலாம். ஆனால் அரசுப் பணியாளர்கள் நிரந்தரமானவர்கள். அரசியல்வதிகளை அடி வருடாமல் பணி செய்ய நேர்மையும் மனதிடமும் அவர்களுக்குத் தேவை. இதையே நான் சற்று வித்தியாசமாக மார்றம் நம்மிடையே நிகழவேண்டும் என்றேன். உண்மை நிலை விளக்கப் படவேண்டும். ஆதாரக் கேடுகள் களையப்படவேண்டும்.நம் தலைமுறையின் வாரிசுகளை நாம் நன்றாக வளர்த்தோம் என்றால் அடுத்த தலைமுறை நிமிர்ந்து நிற்கலாம். காந்தி காலத்துத் தலைமுறைக்கும் நம் தலைமுறைக்கும் இடைப்பட்ட கால கட்டம்தான் சீர்கேட்டின் துவக்க காலம். அலங்கார வார்த்தைகளும் அடுக்கு மொழிகளும், குறுகிய மத ,இன, மொழி போன்றவற்றைக் கையில் எடுத்து, அப்பாவி சாமானியனை ஏமாற்றி விட்டார்கள் . இரண்டு தலைமுறையையும் பார்க்கும் எனக்கு, வித்தியாசம் நன்றாகவே தெரிகிறது. நியாயம்,நேர்மை, உழைப்பு, அன்பு, இவற்றையெல்லாம் வாரிசுகளுக்குக் கற்பிப்போம். விடியலுக்காக காத்திருப்போம்.

ரிஷபன் சொன்னது…

GMB ஸார் கருத்துடன் ஒத்துப் போகிறேன். அரசுப் பணியாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல்வாதிகள் அராஜகம் செய்வது கடினம். துரதிர்ஷ்டவசமாய் இருவரும் இப்போது கூட்டணியில். நம் வீட்டில் இருக்கும் அரசுப் பணியாளர் நேர்மையைக் கடைப்பிடிக்கச் செய்தால் முதல் மாற்றம்.

vasan சொன்னது…

உங்க‌ளின் ப‌திவுப் பிர‌வாக‌த்தின் தாக்க‌த்தை தாங்கிப் பிடித்து, படித்து, "பின்னூட்ட‌"மிட‌
அந்த‌ ஆகாய‌ க‌ங்க‌யின் ஆக்ரோஷ‌ பிர‌ள‌ய‌த்தை த‌லையில் தாங்கி,
க‌ங்கையாய், உரைய‌வ‌த்து, பின் க‌ரைய‌வைத்து, க‌ரைக‌ளில் விட்ட‌ அந்த‌ சிவ‌னின் அருள் பெரிய‌ள‌வில் வேண்டும். நான் கொஞ்ச‌ம் சார‌லில் ந‌ன‌ந்து விட்டுப் "பின் வ‌ருகிறே‌ன்".

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி தோழர் வாழ்த்துக்களுக்கும் இணைந்தமைக்கும் முதல் வருகைக்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

?? இதைத் தாண்டிய வார்த்தைகள் எங்கே சமுத்ரா????

சுந்தர்ஜி சொன்னது…

நல்ல யோசனைதான் ரமணி அண்ணா.

ஆனாலும் தற்காலிகமாக நாக்ஸ் சொன்ன 49ஓ தான் சிறந்த முறையாகத் தெரிகிறது.

எழுதுபவர்களின் எல்லா இடுகைகளிலும் இந்தப் புறக்கணிப்பின் வாசகங்கள் இடம் பெறச் செய்யலாம் என்பதும் நல்ல யோசனைதான்.

சுந்தர்ஜி சொன்னது…

நல்ல யோசனை நாக்ஸ்.

49ஓ தான் சரியான மருந்தாகத் தெரிகிறது நம் தேசத்தின் வியாதிக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

அரசியல்வியாதிகளின் ஆணையின்றி எந்தத் துரும்பும் அசையாது.

அதேபோல் அரசுப் பணியாலர்களின் தவறான வழிகாட்டுதல்களாலும் யோசனைகளாலுதான் அரசியல்வியாதிகளுக்குத் தடம் கிடைக்கிறது.

அரசு இயந்திரத்தின் மீதும் நம் கவனம் திருப்பப் பட வேண்டும்.

நல்ல யோசனைக்கு நன்றி பாலு சார்.

அதை ஏற்ற ரிஷபனுக்கும் நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

வாசன்! நீங்கள் வேறேதோ முக்கியமான வேலையில் இருக்கிறீர்கள் என் யூகிக்க முடிகிறது.

சீக்கிரம் எழுதுங்கள் உங்கள் கருத்துக்களை.

ஹரிஹரன் சொன்னது…

நான்குபேர் சேர்ந்தால் பேசுவதர்கு ஊடே அரசியல் வருகிறது, முடிவில் அரசியல் சாக்கடை என்று புலம்பியே செல்கிறோம். ‘அவனின்று அணுவும் அசையாது’ என்பதற்கு மாற்று அரசியல்இன்றி எதுவும் இல்லை என்பது தான். GMB அவர்கள் கூறிய கருத்துக்களை ஏற்கிறேன். எல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகளை சாடுகிறோம் ஆனால் உண்மையான பயனாளிகளை காணமறுக்கிறோம். அரசியல்வாதிகளில் மிகப்பெரும்பான்மையினர் சுயநலவாதிகளாகவும் பணம்படைத்தவர்க்ளின் சேவகர்களாகவும் இருக்கிறார்கள் என்பதன் ஊடே மக்களுக்காகவும் பணியாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை இணம்காணவேண்டுகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator