5.3.11

முரட்டுப் புறக்கணிப்பு


நாம் என்ன செய்யப் போகிறோம்? இதை நம்மால் எப்படிச் செய்ய முடியும்?

மேலேயுள்ள இரு கேள்விகளுக்கு நடுவில்தான் நம் பயணம் நிகழ இருக்கிறது.

முதலாவது கேள்வி இலக்கை நோக்கியதுதான் என்றாலும் எந்தப் பாதை என்ற குழப்பத்தோடு கூடியது.

இரண்டாவது கேள்வி மனதில் ஆதங்கமும் கொதிக்கும் குமுறல்களும் இருந்தாலும் வேறு யாராவது இதை செய்வார்கள் அல்லது வேறு யாராவது செய்தால் அது ஏற்புடையதாக இருந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கடந்து செல்வது.

ஒரு தெருவின் நடுவே காலிமனை ஒன்று இருந்தது. முதலில் ஒரு புதர் மண்டிய கோலத்தில் இருந்த மனையைச் சுத்தப்படுத்தி நான்குபுறமும் வேலியமைத்து சீர் செய்து அந்த காலிமனைக்குரியவன் சென்றான்.

முதல் மாதம் அந்த மனையின் தோற்றம் இனிமை தருவதாக இருந்தது. மாலை நேரங்களில் சிறுவர்கள் வேலியைத் தாண்டி இருட்டும் வரையிலும் விளையாடிக்களித்தனர். மாதங்கள் செல்லச் செல்ல மீண்டும் உடைமுள்ளும் காட்டுச் செடிகளும் எருக்கஞ்செடிகளும் மண்ட ஆரம்பித்தன. கொடிய விஷப் பாம்புகள் நடமாட்டம் தென்பட்டன. மறைவிடம் தேடிச் செல்லும் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு அந்த மனை உகந்ததாக மாறியது.

அந்த மனையின் உரிமையாளர் அந்த மனைப் பக்கமே வருவதும் இல்லை. அவருக்கு அந்த மனையைப் பராமரிக்கும் தேவையுமில்லாத அளவுக்கு மும்முரமானவராக மாறினார். காலிமனைக்கு இப்போது சிறுவர்கள் விளையாடச் செல்வது இல்லை. ரௌடிகளின் ஆக்ரமிப்பு நிறைந்த அந்தத் தெருவை அமைதியை விரும்பும் எல்லோருமே புறக்கணிக்கத் துவங்கினார்கள்.

இந்த உதாரணத்தில் யாருக்கு என்ன பாத்திரம் என்று குறியிட்டு விளக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். அந்த மனை உரிமையாளர்தான் அந்த மனையைப் பராமரிக்கும் கடமையுள்ளவர். ஆனால் அந்தத் தெருவை உபயோகித்த எல்லோருமே அந்தத் தெருவையே புறக்கணித்துச் செல்லும் மனோநிலையில்தான் இருந்தார்களே தவிர எல்லோருமாய்ச் சேர்ந்து அதை மறுபடியும் சீர்படுத்தினால் அதிகபட்சம் ஒருநாள் வேலை.

இதே நிலைமையில்தான் நம் தேசம் இருக்கிறது. எல்லோருக்கும் ஆதங்கங்கள் உண்டு. ஆனால் நமக்கென்ன? நம்ம பாடைப் பாத்துக்கிட்டுப் போனாப் போதும் என்கிற மனோபாவத்துடன் வீடுகளுக்குள் முடங்குதல்தான் நம்மை இந்த அளவுக்கு சீரழிய வைத்திருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு இந்த அளவு குளிர் விட்டுப் போனதற்கு நாம்தான் காரணம்.

ஒரு தெருவின் பிரச்சனைக்கு அடித்தட்டு மக்கள் செய்யும் முதல் வேலை தெருவில் இறங்கி சாலைகளில் அமர்ந்து தீர்வெட்டப்படும் வரை நகராமல் போராடுவதுதான்.

அதையே கொஞ்சம் மாற்றி நாம் தேர்தல்களைப் புறக்கணிப்போம்.

எத்தனை தேர்தல்கள் நாம் பார்த்திருப்போம்?
எத்தனை தேர்தல் அறிக்கைகளையும் உறுதிமொழிகளையும் நம்பி நாம் ஏமாற்றமுற்றிருப்போம்?
எத்தனை முறை அவர்கள் மறுபடியும் ஓட்டுக் கேட்டு வரும்போது தைரியமாக போனதடவை நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே? எதற்காக இன்னொரு முறை ஓட்டுக் கேட்கிறீர்கள்? என்று கேட்டிருப்போம்?

எத்தனை நாட்கள் தொகுதிக்காக ஆரோக்கியமான விவாதத்தில் பங்கெடுத்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை நாள் சட்டசபை அல்லது பாராளுமன்றத்துக்குச் சென்றிருப்பீர்கள்?
ஏன் எந்த அடிப்படைத் தேவைகளான சாக்கடை பராமரிப்பு-குடிநீர்-குப்பைகளற்ற தெருக்களை உங்களால் தரமுடியவில்லை?

ஆட்சியில் இருக்கும் ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஊரையே குட்டிச் சுவராக்கி நாசமாக்கும் ஃப்ளக்ஸ் பேனர்களால் என்ன சொல்ல வருகிறீர்கள்?

ப்ரோடோகால் என்ற பெயரில் எத்தனை வாகனங்கள் உங்கள் முன்னும் பின்னும்? சுண்டைக்காய் கால் பணம்;சுமை கூலி முக்கால் பணம் கொடுத்து ஊற்றும் பெட்ரோலில்தானே உங்கள் முன் பின் வாகனங்களும் ஓடுகின்றன?
தவிர எல்லோரின் பரபரப்பான அலுவல் நேரத்திலும்- ஏதோ ஒரு உயிர் இறுதிக்கட்ட காப்பாற்றுதலுக்கான மருந்துக்குமாய் அல்லாடிக்கொண்டிருக்கும் எத்தனை எத்தனை நாட்கள்-
எங்களை எல்லாம் நடுத்தெரு சிக்னல்களில் நிறுத்திவிட்டு ஒய்யாரமாக ஏதோ ஒரு கேளிக்கைக்கோ பாராட்டுவிழாவுக்கோ சென்றிருக்கிறீர்கள்?

முக்கியமான ஒரு முடிவெடுக்கும் கூட்டத்துக்குத்தான் பரபரப்பாய் செல்ல வேண்டி இப்படிச் செய்துவிட்டார்கள் காவல்துறையினர் என்று சொன்னாலும் அப்படி நீங்கள் கிழித்த கிழிப்பில் நாடு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாதா?

உட்கார்ந்த இடத்திலேயே சிலையைத் திறக்க விஞ்ஞானப் பொத்தானை அழுத்தும் நீங்கள் இன்னும் எத்தனை நாள் எத்தனை ஊரில் மாநாடு கூட்டி ஓசி எரிபொருளையும் ஓசி மின்சாரத்தையும் எல்லோரின் நேரத்தையும் வீணாக்கப் போகிறீர்கள்? இதுவரை பேசாத புதிய விடியலை உண்டாக்கும் எந்த அறைகூவலை விடுக்கப் போகிறீர்கள்?

இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு கடல்நீரைக் குடிநீராக்க யாரிடம் முன் அனுமதி பெற்றீர்கள்? ஏற்கெனவே மீனவர்களின் சாபம் உங்களை ட்விட்டர்களில் துரத்திக்கொண்டிருக்க இன்னும் இன்னும் அவர்களின் வாழ்க்கையில் நீங்கள் விளையாடுவதாய்த்தான் படுகிறது.
இவை எல்லாமே மேலோட்டமான கேள்விகள். நிர்வாகம்-திட்டமிடல்-சுகாதாரம்-கல்வி-விவசாயம்-குறித்த அத்தியாவசியமான கேள்விகள் இன்னும் நிறைய இருக்கின்றன. மேலே கேட்கப் பட்டவை எல்லாம் அடிப்படையான கோபத்தைக் கிளறக் கூடிய கேள்விகள்.

ஆக இப்படிப் பட்ட அரசியல்வாதிகளிடம் அடுத்த ஐந்தாண்டுகளையும் கொடுத்தால் என்ன மாறுதலை இவர்கள் கொண்டுவந்து விடுவார்கள்?

வேண்டாம். இவர்கள் யாருமே வேண்டாம்.

இன்றைக்கும் உண்மையை நம்பும் எளிமையை விரும்பும் அமைதியை விரும்பும் ஜாதிகளையும் மதங்களையும் கடந்த பொதுவாழ்க்கையில் இறங்க ஆசையும் அதே சமயம் அச்சமும் பீடித்த நன்மக்களை உற்சாகப் படுத்துவது நம் கையில்தான் இருக்கிறது.

இன்றைக்கு ப்ளாக்கரிலும் வேர்ட்ப்ரஸ்ஸிலும் சொந்தமாக டொமைன் வைத்தும் தமிழில் எத்தனை லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்று கூகுளில் தேடிப் பிடித்துவிடலாம். ஒவ்வொருவரையும் வாசிக்கும் ஒவ்வொரு குழுவிலும் உள்ள மக்கள் இந்தத் தீப்பொறியை தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பரப்பட்டும்.

”தேர்தலைப் புறக்கணிப்போம்-எங்கள் குரல் கேட்கப்படும் வரை-நாங்கள் விரும்பும் மாறுதல் ஏற்படும் வரை-”
என்கிற ஸ்லோகனை எல்லாத் தளங்களிலும் வெளியிடுவோம். பொதுவான ஒரு லோகோவை வடிவமைப்போம்.

முழுமையாய் நம் செயலின் விளைவை நம்புவோம்.முரட்டுத் தனமாய் தேர்தல்களைப் புறக்கணிப்போம். தேர்தல்களின் போது அமைதியாய் வீடுகளிலோ அலுவலகங்களிலோ அமர்ந்து எல்லாக் கட்சிகளும் போடும் கணக்கை மாற்றுவோம்.

நாம் மாற்றங்களை நாம் விரும்பியபடிக் கொண்டுவருவோம் அமைதியான பாதையில்.

எல்லாம் முடியும் என நம்புபவர்களைக் காலம் கைவிட்டதில்லை.

16 கருத்துகள்:

ramanaa சொன்னது…

உண்மைதான் அப்பா. நம் நாட்டில் தலைவர்கள் எப்படி என்று தெரிந்தும், நாம் அவர்களை வளரவிட்டுவிட்டோம்.

நமக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து எல்லோரையும் காந்தியாகப் பார்த்துவிட்டோம். பொறுத்தது போதும்.

நான் மட்டும் ஒரு 18 வயதுக் குடிமகனாக இருந்திருந்தால் இத்தேர்தலை புறக்கணித்திருப்பேன்.

இந்த நாள் வரை ஏமாற்றியிருக்கலாம் . . . இனி இல்லை. இன்னும் ஐந்து ஆண்டுக்கும் புலம்பத் தேவை இல்லாத வகையில் ஏதாவது செய்ய வேண்டும்.

ஹேமா சொன்னது…

வீடோ நாடோ எதிலும் அக்கறை,கழிவிரக்கம் இன்னும் பல மனித பண்புகள் இருந்தாலே உருப்படலாம் நாம் !

Harani சொன்னது…

சுந்தர்ஜி...

அழுத்தமான மன உறுதியுடன் இதை நான் வழிமொழிகிறேன். இதை என் வலைப்பக்கம் வழியாக முடிந்தவரை எல்லோருக்கும் சொல்வேன். மீட்டெடுப்போம் இந்த நாட்டை தீயவர்களிடமிருந்து.

G.M Balasubramaniam சொன்னது…

சுந்தர்ஜி, உங்கள் கோபத்தின் வெ ளிப்பாட்டுக்கு சற்றும் குறைந்ததல்ல என் உள்ளக்குமுறலும்.,ஆத்திரமும். நான் முன்பே ஒரு முறை கூறியது போல் வலையில் வளைய வரும் நாம் சித்றிக்கிடக்கிறோம். வலையையே வரமாக்கும் முயற்சிதான் பலன் தரும் .ஒருமித்த கருத்தை உருவாக்க முயலுவோம். பலரது அபிப்பிராயங்களை ஒன்று திரட்டுவோம் இதற்கென்றே ஒரு தனி வலை உருவாக்கலாம் . மாத்தி யோசியுங்கள் சுந்தர்ஜி.

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

எனக்கு இதில் உடன்பாடில்லை.... புறக்கணிப்பது சரியா என்று தெரியவில்லை...

காந்திஜி இருந்திருந்தால்... தேர்தலை புறக்கனிக்க சொல்லியிருப்பாரா?

அன்புடன்
ராகவன்

Matangi Mawley சொன்னது…

Cynical-aa irukku-nnu ninaikka vendaam. But ennoda opinion-- "namma vote avangalukku vendaam. avangalukku venum-gara alavu vote avanga-le pottupaanga".

en vote naan podalennaa en perla vera oruththan poda poraan. it makes no difference!

vote pottaalum yaarukkum poda mudiyaathu thaan. 'ozhunga vote poduthal' ngarathum ippo oru cliché thaan. students arasiyalukku varanum-nnu sonnaanga. enga college-la koottam pottu pesina thozhargal ovvoruththarum ovvoru naattula dollars ennikkondu irukkaanga. padichchavan arasiyal varanum-naanga. avan maththavan-oda 10 pangu athigam oozhal pannaraan.

it's a vicious circle.

ஓலை சொன்னது…

Elected governments will decide the crores of people's life. So it is the duty of the people to decide the type of govt they need. They should never loose a chance to express their feelings thru their ballots. Everyone should vote.

சுந்தர்ஜி சொன்னது…

நம் பங்கைச் சரியாய்ச் செலுத்துவோம் ஹேமா.

அதுதான் துவக்கம் ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

உன்னால் எனக்குப் பெருமை ரமணா.

உன் கைகளில் என்னை இணைத்துக் கொள்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹரணி.

முடிந்த வரையும் எல்லாம் முடியும் வரையும் எடுத்துச் செல்வோம் அணையாமல் இந்தச் சுடரை.

சுந்தர்ஜி சொன்னது…

சாதகமான ஆலோசனைகளுக்கு நன்றி பாலு சார்.

எப்படியும் நம் இலக்கை அடைவோம்.

சுந்தர்ஜி சொன்னது…

அது உங்களின் பார்வை ராகவன்.

காந்திஜியின் பார்வை குறித்து யூகிக்க முடியவில்லை.

ஆனாலும் நிச்சயமாய் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நம் தேசத்தின் மாற்றம் புறக்கணிப்பின் ஆயுதத்தோடுதான் நிகழும். அதில் நாமும் பாகமாயிருப்போம்.

சுந்தர்ஜி சொன்னது…

இல்லை மாதங்கி.

மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன் நிகழப் போகும் மாறுதல்கள் மீது.

அதில் நம் பங்கு இருக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

//Elected governments will decide the crores of people's life. So it is the duty of the people to decide the type of govt they need. They should never loose a chance to express their feelings thru their ballots. Everyone should vote.//

உங்களின் பின்னூட்டத்தைத் த்மிழால் தொடர்பவர்களுக்காக மொழிபெயர்க்கிறேன் சேது.


//கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிற அரசு நிர்ணயிக்கிறது.

எனவே அவர்களுக்குத் தேவையான அரசு எப்படிப் பட்டதாய் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் கடமை மக்களுடையது.

தங்கள் உணர்வுகளை வாக்குகளின் மூலமாக வெளிக்காட்டும் வாய்ப்பை அவர்கள் இழந்து விடக்கூடாது.

எல்லோரும் வாக்களிக்க வேண்டும்.//

காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸாகவும் இந்திரா காங்கிரஸாகவும் பிளவு பட்டபின் வந்த முதலாவது தேர்தலில் இருந்துதான் அரசியல் குறித்த என் கவனிப்பு உருப்பெறுகிறது.

தேர்தல் தினத்தன்று என் தாத்தா சலவைக்குப் போய்வந்த மொடமொடப்பான கதர்சட்டை வேட்டியுடன் கோயிலுக்குச் சென்று கடவுளை தரிசித்துவிட்டுத்தான் ஓட்டளிக்கப் போவார். ஓட்டுப் போடுவதற்கு முன் எதுவும் சாப்பிடமாட்டார்.

அவசரநிலைப் பிரகடனப் படுத்தப்பட்ட பின் வந்த 1977ம் தேர்தல்தான் அவர் ஓட்டளித்த கடைசித் தேர்தல்.

அவர் சாவடிக்குச் செல்வதற்கு முன்பே அவரின் வாக்கு பதிவாகியிருந்த ஏமாற்றத்தை 1980ல் இறக்கும்வரை சொல்லிப் புலம்பியபடியிருந்தார்.

அவர் வாழ்க்கையில் இதைவிடப் பெரிய ஏமாற்றமாய் வேறெதுவும் இருந்ததுமில்லை என்பாள் என் பாட்டி.

vasan சொன்னது…

உங்க‌ளின் ப‌திவுப் பிர‌வாக‌த்தின் தாக்க‌த்தை தாங்கிப் பிடித்து, படித்து, "பின்னூட்ட‌"மிட‌
அந்த‌ ஆகாய‌ க‌ங்க‌யின் ஆக்ரோஷ‌ பிர‌ள‌ய‌த்தை த‌லையில் தாங்கி,
க‌ங்கையாய், உரைய‌வ‌த்து, பின் க‌ரைய‌வைத்து, க‌ரைக‌ளில் விட்ட‌ அந்த‌ சிவ‌னின் அருள் பெரிய‌ள‌வில் வேண்டும். நான் கொஞ்ச‌ம் சார‌லில் ந‌ன‌ந்து விட்டுப் "பின் வ‌ருகிறே‌ன்".

raji சொன்னது…

u r correct ji.

claps to u.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator