7.3.11

ஏன் புறக்கணிப்பு?


புறக்கணிப்பின் கசப்பை உணர வைத்ததில் முதலிடம் மஹாத்மா காந்திக்குத்தான்.

அந்நியத்துணிகளைப் புறக்கணிப்பது-சட்டத்தைப் புறக்கணிப்பது-இடப்படும் கட்டளைகளுக்கு ஒத்துழையாமல் இருப்பது போன்ற எல்லாமே பிடிவாதமாய் நம் எண்ணத்தை வெளிப்படுத்த உதவும் சாதனம்தான். இதை விடப் பெரிய ஆயுதம் எதுவும் இருக்கவும் முடியாது.

ஹரணியின் தளத்தில் புறக்கணிப்பு குறித்த பின்னூட்டங்களை நான் வாசித்தேன். என்னால் ஏதோ நுட்பமான காரணத்தினால் அங்கே பின்னூட்டமிடமுடியவில்லை.

எழுதிய கருத்தின் எதிர்வினையாய் எந்தக்கருத்தும் தெரிவிக்கப் படவில்லை. எழுதப் பட்ட கருத்துக்களை எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம்? அதற்கு நம் எதிர்வினை என்ன? இந்த தேசம் சரியாய் இயங்கிக் கொண்டிருக்கிறதா? இதற்கெல்லாம் அவரவர் மொழியில் ஆதங்கங்களையல்லவா - அதற்கான பொதுக் கருத்தையல்லவா அது உருவாக்க வேண்டும்? நிறைய இதை விவாதிக்கும்போதுதானே பார்க்காத கோணங்கள் வெளித் தோன்றும்?
நாம் தினம் தினம் அழுத்தமான மனநிலையோடு சொல்லவொண்ணா ஆதங்கங்களோடுதான் உறங்கச் செல்கிறோம். எதையாவது வாசித்தோ எதையாவது கேட்டோ அதன் பின்தான் நம்மைச் சமனப் படுத்திக்கொண்டு தூங்கமுடிகிறது. எந்தத் துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே சீர்கேடுதான் பெரும்பான்மையான குணாதிசயமாக இருக்கிறது.

இதைப் பற்றி எத்தனை நாட்கள் யார் யாரிடமெல்லாம் பேசியிருக்கிறோம்?-விவாதித்திருக்கிறோம்? போன வருடத்தின் மையத்திலிருந்துதான் கணிணி பற்றிய முட்டிமோதிய அறிவுடன்தான் வலைப்பூ எனும் குறிஞ்சியின் பலத்தை உணர்ந்தேன். இதுதான் நம் ஆயுதம் என முடிவு செய்தேன்.

இன்றைய அழுகல்களை எதிர்க்க நம்முடைய ”மாதிரி எதிர்ப்பாக” (token protest) புறக்கணிப்பைப் பற்றி எழுதினேன். அவரும் அதைத் தன் வலைப்பூவிலும் எழுதினார்.

புறக்கணிப்பின் எண்ணிக்கை குறித்து நமக்குக் கவலையில்லை.

நட்ட செடியின் இலையை எண்ணுவீர்களா? அந்தச் செடி மரமாகிப் பழுக்கும் வரை அயராது நீரூற்றிக் காப்பீர்களா?

காலிமனையாய் வாஸ்து பூஜை முடிந்த புதரில் வீட்டைக் கட்ட இருக்கும் பொறியாளனுக்கு மட்டும்தான் கட்டப்படாத வீடு தெரியும். நமக்கோ செங்கல்லும் மணலும் வளைக்கப்படும் கம்பிகளும் மட்டும்தான்.

பாறையே இல்லாத கழனி மண்ணில் ஒரு ப்ரும்மாண்டத்தைக் கட்டி முடிப்பது இருக்கட்டும் கற்பனை பண்ணவாவது எத்தனை பேருக்கு தைரியம் இருந்திருக்கும்? ராஜராஜனுக்கு மட்டும்தான் இருந்தது.

எண்ணிக்கை முக்கியமில்லை எல்.கே மற்றும் ரிஷபன். எண்ணம்தான் முக்கியம் என எப்போதும் நம்புகிறேன். அது உங்களிடம் நிறைவாக இருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்? என்று எத்தனை முறை குமுறியிருப்போம் பாலு சார் மற்றும் ஆர்.ஆர்.ஆர். சார்? புறக்கணிப்பா அல்லது வேறெதுவுமா என்பதை அப்புறமாய்த் தீர்மானிப்போம். சொல்லப் பட்ட விஷயங்களுக்கு என்ன மாற்று என்பதை உங்களை விட வேறு யார் சொல்ல முடியும்? நம்மை முதலில் சரி செய்து கொள்வோம் என்கிறீர்கள் ஆர்.ஆர்.ஆர். சார். நம்மை விட வேறு யாரால் இதைச் சரி செய்ய முடியும்?

நாம் மெதுவே மெதுவே நகரும் வேளையில் நம் வீட்டுக்குள் ரௌடிகளும் குண்டர்களும் வந்தமரும்போது என்ன செய்யப் போகிறோம்? என்று கேட்கிறீர்கள். நம்மிடம் கேள்வி கேட்கும் அடுத்த தலைமுறையின் கேள்விகளை விடக் கூரானதாக இருக்கமுடியாது அந்த ரௌடிகளின் ஆயுதங்கள்.

நாம் போடாத ஓட்டை எவன் போட்டால் என்ன? நாம் சாப்பிட்டபின் தூக்கி எறியும் எச்சில் இலையாக அது இருக்கட்டும்.

அவன் போட்ட ஓட்டுக்குப் பின் ஐந்து வருடங்கள் அவன் காத்திருக்கவேண்டும். நாம் ஐந்து வருடங்களும் இயங்குவோம். எழுதுவோம். பேசுவோம். இந்தப் பொறியைப் பரப்புவோம். அது வானைத் தொடுமளவு எழுந்து ஒருவன் மிச்சமில்லாமல் சுட்டுப் பொசுக்கும் நாளும் வரும். அடுத்த ஐந்தாவது ஆண்டு தேர்தலுக்கு நம் ஓட்டைத் திருடிய அவர்கள் மட்டுமில்லை. தேர்தலே இருக்காது.

பாலு சார் சொன்னதுதான் என் எண்ணமும். பொதுவான வலைத் தளம் உருவாக்கும் எண்ணம் குறித்தும் எல்லாத் தளங்களில் எழுதுபவர்களிடம் இந்தச் செய்தியை எடுத்துச் செல்வது குறித்தும் பேசி வருகிறேன்.
ட்விட்டர்களில் இதைக் காட்டுத் தீ போலப் பரப்பவும் முயல்வோம். எல்லோரும் வாரம் ஒரு முறையாவது தங்கள் வலைப்பூக்களில் சமூகமாற்றம் குறித்த அக்கறை கொள்ளும் இடுகைகளைப் பதிவு செய்வோம். இந்தத் தீயின் சுடர் தணியாமல் காப்போம்.

இதற்குப் பின்னூட்டம் இடாத போதும் இதைப் படிப்பவர்களையும் தொலைபேசிகளில் கருத்தளிப்பவர்களையும் நான் நன்றியுடன் எண்ணி வணங்குகிறேன்.

புறக்கணிப்பு எப்போதும் போல் முரட்டுத் தனமாய்த் தொடரும்.அதில் எந்தப் பின்னடைவும் இல்லை.

ஜெய்ஹிந்த்!

10 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

இந்த நெருடலும் குமுறலும் வலைப்பதிவுகளுக்கு முன்னும் இருக்கிறது..சுந்தர்ஜி. ஆனால் பின்னூட்டமிட்ட அன்பர்களின் ஆதங்கம் எல்லாமே ‘இது விழலுக்கு இறைத்த நீராகி விடக் கூடாது’ என்பதுதான். பிளாகில் படிக்கிறவர்களில் பாதிப் பேர் அயல் நாட்டில்.. ஓட்டு போடப் போன என் ஓட்டே 8.30 க்கே போடப்பட்டு விட்டது இன்னொருவரால். சாத்தியங்களை அலசவே விழைகிறோம்.. மறுதலிக்கிற கூட்டம் - அதன் எண்ணிக்கை - கணிசமாய் என்று உயர்ந்து நிற்கிறதோ அதுவரை இருப்பதற்குள் சிறந்ததை தேர்ந்தெடுக்க யோசிப்பதே முறை. நீங்கள் அறியாத எதியும் சொல்ல வரவில்லை சுந்தர்ஜி

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

திரு ரிஷபன் அவர்கள் சொல்லுவதே, எனக்கும் சரியாகப் படுகிறது, சுந்தர்ஜி சார்.

Ramani சொன்னது…

மோசமானவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள
இந்த தேர்தல் அமைப்பில் எனக்கு முற்றாக
நம்பிக்கை இல்லையென்றாலும் கூட
புறக்கணிப்பின் மூலம் எந்த பயனும்
இருக்காது என்றே தோன்றுகிறது
நீதி தவறாத மன்னனிடம் நீதிகோருவது சரிதான்
அயோக்கியனிடம் நீதிகோருவது
எப்படி சரியானதாக இருக்கமுடியும்?
சட்டத்தை மதிக்கக் கூடிய ஆங்கிலேயனுக்கு எதிராக
நீங்கள் சட்ட மறுப்பு இயக்கம் நடத்தினால்
அவன் புரிந்து கொள்வான்
சட்ட அறிவற்ற அல்லது சட்டத்தை மதிக்காத
மனித ருக்கெதிராக நீங்கள் சட்டத்தை
மதித்தால் என்ன மிதித்தால்தான் அவனுக்கென்ன?
எனகென்னவோ புறக்கணிப்பும் அப்படித்தான் படுகிறது

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...2-3 பதிவுகளில் உங்கள் எழுத்துக்களை ரசிப்பதோடு மட்டும் !

நிலாமகள் சொன்னது…

திணை மாவும் கொம்புத் தேனும் தேடிஎடுக்கவும் தக்க வைத்துக் கொள்ளவுமான அறப் போராட்டத்தை தொடர்வோம் நாமெல்லோரும் ஜி... கணினி கைநழுவிப் போகும் அவலத்தில் பின்தொடர துரிதமற்ற நிலைக்கு வருந்தும் கையறு நிலை எனது. நாட்கள் கடந்தாலும் நினைவுகளின் அடர்த்தியில் என்றும் தணல் நீர்க்காமல் தான் ... தொடருங்கள்...

சுந்தர்ஜி சொன்னது…

என்னால் உங்கள் வாதத்தை ஏற்கமுடியவில்லை ரிஷபன்.

//பிளாகில் படிக்கிறவர்களில் பாதிப் பேர் அயல் நாட்டில்.. ஓட்டு போடப் போன என் ஓட்டே 8.30 க்கே போடப்பட்டு விட்டது இன்னொருவரால்.//

மாறுதல் என்பது ஒரு நாளில் நிகழ்வதோ ஒரு தேர்தலில் நிகழ்வதோ அல்ல ரிஷபன். இது தொடர்ந்து நிகழ்வது.

//மறுதலிக்கிற கூட்டம் - அதன் எண்ணிக்கை - கணிசமாய் என்று உயர்ந்து நிற்கிறதோ அதுவரை இருப்பதற்குள் சிறந்ததை தேர்ந்தெடுக்க யோசிப்பதே முறை//

இது தானாய் நிகழும் என எதிர்பார்க்கிறீர்கள?

மறுதலிக்கிற கூட்டத்தின் எண்ணிக்கை உயரும் வரை இந்த குண்டர்களுக்கும் ரௌடிகளுக்கும் நம் வாக்குகளை அளித்து இருப்பதையும் வாரிக்கொடுப்போம் என்பதாய் இருக்கிறது நம் பொறுமை.

சுந்தர்ஜி சொன்னது…

இல்லை கோபு சார். அது உங்கள் பார்வை என ஏற்கிறேன்.

ஆனால் அது மிகவும் நீள்வட்டப் பாதை.

சுந்தர்ஜி சொன்னது…

//சட்ட அறிவற்ற அல்லது சட்டத்தை மதிக்காத
மனித ருக்கெதிராக நீங்கள் சட்டத்தை
மதித்தால் என்ன மிதித்தால்தான் அவனுக்கென்ன?//

புறக்கணிப்பின் தாக்கம் அவர்களுக்குப் புரியும்.புரிய வைக்க முடியும்.

தேர்தல்களை பகிஷ்கரிப்பது என்பதிலிருந்து கொஞ்சம் இறங்கி 49ஓ வை நாம் ஆதரிக்கலாம் எனத் தோன்றுகிறது ரமணி அண்ணா.

சுந்தர்ஜி சொன்னது…

ஏன் இந்தப் புறக்கணிப்பு ஹேமா?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி நிலாமகள் உங்கள் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு.

சாம்பலால் மூடுண்டு கிடக்கிறது ஒரு மாநெருப்பின் சுடர். மீண்டெழவைப்போம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator