8.3.11

குறை ஒன்றும் இல்லை


”இந்தியாவின் மிக நீண்ட பரப்பளவின் குறுக்கும் நெடுக்குமாக நான் பயணித்துவிட்டேன். என்ன வளம்? என்ன ஒரு கலாச்சாரம்? ஒரு பிச்சைக்காரன் இல்லை. ஒரு திருடன் இல்லை. என்ன ஒரு உயர்ந்த பண்பும் ஆன்ம பலமும் நிறைந்த தேசமிது. இவர்களின் முதுகெலும்பான பாரம்பரியமிக்க கலாச்சாரத்தையும் ஆன்மீக பலத்தையும் உடைத்தாலன்றி இவர்களை நாம் வெல்ல முடியாது.

பழம்பெருமையும் ஆழமும் மிக்க இவர்களின் கல்வியை விட வெளிநாட்டுக் கல்வி குறிப்பாக ஆங்கிலம்தான் உயர்ந்தது என்ற மனோபாவத்தை உண்டாக்கி அவர்கள் தேசத்தின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடுவோமானால் நாம் வெற்றி பெற்றுவிடுவோம். ஆங்கிலமே பெரிது என்கிற எண்ணத்தை விதைத்து நம் கலாச்சாரத்தை நேசிக்கச் செய்து விட்டால் நம் விருப்பம் போல் அவர்களை வளைத்துவிடலாம்”.

இப்படி மிகச் சரியாக இந்தியர்கள் மீதான தன் கணிப்பை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1835ல் பெப்ருவரி 2ம் தேதி உரையாற்றுகையில் தெரிவித்த தாமஸ் பாபிங்டன் மெக்காலேயின் கருத்துக்களை 175வருடங்கள் கழித்து எண்ணிப்பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது. நம்மைப் பற்றி ஒரு வேற்றான் கணித்து நாம் இப்படி அடிமைகளாகிப் போனோமே என்கிற கழிவிரக்கம் ஆன்மாவை உலுக்குகிறது.

உண்மையாகவே ஒரு திட்டத்தைச் செயல்வடிவாக்க எத்தனை கூர்மையாக அவதானித்து ஒரு ஆக்டோபஸ் போல உடும்புப் பிடிக்குள் ஒரு நாட்டை வளைக்க முடிந்திருக்கிறது.

தனக்குத் தொடர்பே இல்லாத தொலைவிலிருந்து உள்நுழைந்து ஊடுருவி அவர்களின் மொழி-கலாச்சாரம்-எண்ணம்-உடை-உணவு வரை தலைகீழாய் மாற்ற எத்தனை மெனக்கெட்டிருக்கிறார்கள்? ஒரு நாட்டையே வெளியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தால் ஊடுருவ முடிந்திருக்கிறது என்றால் எத்தனை தைரியம் அதற்கு இருந்திருக்க வேண்டும்?

ஒரு வீட்டுக்குள் கன்னம் வைத்து நுழைந்து அவ்வீட்டிலுள்ளவர்களின் உறக்கத்தைத் தனக்குச் சாதகமாக்கி அங்கிருக்கும் அத்தனை செல்வத்தையும் சுருட்டிக்கொண்டு செல்லும் ஒரு கள்வனின் செயல் இது.

அந்தக் கள்வனின் செயல் இன்னும் தொடர்கிறது உள்ளூர்க் கள்வர்களினால். மொழி-கலாச்சாரம்-என்பதை ஜாதி வரையிலும் கொண்டுவந்து நிறுத்தி நாட்டைக் கூறு போட்டுப் பிளவு படுத்திக் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உறுதியான சிந்தனையும் நேர்கொண்ட பார்வையும் இல்லாத தலைவர்களால் இம்மாதிரியான பிரச்சினைகளைச் சமாளிக்கும் விதம் தெரியாமல் அழுது சாதிக்கிற எல்லாக் குழந்தைக்கும் பால் கொடுத்து ஊக்குவித்து மகிழ்கிறார்கள்.

நம் உழைப்பை நம் சிந்தனையை நம் நாட்டின் வளத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

தஞ்சாவூர்-ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்களில்
(கி.பி.900ல் இருந்து கி.பி.1325வரையுள்ள காலம்) உள்ள சான்றுகளின் படி ஒரு ஹெக்டேருக்கு 15ல் இருந்து 20டன் வரை நெல் உற்பத்தி இருந்திருக்கிறது. இப்போது அதிகபட்ச உற்பத்தி லூதியானாவில் 6டன் வரை மட்டுமே.

பழமையான பிரிட்டிஷ் ஆவணங்களில் அவர்களையும் விட நம் விஞ்ஞானத் தொழில் நுட்பம் மீதும் கல்வி முறையின் ஆழம் குறித்தும் சான்றுகளும் பொறாமையும் தெறிக்கின்றன. இரும்பின் தரமும் அதன் உற்பத்தியும் மற்றெல்லா நாடுகளையும் விட நம்முடையது சிறந்ததாக இருந்திருக்கிறது. தில்லியின் மெஹ்ரௌலியிலுள்ள இரும்பு ஸ்தூபி ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் துருப்பிடிக்காமல் அதே பொலிவோடு நிற்பது உலகத்தின் அனைத்து வல்லுனர்களுக்கும் இன்றைக்கும் ஆச்சர்யமானதாக இருக்கிறது.

கி.பி.1600ல் உலகத்தின் GDP யில் 22சதத்துக்கும் மேல் இந்தியாவின் பங்கு இருந்திருக்கிறது. ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்ட 1870களில் அது 12சதமாக பாதாளத்தில் வீழ்ந்தது. அதே காலகட்டத்தில் 2சதத்துக்கும் கீழே கிடந்த அவர்களின் ஜிடிபி 9சதத்துக்கும் மேல் உயர்ந்தது. நமது ஜிடிபி இப்போது ஒற்றை இலக்கத்தில் முக்கிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் பெற்று 64ஆண்டுகளுக்குப் பின்னும் உலகச் சந்தையில் நமது பங்கு ஒரு சதத்துக்கும் குறைவாக இருப்பது எத்தனை பெருமை?

18ம் நூற்றாண்டின் பின்பகுதி வரையிலும் துணி உற்பத்தியிலும் ஜவுளி ஏற்றுமதியிலும் உலகத்தின் முதலிடம் நமக்குத்தான். சீனாவுக்கு இரண்டாமிடம். கப்பல் கட்டுவதில் பேப்பர் தயாரிப்பதில் நாம்தான் முன்னோடி.நம் வானசாஸ்திர அறிவு- மருத்துவத்தில் யாரோடும் ஒப்பீடற்ற தன்மை-கல்வியின் மேன்மைக்குச் சான்றாக வெளிநாடுகளிலிருந்து வந்து நாலந்தா பல்கலைக் கழகத்தில் தங்கி கல்வி கற்றுச் சென்ற தொன்மையான வரலாறு-அரசியலுக்குத் தடம் போட்டுத் தந்த சாணக்யனின் ராஜதந்திரம்-நமக்கென்ற தனியான தத்துவ அறிவு-முதுமையான மொழி வளம்-யாரிடமும் இல்லாத இசை நாட்டிய மரபு- சிற்பப் பாரம்பரியம்-பெரும் பெரும் கோவில்கள்-ஜோதிட அறிவு-மாயாஜாலக் கலை-மிக ஆழ்ந்த கணித அறிவு-எல்லா வளங்களும் மிக்க நாட்டின் அமைப்பு-அளவுக்கதிகமாக சூரிய ஒளி-கடல் போக்குவரத்துக்கும் வணிகத்துக்கும் மீன்வளத்துக்கும் முத்துக்கும் மூன்றுபுறமும் சூழப்பட்ட கடல்-மலை வளம்-ஏராளமான நதிகளுடன் நீர்வளம்-எல்லாக் கனிமங்களும் கிட்டும் நிலவளம்-மழையை வரவேற்க அடர்ந்த பசும் காடுகள்-யாரிடமும் இல்லாத எத்தனை அபூர்வ மூலிகைகள்-எத்தனை விலங்கினங்கள்-பறவைகள்-மரங்கள்-பூக்கள்-கனிகள்- என ஒரு இயற்கை தேவதையின் முழுக் கொடை நம் தேசம் தான்.

ஒரு நிமிடம் கண்களில் கசியும் நீரைத் துடைத்துக் கொண்டு படபடக்கும் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் தோழர்களே!

இவற்றில் எதை எல்லாம் அழித்துவிட்டோம்? என்னவெல்லாம் கெடாமல் மீதமிருக்கிறது? இனி எதையெல்லாம் விட்டுச் செல்லப் போகிறோம்? யாரிடம் விட்டுச் செல்ல இருக்கிறோம்?

16 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

YOU HAVE EXPRESSED ALL YOUR ANGUISH WITH STATISTICS. முப்பது நாற்பது கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் மலையோ கருங்கல்லோ இல்லாத இடத்தில் பிரம்மாண்டமான பெரிய கோவில் அதன் உச்சியில் எண்பது டன் எடையுள்ள விமானம், அதுவும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால்...சிதம்பரம் நடராஜர் கோவில், எத்தனை விஸ்தாரமானது...ஹூம் பெருமூச்சுதான் வருகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

”குறை ஒன்றும் இல்லை” என்று சொல்லிக்கொள்ளலாம், பாடலாம், ஆடலாம்.

ஆனால்

//அந்தக் கள்வனின் செயல் இன்னும் தொடர்கிறது உள்ளூர்க் கள்வர்களினால். மொழி-கலாச்சாரம்-என்பதை ஜாதி வரையிலும் கொண்டுவந்து நிறுத்தி நாட்டைக் கூறு போட்டுப் பிளவு படுத்திக் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.//

சரியாகத் தான் ஆராய்ந்து அலசிச் சொல்லியுள்ளீர்கள்.

முரளிகுமார் பத்மநாபன் சொன்னது…

நிறைய மனதிற்குள் ஓடுகிறது, உங்களின் கட்டுரையைப் படித்தபின்பு. குளப்பிய குளத்தில் மீனும் பிடித்தாயிற்று, இன்னும் தெளியலை.... :-(

Matangi Mawley சொன்னது…

Sir-ji,

Macaulay-voda intha ganippu, oru murai Hindu-vil padiththa ninaivu. 9th std. nu ninaikkaren (yr. 2001). enga Social Science Miss-a enakku romba pidikkum. Avanga class- verum paada puththagangala-voda ninnathu kidayaathu. Every thurs., Current affairs analysis, article discussion sessions irukkum. Appadi oru class-la, intha article-a disscuss pannina ninaivu irukku.
Annikku, she made a speech. Athoda essence--
We live in a country that flourishes with the heavy cultural heritage of a past, and a rapid rush and an urge to get into the future. I see the future, in front of my eyes. I see many Doctors, Engineers, Architects and Social Engineers here, in front of me. Your Report Cards are studded with all your achievements. You were all buds that have bloomed in front of my eyes. But all I ask myself is- Are you all going to be studs adorning the walls in your home- or are you going to be the Minds building this Nation?
Avangaloda intha speech- I could never forget in my life!
We have a media that glorifies glamour. There is a constant pressure among younger minds to be the 'face of today'! A chunk of life is wasted on dreaming an American Dream- and the rest of it goes in the struggle to achieve it. there's no one at home to educate them for better. Families take pride in blood-line scattered abroad. There's education of a standard that no other country offers. But 'Cultural Quotient' it offers is almost Zero.
Half of my friends claim "they don't know tamil". Rest of them are worried about "on-site" opportunities. As I sit here, reading out the post of yours, I think to myself- "Where do i fit-in"? "Identity-crisis" is a terrible disease, sir. It's all questions, and no answers...

Nagasubramanian சொன்னது…

அட என்னங்க இப்படி கேட்டுபுட்டீங்க?
"தன்மானம் இல்லாம, ஜனநாயகத்துக்கு எதிரா தான் ஆள்காட்டி விரலை கூட உயர்த்தாம, எவன் எப்படி இருந்தா என்ன , நம்ம ஜாலியா இருப்போம்" னு பட்டியல் ரொம்ப பெருசுங்க.

RVS சொன்னது…

என்ன ஒரு அலசல். வரலாற்றுப்பூர்வ ஆதரங்களுடன். அற்புதம் ஜி!
வேற்றுமையில் ஒற்றுமையை முற்றிலுமாக தகர்த்துவிட்டார்கள்... இனிமேல் ரொம்ப கஷ்டம்.. ;-)))

சிவகுமாரன் சொன்னது…

படித்துக் கொண்டே வருகையில் கண்களில் உருண்ட நீரை துடைக்கையில் மிகச் சரியாய் இந்த வரிகள் .
\\ஒரு நிமிடம் கண்களில் கசியும் நீரைத் துடைத்துக் கொண்டு படபடக்கும் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்///

நிலாமகள் சொன்னது…

எப்படியெல்லாம் இருந்திருக்கிறது?! புள்ளிவிவரங்களும் தகவல்களும் மாறா பிரம்மிப்பை தருகிறது ஜி. வருத்தமாகவும் இருக்கிறது. எதையெல்லாம் இழந்திருக்கிறோமென உணர்கையில். மீட்டெடுக்க சாத்தியம் இருக்கிறதா... முடியுமா நம்மால் என்றெழும் ஐயம் மீறி முதலடி எடுக்க விழையும் தங்கள் முயற்சி வெல்க!

சுந்தர்ஜி சொன்னது…

நம் நிறைவிலிருந்து எத்தனை சீக்கிரம் நம்மிடம் ஏதுமில்லாதது போன்ற தோற்றத்தை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்தி விட்டது அந்நியர்களின் ஊடுருவலும் அவர்கள் மீதான நம் மோகமும்?

சொல்லித் தீராது பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

குறையொன்றும் இல்லை என்பதே வஞ்சப் புகழ்ச்சிதான் கோபு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

சீக்கிரமே தெளியும் முரளி.

முதல் வருகைக்கு நன்றியும், அடிக்கடி வருவதற்கு விருப்பங்களும்.

சுந்தர்ஜி சொன்னது…

இவையெல்லாம் ஒரு பெரும் வியாதிக்கான அறிகுறிகள் தான் மாதங்கி.

இவற்றிற்கான மருந்து நம்மிடமேதான் இருக்கிறது.

அந்நிய மோகம் அளவுக்கதிகமாக நம்மைச் சீர்குலைத்து நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து விட்டது.

க்ரிக்கெட் மைதானங்களில் இசைக்கப் படும் தேசியகீதங்களிலும் கொடியசைப்புகளிலும் மட்டுமே நம் தேசபக்தி மீதமிருக்கிறது.

மைதானங்களுக்கு வெளியில் அந்தக் கொடியசைப்பும் நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் நிகழத் துவங்குகையில் மாற்றங்கள் நிகழத் துவங்கும்.

எல்லாம் மாறும்.

சுந்தர்ஜி சொன்னது…

மிகச் சரியான தேளின் கொடுக்கு உங்கள் வார்த்தைகள் நாக்ஸ்.

கூடவே வாருங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

இனிமேல் ரொம்ப கஷ்டம் என்றெல்லாம் நீங்கள் சொன்னால் எப்படி ஆர் வி எஸ்?

மாற்றம் நிச்சயம் வரும் என்று சொல்லுங்கள்.

எண்ணங்கள் தான் செயல்களாகின்றன.

சுந்தர்ஜி சொன்னது…

சிவா! நாம்தான் ஏற்படுத்தப் போகிறோம் மாற்றங்களை.உத்வேகத்தின் சுடர் அணையாமல் ஒரு தெளிவான பாதையை ஏற்படுத்தும் வரை ஓயாது எழுதுவோம்.

கூடவே வாருங்கள்.

கண்களில் இருந்து உருண்ட கண்ணீர்த் துளிகளைக் கண்களுக்கே திருப்பியனுப்புவோம் ஆனந்தக் கண்ணீராய்.

சுந்தர்ஜி சொன்னது…

மீட்டெடுக்க முடியும் நிலாமகள்.

உருக்குலைத்தது நாம்தான் எனும்போது மீட்டெடுக்கப் போவதும் நாம்தான்.

அயராமல் போராடி வெல்வோம். எழுத்துக்களும் அது நிகழ்த்தப் போகும் செயலாக்கமும் அந்த அற்புதத்தை நிகழ்த்தும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator