11.4.11

கனவென்பது என்ன?

பாதுகாப்பு என்பதன் பொருள் என்ன?
நிம்மதியான உறக்கம் என்பதென்ன?
கனவுகள் எப்போது வரும் ? 
ருசியான உணவு எப்படியிருக்கும்?
புத்தாடைகள் யார் தருவார்?
கொண்டாட்டங்கள் எல்லோருக்கும் கிட்டாதா?
எங்களின் அப்பா எங்கிருக்கிறார்?
அம்மாவின் அன்பு எத்தகையது?
எங்களிடம் கேள்விகள் மீதமிருக்கு.
இதற்கான பதிலோ யாரிடமும் இல்லை. 

13 கருத்துகள்:

RVS சொன்னது…

கொடிது கொடிது இளமையில் வறுமை.. படங்களைப் பார்க்கையில் மனம் கசிகிறது. ;-((

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்னு சொல்லுவாங்க.

எவன் மரம் வச்சான், எவன் தண்ணி ஊத்துவான்னு ஏங்கும் இந்தப் பிஞ்சுகளைப் பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லையே, ஐயா.

எந்த ’அம்மா’ வின் அன்பாவது இதுபோன்ற ஏழைக் குழந்தைகளுக்காவது கிடைக்கட்டும் ஆண்டவா!

Ramani சொன்னது…

சமூக அவலங்களை பளிச்செனக் காட்டும் புகைப்படம்
சமூக அவலங்களை அழகாகச் சொல்லிப்போகும் பதிவு
மொத்தத்தில் மனதில்
நெருடலை ஏற்படுத்திப்போகும் போகும் படைப்பு

ஹேமா சொன்னது…

படங்களைப் பார்க்கவே கவலையாயிருக்கு சுந்தர்ஜி.
இப்படியான நேரங்களில்தான் கடவுள்மீது சரியான கோபம் வரும்.பொருளதாரம் நிறைவான நாடுகளில் மட்டும் ஏன் இப்படி இல்லை !

கிருஷ்ணப்ரியா சொன்னது…

இது போன்ற குழந்தைகளுக்காக நாமெல்லாம் இணைந்து ஏதாவது செய்ய முடியாதா சுந்தர்ஜி? இப்படி எழுதுவதோடு நம் கடமை முடிந்து விடுகிறதா? அள்ளக் குறையாத அன்பில் கொஞ்சம் அந்த குழந்தைகளுக்கு நம்மால் தர முடியாதா? மனசு வலிக்கிறது ஜி.....

Harani சொன்னது…

எங்களுக்கு வாழ்க்கை உண்டா? அதனை நாங்கள் வாழலாமா? நீங்கள்தான் அதையும் தருவீர்களா? அதை எப்படி வாழ்வது? எத்தனை நாள் வாழ்வது? எப்போது சிரிக்கவேண்டும்? எழவு விழுந்தாலும் எப்போது அழவேண்டும்? எப்படி அழவேண்டும்?

Nagasubramanian சொன்னது…

:( :( :(

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இளமையில் வறுமை :( குழந்தைகளின் புகைப்படங்கள் மனதினைப் பிசைகிறது…

vasan சொன்னது…

ஆண்ட‌வ‌ன், ஆள்ப‌வ‌ன் எல்லாம் ஒரே வ‌கை தானோ?
க‌ட‌ல், ம‌லை,வ‌ன‌ம், குன்று, குள‌ம், கோவில், கோபுர‌ம், தேர், மூன்று வேளை நைவேத்திய‌ம், பூஜை, புன‌ஸ்கார‌ம், ஆளுயுரமாலை, உறங்க‌ச் சாம‌ர‌ம், விழிக்க‌ப் ப‌ள்ளி எழுச்சி, குளிக்க‌ப் பன்னீர், குடிக்க‌த் தீர்த்த‌ம்,பூச‌த் தைல‌ம், போற்றி பாட‌ ச‌கஸ்ராநாம‌ம்,
ஊர்வ‌ல‌ம், ஒளிவிள‌க்கு அல‌ங்கார‌ம், இழுத்து செல்ல‌ எடிபிடிக‌ள். பாவம் ம‌க்க‌ள், துன்ப‌த்தையும்
சாமி சோத‌னையாய் ஏற்று காணிக்கை முடியும் அப்பாவிக‌ள். ப‌ணக்கார‌னுக்கு சிறப்பு த‌ரிச‌ன‌ம் த‌ருப‌வ‌னை, கூட்ட‌த்தில் ந‌சுங்கி, ப‌சி தாக‌த்தோடு காத்துக்கிட‌ந்து விர‌ட்ட‌ப்ப‌டும் அப‌லைக‌ள்.
"ம‌க்க‌ள் இல்லாது ம‌கேச‌னே இல்லை."

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி! சாகும்தருவாயிலும் மறக்க முடியாத பிம்பங்களும், வார்த்தைகளும்! எம்மாடி! நினைச்சு நினைச்சு நெஞ்சு வலிக்க அழவைசுட்டீரய்யா!---காஸ்யபன்

ரிஷபன் சொன்னது…

பதிலும் இருக்கிறது..
ஆனால் அது சாத்தியப்பட முனைவோர் ?

G.M Balasubramaniam சொன்னது…

I HAVE BEEN DISTURBED BY THE SIGHT OF SUCH BEINGS AND MANY A TIME EXPRESSED MY FEELINGS. WHO IS OR WHAT IS RESPONSIBLE FOR THE PLIGHT OF SUCH UNFORTUNATE ONES.IT IS NOT ENOUGH IF WE LAMENT FOR A SHORT WHILE AND FORGET. EVERYONE SHOULD DO HIS BIT TO ALLEVIATE THE MISERIES OF OUR OWN HUMAN BEINGS. I TEND TO AGREE WITH VASAN.I SOMETIMES GET ANNOYED WITH THE SO CALLED ALMIGHTY.

சிவகுமாரன் சொன்னது…

கேள்வியின் நாயகனே என் கேள்விக்கு பதிலென்னய்யா என்று ஆண்டவனைத்தான் கேட்க வேண்டும். நம்மை ஆண்டவனும் ஆளப்போகிறவனும் தான் சொல்ல வேண்டும் .

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator