10.7.11

என் மூன்று


1)விரும்பும் மூன்று விஷயங்கள்?
 அ) இசை ஆ) கவிதை இ) நறுமணம்

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?
அப்படி எதுவும் இல்லை.
வாழ்க்கை எல்லாவற்றையும் விரும்பக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொடுக்கிறது.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
அ) இடியோசை ஆ) உயரமான கட்டிடங்கள் இ) கூட்டம்

4) புரியாத மூன்று விஷயங்கள்:
அ) வீட்டில் தமிழும்  வெளியில் நுனிநாக்கு ஆங்கிலமும் பேசுபவர்களின் மனநிலை
ஆ) ஏமாற்றுபவர்களின் மனநிலை
இ)கவைக்குதவாத கல்வியும் அதில் மார் தட்டிப் பெறும் மதிப்பெண்களும்.

 5) மேஜையில் உள்ள  மூன்று பொருட்கள்?
எதையோ தேடும்பொருட்டு எல்லாவற்றையும் கலைத்துப்போட்டிருப்பதால் எண்ணிக்கை குறைந்தது இருபத்தியிரண்டைத் தாண்டலாம்.

6)சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லது மனிதர்கள்?
அ)சார்லி சாப்ளின் ஆ) அரசியல்வாதிகளின் பொய் இ) குழந்தைகளின் பேச்சு

7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?அ) மொழிமாற்றம் செய்த ஒருநாவலின் பக்கங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
ஆ) ஒரு கவிதைக்குத் தூண்டில் போடுகின்றன  சில வார்த்தைகள்.
இ)விளம்பரம்/எழுத்து/மீடியா தொடர்பாக சென்னையில் பொருத்தமான துறையில் கால்பதிக்க முயல்கிறேன்.

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
அ)தமிழ் குறித்த கல்வி  ஆ)இந்தியா முழுவதும் பயணம் இ)மாற்று அரசியல் குறித்த என் சிந்தனைகளைச் செயலாக்க வேண்டும்.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
அ)நோயுற்றவர்களை ஆங்கிலமருத்துவத்தின் துணையின்றிச் சிறுசிறு மருந்துகளாலும் என் வார்த்தைகளாலும் குணப்படுத்த முடியும்-மருத்துவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதால்.
ஆ)நம்பிக்கையளித்தல்
இ)பிறரால் முடிக்க முடியாது என்று பாதியில் விடப்படும் வேலைகள் அனைத்தும்.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
அ)இளமையில் வறுமை ஆ)அநாதரவான முதியோர் இ)பிழையான தமிழ்.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
அ) பியானோ ஆ) விவசாயம் இ) நிறைய மொழிகள்.

12) பிடித்த மூன்று உணவு வகை?
அ) பழைய சாதம்-வடுமாங்காய்/மோர்மிளகாய்/மணத்தக்காளி வற்றல்
ஆ)ஆவி பறக்கும் இட்லி-மிளகாய்ப்பொடி
இ) சுட்டுப் பொசுக்கும் ரசம் சாதம்-காரம் போடாத நாட்டு வெண்டைக்காய்க் கறி 


13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
அ)பிறவா வரம் தாரும் ஆ)என்ன குறையோ இ) தேன் சிந்துதே வானம்

14) பிடித்த மூன்று படங்கள்?
அ)குணா ஆ) அழகி இ) சலங்கை ஒலி

15)இது இல்லாமல் வாழ முடியாதென்று சொல்லும்படியான மூன்று விஷயங்கள்?
அ)என்னுயிர் மனைவி ஆ)& இ) என் இரு செல்ல மகன்கள். 


16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
அ) ரிஷபன் ஆ) தஞ்சாவூர்க்கவிராயர் இ) மிருணா

34 கருத்துகள்:

A.R.ராஜகோபாலன் சொன்னது…

மூன்றுமே முத்துக்கள்
எடுக்கவோ கோர்க்கவோ ...........

பத்மநாபன் சொன்னது…

தெளிவோடு தெறித்த பதில்கள்...கவிஞர்களுக்கே உரித்தானது..

Matangi Mawley சொன்னது…

"வாழ்க்கை எல்லாவற்றையும் விரும்பக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொடுக்கிறது."... -- ரொம்ப நல்ல பதில்... :)
எல்லா பதில்களுமே தெளிவாக இருந்தது!
Few words- defining things, a hundred...

ரிஷபன் சொன்னது…

அய்யோ சாமி.. நானா..

உங்கள் மூன்று.. நறுக்கென்று..

மீடியா தொடர்பாக சென்னையில் பொருத்தமான துறையில் கால்பதிக்க முயல்கிறேன்.

வெற்றிக்கு
என் நல்வாழ்த்துகளும்!

சுந்தர்ஜி சொன்னது…

பாராட்டுக்கு நன்றி ராஜு.

பதிலா கேள்வியே கேட்டுட்டீங்க.

எடுத்துக் கோர்த்தே கொடுத்துடுங்க ப்ளீஸ்.

சுந்தர்ஜி சொன்னது…

எல்லோருக்கும் சொற்சிக்கனம் பிடிக்காது. ஆனால் ஆழ்ந்த ஆனந்த வாசிப்பு உள்ளவர்களால் சொல்லுக்குப் பின்னுள்ள பொருளும் பொருள் சொல்லும்.

நன்றி பத்துஜி.

சுந்தர்ஜி சொன்னது…

எனக்குப் பிடித்த கேள்விக்கான பதில் உங்களுக்கும் பிடிச்சதுல ஒரு குட்டி சந்தோஷம் மாதங்கி.

few wordsக்குக் காரணம் அவ்வளவுதான் தெரியும்.

சுந்தர்ஜி சொன்னது…

//அய்யோ சாமி.. நானா..
உங்கள் மூன்று.. நறுக்கென்று..//

மேலே நீங்கள் இப்படி எழுதியிருந்ததை அவசரத்தில்

//அய்யோ சாமி.. நானா..
உங்கள் மண்டையில்.. நறுக்கென்று..//

இப்படிப் படித்து விட்டேன்.

ஒண்ணும் பெரிய வித்தியாசம் இல்லை. அப்படித்தானே ரிஷபன்?

அப்புறம் முதல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

குணசேகரன்... சொன்னது…

மூன்று வித பதில்கள்..அருமை..

எல் கே சொன்னது…

//விளம்பரம்/எழுத்து/மீடியா தொடர்பாக சென்னையில் பொருத்தமான துறையில் கால்பதிக்க முயல்கிறேன். /

விரைவில் உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள்

சுந்தர்ஜி சொன்னது…

ஒரே பதிலுக்கு நன்றி குணா.

சுந்தர்ஜி சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திக்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஒவ்வொரு கேள்விக்கும் ”நறுக்” என வெளிவந்து விழுந்த பதில்கள். நன்று ஜி!

//விளம்பரம்/எழுத்து/மீடியா தொடர்பாக சென்னையில் பொருத்தமான துறையில் கால்பதிக்க முயல்கிறேன். //

வாழ்த்துகள் ஜி! உங்களுக்கு திறமை இருக்கிறது. நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

அன்பு சுந்தர்ஜி! படித்த மனோதத்துவம் உங்கள் பதில்களை என்னுள் அலசியபடி இருக்கிறது.கவனிக்கப் பட வேண்டிய அன்பர் நீவிர் ஸ்வாமி.!

எடுத்த காரியம் யாவினும் சிறக்க நம் தேச முத்துமாரி உமக்கு துணையிருப்பாள் கவிஞரே !.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

மூன்றுமே முத்துக்கள்......

RVS சொன்னது…

நறுக்குத் தெறித்தார்ப்போல பதில்கள். எவ்ளோ முயன்றாலும் உங்களைப் போல ரத்தினச் சுறுக்கமாக எழுத முடியலையே ஜி!

வாழ்க்கை பற்றி சொன்ன பதில் திரும்ப திரும்ப சுற்றி வருகிறது. ;-))

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி....மூன்றில் சில பல என்னோடு ஒத்துப் போகுது !

உப்புமடச் சந்திப் பக்கம் வரலையா.வாங்க !

சுந்தர்ஜி சொன்னது…

உங்களைப் போன்றவர்களின் ஊக்கம்தான் என் பலம்.

நிச்சயம் வெல்வேன் வெங்கட்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களைப் போன்றோரின் வாழ்த்தாலும் நம் தேசமுத்துமாரியின் அருளாலும் என்றும் முன் செல்வேன் மோஹன்ஜி.

ஏற்கெனவே உங்களைப் போன்ற நற்சிந்தனையாளர்களின் பார்வையில் தானே நனைந்தபடி இருக்கிறேன் மோஹன்ஜி. நீங்கள் தொடர்ந்து வாசித்தலே என் பலம்.

சுந்தர்ஜி சொன்னது…

மூன்றையும் மூவார்முத்து முத்தென்றதுதான் முத்து.

நன்றி சார்.

சுந்தர்ஜி சொன்னது…

இக்கரைக்கு அக்கரை பச்சை ஆர்.வி.எஸ்.

உங்களை என் வார்த்தைகள் சுற்றுவது மகிழ்ச்சி.சீக்கிரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கவும்.

தக்குடு சொன்னது…

சிப்பிக்குள் விழுந்தால் முத்தாகும் கவிஞர் தம் நெத்தியில் விழுந்தால் கவியாகும். தக்குடு எவ்ளோ சீரியஸா எழுதினாலும் அது கடைசில காமெடிலயே முடியர்து, ஆனா நீங்க சாதாரணமா எழுதினா கூட கவிதை மாதிரி இருக்கு சார்! :)

மிருணா சொன்னது…

திரு.சுந்தர்ஜி. நல்லா எழுதியிருக்கிங்க. உங்க வாழ்நாள் கனவுகளுக்கும், எதிர்கால முயற்சிக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். ஆனா கடைசில மட்டும் என்னை மாட்டி விட்டுட்டிங்களே? நாங்கலாம் மதுரக்காரங்க. தருமியோட வழி. கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும். பதில் சொல்லத்தெரியாது. தவிர இது போல நான் எழுதுனா யார் படிக்கிறது? படிக்கிற ஒண்ணு, ரெண்டு பேரும் ஓடிருவாங்க. இது உங்களுக்கே நியாயமா?

மனோ சாமிநாதன் சொன்னது…

எல்லா பதில்களிலும் நேர்மையும் உண்மையும் தெரிகிறது! முக்கியமாய் 'வாழ்க்கை எல்லாவற்றையும் விரும்பக் கற்றுக்கொடுக்கிறது' என்ற‌ பதிலில்!பிடித்த‌ ச‌மைய‌லில் அனைத்துத் தேர்வுக‌ளுமே அச‌த்த‌ல்! ச‌ரியான‌ த‌மிழ்நாட்டுக்கார‌ர் என்ப‌தை நிரூபித்து விட்டீர்க‌ள்!

Harani சொன்னது…

ungalin muunrukku and thalai taazntha vanakkankal. ungal muyarci niccayam verri perum. enraikku niingal thorrirukkiirkal? My heartiest wishes.Harani.

Ramani சொன்னது…

தங்கள் விருப்பங்கள் மற்றும் விருப்பமின்மையை
அறிந்து கொண்டதன் மூலம் ஓரளவு உங்கள்
ஆளுமையை புரிந்து கொள்ள முடிந்தது
மனந்திறந்த பதிவு மனக்கவர்ந்த பதிவு

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

முத்தமிழைப் போல
முக்கனியைப் போல
தத்துவமாய் கேள்விக்கு
தந்துள்ளீர் பதிலும்
முத்தமிடத் தோன்றும்
மூன்றுயிளம் தளிரும்
சத்துணவு உண்டதற்கு
சான்றுயென மிளிரும்

புலவர் சா இராமாநுசம்

G.M Balasubramaniam சொன்னது…

சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்களில் இரண்டாவது, அரசியல் வாதிகளின் பொய் என்பதற்கு பதில் மெய் என்றிருந்திருக்கவேண்டுமோ சுந்தர்ஜி.?

அப்பாதுரை சொன்னது…

நீங்க மட்டும் தான் மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம் ரகம். வெரி குட் :)

நாட்டு வெண்டைக்காய் எப்படி இருக்கும்?

அப்பாதுரை சொன்னது…

மாற்று அரசியல் piqued my interest. என்ன ஆச்சு?

நிலாமகள் சொன்னது…

8,9,10 கேள்விக‌ளின் ப‌தில்க‌ள் தொட்ட‌ன‌ ம‌ன‌சை.

சிவகுமாரன் சொன்னது…

நீங்கள் குறிப்பிடும் மூன்றுகள் சிலவற்றிலேனும் நானும் இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமை.

சிவகுமாரன் சொன்னது…

புதிய துறையில் சாதிக்க வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

உங்கள் விருப்பபடியே எல்லாம் அமையவும், நீங்கள் புதிதாக அடியெடுத்து வைக்கப்போகும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator