6.1.12

என் இரு ஆசான்கள்.

என் இருபது வயதுகளில் இந்த இருவரின் கையைப் பிடித்துத்தான் நடை பழகியிருக்கிறேன்.

என் பல கவிதைகளின் முதல் வரியையல்ல வார்த்தையைக் கூட எழுதத் தயக்கமூட்டியவை இவர்களின் மொத்த எழுத்துக்கள்தான்.

பல நாட்களின் பசியையும் பல இரவுகளின் உறக்கத்தையும் மறக்கடித்த கதைகளையும் கவிதைகளையும் சொல்ல யாரையும் முன்மாதிரியாகக் கொள்ளாத ஓர் பாணியை தனக்கென தனித்தனியே உருவாக்கிக் கொண்டவர்கள் இவர்கள். 

வாழ்வின் தடத்தையும் அன்பின் கசிவையும் ஓயாத கடல் அலை போல வீசி வீசி என்னைப் போன்ற கரையில் நிற்கும் வாசகனை உருக்கி வார்த்ததும் இவர்களின் ஆகிருதிகள்தான்.

விருதுகளைக் கடந்த எழுத்து இவர்களுடையது. இவர்கள் இதுவரை எழுதியதன் மூலமாகவே இவர்களுக்குள் இருக்கும் எழுதாத பகுதிகளிலும் வெளிச்சமிட்டுக் காட்டிய மேன்மையான கலைஞர்கள்.

இவர்கள் என் எழுத்துக்கு ஆதர்சம் என்று சொல்லிக் கொள்வதில் நான் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்.

சாரல் விருது இவர்கள் மேல் தூவப்படுகிறது நாளை (07-01-2012) மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில்.

நேற்றின் வண்ணங்களும் நாளையின் சுகந்தங்களும் நிரம்பிய மலர்கள் உங்கள் இருவரின் கையெட்டும் தொலைவிலேயே என்றும் மலரட்டும்.  

8 கருத்துகள்:

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

எத்தனை ஏகலைவர்களுக்கு ஆசானாய் இருந்திருக்கிறார்கள் இவர்கள் இருவரும். கட்டை விரல் கேட்காத ஆசான்கள்.

வாழ்க்கை மொத்தத்தையும் அதன் சுகதுக்கங்களுடன் முன்வைத்தவர்கள் இருவரும். பரஸ்பர ஈர்ப்புடன் எழுதி வந்தார்கள் இருவரும். வண்ணதாசன் சில பேட்டிகளில் வண்ணநிலவன் போல ஒரு வரி எழுதமுடிந்தால் போதும் நிறுத்திக் கொள்வேன் எழுதுவதை என்று எத்தனை முறை சொல்லி இருக்கிறார். அதற்கு எத்தனை பெரிய மனசு வேண்டும், தன் சககலைஞனை உச்சத்தில் நிறுத்த... அவர்களுக்கிடையேயான கடிதங்களும் அந்த அன்பை சொல்லிக் கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது...

இருவருக்கும் ஒரே அமைப்பில் இருந்து ஒரே நேரத்தில் விருது வழங்குபவர்கள் இதையெல்லாம் நம்மைப் போல கவனித்துக் கொண்டு தானே இருப்பார்கள்...

அன்புடன்
ராகவன்

ரிஷபன் சொன்னது…

பல நாட்களின் பசியையும் பல இரவுகளின் உறக்கத்தையும் மறக்கடித்த கதைகளையும் கவிதைகளையும் சொல்ல யாரையும் முன்மாதிரியாகக் கொள்ளாத ஓர் பாணியை தனக்கென தனித்தனியே உருவாக்கிக் கொண்டவர்கள் இவர்கள்.

என் மகிழ்ச்சியையும் பகிர்கிறேன்.

Ramani சொன்னது…

எங்களுக்கு நீங்கள் இருப்பதைப் போல...
எழுதப் பழகும் எங்களுக்கெல்லாம்
மானசீக குருவாக இருக்கிற
மூவருக்கும் மனங்கனிந்த நல் வாழ்த்துக்கள்

சிவகுமாரன் சொன்னது…

ஆமாம் சுந்தர்ஜி .
வியக்க வைக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்கள். நான் எழுதுவதை நினைத்து பல சமயம் வெட்கப்பட வைத்தவர்கள்.
www.arutkavi.blogspot.com

நிலாமகள் சொன்னது…

எத்தனை ஏகலைவர்களுக்கு ஆசானாய் இருந்திருக்கிறார்கள் இவர்கள் இருவரும். கட்டை விரல் கேட்காத ஆசான்கள்!

வாழ்வின் தடத்தையும் அன்பின் கசிவையும் ஓயாத கடல் அலை போல//

விருதுகளைக் கடந்த எழுத்து //

ந‌ல்ல‌ எழுத்து! ந‌ல்ல‌ ம‌ரியாதை! ந‌ல்ல அறிவிப்பு!

வ‌ண்ண‌தாச‌னை வாசித்த‌ அள‌வுக்கு நான் இன்னும் வ‌ண்ண‌ நில‌வ‌னை வாசித்து உள்வாங்க‌வில்லை.

இவர் என் எழுத்துக்கும் ஆதர்சம் என்று சொல்லிக் கொள்வதில் நான் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்.

ஹ ர ணி சொன்னது…

சுந்தர்ஜி...

உங்களுக்கு மட்டும்ல்ல எனக்கும்தான். வண்ணதாசனையும் வண்ணநிலவனையும் தவிர்த்த ஒருவன் இந்த படைப்புலகில் இயங்கமுடியுமா என்ன? கடல்புரத்திலும்... ரெயினிஸ் ஐயர் தெருவையும் என வண்ணநிலவனின் நிழலைத் தொட்ட பருவம் அது... நானும் மதுமிதாவும் இதுகுறித்து எத்தனையோ பேசிப்பேசிக் களித்தும் தீராத பேச்சுக்கள் அவை... கல்யாண்ஜியைத் தனியாகவும் வண்ணதாசனைத் தனியாகவும்...எனக் கற்பனை செய்துகொண்டு அனுபவித்த படைப்புலக சுகங்களைப் பற்றி ஒரு நாவல் எழுதுமளவுக்கு மனம் புரள்கிறது தவிக்கிறது சுந்தர்ஜி...யாருமே கவலைப்படாத புகைவண்டிக்குள் கழிவறைக்குள் மல்லாந்துகிடக்கும் பாச்சையைப் பற்றி வண்ணதாசனால் மட்டுமே இத்தனை கருணை வழியும் தெய்வீக சொற்களுடன் கவிதைஎழுத முடியும். பல இரவுகள் அந்தக் கவிதையால் துர்ங்கமுடியாமல் தவித்திருக்கிறேன். வண்ணநிலவனின் சொற்களுக்குள் கடலுக்குள் மூழ்கியவன் போல் மூழ்கி தவித்த தருணங்கள் உண்டு. எழுதிக்கொண்டேயிருப்பேன் நீர்த்துவிடலாம் உண்மையின் வடிவம். நிறுத்திக்கொள்கிறேன். அந்த ஆதான்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த வணக்கங்கள் உங்கள் பதிவின் வழியாக.

அப்பாதுரை சொன்னது…

இருவரின் படைப்புகளையும் படித்ததில்லை. செய்துமுடிக்க வேண்டிய வேலைகளில் ஒன்று.
ஆசான் என்று சிலாகித்து எழுதியது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. இவர்கள் எழுத்தில் அவசியம் படிக்க வேண்டியது என்று நீங்கள் கருதும் ஒன்றிரண்டு titleகளையும் எழுதியிருக்கலாமே?

ராம்ஜி_யாஹூ சொன்னது…

சத்தியமான வார்த்தைகள்

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator