நீங்கள் ஒரு ரோபோ இல்லையென நிரூபிக்கவும்


நான் ஒரு ரோபோ இல்லையென
நிரூபிக்க வேண்டியிருப்பதன் அவசியத்தை
ஒரு கணினியிடமிருந்து
எதிர்பார்க்கவில்லை.

இப்படிப்பட்ட தாக்குதல்கள் இப்போதெல்லாம்
மிகச் சாதாரணமாய் மாறிவிட்டன.

உருவாக்கியவனிடமே அடையாளம் கேட்டு
ஒரு கணினி திடுக்கிட வைக்கும் காலம் வரும் என்பதை
யாரும் யூகிக்காத காலமொன்று இருந்தது.

நீங்கள் இப்படி நடந்துகொள்வீர்கள்
எனக் கொஞ்சமும் நான் எதிர்பார்க்கவில்லை
என்ற புகாரையோ-

பொறுமையும் சகிப்புத்தன்மையும் தொலைத்த
எழுதக் கூச்சமாய் இருக்கும் திட்டுக்களையோ

ஒரு கணினி உமிழக்கூடிய நாட்கள்
அதிகத் தொலைவில் இல்லை என்பதை
என்னால் நடுக்கத்துடன் யூகிக்க முடிகிறது.

ஒரு மனிதன் என்பதை நிரூபிப்பதைக்காட்டிலும்
கடினமானதும் இரக்கமற்றதும்
நீங்கள் ஒரு ரோபோ இல்லை என நிரூபிப்பது.

கருத்துகள்

ரிஷபன் இவ்வாறு கூறியுள்ளார்…
நடுக்கத்துடன் தான் படித்தேன்.. நிச்சயம் அதற்கான சாத்தியங்கள் இருக்கவே செய்கின்றன..
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பல தளங்களில் இது உள்ளது...
ஏன் என்று தான் தெரியவில்லை...
இதை blooger-ரிலும் பல பேர் வைத்துள்ளார்கள். கருத்து சொல்ல வருபவர்கள் சற்று சிரமப்படுவதுண்டு.

/// ஒரு மனிதன் என்பதை நிரூபிப்பதைக்காட்டிலும்
கடினமானதும் இரக்கமற்றதும்
நீங்கள் ஒரு ரோபோ இல்லை என நிரூபிப்பது. ///

உண்மையான உண்மையுடன் முடித்துள்ளீர்கள்.

நன்றி...


பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
வை.கோபாலகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
//நீங்கள் இப்படி நடந்துகொள்வீர்கள்
எனக் கொஞ்சமும் நான் எதிர்பார்க்கவில்லை
என்ற புகாரையோ-

பொறுமையும் சகிப்புத்தன்மையும் தொலைத்த
எழுதக் கூச்சமாய் இருக்கும் திட்டுக்களையோ

ஒரு கணினி உமிழக்கூடிய நாட்கள்
அதிகத் தொலைவில் இல்லை என்பதை
என்னால் நடுக்கத்துடன் யூகிக்க முடிகிறது//

அதற்கு அடுத்த கட்டத்தையும் கூட நான் யூகிக்கிறேன், சார்.

சொல்ல வேண்டாம் என ஏதோ என்னைத் தடுக்கிறது. நடுக்கம் மட்டுமல்ல. கொலை நடுக்கமே ஏற்படலாம்.

நல்ல படைப்பு. பாராட்டுக்கள். vgk
நிலாமகள் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆமாம் ஜி. நாம் உருவாக்கிய‌ பிள்ளைக‌ள் ந‌ம்மை விஞ்சுவ‌து போல‌ ரோபோவெல்லாம் வ‌லைப்பூ விஜ‌ய‌ம் செய்ய‌ நாமெல்லாம் என்ன‌ செய்து கொண்டிருப்போம்...?! அப்ப‌டியான‌ ரோபோவுக்கு இவ‌ர்க‌ள் வைக்கும் வேர்ட் வெரிஃபிகேஷ‌னை அடையாள‌ம் காண‌ முடியாதா என்ன‌?
வெங்கட் நாகராஜ் இவ்வாறு கூறியுள்ளார்…
பல தளங்களில் இந்தப் பிரச்சனைதான்...

என்ன செய்ய?
அப்பாதுரை இவ்வாறு கூறியுள்ளார்…
பலூன் வெடித்த மாதிரி சிரித்தேன் - முதல் வரிகளைப் படித்ததும்.
தினேஷ்-பாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
இயக்கங்கம் எந்திரமயமாகியதால்
பத்மா இவ்வாறு கூறியுள்ளார்…
வளர்த்த கடா மார்பில பாயறதுன்னா இது தான்
இரசிகை இவ்வாறு கூறியுள்ளார்…
ithai naan vaasikka ivvalavu late aayuttennu thonuchu...
:)

பிரபலமான இடுகைகள்