22.6.10

வெற்றிடம்



1.
வெற்றிடம்
இசை எழுப்புகிறது
ரயில் பாடகனின் சங்கீதத்தில்.
ஓசை எழுப்புகிறது அவன் உண்டியலில்.

2.
மறைந்து போனது
யாருமில்லா அவ்வீட்டின் ஆதிநிறம்.
நிச்சயம் மகன் வருவான்
அவனின் வர்ணத்துடனோ
வீட்டை அழிக்கும் வரைபடத்துடனோ.

8 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

இரண்டாவது கவிதையின் வரிகள் படார் என என் அம்மம்மா தாத்தாவின் நாச்சாரம் வீட்டை ஞாபகப் படுத்தியது.மாமா அதை அழித்து மொடேர்ன் வீடு கட்டிவிட்டார்.

நாச்சாரம் வீடு என்றால் நாலு பக்கமும் அறைகள் இருக்க
நடுவில் நிலா முற்றம் இருக்கும்

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹேமா.நாச்சாரம் வீடுகள் அநேகமாக கவிதைகளில் மட்டுமே வாழ்கின்றன.

கமலேஷ் சொன்னது…

வாழ்க்கையோடு நெருங்கி பேசுகிறது வரிகள்...
கவிதை காணவென தனியே ஒரு கண் வைத்திருகிரீர்களோ..
அருமையான வரிகள்

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கமலேஷ்.உங்களின் ஒரு கண்ணும் என்னுடைய ஒரு கண்ணும் வைத்திருக்கிறேன்.

santhanakrishnan சொன்னது…

கிட்டதட்ட எல்லா மகன்களும்
வீட்டை அழிக்கும் வரைபடத்துடன்
தான் வருகிறார்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மதுமிதா.அப்படித்தான் வீடுகளும் நினைவுகளோடு அழிகின்றன.

பத்மா சொன்னது…

சுந்தர்ஜி ரயில் பாடகனுக்கு உண்டியலில் எழும்பும் ஓசை தான் சங்கீதம்
இல்லையா?



ஆதி நிறம்..... பல வெளுத்த நிறங்களை மனக்கண்ணில் கொண்டு வருகிறது ..
கவிதை வரிகள் நிதர்சனம் ..ஆயின் சிறிது வலி

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பத்மா-ஆழ்ந்த விமர்சனங்களுக்கு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...