28.6.10

தோற்றாப் பிழை


அவளைப் பார்க்கையில்
இவளை.
இவளைப் பார்க்கையில்
அவளை.
எவரையோ பார்க்கையில்
யாரையோ.
யாரையும்
நினைவுபடுத்தவில்லை நீ.
நினைக்கவில்லை நான்.

4 கருத்துகள்:

பத்மா சொன்னது…

அய்யோ கொன்னுடீங்க சுந்தர்ஜி
நினைக்காதது தான் அழகு அதுதான் நிஜப்பார்வை ..
அருமை அருமை

ஹேமா சொன்னது…

நினைக்கவேயில்லை.ஆனால் நினைவு வருது !

கமலேஷ் சொன்னது…

ரொம்ப அருமையாக இருக்கிறது நண்பரே...எவ்வளவு காலமாக நீங்கள் கவிதை எழுதுகிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

- தோற்ற பிழை - ஆஹா இதே தலைப்பில்தான் நானும் ஒரு கவிதையை சமீபத்தில் முயற்சி செய்து வைத்திருந்தேன்...நீங்கள் முந்திக் கொண்டீர்களே..
மிகவும் பொருத்தமான தலைப்புதான் இக் கவிதைக்கு..

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹேமா.நினைவு வந்தாலும் ஒப்பீடற்ற நினைவு எத்தனை உசத்தியானது ஹேமா?

நன்றி கமலேஷ்.உங்கள் கவிதையை நான் எழுதிவிட்டேன்.ஸாரி.

நான் என் இருபதுவயது முதல் கவிதைகள் எழுதுகிறேன் என்று ஒரு அடையாளத்துக்குச் சொன்னாலும் என்னை ஒரு கவிஞனாகக் கூறிக்கொள்ள என் மனதின் ஆழத்தில் படிந்துள்ள ஓர் ஒப்பற்ற கவிதையை இனிதான் எழுதுவேனென நினைக்கிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...