14.6.10

புற்று


அலைகள்
கரைக்கும் மணல்வீடா?
காற்றின் விசைக்காடும்
சுடரா?
பலூன் குடித்த காற்றா?
விட்டில்பூச்சியின்
வயோதிகமா?
எது வெல்லும்
என் வாழ்வையென்ற
விடை தெரியாது
விடை பெறுகிறேன் மகனே
உன் புற்றுத்தாய் நான்.

(தோழர் இயற்கைசிவத்தின் தாயார் இன்று செஞ்சியில் இயற்கை எய்தினார். நெடுநாட்களாகப் புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்த அவரின் இழப்பு பல நாட்களுக்கு இயற்கைசிவத்தைப் பாதிக்கும். பின் காலம் அவருக்கு ஆறுதலையும் கொடுத்து அடுத்த தளத்திற்கு இட்டுச்செல்லும். வருத்தங்கள் சிவம்.)

4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

அனுதாபமும் அஞ்சலியும்
மாத்திரமே இம்மட்டில் !
மீண்டு வரட்டும் தோழர்.
வாழ்வின் புதிர் அவிழ்க்க !

கமலேஷ் சொன்னது…

கவிதையின் இறுதி குறிப்பை என்ன சொல்வதென்றே தெரியவில்லை..என் பிரார்த்தனைகள்.

சுந்தர்ஜி சொன்னது…

அனுதாபத்திற்கும் அஞ்சலிக்கும் ப்ரார்த்தனைகளுக்கும் என் நன்றிகள் ஹேமா & கமலேஷ்.

நிலா மகள் சொன்னது…

நெகிழ்வான கவிதாஞ்சலி.
அவரது இழப்புகளின் வலிகுறைக்க
காலம் அருமருந்தாகட்டும்!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...