24.4.11

ஒன்றெல்லாம் ஒன்றல்ல.




















1.
சொற்கள்
ஒன்று கூடக் கவிதை.
கவிதையைக் கலைத்தேன்
பொருள்
தேடித் தவித்தேன்.

2.
கற்கள்
ஒன்று கூடக்
கட்டடம்.
கட்டடத்தைத்
தகர்த்தேன்.
கற்களைத்
தொலைத்தேன்.

3.
துளிகள்
ஒன்று கூடிக்
கடல்.
கடலை
வடித்தேன்.
துளியின்றி
மலைத்தேன்.

4.
ஒன்றாய் இருந்தால்
வேறு.
ஒன்று கூடினால்
வேறு.
ஒன்றாய்க்
கூடிப் போனபின்பு
மீண்டு
கிடைப்பதும்
வேறு.

11 கருத்துகள்:

இரசிகை சொன்னது…

:)

nallaayirukku sundarji....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கலைத்ததால் தவிப்பு ஒன்று
தகர்த்ததால் தொலைத்தல் இரண்டு
கடலில் கரைத்த பெருங்காயமாய் மூன்று
வேறு வேறு வேறென
மூன்று வேறில் நான்கு

ஒன்று ஒன்றல்ல, நான்கும் வெவ்வேறு

பாரட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை.

நிலாமகள் சொன்னது…

வலை நுழைகையில் எல்லாம் வளைக்கப் படுகிறேன் தங்கள் வரிகளால்....! ஆஹாஹா என்பதா ... அற்புதம் என்பதா...! தங்கள் கவித் திறனை அண்ணாந்து பார்த்து அதிசயித்து நிற்கிறேன் ... வார்த்தைகள் வசப்படாமல்.

santhanakrishnan சொன்னது…

ஒன்றாய் இருந்தால்
வேறு.
ஒன்று கூடினால்
வேறு.
ஒன்றாய்க் கூடி
அதனைக்
கலைத்த பின்
கிடைக்காமல் போவதும்
வேறு.
ஒரு நல்ல கவிதைக்கான
அத்தனை லட்சணங்களுமுள்ளன
சுந்தர்.

காமராஜ் சொன்னது…

சுந்தர்ஜீ
ஆழச்சிந்திக்க வைக்கிற கவிதை.
அருமையாக இருக்கிறது

ரிஷபன் சொன்னது…

ஒன்றாய்க்
கூடிப்
போனபின்பு
மீண்டு
கிடைப்பதும்
வேறு.

sabash!

vasan சொன்னது…

ஒன்றில் ஒன்றை க‌ல‌ந்தேன்.
பிறிதொன்றான‌து.
அதைப் பிரித்தேன்.
வேறு வேறாய் ஆன‌து.
அத‌னத‌ன் வேர்க‌ள் என்ன‌வ‌னாது?
நாம் மூதாதைய‌ர் மாதிரி.
ஆனால் அவர்க‌ள் அல்ல‌வே.

ஹேமா சொன்னது…

ஒன்றாய்க்கூடியிருந்து பிரிந்திருப்பது கொடுமையோ கொடுமை !

Nagasubramanian சொன்னது…

superb!

பத்மா சொன்னது…

சரிதான்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...