14.4.11

அடர் கனா


























அடர்வனத்து இருளை ஓலமிட்டபடி
அறுத்துச் செல்லும் ரயிலின்

இறுதிப் பெட்டிப்
பெருக்கல் குறியைப்
பார்ப்பதாய் முடிகிறது
அந்தக் கனவு.

கலைந்து போன உறக்கத்தின்
சாயங்களைத் தொடுகிறது

ஏதோ காரணம்
பொதிந்த நாயின் குரைப்பு.

காலிக் குவளையின்
வெற்றிடத்தில்

தணியாது திமிறுகிறது
கோடையின் நடுநிசித் தாகம்.

கொசுவர்த்திச் சுருளின்
குமட்டும் நெடியாய்ச்
சுருளுகிறது

தொலைந்த காலத்தின்
சலனமில்லாப் பாழ்நிசப்தம்.

பேசவோ கேட்கவோ
வழியற்றதாய்

மேகம்போல்
மெல்லக் கரைகிறது

அருகில்
யாருமற்றவனின்
நடுநிசிக் கனவு.

14 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஒரு கனவெழுப்பிய அதிர்வலைகள்.. இன்னமும் அடங்காமல்..
பேசவோ கேட்கவோ
வழியற்றதாய்
மேகம்போல்
மெல்லக் கரைகிறது
எளிமையாய் ஆனால் எத்தனை அர்த்தம் பொதிந்ததாய்..

கே. பி. ஜனா... சொன்னது…

மிக அருமை...

Ramani சொன்னது…

தனிமையின் வெறுமையை வெக்கையை
வேதனையுடன் உணர்த்திப்போகிறது
உணர்ந்து படிக்க கொஞ்சம்
மூச்சு திணறித்தான் போனேன்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மேகம்போல்
மெல்லக் கரைகிறது
பகிர்வதற்கு
யாருமற்றவனின்
அர்த்த ராத்திரிக் கனவு.//
அர்த்தம் பொதிந்த கவிதை.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்க்ள்..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

// பகிர்வதற்கு யாருமற்றவனின்
அர்த்த ராத்திரிக் கனவு //

இது ரொம்ப கஷ்டமான நிலைமை தான், சார். பைங்கிளியோ, பத்ரகாளியோ ஏதோவொன்று அர்த்த ராத்திரிப்பகிர்வுக்கு அவசியம் வேண்டும், சார்
[கனவைப் பகிரத்தான்]

அடர் காடு கேள்விப்பட்டிருக்கும் எனக்கு இந்த ’அடர் கனா’, புதிய தலைப்பாகவே உள்ளது. பாராட்டுக்கள்.

raji சொன்னது…

//பகிர்வதற்கு
யாருமற்றவனின்
அர்த்த ராத்திரிக் கனவு//

பகிர யாருமில்லாவிடினும் அர்த்த ராத்திரி கனவின் வெளிப்பாடு அருமை

ஹேமா சொன்னது…

கனவுகள் கரைந்தாலும் மனதிற்குள் நிறைகிறது சுந்தர்ஜி !

எல் கே சொன்னது…

சிலக் கனவுகளின் தாக்கம் குறைய சில காலம் ஆகும். அருமை

G.M Balasubramaniam சொன்னது…

KANAVUM KANAVU MUTINTHA NILAIYUM,THONRUM ENNANGALUM ,PAKIRA MUTIYAATHA SOKAMUM KAVITHAIYIL MENMAIYAAKA, AZHAKAAKA VELIPPATUKIRATHU SUNDARJI.ARUMAI,ARUMAI.

Nagasubramanian சொன்னது…

பிரமாதம்!

vasan சொன்னது…

க‌ன‌வுக‌ளோடு கைகுலுக்கிய‌ப‌டியே துவ‌ங்கிற‌தா அல்ல‌து முடிகிற‌தா இந்த‌ப் ப‌ய‌ண‌ம்?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பகிர யாருமில்லாதவனின் கனவு அருமை. பகிர ஆட்கள் இருந்தும் பல கனவுகளைச் சொல்லவும் முடிவதில்லை பலரால். நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.

சிவகுமாரன் சொன்னது…

ஆமாம் நாமெல்லாம் கனவுகளை எழுதிக் கழிக்கிறோம். நனவாகிறதோ இல்லையோ அடுத்த கனவுக்கு ஆயத்தமாகி விடுகிறோம். பகிரவதற்கு யாருமற்றவனின் கனவு ?
...

ஹ ர ணி சொன்னது…

கோடையின் நடுநிசித் தாகத்தை நான் நன்கறிவேன். அது குறியீடு எல்லாவற்றிற்கும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...