12.2.15

தனியே ஒரு கரித்துண்டு


தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தையே உபதேசிப்பது போல் தோன்றவே, போவதை நிறுத்தி விட்டான்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு பனிக்கால இரவில் பாதிரியார் அவனைச் சந்திக்க வந்தார்.

' அவர் அநேகமாகத் தன்னை மீண்டும் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வற்புறுத்தும் பொருட்டே வந்திருக்கலாம்' என்றெண்ணினான் ஜுவன். பலமுறை தான் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாமல் இருந்ததன் உண்மையான காரணத்தைத் தன்னால் சொல்ல முடியாது என்றும் அவன் எண்ணினான்.

ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி சமாளிக்கும் எண்ணத்தில், கணப்பு அடுப்பின் அருகில் இரண்டு நாற்காலிகளை இழுத்துப் போட்டபடி, தட்ப வெப்பம் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

பாதிரியார் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் ஏதாவது பேச முயன்று தோற்று தன் முயற்சியைக் கைவிட்டான் ஜுவன். சுமார் அரைமணி நேரம் இருவரும் எரியும் நெருப்பை உற்றுப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தனர்.

கணப்பு அடுப்பின் இன்னும் ஒரு கட்டை எரிய மீதமிருக்கையில் எழுந்த பாதிரியார், நெருப்பில் இருந்து ஒரு கரித்துண்டை விலக்கி தனியே வைத்தார்.

அந்தத் துண்டு கனன்று எரியப் போதுமான நெருப்பு இல்லாமல் அணைந்து குளிரத் தொடங்கியது.

' இரவு வணக்கம்' என்றபடியே புறப்படத் ஆயத்தமானார் பாதிரியார்.

' இரவு வணக்கம். மிகுந்த நன்றி' என்ற ஜுவன், " எவ்வளவு கொழுந்துவிட்டு ஒரு கரித்துண்டு கனன்று கொண்டிருந்தாலும், அதை நெருப்பில் இருந்து விலக்கினால், அது அணைந்து விடும். எவ்வளவு புத்திசாலியாக ஒருவன் இருந்தாலும், சக மனிதர்களிடம் இருந்து விலகி இருந்தால், விரைவில் அவன் ஒளி மங்கியவனாகி விடுவான். அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்களை ஆலயத்தில் சந்திக்கிறேன்" என்றான்.

(பௌலோ கோயெலோவின் "நீந்தும் நதியைப் போல" நூலில் இருந்து The solitary piece of coal என்ற பத்தி)

5 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

சக மனிதர்களிடம் இருந்து விலகி இருந்தால்//

பிறிதொரு தீத்துளி போதும் அது பிரகாசிக்க...

Iniya சொன்னது…

எத்தனை அருமையான விடயங்கள் இத்தளத்தில். இதுவரை அறியாமல் போனேன் என்று மனம் வருந்துகிறேன். அறிவாளிகளை விட்டு விலகினால் ஒன்று மில்லாதவர்கள் ஆகிவிடுவார்கள் என்பது எவ்வளவு உண்மை. அதை எவ்வளவு எளிதாக புரிய வைத்துள்ளார் பாதிரியார். மிக்க நன்றி! பதிவுக்கு தொடர்கிறேன் இனி. ஆனால் தங்கள் தளத்தில் எப்படி இணைவது புரியவில்லையே.

yathavan64@gmail.com சொன்னது…

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (17/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

RAJU VARADARAJAN சொன்னது…

இன்றுதான் உங்களின் பதிவுகளைக் காண நேர்ந்தது.

சிவகுமாரன் சொன்னது…

அந்தக் கரித்துண்டு போலத்தான் நானும் இருக்கிறேன் சுந்தர்ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...