13.5.10

நிலை



தேர்ந்தெடுக்கப் பழகுகிறேன்
வர்ணங்களுக்கு மாற்றாய் வண்ணத்துப்பூச்சியை.
பேரருவியை விட சிற்றோடையை.
யாகங்களின் பெருந்தீயை விட
கவனிப்பற்று அலையும் சுடரை.
நிசப்தங்களின் கற்களால்
நிரம்பிய சதுரங்களை விட
நிலா ஒழுகும் சாணக்குடிசையை.
ஒப்பற்ற இசைக்குப் பதிலாக
உயிரசைக்கும் உன் ஒற்றைச் சொல்லை.

17 கருத்துகள்:

பத்மா சொன்னது…

தேர்ந்தெடுத்தவை யாவும் ஒன்றை ஒன்று விஞ்சுபவை .சரியான ரசிகன் தான்

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

கவிதையும்..படமும் வெகு ஜோர்!!

Madumitha சொன்னது…

சந்தனக் கிண்ணங்கள்
மட்டுமல்ல
குங்குமச் சிமிழ்களும்
அழகுதான்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி
பத்மா.
ஆரண்யநிவாஸ் ஆர்.மூர்த்தி.
மதுமிதா.

Anonymous சொன்னது…

ஆஹா!ஆரவாரங்கள் ஒதுக்கி அமைதி தேடி அலையும் மனம் ஆண்டவன் தந்த வரம்.லயித்தேன்.
தனலக்ஷ்மி பாஸ்கரன்.

Anonymous சொன்னது…

சின்ன விஷயங்கள் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும்.ஆனால் சந்தோஷம் என்பது சின்ன விஷயமில்லை என்பதை நினைவூட்டியது உங்கள் ஒற்றைச் சொல்.அருமை ஜி.
யாழி.

Anonymous சொன்னது…

பார்வையாளர்கள் அற்ற வேலியோரப்பூக்களின் பேரழகைக் கண்டு கொள்ள இந்தப் பெருந்திரளில் இருந்து தனித்த நேசமுடன் எழுந்து வந்திருக்கிறது தங்கள் கவிதை.மிகுந்த விருப்பமுடன் உயிரசைக்கும் ஒற்றைசொல்லின் வரிகளோடு சம்பாஷித்துக்கொண்டிருக்கிறேன்.நிலா ஒழுகும் சாணக்குடிசை.....அருமை.
உஷா.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி-
நெகிழ்வுற்றேன்
தனம் மேடம்.
யாழி.
உஷா.

Anonymous சொன்னது…

வண்ணத்துப்பூச்சியின் நிறத்தில் தொடங்கி உயிரசைக்கும் சொல் வரை தேர்வுகள் ப்ரமாதம் சுந்தர்ஜி.
கலைவாணி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கலை.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...தேர்ந்தெடுப்பதிகூட
ஒரு மென்மை
அல்லது இலகு
அல்லது அழகு !

சுந்தர்ஜி சொன்னது…

ஓ!பாராட்டுக்கு நன்றி ஹேமா.

இரசிகை சொன்னது…

thervukalil neengal thervaanavar!!

இரசிகை சொன்னது…

wow.........:)

poongoththu!!

//நிலா ஒழுகும் சாணக்குடிசை.....//

konnutteenga:)

Anonymous சொன்னது…

உயிரசைக்கும் ஒற்றைச் சொல்-சிறு நட்த்திரமளவு பெரிதாக இருந்தது.அழகு சுந்தர்ஜி.
-ஜெ.ஃப்ராங்க்ளின் குமார்.

சைக்கிள் சொன்னது…

கவிதையை தாண்டி 'ஏன் அப்படி' என்று தேடினால் ஒரு உள்முகப் பயணத்தினை நீங்கள் துவக்கலாம்...

சுந்தர்ஜி சொன்னது…

துவக்கிய பின் கிடைக்கும் பரவசத்தை உணரமுடிகிறது சைக்கிள்.நன்றி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...