31.1.11

ஆணி வேர்


I
எத்தனையாவது
மனிதனுக்கான
சவப்பெட்டியிது?
எத்தனையாவது
மரத்திலிருந்து
இந்த சவப்பெட்டி?
எத்தனையாவது மனிதன்
உருவாக்கும்
சவப்பெட்டியிது?
தெரியாது.
II
பிறப்பின் காரணம்
ஏதுமில்லையெனில்
இறப்பின் காரணமும்
அடைப்புக்குறிக்குள்
வயதும்
எதுவானால் என்ன?
III
பிறக்கையில்
உன்னருகில் நீ
யாரெனத்
தெரியாத
நான்கு பேர்.
போகும்போது
நீ யாரெனத்
தெரிந்த
நான்கு பேர்.
அவ்வளவுதான்.
IV
யார் யாரோடோ
பழகி
யார் யாரோடோ
விலகி
யார் யாரோடோ
வாழ்ந்து
யாருமேயற்ற
ஒருநாளில் பிரிந்து
எல்லோரின்
நினவிலிருந்தும்
மக்கிப் போகும்
பேரவஸ்தைக்கு
வாழ்க்கை
என்ற பெயரிட்டவன்
எவன்?

27 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

சிலகேள்விகளுக்கு விடை தெரிந்தல் சுகம். சில கேள்விகளுக்கு விடை தெரியாவிட்டால் சுகம். இப்போதெல்லாம் உங்களுடைய சில கேள்விகளுக்கு பதில் தெரிவதில்லை. ஆனால் அது சுகமா என்றும் தெரியவில்லை.ஏன் சுந்தர்ஜி.?

Ramani சொன்னது…

சவப்பெட்டிபிறப்பு, மனிதப்பிறப்பு மனிதனின்இறப்பு
இவைகள் இணைக்கப்பட்டுள்ள விதம் மிகச்
சிறப்பாக உள்ளது.
வாழ்த்துக்கள்

vasan சொன்னது…

//IIIபிறக்கையில்உன்னருகில் நீயாரெனத் தெரியாத நான்கு பேர்.போகும்போது நீ யாரெனத்தெரிந்தநான்கு பேர்.
அவ்வளவுதான்.//
பிற‌க்கையில் அந்த‌ நால்வ‌ருக்கு நீயாரொனத் தெரியும்,
உன்னைத் தெரியாது.
போகும் போது உன்னைத் தெரிந்த‌ நால்வரேயாயினும், யார் யார‌னே
உனக்கே தெரியாது.

க ரா சொன்னது…

Great :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

சுந்தர்ஜியை ....விட்டா பிடிக்க முடியாது போல இருக்கே!கவிதையில் முதிர்வு மிளிர்கிறது!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பிறப்பிற்குப் பிறகும் இறந்த பின்னும் என்ன நடக்கும் என்று தெரியாமலேயே வருகிறோம், போகிறோம்! யார் வரச் சொன்னார்? யார் போகத்தான் சொன்னார்கள்! கவிதை மூலம் சொல்லிய விதம் அழகு.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

ரிஷபன் சொன்னது…

இருப்பதற்குள் போடுகிற ஆட்டம்தான் எத்தனை..

ஹேமா சொன்னது…

வாழ்வின் கணங்கள் திறக்கும் ஞானக்கண்.ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் நின்று தங்கி வாசிக்க வைக்கிறது !

வினோ சொன்னது…

ஒவ்வொரு முறையும் படிக்கும் போது சில பல அர்த்தங்கள் புலப்படுகிறது...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பிறப்பு முதல் இறப்பு வரை, எப்படியும் ஒரு நாலு பேராவது நமக்குத் தேவைப் படுகிறது.

நம்மை வாழ்த்துவதோ வசை பாடுவதோ நாம் நடந்து கொள்வதைப் பொருத்தே அமைகிறது.

வாழ்க்கையின் “ஆணி வேரை” ப் புட்டுப்புட்டு, அழகானதொரு கவிதையாய் தவறு தவறு அதிலும் ’நாலு’ குட்டிக் கவிதைகளாய் தந்து விட்டீர்கள்.

மிக மிக அருமை. நாம் இல்லாவிட்டாலும் இத்தகைய நம் படைப்புகள், என்றுமே நினைவுகளி லிருந்து மக்காமல், யாராலேயாவது அசை போட்டுக் கொண்டே இருக்கப்படும், என்றுமே !

புகழ் என்ற அந்த வார்த்தைக்கு மரண்ம் என்ற பேரவஸ்தையே கிடையாது.

சுந்தர்ஜி சொன்னது…

சில இடுகைகளுக்கு உங்கள் பின்னூட்டம் சுகம்.

எனக்கும் தெரியவில்லை.ஆனால் சுகமாகத்தான் இருக்கிறது விடை தெரியாமலிருப்பதும்.

நல்ல பின்னூட்டம் பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

தொடர்ந்து நேரமொதுக்கி வாசித்துப் பின்னூட்டமிடும் ரமணி சாரெல்லாம் என் பாக்யம்.

நன்றி ரமணி சார்.

சிவகுமாரன் சொன்னது…

மீண்டும் மீண்டும் படித்து இன்புறுகிறேன்.
நாளைக்கு இன்னொரு முறை படித்து பின்னூட்டம் இடலாம் என்று நினைத்தால் அடுத்த பதிவு. உங்கள் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க இயலவில்லை.
சித்தர் இலக்கியம் போலிருக்கிறது உங்கள் கருத்துக்களும் கவிதைகளும்.

சுந்தர்ஜி சொன்னது…

அஜீத் மாதிரி சொல்லவேண்டியதுதான் வாசன்.

நா பேஸ் மாட்டேன் இப்டி பத்லுக்கு பத்ல் பின்னூட்மா கவித எளுத்னா.ஆமா.

Vel Kannan சொன்னது…

பிழிந்தெடுக்கும் தத்துவம். பிழிய பிழிய சொட்டுகிறது சில புரிதல்களும் மேலும் சில கேள்விகளும்

Matangi Mawley சொன்னது…

what can i say, sir?

"Life is a 'match' that is 'fixed'..."! -Matangi Mawley

you can quote me... :)

"எல்லோரின்
நினவிலிருந்தும்
மக்கிப் போகும்
பேரவஸ்தைக்கு
வாழ்க்கை
என்ற பெயரிட்டவன்
எவன்?" --- a very well hidden dark humour... :)
'naalvar'-- (3rd verse), reminded me of another tamil poetry I ve heard my dad recite. i don't seem to remember who wrote it though... nor the poetry as such... but i find the 'naalvar' concept to be very unique. kind of takes you into it- once you start thinking about it!...

great writing!

Matangi Mawley சொன்னது…

just remembered-- 'naalvar'-- kannadaasan ezhuthinathu... 'yaar antha naalvar' nu varum- nu i think!

சுந்தர்ஜி சொன்னது…

ஒற்றைச் சொல் உயிரசைக்க.அப்படித்தானே ராமசாமி?நன்றியும் அன்பும்.

சுந்தர்ஜி சொன்னது…

முதிர்வின் நிழல் நான் ஆர்.ஆர்.ஆர். சார்.உங்களின் ஒளியில் நிழலாய்த் தரையில் வீழ்ந்து கிடக்கிறேன்.என்னைப் பிடித்துக் கொள்ளூங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

ரொம்ப அழகாயும் அர்த்தத்தோடயும் இருக்கு உங்க பின்னூட்டம்.நீங்கள்லாம் இப்ப்டி ஆழமாய்ப் படிக்கும்போது எழுதும் கவனம் இன்னும் அதிகமாக வேணுமென்று தோணுது வெங்கட்.

சுந்தர்ஜி சொன்னது…

எண்ணிணால் எண்ணமுடியாது.என்னாலும் எண்ணமுடியாது.ஆனாலும் எண்ணினால் ஆட்டத்தை எண்ணாமல் இருக்கலாம்.சரிதானே ரிஷபன்?

சுந்தர்ஜி சொன்னது…

என் வரிகளுக்குப் பொருள் கூடுகிறது அவற்றில் உங்களைப் போன்றவர்கள் நின்று தங்கும்போது ஹேமா.நான் மிகவும் பாக்யசாலி ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

அர்த்தம் சிலவோ பலவோ இருக்கிறதை நீங்கள் ஒப்புக்கொள்ளும் போது எனக்கு ஆறுதல் பிறக்கிறது வினோ.

நடுவில் காணாமல் போய்விடுகிறீர்கள் கமலேஷ் போல.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் வ்யாக்யானமும் அற்புதம் கோபு சார்.நான்தான் கொஞ்சம் லேட் பதிலெழுத.

சுந்தர்ஜி சொன்னது…

இனி கொஞ்சம் நிதானித்து எழுதுகிறேன் சிவா.

நிறைய எழுதுவதைவிட உங்களைப் போன்றவர்களால் வாசிக்கப்படுவதே எனக்குப் பெருமை சிவா.

சுந்தர்ஜி சொன்னது…

புதிர்கள் அவிழ்ந்தால்தானே அடுத்த கேள்வி பிறக்கமுடியும் வேல்கண்ணன்?

உங்களுடன் நேற்றுப் பேசமுடிந்தது ஆனந்தமாக இருந்தது.

சுந்தர்ஜி சொன்னது…

நல்ல எதிர்வினை உங்களிடமிருந்து மாதங்கி.ஆனால் வார்த்தைகளுக்குக் காக்க வைத்துவிடுகிறீர்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator