1.3.11

ஆட்டம்



ஆட வேண்டுமெனில்
-நீ யாரெனினும்-
உன்னைத் தயார்செய்யாது
எப்படி முடியும்?

உன் ஆட்டத்தை
நீ தீர்மானித்துவிடில்
உன்னை வெளியேற்ற
உன்னாலும் முடியாது.

வெளிப்படையாய்
உன்னைப் போல விளையாடு.
அடுத்தவனைப் போல் ஆடும் போது
அவன் போலவே தவறிழைக்கிறாய்.

முன்காலை நகர்த்த
பின் காலில் செல்ல
குனிந்து விலகச் சிலவும்
காலுயர்த்தி ஆடச்
சிலவும் என
ஆட்டத்தைத் தீர்மானிக்கின்றன
வீசப்பட இருக்கின்ற
பந்துகள்.

நீ செய்யப் போகும்
பிழைக்காகக் காத்திருப்பவர்
பலரென்றாலும்
அவரும் பிழைசெய்ய
பிழைக்கக்கூடும் நீ.

சமயங்களில்
செய்யாத குற்றத்துக்குத்
தண்டனையும்
தெரிந்து செய்த
தவறுக்கு விடுதலையும்
பெறக்கூடும்.

பார்வையாளனுக்காய்
ஆடாமல்
நீ ஆடுவதை அவனைப்
பார்க்க வை.

எல்லா ஆட்டங்களும்
துவங்குமுன்பும்
முடிந்தபின்பும்
தொடர்கின்றன
எப்போதும்
யாருமற்ற மைதானங்களில்.

15 கருத்துகள்:

மோகன்ஜி சொன்னது…

ஆட்டம் ஆட்டத்திற்காகவே ஆடப் படவேண்டும்..

தனியாட்டமாய் இல்லாது குழுவின் புரிதலோடு பகிர்ந்தாடப் பட்டால் இன்னும் மேன்மை..

டீன் ஸ்மித் மைக்கேல் ஜோர்டானுக்கு கண்டிப்பாய் ஒருமுறை சொன்னார்..
"மைக்கேல்.. நீ பந்தைப் pass செய்யாவிடில் ஆட இயலாது.. ஆடிப் பயனில்லை.."
சோர்ந்தாடாதே! சேர்ந்தாடு!

ஹேமா சொன்னது…

வாழ்க்கையே ஒரு விளையாட்டுத்தானே.
இதில் எத்தனை ஆட்டங்கள் தோல்வியும் வெற்றியுமாய் !

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மீண்டும் தங்கள் “ஆட்டம்” முழு மூச்சுடன் துவங்கி விட்டது போலிருக்கு.

//எல்லா ஆட்டங்களும் துவங்குமுன்பும்
முடிந்தபின்பும் தொடர்கின்றன எப்போதும் யாருமற்ற மைதானங்களில்.//

ஏதோ புரிவது போலவும் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

நிலாமகள் சொன்னது…

ஆட்டத்தைத்
தீர்மானிக்கின்றன
உதைபட இருக்கின்ற
பந்துகள்.//

//செய்யாத குற்றத்துக்கு
தண்டனையும்
தெரிந்து செய்த
தவறுக்கு விடுதலையும்//

//முடிந்தபின்பும்
தொடர்கின்றன//

சிந்தை கிளர்த்தும் வரிகள்... மோகன்ஜி-யின் மறுமொழியும் அருமை.

G.M Balasubramaniam சொன்னது…

குழுவில் கலந்து ஆடும் ஆட்டத்தில் குழுவுடன் சேர்ந்தும் தனியாக ஆடும் ஆட்டத்தில் தனியாக திறம்படவும் ஆட வேண்டும். இலக்கு அடைவதே நோக்கம். ஆட்டம் ஆட்டத்திற்காகவே ஆடப்படவேண்டும்.சுந்தர்ஜி உலகமே ஒரு ஆடுகளம்.அதில் நாமெல்லோரும் ஆட்டக்காரர்கள்தானே.!சரியா.?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆடிய ஆட்டமென்ன!

ஆட்டுவித்தால்! போன்ற பாடல்கள் நினைவுக்கு வருகிறது.

Nagasubramanian சொன்னது…

மிகவும் அருமை.
வாழ்க்கையை விளையாட்டுடன் உருவகம் செய்த விதம்!!!

இன்றைய கவிதை சொன்னது…

”எல்லா ஆட்டங்களும்
துவங்குமுன்பும்
முடிந்தபின்பும்
தொடர்கின்றன
எப்போதும்
யாருமற்ற மைதானங்களில்.
:”


நல்லா இருக்கு சுந்தர்ஜி

நன்றி
ஜேகே

அன்புடன் அருணா சொன்னது…

/எல்லா ஆட்டங்களும்
துவங்குமுன்பும்
முடிந்தபின்பும்
தொடர்கின்றன எப்போதும்
யாருமற்ற மைதானங்களில்./
:)

நையாண்டி மேளம் சொன்னது…

யாருமற்ற மைதானங்களில் ஆடு ஆட்டங்கள் தான் நிஜம்;இந்த ஆட்டம் அனைவரிடமும் இருக்கும், அதை மறைப்பது தான் நாகரீகம் என்று நினைக்கிறோம்.

தவறு சொன்னது…

நல்லா இருக்குங்க..

vasan சொன்னது…

/எல்லா ஆட்டங்களும்
துவங்குமுன்பும்
முடிந்தபின்பும்
தொடர்கின்றன
எப்போதும்
யாருமற்ற மைதானங்களில்./

கும்ப‌லுக்கு ஊடே துவ‌ங்கி முடிவது
என்னவாய் இருக்கும்?

VELU.G சொன்னது…

//
எல்லா ஆட்டங்களும்
துவங்குமுன்பும்
முடிந்தபின்பும்
தொடர்கின்றன
எப்போதும்
யாருமற்ற மைதானங்களில்.
//

அருமை

சுந்தர்ஜி சொன்னது…

டீன் ஸ்மித் மிக்கேல் ஜோர்டானுக்கு-183ல் கபில் தன் சகாக்களுக்கு-முதிர்ந்த சச்சின் தன் அணிக்கு-விஜய் அமிர்தராஜ் தன் இறுதி நாட்களில் என எல்லோரும் சொன்னதும் இதேதானே மோஹன்ஜி.

அருமையான ஆட்டம் போல உங்கள் வார்த்தைகள்.

சிவகுமாரன் சொன்னது…

”எல்லா ஆட்டங்களும்
துவங்குமுன்பும்
முடிந்தபின்பும்
தொடர்கின்றன
எப்போதும்
யாருமற்ற மைதானங்களில்.
:”

நிறைய யோசிக்க வைத்த வரிகள் .
நன்றி

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...