29.8.11

நகரம்

1.
அதிகாலை
துவங்கி
வெயில்
ஏறியபின்னும்
தொடர்கிறது
வீடு திரும்ப
விரும்பாத
முதியவர்களின்
நடைப்பயிற்சி.

2.
சமையலறையின்
வெறுமையை
விழுங்கியபடி
இருக்கிறது
தொலைக்காட்சி.
பாலிதீன் பையில்
பொதிந்த உணவை
விழுங்கியபடி
இருக்கின்றன
குடும்பங்கள்.

3.
வெயிலின் 
துணையுடன் 
கூட்டங்கூட்டமாய்ச்
சாலைகளை
மொய்த்தவர்கள்
உறங்கிக் கிடக்க
ஆளற்ற
சாலைகளில்
முழுநிலவின்
வெள்ளத்தில்
மிதந்து செல்கிறது
பேரமைதியின் படகு.

9 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

வீடு திரும்ப
விரும்பாத..

வீடற்ற மனிதர் ஒரு புறம்.. வீடுகள் தொலைக்கிற மனிதர்கள் மறுபுறம்.

முழுநிலவின்
வெள்ளத்தில்
மிதந்து செல்கிறது
பேரமைதியின் படகு

ஆஹா.. சபாஷ். அந்த அமைதியை அப்படியே வார்த்தைகளில் அள்ளி வந்து விட்டீர்கள்.. மிக அழகாய்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முதல் கவிதை நிதர்சனம்.....

மற்ற கவிதைகளும் மிக அருமை... சென்னை வாழ்க்கை எப்படிப் போகிறது? வீட்டில் அனைவரையும் விசாரித்ததாய்ச் சொல்லுங்கள்....

ரமேஷ் வெங்கடபதி சொன்னது…

மறுபடியும் முதலே முதன்மை!

க ரா சொன்னது…

நகரத்தின் சித்திரங்கள் அருமை சுந்தர்ஜீ.. எப்படி இருக்கீங்க....

இரசிகை சொன்னது…

yellaame pidichurukku..

vaazhthukal sundarji!

கோவை2தில்லி சொன்னது…

நகரத்தின் நிலையை வெகு இயல்பாக கவிதையாக தந்தது அருமை.

bagathsing சொன்னது…

அழகு அய்யா,வாழ்த்துக்கள்.வாழ்வின் ஒவ்வொரு கணமும் இடமும் பொருளாழம் மிக்கவை.அவை அறியாப் பொருள்களின் அரும்பொதிகள்.ஆழ்ந்து பயில அள்ளித்தருவன.பயிலவும் பயிற்றவும் வல்லவர் என உணர்த்தும் கவிதை வரிகளை துய்த்தேன்.
.

காமராஜ் சொன்னது…

மூன்றும் மணிகள் சுந்தர்ஜீ.

பேரமைதியின் படகு என்ன இணைப்பு உவமை’ க்ரேட்.

மனோ சாமிநாதன் சொன்னது…

உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...