11.5.12

விகடனில் என் கவிதை- 'இறுதி வார்த்தை" .

























காலத்தின் புழுதியை அப்பியபடி
நெடுநாட்களாக நின்றுகொண்டிருக்கிறது
அந்தக் கார்.

துவக்கத்தில் ஒருநாள்
தீவிரவாதியொருவனின்
வெடிகுண்டைப்
பதுக்கியபடி நிற்பதாக
எல்லோரும் சந்தேகப்பட்டதுண்டுதான்.

போகப்போக-

கல்லெறிக்கோ வெயிலுக்கோ
நாய்கள் மறைந்துகொள்ளவோ-

அதற்குப் பின்
அவசர ஆடவர்
நின்று சிறுநீர் கழிக்கவோ-

வரும்போகும் விடலைகள்
தங்கள் பெயரைக்
கிறுக்கிப்பார்க்கவோ-

வழி தொலைத்தவர்களுக்கு
அடையாளம் காட்டவோ-
என மாறிப்போனாலும்

நிறுத்தப்பட்ட கடைசி நாளில்
நாளை பார்க்கலாம்
என அதை ஓட்டியவன்
சொல்லிச் சென்றதை
இன்னமும் நம்பிக் காத்திருக்கிறது
அந்தக் கார்.

- நன்றி- ஆனந்த விகடன். 16.05.2012

24 கருத்துகள்:

A.R.ராஜகோபாலன் சொன்னது…

சுந்தர்ஜி அண்ணா
உங்கள் கவிதைகளின்
வாட்டத்திற்க்கும்
சாட்டத்திற்க்கும்
இணையே இல்லை

உங்கள் கவிதைகளை
படித்த பின்னர்
நான் கவிதை எழுத
சற்றே தயக்கம்
தொற்றி கொள்கிறது

க ரா சொன்னது…

class சுந்தர்ஜீ ....

Ramani சொன்னது…

எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து
எங்கள் தவவாழ்வு குறித்து ஒரு அருமையான
கவிதை படைத்த உங்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்

(அனைத்து காவல் நிலையங்களிலும்
கேட்பார் இன்றிக் கிடக்கும்
பல்லாயிரக்கணக்கான வண்டிகள் சார்பாக)
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்

ரிஷபன் சொன்னது…

அந்த கடைசி வரியில் ஒரு சிறுகதையே ஒளிந்திருக்கிறது சுந்தர்ஜி.

ஹேமா சொன்னது…

பழையன கழிதல் இப்போ மனிதர்களுக்கும்தான்...காத்திருப்பு தெருவோரம்,வயோதிபர் மடங்கள் மற்றும் !

vasan சொன்னது…

நாளைக்காக
நானும்....
காத்திருக்கிறேன்.
சுந்த‌ர்ஜி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//போகப்போக-
கல்லெறிக்கோ
வெயிலுக்கோ
நாய்கள் மறைந்துகொள்ள-
அதற்குப் பின்
அவசர ஆடவர்
நின்று சிறுநீர் கழிக்க-
வரும்போகும்
விடலைகள்
தங்கள் பெயரைக்
கிறுக்கிப்பார்க்க-
வழி தொலைத்தவர்களுக்கு
அடையாளம் காட்ட-
என
மாறிப்போனாலும்//

ஆஹா இத்தனைப்பயன்களா அந்தப்புழுதி படிந்த காரால்.....
நிற்கட்டும், எப்போதுமே அது அங்கேயே நிற்கட்டும்.

காருக்குள்ளும் சமயத்தில் ஏதாவது கசமுசா நடத்தப்படுமே, தற்காலிக சிலமணி நேர லாட்ஜ் வசதிபோல. அந்த முக்கிய விஷயத்தை ஏனோ மறந்து விட்டீர்களே. ஒரு வேளை அந்த வசதி காவலர்களுக்கு மட்டும் தானோ?

நாட்டு நடப்பை புட்டுப்புட்டு வைக்கும் நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

மோகன்ஜி சொன்னது…

அந்தக் காரின் நம்பிக்கை என்னை எது எதற்கோ ஒப்பிடத் தோன்றுகிறது.
கார் பற்றி சொல்லும் தேர்க் கவிதை!

santhanakrishnan சொன்னது…

மனிதன்
மனிதனை
ஏமாற்றியது போக
இது என்ன புதுசா
இயந்திரத்தையும்
ஏமாற்ற
ஆரம்பித்து விட்டானா?

நிரூபன் சொன்னது…

நம்பிக்கைக்குச் சான்றாக இருக்கும் காரினை உயர்த்திக் காட்டியும், கைவிடப் பட்ட பொருள் ஒன்றிற்கான எமது சமூகத்தின் பார்வையினைக் கூறியபடியும் உங்களின் இக் கவிதை நகர்கிறது.

ஹ ர ணி சொன்னது…

manathai kacia vaikkum kavithai sundarg. nerudal.

Ramani சொன்னது…

கேட்பார் அற்று ஆங்காங்கே காவல் நிலையங்களில்
அனா தைகளாகக் கிடக்கும் எங்களையுமொரு
பாடுபொருளாக்கி பெருமைசேர்த்த
உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி
( காவல் நிலையங்களில் காலத் தூசு படிந்து கிடக்கும்
வண்டிகள் சார்பாக)

RVS சொன்னது…

தூசு படிந்த காரை வைத்து தூள் கிளப்பும் கவிதை. அற்புதம் ஜி! ;-))

Velkannan சொன்னது…

iruthi vaarththai uruthiyaay manathil padikiradhu.

Dhanalakshmi Baskaran சொன்னது…

car kavidhai gana joar. kathirukkum adharkum nambikkai irukkiradhu ena namba vaitha irudhi varigal start seigindrana manasukkul mathappai.

carai malai adivarathil niruthamal compoundukkul niruthina madhiri veliyittirundhal kavidhaikku poruthamai irundhirukkum.

vikatanukku chellak kuttu. sundarjikku shottu.

S.V.Venugopalan சொன்னது…

iruthi varthai azhagana kavithai. Nalla lay out.Innum kooda neetti irundhirukkalaam sindhanaiyai.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

விகடன் சொல்வனத்தில் வாசித்தேன். அருமையாயிருந்தது. அந்தப் புகைப்படமும் தங்கள் கவிதைக்கு இன்னும் மெருகேற்றியது. பகிர்விற்கு நன்றி.

RAMESHKALYAN சொன்னது…

அவசர ஆடவர் என்கிற பண்புத்தொகை நன்றாக உள்ளது. கடைசி வரியில் கவிதையின் உயிர். ஆனால் அந்த காரின் காத்திருப்பு அது தீவிர வாதிகளின் கார் என்பதாலேயே (அவர்களைப் போலவே சிதிலமாவதை பற்றிய கவலை இல்லாமல் ஒரு நம்பிக்கைக்காக காத்திருப்பது போல)- கவிதை உரம் பெறுகிறது என்று எண்ணுகிறேன். ஒரு விபத்துக்குள்ளான காராக சொல்லி இருந்தால் இந்த விளைவை ஏற்படுத்துமா என்பது சந்தேகம். தீவிர வாதி பயன்படுத்திய கார் என்ற வெளிப்பாட்டில் நன்றாக அமைந்துள்ளது.

அப்பாதுரை சொன்னது…

பூனையை இந்த முறை தான் கவனித்தேன். இதுவே கவிதை.

சிவகுமாரன் சொன்னது…

இந்தக் கவிதையும் யாருமற்ற அறையும், மனதை பிசைந்து விட்டு செல்கிறது.
ஆனந்த விகடனுடன் ஏதும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டீர்களா?

Ramani சொன்னது…

நிறுத்தப்பட்ட கடைசி நாளில்
”நாளை பார்க்கலாம்”
என அதை ஓட்டியவன்
சொல்லிச் சென்றதை
இன்னமும் நம்பிக் காத்திருக்கிறது
அந்தக் கார்.//

மனைவியை சமாதான்ப் படுத்திவிட்டு எப்படியும்
வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் எனச் சொல்லி
வயோதிகர் இல்லத்தில் விட்டுப் போன
மகனைப் போலப் பட்டது அந்த டிரைவரின் சொல்லும்
அந்தக் காரின் எதிர்பார்ப்பும்..
மனம் கவர்ந்த பதிவு

ஸ்நேகாதேவி சொன்னது…

இறுதி வார்த்தை நல்லா இருக்கு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காத்திருத்தல் தானே வாழ்க்கை... காருக்கும் மனிதனுக்கும்!

தனலக்ஷ்மி பாஸ்கரன் சொன்னது…

""நீயும் என்னைப் போல் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டு புறக்கணிக்கப் பட்டுவிட்டாயோ"? என்று அடைக்கலம் புகுந்த பூனையிடம் கேட்கிறதோ மகிழுந்து?"

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...