18.10.13

சுபாஷிதம் - 18


341.
ந அன்னோதகஸமம் தானம் ந திதிர்த்வாதசீஸமா
ந காயத்ரயா: பரோ மந்த்ரோ ந மாது: பரதைவதம்

உணவும், நீரும் தானத்தில் சிறந்தவை; துவாதசி நாட்களில் சிறந்தது; மந்திரங்களில் சிறந்தது காயத்ரி; எல்லாக் கடவுள்களிலும் சிறந்தவர் தாய்.

342.
சித்தஸ்ய சுத்தயே கர்ம ந து  வஸ்தூபலப்தயே
வஸ்துஸித்திர்விசாரேண ந கிஞ்சித்கர்மேகோடிபி:
-விவேக சூடாமணி

மனதின் தூய்மைக்காகவே செயல்; மெய்ப்பொருளை அடைதற் பொருட்டன்று. மெய்ப்பொருளை ஆராய்ச்சியால் மட்டுமே அடையலாம்; கோடிக்கணக்கான கர்மங்களால் சிறிதும் சித்திக்காது.

343.
அம்ருதம் சைவ ம்ருத்யுச்ச த்யம் தேஹப்ரதிஷ்டிதம்
மோஹாதாபகதே ம்ருத்யு: ஸத்யேநாபகதேம்ருதம்
-ஸ்ரீ சங்கராசார்ய

மரணமின்மை, சாவு இவை இரண்டும் உடலில்தான் உறைந்துள்ளன. சாவு சலனத்தால் உண்டாகிறது; மரணமின்மை வாய்மையால் உண்டாகிறது.

344.
கோ ந யாதி சம் லோகே முகே பிண்டேன பூரித:
ம்ருதங்கோ முகலேபேன கரோதி மதுரத்வனிம்

வயிற்றுக்குச் சரியாய் ஈயப்பட்ட யாரைத்தான் வசப்படுத்த இயலாது போகும்? ரவை ஏற்றப்பட்ட மிருதங்கம்தான் இனிய ஒலி தருகிறது. 

345.
ஸர்வநாசே ஸமுத்பன்னே ஹ்யார்தம் த்யஜதி பண்டித:
அர்தேன குருதே கார்யம் ஸர்வநாசோ ஹி து:ஸஹ:

எல்லாம் அழிந்துபோகும் என்ற கட்டத்தில் ஒரு புத்திசாலி தன்னிடம் இருப்பவற்றில் பாதியை விட்டுக்கொடுக்கிறான். தேவையில் பாதி இருந்தாலும் ஒருவன்  வாழ்ந்துவிடலாம். அனைத்தையும் இழப்பதைச் சமாளிப்பதுதான் மிகக் கடினம்.

346
ந பிதா நாத்மஜோ நாத்மா ந மாதா ந ஸகீஜன:
இஹ பரேத்ய ச நாரீணாம் பதிரேகோ கதிஸ்ஸதா 
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் - அயோத்யா காண்டம் - 27.5

இகத்திலும், பரத்திலும் ஸ்த்ரீகளுக்குக் கணவன் ஒருவனே எப்போதும் கதி; தந்தையோ, தனயனோ, தானோ, தாயோ, தோழியோ அன்று.   

347.
ஸாஹித்யஸங்கீதகலாவிஹீன: ஸாக்ஷாத் பசு: புச்சவிஷாணஹீன:
த்ருணம் ந காதன்னபி ஜீவமான: தத்பாகதேயம் பரமம் பசூனாம்
-நீதிசதகம் 

இசைக்கோ கலைக்கோ இடம் கொடாத மனிதன் கொம்புகளும், வாலும் அற்ற ஒரு மிருகம். புற்களை உண்ணாது அவன் வாழ்வதொன்றே பிற மிருகங்களுக்கு அவனால் கிடைத்த மாபெரும் நற்செயல்.

348.
அஸப்தி: சபதேனோக்தம் ஜலே லிகிதமக்ஷரம்
ஸப்திஸ்து லீலயா ப்ரோக்தம் சிலாலிகிதமக்ஷரம்

நேர்மையற்றவனின் சபதம் நீர் மேல் எழுத்து; சான்றோன் உதிர்க்கும் சாதாரணச் சொற்கள் கூட கல்லில் செதுக்கிய சாசனம்.  

349.
ஆரோப்யதே சிலா சைலே பத்னேன மஹதா யதா
பாத்யதே து க்ஷணேநாதஸ்ததாத்மா குணதோஷயோ: 

ஒரு பாறையைச் சுமந்தபடி மலை உச்சியை அடைதல் கடினம்; அதே பாறையுடன் உச்சியிலிருந்து அடிவாரத்தை அடைதல் எளிது. அதுபோல 
நல்ல குணங்களை ஒருவன் மனதில் புகுத்துதல் கடினம்; துர்குணங்களைப் புகுத்துதல் எளிது.

350.
லுப்தமர்த்தேன க்ருஹணீயாத் க்ருத்தமஞ்சலிகர்மணா
மூர்க்கம் சந்தானு ருத்தயா ச தத்வார்த்தேன ச பண்டிதம்

பேராசைக்காரனை பணத்தாலும், முன்கோபியைப் பணிவாலும், மூடனை அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியும், புத்திசாலியை ஞானத்தின் சாரத்தாலும் வசப்படுத்தலாம்.

351.
ஸுக-துக்கே பயக்ரோதௌ லாபலாபௌ பவாபவௌ 
யச்ச கிஞ்சித்தயாபூதம் நனு தைவஸ்ய கர்ம தத் 
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் - அயோத்யா காண்டம் - 22.22

இன்ப துன்பத்திலும், அச்சம் சினத்திலும், லாப நஷ்டத்திலும், பிறப்பு இறப்பிலும் அதது நிகழ்வதற்கு அடிப்படைக் காரணம் எது ஒன்று விளக்க முடியாமல் உள்ளதோ அதுவே 'விதியின் செயல்' என்பது நிச்சயம்.

352.
வ்யாக்ரிவ திஷ்டதி ஜரா பரிதர்ஜயந்தி ரோகாச்ச சத்ரவ இவ ப்ரஹரந்தி தேகம் 
ஆயு: பரிஸ்த்ரவதி பீன் நகடாதிவாம்போ லோகஸ்ததாபயரிசரதீதி சித்ரம் 
-வைராக்ய சதகம் - 38

காத்திருக்கும் முதுமை புலியாய் அச்சுறுத்துகிறது; வியாதிகள் எதிரியாய் உடலைத் தாக்கக் காத்திருக்கிறது; ஓட்டைப் பாத்திரத்திலிருந்து கசியும் நீராய் வாழ்க்கை கரைகிறது; இருந்தும், மனிதன் செய்யும் கொடுஞ் செயல்களை நினைக்க வியப்பாய் இருக்கிறது.

353.
தத் கர்ம யத் ந பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே 
ஆயாஸாய அபரம் கர்ம வித்யா அன்யா சில்பநைபுணம் 
-விஷ்ணு புராண 

எந்தச் செயல் மீண்டும் பந்தச் சுழலுக்குள் ஆன்மாவைச் சிக்க வைக்காதோ அதுவே மெய்யான செயல்; எந்தக் கல்வி ஆன்மாவை வீடு பேற்றிற்கு இட்டுச் செல்லுமோ அதுவே கல்வி. ஏனைய செயல் எல்லாம் விழலுக்கு இரைத்த நீரே; ஏனைய கல்வி எல்லாம் தகவல் களஞ்சியமே. 

354.
அக்ஷரத்வயம் அப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தி இதி யத் புரா 
தத் இதம் தேஹி தேஹி இதி விபரீதம் உபஸ்திதம் 

செல்வச் செழிப்பில் புரளும்போது வறியோருக்கும், தேவையுள்ளோருக்கும் 'இல்லை, இல்லை' என்று மறுப்பவன், 'கொடு, கொடு' என்று கையேந்தும் விபரீதம் நிச்சயம் நாளை நிகழும்.

355.
அன்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி 
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் வஜ்ரலேபோ பவிஷ்யதி 

பிற இடங்களில் இழைத்த பாபங்கள் புனித இடங்களைத் தொட்டதும் கரைந்து போய்விடும். புனிதமான இடங்களில் இழைக்கும் பாபங்கள் கல்லில் செதுக்கிய எழுத்தைப் போல் ஒருபோதும் மறையாது.

356.
அஸாரே கலு ஸம்ஸாரே ஸாரம் ச்வசுரமந்திரம் 
ஹரோ ஹிமாலயே சேதே ஹரிசேதே மஹோததௌ 

பொருளற்ற இவ்வுலகில் நிம்மதிக்குரிய ஒரே இடம் மாமனாரின் இல்லம்தான். அதனால் தான் ஈசன் இமாலயத்திலும், திருமால் கடலிலும் எப்போதும் உறைகின்றனர்.

357.
சலந்து கிரய: காமம் யுகாந்தபவனாஹதா
க்ருச்ரேபி ந சலத்யேவ தீராணாம் நிச்சலம் மன

பிரளய கால ஊழியில் மாமலைகளும் அசையக் கூடும். தீரர்களின் மனம் அப்போதும் சலனம் அற்றிருக்கும்.

358.
மனஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மனாம் 
மனஸ்யன்யத் வசஸ்யன்யத் கர்மண்யன்யத் துராத்மானாம் 

மஹா மனிதர்களின் மனம், சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாய் விளங்கும். தீயோரின் மனம், சொல், செயல் இம்மூன்றும் வெவ்வேறாய் இருக்கும்.

359.
தூரஸ்தா: பர்வதா: ரம்யா: வேச்யா: ச முகமண்டனே 
யுத்யஸ்ய து கதா ரம்யா த்ரீணி ரம்யாணி தூரத

தொலைதூர மலை; ஒப்பனையுடன் தாசி; போர்க் கதைகள் இம்மூன்றும் தொலைவில் இருந்து மட்டுமே ரசிப்பதற்கு உரியவை.

360.
ஆர்தா தேவான் நமஸ்யந்தி தப: குர்வந்தி ரோஹிண
நிர்தனா: தானம் இச்சந்தி வ்ருத்தா நாரீ பதிவ்ரதா

இடர் நேர்கையில் கடவுளிடம் பிரார்த்திக்கின்றனர்; நோயுரும் போது பத்தியம் கடைப் பிடிக்கின்றனர்; வறியோனாகையில் தானம் செய்ய ஆசை கொள்கின்றனர்; முதுமையில் பதிவிரதையாய் இருக்க விழைகின்றனர்.        

9 கருத்துகள்:

sury Siva சொன்னது…

Saa Vidhya Yaa Vimukathaye..


திருச்சியிலே உள்ள நேஷனல் கல்லூரியின் motto
யா வித்யா ஸா விமுகதயே.

ஒரு அம்பது வருஷத்துக்கு மேலே அந்த கல்லூரியின் முதல்வர்
அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் இந்த ஸா யா இடம் மாறி இருக்கிறதே என்று சொல்லிவிட்டேன்.

இந்த இரண்டுக்கும் உண்டான அர்த்த பேதத்தை பற்றி என்னிடம் ஒரு அரை மணி நேரம் தெளிவாக்கியது என் நினைவுக்கு வந்தது.

இது குறித்து உங்களுக்கு செல்லடித்தேன்.

எங்கேஜ்டு சத்தம் திருப்ப திருப்ப ஒரு பத்து தரம் வந்தது.

ஐ திங்க் ஐ ஆம் என்பது போன்றது இது.

ஐ ஆம் ஐ திங் என்பது பயலாஜிகல் ட்ரூத்.

அப்ப முன்னது பாலசியா ? fallacy?

தெளிவு இல்லை. எனக்கு.

சுப்பு தாத்தா.

சுந்தர்ஜி சொன்னது…

’ஐ ஆம் ஐ திங்க்’ என்பதை ‘பயலாஜிகல் ட்ரூத்’ என்று நிறுத்துவது மேற்கத்திய சிந்தனை.

’ஐ திங்க் ஐ ஆம்’- இது 16ம் நூற்றாண்டின் ப்ஃரென்ச் சிந்தனையாளர் ரெனெ டெகார்ட்டின் மிகப் ப்ரபலமான வாக்கியம்.

’இரண்டல்ல ஒன்று’ என்று போதிக்கும் அத்வைதம் இருக்கும் தடத்தில்தான் இந்த வாக்கியம் இருக்க முடியும். இத்தடத்தில் ஒரு ஃப்ஃரென்ச் சிந்தனையாளன் இருப்பது பெரிய ஆச்சர்யம்.

உங்களுடன் இன்று பேசியது பரம ஆனந்தம்.

இப்படிப் பேசிக்கொள்ள நீங்கள் இருக்கிறீர்கள் என்பதே இந்நாளைய பெரிய ஆறுதல்.

நன்றி சுப்புத் தாத்தா.

சே. குமார் சொன்னது…

சுபாஷிதமும் அதற்கான விளக்கமும் அருமை.

விளக்கம் மூலமாகவே சுபாஷிதத்தை அறிந்து கொள்கிறோம்.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

கோபாலசுந்தரம் சொன்னது…

சுந்தர்ஜி, 352-ல் இரு திருத்தங்கள் கூற விரும்புகிறேன்.

1) வ்யாக்ரீவ என்றிடுக்க வேண்டும். 2)பயரிசரதீதி என்பதற்கு பதிலாக ப்யஹிதமாசரதீதி என்றிருக்க வேண்டும்.

என்னிடம் உள்ள வைராக்ய சதகம் (அல்மோரா அத்வைத ஸொஸைடி- 1916 பதிப்பு) அப்படிப் போட்டுள்ளது. சற்று பாருங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி கோபாலசுந்தரம் ஐயா.

ராமக்ருஷ்ணா மடத்தின் பதிப்பைச் சரிபார்த்த பின்னரே அதை மொழிபெயர்த்தேன்.

व्याघ्रिव तिष्टति जरा परितर्जयन्ति रोगाश्च शत्रव इव प्रहरन्ति देहम्.

அதன்படியே மொழிபெயர்த்திருக்கிறேன்.

நிலாமகள் சொன்னது…

காத்திருக்கும் முதுமை புலியாய் அச்சுறுத்துகிறது; வியாதிகள் எதிரியாய் உடலைத் தாக்கக் காத்திருக்கிறது; ஓட்டைப் பாத்திரத்திலிருந்து கசியும் நீராய் வாழ்க்கை கரைகிறது; இருந்தும், மனிதன் செய்யும் கொடுஞ் செயல்களை நினைக்க வியப்பாய் இருக்கிறது.

சுபாஷிதம் 17 ஐ தேடுகிறேன்...

நிலாமகள் சொன்னது…

பொருளற்ற இவ்வுலகில் நிம்மதிக்குரிய ஒரே இடம் மாமனாரின் இல்லம்தான். அதனால் தான் ஈசன் இமாலயத்திலும், திருமால் கடலிலும் எப்போதும் உறைகின்றனர்.

தலை தீபாவளிக்கு வரும் புது மாப்பிள்ளைகள் கவனிக்கவும்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி குமார். சுபாஷிதங்களைத் தொடர்ந்து வரும் உங்கள் ரசனை சிலிர்ப்பூட்டுகிறது.

நன்றி நிலாமகள்.

சுபாஷிதம்-17ன் சுட்டி உங்களுக்காக.

http://www.sundarjiprakash.blogspot.in/2013/09/blog-post_4377.html

G.M Balasubramaniam சொன்னது…

கடவுளரில் சிறந்தவர் தாய்....இதையே எல்லோர்முன்னும் கடவுள் காட்சி அளிக்க முடியாது என்பதால்தான் தாயைப் படைத்தார் என்கிறார்களோ. வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator