12.4.14

ஒரு செடியும் வனமும்

புகைப்படம்: ஒரு செடியும் வனமும்
===================
இலையாகவும் மிதந்தாயிற்று.
கல்லாகவும் கிடந்தாயிற்று.
நதியாகத்தான் முடியவில்லை.
பஞ்சாகவும் திரிந்தாயிற்று.
பருந்தாகவும் பறந்தாயிற்று.
வானாகத்தான் இயலவில்லை.
கிடந்து பழகுதலுக்கும்
கிடத்தப் பழகுதலுக்கும்
இடைவெளி புரிகிறது -
ஒரு செடிக்கும்
ஒரு வனத்துக்குமானது
போல.
இலையாயும் மிதந்தாயிற்று.
கல்லாயும் கி
டந்தாயிற்று.
நதியாகத்தான் முடியவில்லை.
பஞ்சாயும் திரிந்தாயிற்று.
பருந்தாயும் பறந்தாயிற்று.
வானாகத்தான் இயலவில்லை.
கிடந்து பழகுதலுக்கும்
கிடத்தப் பழகுதலுக்கும்
இடைவெளி புரிகிறது -
ஒரு செடிக்கும்
ஒரு வனத்துக்குமானது
போல.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட....! ரசித்தேன்...

சிவகுமாரன் சொன்னது…

ஆகா . எவ்வளவு செய்திகளை சொல்லிச் செல்கிறது.
செடிக்கும் வனத்திற்குமான இடைவெளி .

மோகன்ஜி சொன்னது…

வலைக்கும் வனப்பனுக்கும்( சுந்தரா) ஆன இடைவெளி...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ! நினைப்பதெல்லாம் நிறைவேற இறையருள் கூடட்டும்... அன்பும் ஆசியும்....

நிலாமகள் சொன்னது…

செடிகள் பெருக வனம் சாத்தியமாகும் ஒருநாள்.

நலம்தான் என அறிவிக்கிறது பதிவுப்பூ.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...