1.4.10

கொடும் பிரிவு




காத்திருக்கிறேன் காரணங்களும்
சூழ்நிலைகளும் நிசப்தமாய்த் தொடரத்
தவிக்கிறது நமக்கான பொழுது.
உப்பில் ஊறிய நாளின் நெருக்கடிகளை-
கடக்கும் பாதையின் நெரிசல்களை- நன்கறிவேன்.
எப்படியும் நீ வந்து விடுவாய்.
இசைக்காத பியானோவின்
பெரும் அமைதியாய்ச் சொட்டுகிறது
நீயற்ற பொழுதின் அனல்.
காரணமற்ற தாமதம் தொடரத்தொடர
விபத்துக்களின் கருஞ்சாயம் பூசித்
துயருற்றது என் நண்பகல்.

2 கருத்துகள்:

Madumitha சொன்னது…

//இசைக்காத பியானோவின்
அமைதி//
துயரந்தோய்ந்த
வரிகள்.
நல்ல கவிதை சுந்தர்ஜி.

பத்மா சொன்னது…

உப்பில் ஊறிய
நாளின் நெருக்கடிகளை-

அப்பா என்ன கரிப்பு

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...