3.4.10

சீதனம்




விட்டுச் செல்கிறேன் நிலத்தடிநீர் கொன்ற பாவத்தை
தணியாத தாகத்தை- ஈரமில்லா மனங்களை-
நெல்மணம் மறந்த வீடு முளைத்த வயல்வெளியை-

விட்டுச் செல்கிறேன் பிஸ்கட் தேனீருடன்
விவாதித்து ஒழியும் அமர்வுகளை-
நிசப்தம் கொல்லும் சதா பேச்சுக்களை-

விட்டுச் செல்கிறேன்-
அசுத்தமான புற்பரப்பை பாலிதீன் மண்வெளியை-
மாசு படுத்திய காற்றை- மாசு பட்ட அரசியலை-
மதிப்பில்லா எண்கள் தரும் மந்தைக் கல்வியை-

விட்டுச் செல்கிறேன் தாய்ப்பால் அற்றுக்
கதறும் என் தமிழை.

சரித்திரத்தின் சவுக்கடி வாங்கக் காத்திருக்கும்
மந்தையின் ஒரு ஆடாய் குற்ற உணர்வுடன்
விட்டுச் செல்கிறேன் கைகளில் கனக்கும்
இந்தக் கவிதையை.

5 கருத்துகள்:

சக்தி சொன்னது…

awesome... i tried to write in the same theme.. but i dont want to feel sorrow when i read it.. mandaiyil aditharpol sollavendum... arumaiyaan sinthanai.. arputham.. thodarungal..

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மதுமிதா.ஒரு குற்ற உணர்வு-கையாலாகாத்தனம்-வாட்டி எடுக்கிறது.நம் அளவில் நாம் சரியாக இருப்பது தாண்டி எதுவும் செய்ய முடியவில்லையே?மாறும் என்று சால்ஜாப்பு சொல்லிக்கொள்ளலாம்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சக்தி.தலையில் அறைந்தது போலச் சொல்வதில் இப்படியும் ஒரு வகையுண்டு.வார்த்தைகள் அமைதியாய் நின்று கொல்லும் வகை.உங்கள் முதல் வருகைக்கு நன்றி.உங்கள் வலையையும் இன்றுதான் பார்த்தேன்.உங்கள் ஆர்வமும் சிந்தனையும் சுயம்புவாக இருக்கிறது.

இரசிகை சொன்னது…

:(

பத்மா சொன்னது…

எங்க போறீங்க ? இதுல ஏதாவது கொஞ்சம் சரி செஞ்சுட்டு தான் போணும்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...