25.5.10

இரு துருவம்




I
உற்று நோக்குகிறோம்
தீபத்தின் சுடரை நீயும்
திரி உறிஞ்சவிருக்கிற
தைலத்தை நானும்.

II
வைக்கப்பட்டிருக்கின்றன
வரவேற்பறையில் மீன்தொட்டியும்
தொலைக்காட்சிப் பெட்டியும்
ஒரு பூங்கொத்தும் தொடர்பின்றி.

III
பெரிய வித்யாசம் எதுவுமில்லை
கழுதைகளை மேய்ப்பதற்கும்
கல்வி கற்பதற்கும் ஆட்சி செய்வதற்கும்.

IV
பெரிய தண்டனை எதுவுமில்லை
சொன்னதைச் செய்யாதிருப்பதற்கும்
சொல்லாததைச் செய்ததற்கும்
சொல்லாமலும் செய்யாமலும் இருப்பதற்கும்.

9 கருத்துகள்:

பத்மா சொன்னது…

எங்கேயும் எப்போதும் என் தேர்வு போலவே உள்ளது

உற்று நோக்குகிறோம்
தீபத்தின் சுடரை நீயும்
திரி உறிஞ்சவிருக்கிற
தைலத்தை நானும்.
ஆக மொத்தத்தில் நம் கண்ணில் விளக்கு :) l

பத்மா சொன்னது…

பெரிய தண்டனை
எதுவுமில்லை
சொன்னதைச்
செய்யாதிருப்பதற்கும்
சொல்லாததைச்
செய்வதற்கும்
சொல்லாமலும்
செய்யாமலும் இருப்பதற்கும்.

இது ரொம்ப நல்லா இருக்கே :))

Madumitha சொன்னது…

துருவங்களை இணைக்கும்
உங்கள் கவிதை.

rajasundararajan சொன்னது…

I, II இவ்விரண்டும் சிறப்பாக இருக்கின்றன.

ஒளியை முன்னிலைக்கும் தைலத்தைத் தன்மைக்கும் வகுத்தது இழப்பின் உணர்வை எழுப்புகிறது.

வரவேற்பறை இடுபொருட்களின் ஒவ்வாமை சுட்டப்பட்டதும் அருமை.

ஆனால் III, IV இவ்விரண்டில் சொல்ல வருவது என்ன?

'வித்தியாசம்எதுவுமில்லை', 'தண்டன எதுவுமில்லை' என்னும் சொல்லடிகள் சமன்படுத்திக் கிடத்துவதால் 'துருவம்' என்னும் தலைப்புக்கு முரண்படக் கூறியாகத் தோன்றுகிறது.

ஹேமா சொன்னது…

கவிதை ஒவ்வொரு பந்தியும் ஒவ்வொரு விஷயம் சொல்கிறது.
ஏன் "துருவம்" என்கிறீர்கள் ?
கடைசிப் பந்தி அனுபவம்.

Anonymous சொன்னது…

ஒளியின் ப்ரகாசமும்
எண்ணையின் வற்றுதலும்
அருமை ஜி.
-யாழி.

Anonymous சொன்னது…

சுடரை ஆராதிக்கும் ஒரு மனதின் அருகாமை நீடிக்கவேண்டுமென்கிற துடிப்பும்,பதட்டமும் அழகாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
-தனலக்ஷ்மி பாஸ்கரன்.

Anonymous சொன்னது…

கவனித்தேன் அவ்விருவரையும் தீபச்சுடரில் தொங்கியபடி.
-கலைவாணி

Anonymous சொன்னது…

தீபமாய் ஒளிர்ந்தது கவிதை.
-மீனாதேவி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...