19.5.10

இசை



I
இசை வழிகாட்டியது
பார்வையற்றவனுக்குப்
பாதையையும்
பாதையற்றவனுக்குப்
பார்வையையும்.

II
வயலினின்
தந்திகள் அதிர்கின்றன
வாழ்வு போல.
இசை மிதக்கிறது
அமைதியாக
மரணம் போல.

III
நிசப்தத்துக்கும்
சப்தத்துக்கும் இடையில்
மிதக்கிறேன் நான்
வாசிக்கப்படாத ஒரு
இசைக்கருவியாக.

IV
மலையடிவாரம்.
இசை வெள்ளம்.
தனிமை.
தாங்கமுடியவில்லை
இப் பொருத்தத்தை.

V
ஏதுமற்றவனின் இசையில்
நிரம்பியிருந்தது
எல்லாம் பெற்றவனின் செருக்கு.
எல்லாம் பெற்றவனின்
இசையில் நிரம்பியிருந்தது
எதுவுமற்றவனின் வறுமை.

20 கருத்துகள்:

இரசிகை சொன்னது…

nallaayirunthathu..yellaame!

vaazhththukkal sundarji:)

சுந்தர்ஜி சொன்னது…

முதல் வாழ்த்துக்கு நன்றி ரசிகை.

நேசமித்ரன் சொன்னது…

நல்ல கவிதை முயற்சி

வாழ்த்துகள்

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி நேசமித்ரன்.முதல் வரவிற்கும்.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

ரொம்ப நல்லா இருந்தது..அதிலும் அந்த கடைசி கவிதை நச்

Madumitha சொன்னது…

இசையோடு
வாழ்கிறீர்கள் சுந்தர்ஜி.

ஜெகநாதன் சொன்னது…

//வயலினின்
தந்திகள் அதிர்கிறது
வாழ்வு போல.
இசை மிதக்கிறது
அமைதியாக
மரணம் போல.//
என்பதைத் தவிர வேறெதிலும் ஒரு அற்புத இசை இல்லை..!
மனதார வாழ்த்துகிறேன்!!!

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஆரண்யநிவாஸ்.ஆர்.ராமமுர்த்தி.
நன்றி மது.இசையற்றுப் போனால் இறந்து விடுவேன்.
நன்றி ஜெகநாதன். உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ஹேமா சொன்னது…

//வயலினின்
தந்திகள் அதிர்கிறது
வாழ்வு போல.
இசை மிதக்கிறது
அமைதியாக
மரணம் போல.//

வாழ்வின் தத்துவமே இந்த வரிகளுக்குள்....இசைக்குள்.
அருமை.

சுந்தர்ஜி சொன்னது…

இசையின் துணையுடன் நன்றி ஹேமா.

Anonymous சொன்னது…

//இசை
வழிகாட்டியது
பார்வையற்றவனுக்குப்
பாதையையும்
பாதையற்றவனுக்குப்
பார்வையையும்.//

//வயலினின்
தந்திகள் அதிர்கிறது
வாழ்வு போல.
இசை மிதக்கிறது
அமைதியாக
மரணம் போல//

இரு கவிதையிலும் கவிதை தந்தது போதனையை.ரஸித்தேன் சுந்தர்ஜி ஸார்.

ப.தியாகு

Anonymous சொன்னது…

//இசை
வழிகாட்டியது
பார்வையற்றவனுக்குப்
பாதையையும்
பாதையற்றவனுக்குப்
பார்வையையும்.//

எனக்கான பாதையையும்.மெல்லக் கலைக்கிறது என் வெறுமையை உங்களின் இசை கவிதை.

//வயலினின்
தந்திகள் அதிர்கிறது
வாழ்வு போல.
இசை மிதக்கிறது
அமைதியாக
மரணம் போல//

மிதக்கும் இசை அரூபம் ஆயினும் உணர்த்தும் அனைத்தையும்.

அருமை ஜி.

யாழி.

Anonymous சொன்னது…

வாழ்வின் போதனையை இசைக்கிறது உங்களின் இசை கவிதைகள்.அனைத்தும் தத்துவம் சேர்ந்த கோர்வையாய் இனித்தது.

வி.விநாயகமூர்த்தி

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி-
தியாகு.
யாழி.
விவிஎம்.

Anonymous சொன்னது…

தந்திகளின் அதிர்வுகள் வாழ்வை அர்த்தப்படுத்தும் சலனங்கள்.அதிர்வுடன் இணைந்த இசை விரவிக்கிடக்கும் நிசப்தத்தின் ஒலியாகி மரணத்தை நினைவூட்டும்.சலனமும் நிசப்தமுமே ஜனனத்தின் உயிர்த்துடிப்போ?வயலின் சொல்கிறது வாழ்வின் தத்துவம்.
தனலக்ஷ்மி பாஸ்கரன்.

Anonymous சொன்னது…

//இசை
வழிகாட்டியது
பார்வையற்றவனுக்குப்
பாதையையும்
பாதையற்றவனுக்குப்
பார்வையையும்.//

கவிதை தருகிறது ருசியறிந்து விழிப்புடன் பாதை கடப்பவனுக்கு வாழ்விலொரு பற்றுதலை.
தனலக்ஷ்மி பாஸ்கரன்.

பத்மா சொன்னது…

நிசப்தத்துக்கும்
இசைக்கும் இடையில்
மிதக்கிறேன் நான்
வாசிக்கப்படாத ஒரு
இசைக்கருவியாக.

எத்தனை ராகங்கள் அதில் உறங்ககூடும் ?
இல்லை மரணித்திருக்கும் ?

Anonymous சொன்னது…

//இசை
வழிகாட்டியது
பார்வையற்றவனுக்குப்
பாதையையும்
பாதையற்றவனுக்குப்
பார்வையையும்.//

இசை வழங்குகிறது எளிமையாய் இருப்பது போல் போக்குக் காட்டி உள்ளாழம் இழுக்கும் வலிமை. பாதை-பார்வை இரண்டே வார்த்தைகளில் இருந்து காட்சி அனுபவமும் வாழ்வின் பொருளும் ப்ரமாதமாய் வெளிப்படும் நளினம்.அதற்காகவே சந்தோஷமான வந்தனங்கள்.
-உஷாராணி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி உஷா இசை போன்ற உங்கள் வரிகளுக்கு.

சைக்கிள் சொன்னது…

வாடாமல்லிப் பூமாலைக்கு வசீகரமில்லை/ தனிப் பூவுக்கோ தாங்க முடியாத அழகு - இந்த கல்யாண்ஜியின் வரிகள் போலவே மலையடிவாரம்/இசை வெள்ளம்/தனிமை/தாங்கமுடியவில்லை/இப் பொருத்தத்தை என்ற வரிகளும் மனதை ஏதோ செய்கிறது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...