12.12.10

காயமே இது பொய்யடா.


இருபத்தி நான்கு பெண்களும் ஒரு பெரியவரும் பேண்ட் சட்டையுடன் செல்லும் ஒரு பையனும் எதை இத்தனை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?

தெரியலைல்ல. கடைசீல சொல்றேன்.

உடனே கடைசிக்குப் போனீங்கன்னா சொர்க்கத்துல உங்களுக்கு இடம் கிடைக்காது. படிச்சுட்டுக் கடைசிக்குப் போங்க.

நம்ம மருத்துவம் பத்தி இந்த இடுகை.

சரி-சரி. கொட்டாவி விட்டுக்கிட்டே விட்டத்தையும் சுற்றுகிற மின்விசிறியின் வண்ணத்தையும் பார்க்க வேண்டாம்.

எத்தனை தடவை நீங்க இந்த 2010ல் நோய்வந்து படுத்திருப்பீங்க? பதில ஒங்களுக்குள்ளேயே சொல்லிக்குங்க.

இதுல வெறும் ஜலதோஷம், இருமல், தலைவலி போன்ற சாதாரண சமாச்சாரங்களுக்கு டாக்டரப் பாக்கப் போனவங்க மட்டும் கை தூக்குங்க.

ஏயப்பா! இத்தன பேரா?

ஏன் எல்லாரும்- குறிப்பா ஆர்வம் இல்லாதவங்களும் கூட லட்சம் லட்சமாக் கொட்டி டாக்டராகத் துடிக்கிறாங்கன்னு இதுலேருந்தே புரிஞ்சுக்கலாம்.

இன்னும் கையக் கீழ போடலியா? உஸ்ஸப்பா. கீழ போடுங்க ஸார்.

பொதுவா எந்த ஒரு வியாதியும் நமக்குத் தெரியாம நம்ம கிட்ட வரவாய்ப்பில்லை.

தலைவலி ஜலதோஷம் இருமல் இப்பிடி எல்லாமே கொஞ்சம் நேத்தைய தினத்தை உத்துப் பாத்தா கண்டுபிடிச்சுடலாம்.

ஒரு ஐஸ்க்ரீம் அல்லது வெயில்ல அலைச்சல்-ஏசி ஓடாத த்யேட்டர்ல அளவுக்கதிகமா விசிலடிச்சது-நல்ல மழைல பீச்சுல மொளகா பஜ்ஜி அல்லது மாங்கா பத்தைய விளாசினது-நண்பன் ஊற்றிக்கொடுத்த ஓசித் தண்ணி-இப்பிடி ஏதோ ஒண்ணு-சிலருக்கு எல்லாமோ-காரணமா இருக்கும்.

இதையெல்லாம் யோசிக்காம நேரே ஓடு டாக்டர் கிட்ட. அதுவும் அவர் காத்து வாங்கற டாக்டரா இருந்தா அவமானம்.

போனாக் கொறஞ்சது மூணு மணிநேரமாவது காத்திருந்து ரிஸப்ஷன்ல சகல விதமான போஸ்களில் வியாதியோடு குழப்பமாக முனகியபடி உட்கார்ந்திருக்கும் எல்லோரையும் வெறுப்பாய் அவ்வப்போது பார்த்துக்கொண்டு கழுத்து சுளுக்கும் உயரத்தில் சொன்னதையே பத்தாவது தடவை சொல்லும் ஏதோ தண்ட ந்யூஸ் சேனலைப் பாத்தபடியே இருக்க நூத்திப்பத்து ஸாரி ஸாரி ”ஹண்ட்ரடன் டென் வாங்க” என்று சவுண்ட் கொடுக்கும்போது என்ன வியாதிக்காய் நாம் வந்தோம் என்பதே மறந்துபோய் லேசாய் சூடா ஏதாவது சாப்பிடலாமா எனத் தோன்றும் போது ”ஏங்க காதுல வுழலை ஹண்ட்ரடன் டென் வாங்கன்னு ஹண்ட்ரடன் டென் டைமாக் கூப்பிடறேன். யாருங்க அது?” என்று மிரட்டியபின் ந்யூஸ் சேனல்-சாப்பிடும் நப்பாசை எல்லாத்தையும் உதறி எழ ”நீங்கதானா? டாக்டரப் பாத்துட்டு அப்பிடியே ஈ.என்.டி. டாக்டரையும் பாருங்க. காது சுத்தமா இந்த வயசுலயே ஔட்டு” என்று ’குண்டூசி கீழ விழுந்தாக் கூட உங்களுக்குக் காதுல விழற அளவுக்கு பாம்புச் செவி’ என்று மனைவி பெருமையோடு மெச்சிக்கொள்ளும் அதே இரண்டு காதுகளிலும் விழும்படி அட்வைஸ் கொடுக்கும் போது தலைவலிக்காக இந்த டாக்டரப் பாக்க வந்ததுக்கு இது தேவைதான் என்று எப்போதோ வலித்த தலையில் ரெண்டு போட்டுக்கொள்வீர்கள்.

அடுத்து கொஞ்சம் சீரியஸா முகத்தை வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்காரே அந்த நீலக் கலர்ல கோடு போட்ட சட்டையும் நிறைய ப்ளீட்ஸ் வெச்ச பேண்டுமா ஓரத்துல.

அவருக்கென்ன வியாதி தெரியுமா?

கிட்னி ஸ்டோன்ங்க.

ஸிட்னி ஷெல்ட்டனும் ஸில்வெஸ்டெர் ஸ்டாலோனும் கலந்தா மாதிரி இருக்கேன்னு நீங்க யோசிக்கலாம்.

சிறுநீரகப் பையில கல்லு.

இதுவும் ஒரு தமிழ்ப் படத்தோட தலைப்பாப் பதிவு பண்ணியிருக்கறதா சேம்பருக்கு அன்னிக்குப் போயிருந்தப்ப பேசிக்கிட்டிருந்தாங்க. சரி விடுங்க.

இது வீடு கட்டும் போது ’ஹை!யார் மண்டைலயும் விழாம எப்பிடி இப்பிடி லாவகமா செங்கல்லத் தூக்கி மேலே வீசறாம் பாரு’ என்று வேலைவெட்டியில்லாமல் கீழ நின்னு வேடிக்கை பாத்துட்டு இருக்கறவங்களுக்கு வர்ற வியாதி மாதிரி ஒரு ஜாடைக்குத் தெரியலாங்க.

ஆனா அப்பிடி ஒரு எண்ணமிருந்தா அதை மாத்திக்குங்க.

இது சுண்ணாம்புச் சத்து அதிகமா இருக்குற உணவு அல்லது நீர் என்று ஏதோ ஒரு வகையில் அளவுக்கதிகமாயோ குறைவாயோ உட்கொள்வதால் வெண்பொங்கலில் மிளகு போல சிறுநீர்ப் பையில் உருவாகி உயிரை உலுக்கும் கற்கள். இதைப் பின்னாடி இன்னொரு தடவை விரிவாவாவாவாப் பாக்கலாம்.

அவர் நெளியும்போது பாக்கக் கஷ்டமாத்தாங்க இருக்கு. ஆனா அவருக்கு கன்ஸல்டேஷன் ஸ்கேன் லேசர் ட்ரீட்மெண்ட் பெட் சார்ஜ் அட்டெண்டெண்ட் சார்ஜ்னு மறுவாரம் பில்ல நீட்டும்போது நெளிவார் பாருங்க அதுக்கு முன்னாடி இது பிஸ்கோத்துங்க.

அடுத்த சீனைப் பாருங்க.

நம்ம நீலக் கலர் சட்டைக்கார ஸ்டோன்மேன் தள்ளாடியபடியே மெடிகல் ஸ்டோர் போய் இருபது மாத்திரை இருபது நாள் நாலு தடவை” னு எழுதின ப்ரிஸ்க்ரிப்ஷனைக் கொடுக்க அவன் ஒரு பெரிய டப்பாவில் ரெண்டு பேராச் சேர்ந்து தூக்கிட்டு வந்து மருந்தக் குடுத்துட்டு ’பாவம் வீட்டுல எல்லாருக்கும் ஒரே நேரத்துல இப்பிடி கிட்னி ஸ்டோன் வந்தா மனுஷன் என்னதான் பண்ணுவான்’ என்கிற உசுப்பேற்றும் வசனத்துக்கும் சேர்த்து துட்டை அழுதுவிட்டு தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு போவதை ரெண்டு கண்ணாலும் பாத்தேன்.

வேடிக்கை போதும். அடுத்தவங்க வலியும் வேதனையும் ஒங்களுக்கு விளையாட்டா இருக்கான்னு தமிழ்நாடு கிட்னிஸ்டோன் அவஸ்தையாளர் சங்கத்து பொதுக்குழு உறுப்பினர்கள் என் வீட்டெதிரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் காவல்துறை அனுமதியோடு நோட்டீஸ் விட்டுவிடக்கூடும் என்கிற ஆபத்தை சடுதியில் உணர்ந்த நான்.......

ரூட்ட மாத்தே.
(தொடரும்)

(மஹாபலிபுரத்தில் இந்த இடுகையை அர்ச்சுனன் தபசு என்கிற பாறையில் ஒட்டி வைத்து சிற்பங்களை ஆர்வமுடன் கவனிக்கிறார்களா இல்லை சுந்தர்ஜியின் இடுகையைப் படிக்கிறார்களா என்று பின்னால் கேமெராவுடன் பதுங்கியிருந்த போது அனைவருமே இடுகையைப் படிப்பது கண்டு அசந்து போய் எடுத்த புகைப்படம். அந்தக் கூட்டத்துக்கு முன்னால் என் இடுகை ஒட்டப்பட்டிருப்பதை அந்தப் பெரியவர் வருவோர் போவோருக்கெல்லாம் விளக்கும் காட்சி. )

22 கருத்துகள்:

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கம்..

ரிஷபன் சொன்னது…

//கிட்னி ஸ்டோன்ங்க. ஸிட்னி ஷெல்ட்டனும் ஸில்வெஸ்டெர் ஸ்டாலோனும் கலந்தா மாதிரி இருக்கேன்னு நீங்க யோசிக்கலாம்.//

ஹா..ஹா.. இப்படி கூட யோசிக்கலாமா?!

பாரத்... பாரதி... சொன்னது…

இந்த வருடம் நோய் வாய்ப்பட்ட நாட்கள் அதிகம் தான்.
இனி நிறைய விஷ்யங்களில் கவனமாய் இருக்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டிய நிலை தான்.
யோசித்த வைத்த உங்கள் பதிவுக்கு நன்றி..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

படிச்சா பயமா இருக்கே!
அதான் சும்மா தலைவலிக்கு டாக்டர்ட்ட போனா,அவர் சொல்ற முதல் வார்த்தையே ‘உசிருக்கு ஆபத்தில்லை’
இப்பல்ல புரியுது?

dineshkumar சொன்னது…

சார் நான் என்ன சார் செய்வேன் ஒன்னுமே புரியல உலகத்துலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது .........

philosophy prabhakaran சொன்னது…

// மஹாபலிபுரத்தில் இந்த இடுகையை அர்ச்சுனன் தபசு என்கிற பாறையில் ஒட்டி வைத்து சிற்பங்களை ஆர்வமுடன் கவனிக்கிறார்களா இல்லை சுந்தர்ஜியின் இடுகையைப் படிக்கிறார்களா என்று பின்னால் கேமெராவுடன் பதுங்கியிருந்த போது அனைவருமே இடுகையைப் படிப்பது கண்டு அசந்து போய் எடுத்த புகைப்படம். அந்த்க் கூட்டத்துக்கு முன்னால் என் இடுகை ஒட்டப்பட்டிருப்பதை அந்தப் பெரியவர் வருவோர் போவோருக்கெல்லாம் விளக்கும் காட்சி //

இதெல்லாம் ரொம்ப ஓவர்...

நிலாமகள் சொன்னது…

// மஹாபலிபுரத்தில் இந்த இடுகையை அர்ச்சுனன் தபசு என்கிற பாறையில் ஒட்டி வைத்து சிற்பங்களை ஆர்வமுடன் கவனிக்கிறார்களா இல்லை சுந்தர்ஜியின் இடுகையைப் படிக்கிறார்களா என்று பின்னால் கேமெராவுடன் பதுங்கியிருந்த போது அனைவருமே இடுகையைப் படிப்பது கண்டு அசந்து போய் எடுத்த புகைப்படம். அந்த்க் கூட்டத்துக்கு முன்னால் என் இடுகை ஒட்டப்பட்டிருப்பதை அந்தப் பெரியவர் வருவோர் போவோருக்கெல்லாம் விளக்கும் காட்சி //

இந்தக் கதை நல்லாயிருக்கே...!

காமராஜ் சொன்னது…

என்னங்க இது ஒரே ஒரு இடுகையில,மருத்துவம்,கட்டணம் இல்லாத சிரிப்பு மருத்துவம் அப்புறம் சுந்தர்ஜீக்கு விளம்பரம்.அதென்ன கிட்னி ஸ்டோ னும்,சில்வஸ்டர் ஸ்டெலனும் சிட்னி ஷெல்டனும்.முடியல சுந்தர்.சீரியசாப்படிக்கவா.இல்ல சிரிக்கவா முதல்ல்யே சொல்லிருங்க. அருமை அருமை அருமை சுந்தர்ஜீ.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி..நான் நல்ல சுகம்.
நீங்களும் சுகம்தானே !

சிவகுமாரன் சொன்னது…

என்னது இடுகையை ஒட்டி வச்சீங்களா ? போஸ்ட்டர் கலாச்சாரம் உங்களையும் விட்டு வைக்கலையா ?
ரொம்பவே ஓவருண்ணா.
ஜாலி யா ஆரம்பிச்சு பீதியை கிளப்பிவிட்டுட்டீங்க

kashyapan சொன்னது…

சுந்தர்ஜி! நீங்கள் "மரணத்தின் நிழல்" தெரியாத ஆடுகளை மேய்த்ததைப் பார்த்து பிரமித்தேன். குன்றக்குடி அடிகளார்(மூத்தவர்) "இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே" என்று எழுதிய பட்டுக்கோட்டையை பாராட்டுவார். அதே தரத்தில் மேய்ப்பன் இருந்தது.உங்கள் இடுகைகள் பல்சுவை கொண்டதாக ( Veriety) உள்ளன. வாழ்த்துக்கள்---காஸ்யபன்

சுந்தர்ஜி சொன்னது…

பாரத் பாரதி வணக்கமுங்க.

2011ல நோய் எதுவுமே உங்களுக்கு வரக்கூடாது ப்ரார்த்தனை பண்ணிக்கிட்டேங்க.

ஆனாலும் இந்த மாதிரிக் கடிகள்லேருந்து நீங்க வழியில்லன்னு சாமியே சொல்லுதுங்க.

சுந்தர்ஜி சொன்னது…

எனக்குப் புடிச்சது ஒங்களுக்கும் புடிக்குது.இது ஒருவேள தொத்துவியாதியா இருக்குமோ?

ஒரு ஆண்டிபயாடிக் போட்டுக்கோங்க ரிஷபன் எதுக்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்க அனுபவம் எங்களுக்கு மருந்து ராமமூர்த்தி சார். நன்றி.

இனிமே பயமுறுத்துற எடங்களுக்கெல்லாம் தனியாப் போகாதீங்க.நானும் கூட வரேன்.

(பயமே அதுதான்ங்கறீங்களா?)

சுந்தர்ஜி சொன்னது…

என்ன ஆச்சு தினேஷ்?

சந்திரபாபு பாட்டப் பாடறீங்க இடுகையைப் படிச்சோமா கமெண்ட் குடுத்தமான்னு இல்லாம?

ஒடனே ஒரு டாக்டரப் பாருங்க.

சுந்தர்ஜி சொன்னது…

யாரும் நம்ப மாட்டேங்கறாங்கப்பா? உண்மையை எழுதுனா ஓவர்னு இந்தப் ஃபிலாஸபி ப்ரபாகர் குரல் கொடுக்கறாரு.

நல்லா உத்துப் பாத்தீங்கன்னா என்னோட இடுகையோட நுனி தெரியுங்ணா.

சுந்தர்ஜி சொன்னது…

விருந்தே உங்கள மாதிரி ருசி அறிஞ்சவங்கள நம்பித்தான் தயாராகுது.

நல்லாயிருந்தாதாங்க ஏன் மனசு ரொம்பும் நிலாமகள்.

சுந்தர்ஜி சொன்னது…

சிரிச்சுக்கிட்டே சீரியஸாப் படிங்க காமராஜ்.

எழுதும்போதே சிரிச்சுக்கிட்டேதான் நானும் சீரியஸா எழுதினேன்.

அது மாதிரிதான்.

சுந்தர்ஜி சொன்னது…

என்ன ஹேமா மருத்துவக் கட்டுரைன்னதும் நலம் பாராட்டிட்டுப் போய்ட்டீங்க?

ஒங்க ஆழம் தெரியும்ங்கறதால இதுல எதும் உள்க்குத்து இருக்குமோன்னு பயமா இருக்குங்க.

மத்தபடி நான் நலமாத்தான் இருக்கேன்.

சுந்தர்ஜி சொன்னது…

தொட்டதுக்கெல்லாம் இப்படி பயந்தா எப்படி சிவா?

நம்ம எழுத்தையெல்லாம் வாசிக்கறது ஒரு பத்து பதினைஞ்சு பேர்தான்னு நமக்குத் தெரியாதா சிவா?

அந்த போட்டோவுல இருக்கற கூட்டம் அளவுக்குக் கூட நம்ம எழுத்தப் படிக்கறது கிடையாது.

சாப்ளின் மாதிரி ரோவன் அட்கின்ஸன் மாதிரி நம்மள நாமளே காமெடி பண்ணிக்கும் போது நாலு பேர் மனம்விட்டுச் சிரிக்க வச்சோம்னு ஒரு சந்தோஷம் தான்.

இந்தச் சிரிப்புக்குப் பின்னாலும் எத்தனை சோகம் பாத்தீங்களா சிவா?

சுந்தர்ஜி சொன்னது…

வாங்க வாங்க காஸ்யபன் ஸார்.

ஒரு வழியா அட்ரஸ் தேடிக் கண்டுபிடிச்சு வந்துட்டீங்க.

எனக்கு எத்தனை பெருமையா இருக்கு தெரியுமா?

அங்கேயும் இங்கேயும் ஓடறேன் பரபரப்புல.

மேய்ப்பன் கவிதையை நீங்க ரசித்தது ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறுங்கற அளவுல எனக்கு சந்தோஷம்தான்.

இருந்தாலும் என்னோட எல்லா எழுத்துக்களையும் நீங்க படிச்சு விமர்சிக்கணும்ங்கறது என்னோட பேராசை.

செய்வீங்களா?

கிருஷ்ணப்ரியா சொன்னது…

அட... இந்த மகாபலிபுரத்துக் கதை ஸ்டோன் கதையை விட சூப்பரா இருக்கே..

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...