6.2.11

விடையின் புதிர்


ஒரு நூல்க்கண்டின் துவக்கமா முடிவா?
ஒரு மரத்தின் அடிவேரா?
வீழும் இலையா? வாழும் கிளையா?
இசைக்கு முந்தைய பேரமைதியா-
பிந்தைய பெருங்கிளர்ச்சியா?
சொல்லைக் கடந்த வலியா-
சொல்லைத் தவிர்த்த நிலையா?
பசிக்கு முந்தைய உணவா-
நிறைவுக்குப் பிந்தைய பசியா?
சுண்டிய நாணயத்தின்
மேற்புறமா கீழ்புறமா?
மூடிய கதவின்
உட்புறமா வெளிப்புறமா?
நிறைவின் மேல் சிறு துளியா-
குறைவின் மேல் ஒரு கடலா?
இலையசைக்கும் காற்றா-
காற்றசைக்கும் இலையா?
நதி நடக்கும் மணலா-
மணல் சுமக்கும் நதியா?
வான் துறந்த துளியா-
துளி சுவைத்த மண்ணா?
உறங்குகையில் கனவா-
கனவினுள் விழிப்பா?
வண்டு உண்ட கனியா-
கனி உண்ட வண்டா?
கரை தொடும் அலையா-
கடல் திரும்பும் நுரையா?
துவங்காத இவ்வரியா-
முடிவில்லா அதன் பொருளா?

31 கருத்துகள்:

Gowripriya சொன்னது…

மிக அருமை.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடடா சூப்பர்..........

RVS சொன்னது…

பிறப்பின் விதியா? விதியின் பிறப்பா?
தூள் ..தூள்..... அட்டகாசம் சுந்தர்ஜி. திரும்ப திரும்ப படிக்கிறேன். இன்னொருமுறை படிக்கறேன்..

மோகன்ஜி சொன்னது…

கேள்வியின் நாயகனே! உம் கேள்விக்கு பதிலேதையா? கேட்டுக் கொண்டே இருப்போம் ஒரு நாள் விடை கிடைக்கும்.. நம் பேரப்
பிள்ளைகளுக்கேனும்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கேள்விகளாக கேட்டு விட்டீர்களே ....
கேள்விகேட்க முடியாது உங்களை என்பதாலா?

தலைப்புக்கேற்ற படைப்புத்தான்.
வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி....திரும்பத் திரும்ப 3 முறை வாசித்துவிட்டேன்.
புரிகிறதுபோல கடைசி வரிவரை வந்துவிட்டுக் கண் திரும்பவும் முதல் வரிக்குத் தாவுகிறது.இது ஏன் ?

G.M Balasubramaniam சொன்னது…

YOU HAVE THOUGHT AND ASKED QUESTIONS. NOW IT IS FOR US READERS TO FIND ANSWERS. GOOD SHOW.

Matangi Mawley சொன்னது…

What thoughts, sir!

"கனவினுள் விழிப்பா?"
"குறைவின் மேல்
ஒரு கடலா?"
"மணல் சுமக்கும் நதியா?"

Just brilliant!

but sometimes, i feel some questions are best left unanswered. for sometimes, answers hide away the beauty of questions... though a human claims to be troubled by questions and seeks answers to them- he secretly enjoys the questions; just like a Gopika enjoys being troubled by Krishna. May be it is his love to seek the answers is what indulging him to continue his quest- to live!

your words leave behind a sea of thoughts... brilliant!

ramanaa சொன்னது…

எழுதாத வரியா
எழுத நீ வரியா?
சொல்லாத சுவையா
சொல்லி நீ தரியா?
சூப்பர் அப்பா.

Ramani சொன்னது…

எப்படித்தான் முயன்றபோதும்
புரியாதே இருக்கும் புதிர்களை
கற்பனையோ கவிதையோ அல்லது
கேள்விகளோ அன்றி
வேறு எதுதான் நெருங்கிச் செல்ல இயலும்?
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

புரியாத புதிர்! விடைகளைத் தேடிக் கொண்டு இருக்கிறோம் எல்லோருமே!

ரிஷபன் சொன்னது…

அது எப்படி உங்களுக்கு மட்டும் வார்த்தைகள் கொட்டுகின்றன.. அடை மழையாய்..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஓட்டைப்பானை என்ன ஆனது?
போட்டு நீங்களே உடைத்து விட்டீர்களா?

சிவகுமாரன் சொன்னது…

மல்லிகையின் மணமா
மயங்குகின்ற மனமா
சுந்தர்ஜியின் கவியா
சொக்க வைக்கும் தமிழா
ரமணாவின் குறும்பா
கலக்குது அவனின் குறும்-பா

சுந்தர்ஜி சொன்னது…

மிக்க நன்றி கௌரிப்ரியா.

santhanakrishnan சொன்னது…

சுந்தர்ஜி எழுதிய கவிதையா?
கவிதை எழுதிய சுந்தர்ஜியா?

சுந்தர்ஜி சொன்னது…

என்ன ஒரு ரசனையின் ஆலாபனை!நன்றி மனோ.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களோட ஆத்மார்த்தமான வார்த்தைகளுக்கு நன்றி ஆர்விஎஸ்.

கண்ணாடியின் பவர் மாத்தக் குடுத்ததால் வாசிக்க கொஞ்சம் விட்டுப்போச்சு.இந்த வாரம் வாசிக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

மோஹன்ஜி!உங்க ரசனையின் ஆழம்தான் என் கேளிவியின் விடையும்.

ஒரு சகோதரனின் வார்த்தைகளாய் உணர்ந்தேன் மோஹன்ஜி.

நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

கேள்விகளுக்கு எப்போவுமே விடைகள் கிடையாதுதானே கோபு சார்.

கிடைச்சாலும் அது தற்காலிகம்தான் அடுத்த கேள்வி வரை.

சுந்தர்ஜி சொன்னது…

அப்படியா ஹேமா?

சுந்தர்ஜியின் கவிதையை இன்னொரு தடவை படிக்க ஆசைப்படுகிறது உங்களின் கண்.

படிச்சுட்டு போகட்டும்.விடுங்களேன் ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

அருமை பாலு சார்.

எனக்குத் தெரிந்ததாய் நினைத்துக் கொள்ளும் பல விஷயங்களுக்கும் முற்றுப் புள்ளிக்கப்பால் ஒரு கேள்வி மறைந்திருப்பதைக் காண்கிறேன் பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

நீங்க தமிழ்ல யோசிப்பீங்களோ இல்லையோ ஆனா உங்க இங்க்லீஷைப் பார்த்தா பொறாமையா இருக்கு மாதங்கி.

என்ன அழகா சொல்லிட்டீங்க கேள்வியின் வசீகரத்தை?

கோபிகை க்ருஷ்ணனோட தொந்தரவை விரும்பற மாதிரி ஒரு விடை கேள்விக்காகக் காத்திருக்கிறதை.

சுந்தர்ஜி சொன்னது…

கேள்விகளைப் புரிந்த அழகான பின்னூட்டம் ரமணி சார்.

சுந்தர்ஜி சொன்னது…

போற போக்கைப் பாத்தா நான் கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கறது நல்லதுன்னு தோணுது ரமணா.கலக்கிட்ட.

ஹரணி வேற ஓரமா ஒக்காந்து ஒங்க பசங்க எழுதறத ஆனந்தமா அனுபவிங்கனு சொல்லிட்டாரு.

சுந்தர்ஜி சொன்னது…

விடைகளைத் தேடி முடிக்கையில் புறப்படும் அடுத்த புதிர்தான் வாழ்வின் சுவாரஸ்யமே வெங்கட்.இல்லையா?

சுந்தர்ஜி சொன்னது…

இதானே வேணாங்கறது ரிஷபன்?உங்களுக்குத் தெரியாத மாதிரி கேக்கறீங்களே?

சுந்தர்ஜி சொன்னது…

ஆமாம்.கோபு சார்.

பிடிக்கவில்லை.போட்டு உடைத்துவிட்டேன்.மறுபடியும் முனைவேன்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் வார்த்தையையும் சேர்த்து எல்லாமும்தான் சிவா.

புபேஷ் சொன்னது…

good good

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி புபேஷ்.

உங்களின் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி புபேஷ்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...