27.2.11

கூடு



I
செத்து விடாது வாழ்பவனுக்கும்-
சாகும்வரை வாழ்பவனுக்கும்-
செத்த பின்னும் வாழ்பவனுக்கும்-
நடுவில் நுரைக்கிறது
மரணமில்லாப் பெருவாழ்வு.

II

கூடற்ற பறவைகளின்
எச்சத்தில் எப்போதும்
காத்திருக்கிறது ஒரு வனம்.
வளர்ந்த பின்
வெட்டிவீழ்த்த
எப்போதும் ஓங்கியிருக்கிறது
ஒரு கோடரி.

25 கருத்துகள்:

பத்மா சொன்னது…

சுந்தர்ஜி ஸ்டைல் கவிதைகள் ...
எச்சத்தில் காத்திருக்கும் வனம் என்ன ஒரு எதிர்பார்ப்பைத் தருகிறது !
கோடரியை நினைக்காமல் நான் வனத்தோடு ஒன்றி விட்டேன் ...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

This post has been removed by the author.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//"கூடு” விட்டு ஆவிதான் போன பின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணத்தை//

என்று சிறுவயதில் படித்த ஞாபகம் வந்தது.

”செத்த பின்னும் வாழ்பவன்”
(புகழ்) அருமையான வரி தான்.

மரமிருக்கும் வரை கோடாரியும், கோடாரி இருக்கும் வரை மரமும் ஓயப்போவதில்லை.

பதிவுக்குப் பாராட்டுகள்.

வினோ சொன்னது…

ரெண்டவதில், முதல் பாதி தேவை, கடைச பாதி உண்மை... :) நன்றி

Gowripriya சொன்னது…

இரண்டாவது கவிதையில் ஒளிந்திருக்கும் வனம் மிக அருமை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மரணமில்லாப் பெருவாழ்வு
நடுவில் நுரைக்கும் எச்சம்!1

ஹ ர ணி சொன்னது…

சுந்தர்ஜி...

வேகம் காட்டுகிறீர்கள் என நினைக்கிறேன். கவிதைக்கான உச்சத்திற்கு வந்துவிட்டீர்கள்..மனது தவிக்கிறது. உயர்ந்ததன் ஆன்மாவை நெருங்கிக்கொண்டிருக்கின்றன உங்கள் கவிதைகள். ஆனாலும் அவற்றின் வெளிச்சுவர் வண்ணங்களிலேயே நின்றுவிடுகிறீர்களோ எனப் பதைக்கிறேன். கொஞ்சம் நிதானியுங்களேன்...இன்னும் அந்த அதிர்வலைகளுக்காகக் காத்திருக்கிறேன். எனக்கு உணரமுடிகிறது. ஆனால் சொற்களில் உங்களுக்கு உணர்த்தமுடியாமல் நிற்கிறேன். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் அதை நான் தேடி ஏமாற்றமுற்று நிற்கிறேன். இது என்னுடைய கருத்து. இன்னும் நிதானம் காத்து பதிவிடுங்களேன். நன்றி.

ரிஷபன் சொன்னது…

வார்த்தைகளின் வனத்தில் காத்திருக்கிறது எப்போதும் உங்களுக்கான கவிதை விதைகள்..

சுந்தர்ஜி சொன்னது…

ஹரணி!ஆதங்கத்துக்கும் அன்புக்கும் நடுவில் உங்கள் வார்த்தைகள்.

எனக்கும் புரிகிறது.சில நேரங்களில் என் கருத்துக்களை வடிவம் தீர்மானித்துவிடுகிறது.

நானும் அதன் போக்கில் போய்விடுகிறேன்.சரி செய்து கொள்கிறேன் ஹரணி.

எழுதுவதில் கொஞ்சம் வேகப்படத்தான் செய்கிறேன்.நாளைக்கு இருக்கமாட்டேன் என்பது போல.

இதைச் சொல்ல வேற யாரிருக்கா?

ஹேமா சொன்னது…

செத்துவிடாது வாழ்பவன்....
சாகும்வரை வாழ்பவன் இரண்டு வகை வாழ்க்கையைப் பிரிச்சு அருமையாச் சொல்லியிருக்கீங்க சுந்தர்ஜி !

G.M Balasubramaniam சொன்னது…

நான் முன்பே ஒரு முறை கூறியதுபோல் YOU HAVE TO LEARN TO UNLEARN SOMETHING WHICH YOU FEEL YOU HAVE ALREADY LEARNT, TO LEARN SOMETHING NEW. வாழ்க்கையை நாம் அதன் போக்கில்தான் வாழ்ந்துதெரியாதவைகளுக்கும் விடை காண முயல வேண்டும். அவசரமேதுமில்லை,சுந்த்ர்ஜி.

ஹ ர ணி சொன்னது…

நான் உணர்ந்ததைச் சொல்கிறேன். யாரும் நெருங்கமுடியாத தளத்தில் உங்கள் கவிதைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நாளைக்கு இருக்கமாட்டேன் என்கிற வேகத்தைக் கொண்டவையல்ல உங்கள் கவிதைகள். அவை ஜீவன். இன்னும் உயர்ந்த ஒன்றை உங்கள் கவிதைகளின் வழி நான் இழந்துகொண்டிருக்கிறேன் அனுபவிக்க என்பதுதான் என்னுடைய ஆதங்கம். அன்பு வேண்டுகோள். கல்யாண்ஜி கவிதைகளில் அந்த சுகத்தை அனுபவிக்கிறேன். தஞ்சாவூர் கவிராயர் கவிதைகள் எளிமை எனும் நிலையில் உயிர்த்துடிப்புள்ளவை. உங்கள் கவிதைகள் எளிமையும் ஆன்மாவின் வேரையும் இயைபுபடுத்துகின்றன. அவை கவிதை எப்படிப் பயணிக்கவேண்டும் வாழ்வில் என்பதை வெகு அருமையாக அடையாளப்படுத்துகின்றன. அவை ஜீவன். பாரதி சொன்னதுபோல அந்த ஜீவனின் மெல்லிய அதிர்வுகளை உள்வாங்க ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான். நிச்சயம் உங்களிடமிருந்து வரும். வந்தே தீரும்.

சிவகுமாரன் சொன்னது…

மரணமிலாப் பெருவாழ்வு
சுந்தர்ஜியின் ]
கவிதைகளுக்கு

கோடரிக்கான
கைப்பிடி தர
வளரும் வனம்.

Nagasubramanian சொன்னது…

கோடரி, எச்சம், வனம் - அருமையான கற்பனை.

சுந்தர்ஜி சொன்னது…

ஆழ்ந்த பார்வைக்கு நன்றி வினோ.

சுந்தர்ஜி சொன்னது…

அருமையான பாடலை நினைவுபடுத்திய கோபு சாருக்கு ஒரு ஓ.

சுந்தர்ஜி சொன்னது…

என்ன பத்மா ரொம்ப நாளாச்சு? நலந்தானா?

இந்த ரசனைதான் உங்க ஸ்பெஷல்.

சுந்தர்ஜி சொன்னது…

வனத்தை ஒளித்துத்தான் வைக்கவேண்டியிருக்கிறது கௌரிப்ரியா இந்தக் கோடரிகளிடமிருந்து தப்பிக்க.

சுந்தர்ஜி சொன்னது…

பக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் ரிஷபன்.

சுந்தர்ஜி சொன்னது…

அருமை ராஜராஜேஸ்வரி.

சுந்தர்ஜி சொன்னது…

நானும் மிகவும் ரசித்த வரிகள் இவை ஹேமா.

ஒத்த ரசனைக்கு நன்றி தோழி.

சுந்தர்ஜி சொன்னது…

தினமும் கற்கிறேன் பாலு சார் கற்றவைகளைத் துறக்கவும் அல்லாதவைகளைக் கற்கும் கற்றலைக் கற்கவும்.

எழுதித் தான் ஆக வேண்டும்.இருபது ஆண்டுகள் எழுதாமல் இருந்துவிட்டேன்.

ஈடுகட்ட வேண்டும்.

சுந்தர்ஜி சொன்னது…

என் கவிதைகள் குறித்த உங்கள் உயர்வான பார்வை என்னைச் சிரம் தாழ்த்துகின்றன ஹரணி.

வடிவத்தில் சோதனை செய்து பார்த்தேன்.பயப்படாதீர்கள்.எது என் பலமோ அதை விட்டுச் செல்ல மாட்டேன்.

சுந்தர்ஜி சொன்னது…

//கோடரிக்கான
கைப்பிடி தர
வளரும் வனம்.//

க்ளாஸ் சிவா.

சுந்தர்ஜி சொன்னது…

தொடர்வாசிப்பு என்னை மிகவும் ஊக்குவிக்கிறது நாக்ஸ்.

நன்றி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...