25.2.11

சங்கிலி



I
ஊரும் எறும்பு
கொண்டு செல்கிறது
என் கவிதையின் முதல் வரியை.
துடிக்கும் பல்லிவால் சுமக்கிறது
இறுதி வரியை.
அலைகிறது ஆன்மா
கவிதையின் வரிகளில்.

II
வார்த்தைகளைத்
தின்கிறது பேரிரைச்சல்.
பேரிரைச்சலைத் தின்கிறது மௌனம்.
மௌனத்தைத் தின்கின்றன
வார்த்தைகள் நிரந்தரமாய்.

19 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துத் தின்கிறது உங்கள் வார்த்தைகள்
நான்
கவிதைச் செருக்கால்
கட்டிய கோட்டையை.

ஹ ர ணி சொன்னது…

நன்றாக இருக்கிறது சுந்தர்ஜி.

G.M Balasubramaniam சொன்னது…

நன்றாகவே தெரிகிறது நீங்கள் வார்த்தைகளைக் கையாளும் பாணியில் உங்கள் முதிர்ச்சி. படிக்கும்போது உங்கள் கற்பனை கண்டு மகிழ்கிறது மனம். வாழ்க நீ வளமுடன் சுந்தர்ஜி.

வினோ சொன்னது…

அண்ணா, ரெண்டாவது ஒன்றி போகிறது....

இளங்கோ சொன்னது…

//மௌனத்தைத் தின்கின்றன
வார்த்தைகள் நிரந்தரமாய்.//
Nice one

raji சொன்னது…

excellent sir

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஊரும் எறும்புக்கும் துடிக்கும் பல்லி வாலுக்கும் இடையே கவிதையின் வரிகளில் கலங்கிப்போய் மெளனமாய் நானும்.

என் மெளனத்தை நிரந்தரமாய் தின்னும் உங்கள் வார்த்தைப் பிரயோகங்களுக்குத் தலைவணங்குகிறேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

Very Nice. I don't have any words to say how much i liked these two.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹரணி.

பயணம் நிறைந்ததா? காத்திருக்கிறேன் உங்கள் பதிவுகளுக்காய்.

சுந்தர்ஜி சொன்னது…

பாராட்டுக்கு நன்றி பாலு சார்.எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி இளங்கோ.

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.

அடிக்கடி வாங்க.

சுந்தர்ஜி சொன்னது…

ஓக்கே. ஒன்றிவிடுங்கள் வினோ. பெர்மிஷன் க்ராண்டட்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் பாராட்டு வசிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷி போல கோபு சார்.

நன்றிகள் பல.

சுந்தர்ஜி சொன்னது…

வாங்க ராஜி.

முதல் தடவை வந்ததுக்கு நன்றி.தொடர்ந்து வாங்க.

சுந்தர்ஜி சொன்னது…

திறந்த மனதுடன் பாராட்டியமைக்கு என்ன கைம்மாறு செய்ய?

தொடர்ந்து வரும் வாசிக்கும் வெங்கட்டுக்கு ஒரு ஓ போடுகிறேன்.

நிலாமகள் சொன்னது…

துளி நீரிலும் பிரதிபலிக்க சாத்தியப்படும் உலகாய் தங்கள் 'நறுக்' கவிதைகள்!

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி நிலாமகள் நறுக் விமர்சனத்துக்கு.

Gowripriya சொன்னது…

இரண்டும் பிடித்திருக்கிறது..
இரண்டாவது கொஞ்சம் அதிகமாய்

சுந்தர்ஜி சொன்னது…

இரண்டின் மற்றும் இரண்டாவதின் சார்பில் நன்றி கௌரிப்ரியா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...