10.2.11

வருந்துகிறேன்.


பெப்ருவரி 4ம் தேதி நான் எழுதிய ”சக்ரவாகம்” இடுகை குறித்து இந்த வருத்தம்.

இந்த மாதம் நாலாம் தேதி என் அக்காவின் மகள் “அங்கிள்!இந்தப் பாட்டை உங்களுக்கு ப்ளூடூத்தில் அனுப்பட்டுமா? என்று எனக்குப் பிடிக்காத பாடல்களாகக் கேட்டுக் கொண்டே வரும்போது நடுவில் என் உயிர் குடித்த சக்ரவாக ராகத்தில் அமைந்த ”என்ன குறையோ” வையும் கேட்டாள். உடனே என் எல்லா வேலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டுத் தொடர்ச்சியாக கண்களில் நீர் வடிய அரைமணி நேரம் இந்தப் பாடலில் குளித்துவிட்டு இடுகை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

எனக்கு அந்தப் பாட்டின் சினிமா என்னவென்று அவள் மூலம் தெரிந்துகொண்டேன்.அவளுக்குப் பாடகர்கள் பற்றியெல்லாம் அவ்வளவாக ஆர்வம் கிடையாதது எனக்கு பாதகமாகப் போய்விட்டது.

தடாலடியாக நானே பாம்பேஜெயஸ்ரீக்கு இந்தப் பாடலுக்கான மகுடத்தைச் சூட்டிவிட்டேன். இந்தப் பிசகுக்கு சுதாதான் பொறுப்பேற்கவேண்டும். என்னை போதையேற்றி உன்மத்தனாக்கி இப்படி ஒரு தவறைச் செய்ய அவர் என்றறியாத அறியவிடாது துரத்திய அவர் குரல்தானே காரணம்.
இதை சுதாரகுநாதன் பாடினார் என்பதையே ரேடியோஸ்பதியின் தளத்திற்கு வாசனின் பரிந்துரையில் போய்ப்பார்த்தபின்புதான் தெரிந்துகொண்டேன்.

ரேடியோஸ்பதி எனக்கும் மிக முன்னாடியே இந்தப்பாடலைப் பற்றியெழுதி இருப்பதும் இதைத் தொடர்ந்து இன்னும் பல தளங்களில் இந்தப் பாடலைப் பற்றிச் சிலாகித்திருந்ததையும் இன்றுதான் படித்தேன்.கொஞ்சம் கூச்சமாயும் இருந்தது. என் தொழிலின் சுவர்களுக்குள் நானிருப்பதாலும் தொலைக்காட்சி- வானொலி போன்ற தொடர்புகளை இழந்திருப்பதாலும் இந்த மாதிரி சூழ்நிலைகளில் தனியனாய் ஒரு தீவில் இருப்பதாய் உணர்கிறேன். ஆனாலும் இப்படி இருப்பதை விரும்புவதால் இது மாதிரிக் கால் சறுக்குவதையும் ஏற்றுக்கொள்ள நேருடுகிறது.

இந்த இடுகையைப் படித்த ஆர்.ஆர்.ஆர். மற்றும் வாசன் உள்ளிட்ட நண்பர்கள் நாசூக்காய் என்னை விட்டுவிட்டார்கள் என எடுத்துக்கொள்கிறேன்.

உங்கள் எல்லோரின் முன்னிலையிலும் என் இடுகையிலுள்ள தகவலையும் மாற்றிவிடுகிறேன்.

மிகப் பெரிய சுகானுபவத்தை எனக்குத் தந்த சுதாரகுநாதனின் குரலுக்கு
என் அன்பும் பாதங்களுக்கு என் மன்னிப்பும்.

ஆனாலும் இன்னும் சுதாவின் குரலில் பாம்பே ஜெயஸ்ரீயைத் தேடுகிறது என் ரசனை. இதை என்ன சொல்ல?

18 கருத்துகள்:

RVS சொன்னது…

அனல் மேலே பனித்துளி என்ற வாரணம் ஆயிரம் பாடல் கூட சுதாவுடையுதுதான். அதைக்கூட நான் பா.ஜெயஸ்ரீ என்று நினைத்தேன். இப்போதிருக்கும் ரெக்கார்டிங் தொழில்நுட்பம் யார் குரலையும் யாரரோ போல கேட்க வைக்கும். வருந்தவேண்டாம் ஜி! ரீஜாயிண்டர் போட்டதே உங்கள் பெருந்தன்மையை பறைசாற்றுகிறது. ;-)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

:)))))

கே.ஜே.யேசுதாஸ் மற்றும் பி. ஜெயச்சந்திரன் பாடிய பல பாடல்களில் இந்தக் குழப்பம் நேர்வதுண்டு. யேசுதாஸ் அவர்கள் பாடியதாய் நினைத்து சிலாகித்துக் கொண்டு இருப்பேன், பார்த்தால் அந்த பாடல் ஜெயச்சந்திரன் அவர்களால் பாடப்பெற்றதாக இருக்கும்!

வெங்கட் நாகராஜ்
http://rasithapaadal.blogspot.com/2011/02/blog-post_10.html

Matangi Mawley சொன்னது…

sir, first of all- :)

ponaa pogattum-nu vidaama, credit yaarukku poganumo avangalukku pogala-nnu neenga varuththa pattu intha post pottathe, shows your caliber.

hats off to you for writing this post!

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

//அனல் மேலே பனித்துளி என்ற வாரணம் ஆயிரம் பாடல் கூட சுதாவுடையுதுதான், அதைக்கூட நான் பா.ஜெயஸ்ரீ என்று நினைத்தேன்//
இதுவரைக்கும் நானும் இப்படிதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

"தவறுகளை ஏற்றுக்கொள்ள பழகுவோம்,மீண்டும் அதனை செய்யாமலிருக்க"

ஹேமா சொன்னது…

இது ரசனைத் தடுமாற்றம் சுந்தர்ஜி !

G.M Balasubramaniam சொன்னது…

TO ERR IS HUMAN, SUNDARJI.யானைக்கும் அடி சருக்கலாம், அல்லவா..

சுந்தர்ஜி சொன்னது…

என்ன ஒரு பாட்டு அது ஆர்விஎஸ்? உங்களோட ஒவ்வோரு இடுகைக்குப் பின்னாலயும் எத்தனை உழைப்பு இருக்கு? படிக்க சப்புக்கொட்டிக்கிட்டு சூப்பர் சூப்பர்னு சொல்லிட்டு பேரப்போயி நேத்தி எஸ்விஎஸ்னு எழுதினா மாதிரிதான். இதுல பெருந்தன்மைங்கிறத விட குற்ற உணர்ச்சி நீங்கின் நிம்மதி பெருசாப் படறது எனக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

அது சரிதான் வெங்கட். ஆனாலும் கூட சரியாப் படிக்காம நானா யூகிச்சு அவசரப்பட்டு எழுதினது சரியாப் படல.அதான் வாசன் எழுதின உடனேயே கணக்கைச் சரிபண்ணத் தோணிடுச்சு.

ரசித்தபாடலுக்கு வரணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன்.கரைஞ்சு ஓடுதே நேரம் வெங்கட்?

சுந்தர்ஜி சொன்னது…

அப்படில்லாம் இல்லைம்மா.

சின்னதுலருந்து என்னோட சொத்தா நான் நினைக்கிறது நேர்மையையும்-உண்மையையும்-தப்பை ஒத்துக்கற தன்மையையும்தான்.

இதுவே இப்படித் தம்பட்டம் அடிக்கற மாதிரி ஆயிடுச்சேன்னு ஒரு கூச்சம்.

அதுல பெருமைப்பட எதுவும் இருக்கறதா எனக்குத் தோணல மாதங்கி.

சுந்தர்ஜி சொன்னது…

//தவறுகளை ஏற்றுக்கொள்ள பழகுவோம்-மீண்டும் அதனை செய்யாமலிருக்க.//

தவறுகளை ஏற்கப் பழகிக்கொள்கிறேன்.மீண்டும் நேராமலும் பார்த்துக்கொள்கிறேன்.

வார்த்தைகளுக்கு நன்றி திருநாவுக்கரசு பழனிசாமி.

சுந்தர்ஜி சொன்னது…

என் ரசனையின் மேலிருந்த மிதமிஞ்சிய நம்பிக்கை.

இந்தச் சறுக்கல் எனக்குத் தேவையானதுதான் ஹேமா.சரி செய்துகொள்கிறேன் இனி.

சுந்தர்ஜி சொன்னது…

அடி சறுக்கியது உண்மை பாலு சார்-யானை என்பதை ஏற்கமறுத்தாலும்.

சிவகுமாரன் சொன்னது…

"தம்தன தம்தன தாளம் வரும்" என்று ஒரு பாடலை இசையமைக்கும் போது இளையராஜா , கங்கை அமரனிடம் "என்னமா எழுதியிருக்கார் பாருப்பா. வாலி வாலிதான்" என்றாராம். அமரன் அடக்கமாக, வாலி வாலி தான். ஆனால் இந்த பாடலை நான் எழுதினேன் அண்ணா " என்றாராம். தன்னை மறந்த லயிப்பில் இப்படி தவறு ஏற்படுவது இயற்கை தான்.

சுந்தர்ஜி சொன்னது…

என்னைத் தேற்றுவது உங்கள் வேலை.

தவறிழைத்தேனே என்று விசும்புவது என் வேலை.

சரிதானே சிவா?

vasan சொன்னது…

To err is HUMAN, Being a good HUMAN is enough Dear Sundarji.
(Some trouble in the Tamil bond)

santhanakrishnan சொன்னது…

சில சமயம் இந்த குரல் மயக்கம்
எல்லோருக்கும் வருவதுண்டு.
திரையிசையில் மட்டும்
சுதாவும்,ஜெயஸ்ரீம் கலப்பது போல்
ஒரு மயக்கம் எனக்கும் ஏற்படுவதுண்டு.

சுந்தர்ஜி சொன்னது…

நீங்கள் சுட்டாவிட்டால் எத்தனை பாரமாயிருந்திருக்கும் இது தெரியுமா ஒரு பிந்தைய வேளையில்?

எத்தனை சால்ஜாப்பு சொன்னாலும் மறுபடியும் நன்றி வாசன்.

சுந்தர்ஜி சொன்னது…

கேட்கும் போது ஏற்படலாம் மதுமிதா.

எழுதும்போது கவனமாக இருக்கவேணும்.தவறிவிட்டேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...