27.2.11

விடைபெறுகிறேன்


எழுதப் போவதில்லை இனி இந்த மாதம்.
என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன்.
எல்லோரையும் தொந்தரவு செய்து விட்டேன்.
என் மனதும் சரியில்லை.
எல்லோருக்கும் என் நன்றிகள்.

28 கருத்துகள்:

இராமசாமி சொன்னது…

என்னாச்சு ஜீ ... ஏன் இந்த முடிவு

vasan சொன்னது…

இந்த‌ மாதம் நாளை..யல்ல‌வா முடிகிற‌து?
அதுவ‌ரை நாங்க‌ள் என்ன‌ செய்வ‌து?
அப்பாடி, இந்த‌ வருட‌ம் லீப் இல்லை
என்ப‌தால் ஒரு ரிலீஃப்.
காத்திருக்கிறோம் மார்ச் டொ மார்ச் இன் பாஸ்ட்.

komu சொன்னது…

ஏங்க? திடீர்னு இப்படி ஒரு முடிவு?
என்னதான் ஆச்சு?

G.M Balasubramaniam சொன்னது…

இந்த மாதம் இன்னும் ஒரு நாள் தானே சுந்தர்ஜி. WE CAN WAIT FOR A DAY.

Lakshmi சொன்னது…

சுந்தர்ஜி இந்த திடீர் முடிவுக்கு என்னகாரணம்.

RVS சொன்னது…

நாளைக்கு மட்டும் எழுத மாட்டேன்னு எவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்க ஜி! ;-))))

RVS சொன்னது…

ஒரு நாள்தானே!!

Gowripriya சொன்னது…

"இந்த மாதம் இனி"- just one more day!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

என்ன ஆயிற்று சுந்தர்ஜி! மனதில் என்ன கவலை? இந்த மாதம் எனில் ஃபிப்ரவரி தானே? இரண்டு நாள் தானே பாக்கி! மார்ச் மாதம் 1-ஆம் தேதி எழுதுங்கள்…. படிக்க நாங்கள் இருக்கிறோம்.

Gowripriya சொன்னது…

என் கமென்ட் மட்டும் வெளியிடல.. எனக்கு புரிஞ்சிடுச்சு :))
இவங்க யாரும் முல்லா பதிவு படிக்கலன்னு நினைக்கறேன்..
இப்படிக்கு,
அதைப் படிச்சு முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக/ முத்தம்மாவாக மாறியவர்களின் சங்கப் பிரதிநிதி :))

Ramani சொன்னது…

உண்மையில் இது பின்னூட்டத்திற்கானது இல்லை
எனவே வெறும் உபச்சார வார்த்தைகள் இல்லை
உண்மையில் பதிவுலகில் நான் விரும்பி
தேடிப்படிக்கிற பதிவுகளில் உங்கள் பதிவு முதன்மையானது
நீங்கள் குறிப்பிட்டிருக்கும்படியாக கடைசி
இரண்டு மூன்று பதிவுகளில் வடிவத்தில்
அதிக கவனம் செலுத்திவிட்டீர்களோ என்ற
ஆதங்கம் எனக்கும் உண்டு
ஆனால் எல்லை கடந்து சிந்திப்பதிலும்
உணர்வின் எல்லைகளைத் தொட்டு
எங்களை அதிர வைத்ததும் நீங்கள்தான்
எனவே நீங்கள் ஒருமாதம் எழுதாமல்
இருப்பது உங்களுக்கு ஒருவேளை
ஓய்வு தருவதாக இருக்கலாம்.
என்போன்றோரைப் பொறுத்தவரையில்
அது எங்களுக்கு இழப்பாகத்தான் இருக்கும்.
இதற்கு பதிலாக பதில் இல்லாமல்
ஒரு பதிவு இருக்குமாயின் அதிகம் மகிழ்ச்சி கொள்வோம்

Gowripriya சொன்னது…

"என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன்.
எல்லோரையும் தொந்தரவு செய்து விட்டேன்"

என்னா ஒரு பில்ட் அப்பு

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஹைய்யா !நாளைக்கு ஒரு நாள் மட்டுமாவது எங்களுக்கு ரெஸ்ட் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

நாளையோடு மாதம் முடிகிறதே !

ஆனால் உங்களால் சும்மா இருக்க முடியாது. எழுதித் தள்ளி சேமித்து வைத்து 1.3.11 முதல் 31.3.11 வரை வரிசையாக தினம் இரட்டைப் பிரஸவமாக அள்ளித் தரப்போகிறீர்கள் என்று எனக்கு மட்டும் புரிகிறது.

எதிர்பார்ப்புடன்..........

காமராஜ் சொன்னது…

இது அநியாயாம் என்பது மட்டுமே எனது
கருத்து.

ராகவன் சொன்னது…

Anbu Sundarji,

adai kaakkum kaalam endru kolkiren... ithu pondra idaivelikku ungalukku valuvaana kaaranam irukkalaam...

kaaththirundhu peruvathil enakkondrum kuraivillai... ungalidam irundhu varumpodhu...

anbudan
ragavan

சிவகுமாரன் சொன்னது…

யாரும் விசனப் படாதீங்கப்பா
இன்னும் ஒரு நாள் மட்டும் தான் ( 28 பிப்ரவரி).
அடுத்த மாதத்தில் இருந்து எழுத ஆரம்பிச்சிடுவாரு அண்ணா.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...இடையிடை ஒய்வும் தேவை.மனம் கொஞ்சம் இலேசாகும்.ஆனா சீக்கிரம் வந்திடுங்க.சுகமா இருந்துக்கோங்க !

மாலினி சொன்னது…

தண்டிச்சுக்கப்போறேன்னு ஒரு வரி எழுதியிருந்தீங்க.

அதை தண்டிக்கபோறீங்கன்னு நான் எடுத்துக்கிட்டேன்.

இதுவும் கடந்து போகும்.எழுத வாங்க ஜி.

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி! நீர் எழுதாமலிருப்பது என்பது வருத்தமளிக்கிறது.சரி! எங்கள் பதிவிற்கு பின்னூட்டமிடாமல் இருப்பது என்ன நியாய்ம்? வாருங்கள் ஐயா! ஜோதியில் கலந்து கொள்ளுங்கள் ---காஸ்யபன்.

Nagasubramanian சொன்னது…

சுந்தர்ஜி,
மழைப் போல இடைவெளி எடுக்கிறீர்கள்.
நிலம் போல நாங்கள் எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

சுந்தர்ஜி சொன்னது…

ரொம்ப சீரியஸா இதை எடுத்துக்கிட்ட எல்லாருக்கும் சாரிங்ணா. சாரிங்மா.

ப்ளாக் ரொம்ப சீரியஸா வெடவெடன்னு போய்க்கிட்டு இருக்கறா மாதிரி ஒரு ஃபீலிங்.

சடார்னு ப்ரேக் போட்டு ஒரு கலகலப்பாக்குவோம்.இன்னும் ஒரு நாள் எழுதலைங்கறத ஒரு சென்சேஷனாக்குவோம்னு ஒரு ஆசை.

என்னாலேயே தாக்குப்பிடிக்க முடியல.வாசன் போஸ்ட் போட்ட அஞ்சாவது நிமிஷமே கண்டுபிடிச்சுட்டார்.ராகவன் கென்யாலேருந்து ஃபோன் பண்ணிக்கேட்டவுடனேயே கொஞ்சம் கஷ்டமாப் போயிடுச்சு.மின்னஞ்சல்கள்.விசாரிப்புகள்.

கௌரிப்ரியாவுக்கு நல்ல துப்பறியும் மூக்கு. பாருங்க என்னமாப் போட்டு வாங்கறாங்கன்னு.

ரமணி அண்ணா குறிப்பிட்டா மாதிரி வடிவத்தில் மொழியைக் குறுக்கிக் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன்.அதுக்காக எனக்கு ஒரு மாசம் ப்ரேக் கொடுத்திட்டீங்களேண்ணா.நியாயமா?

இது ஒரு ஜாலி கேம்.லைட்டா எடுத்துக்காம யாராவது புண்பட்டிருந்தா நெஜம்மா ஸாரி.

இன்னிக்கே ஒரு போஸ்ட் போட்டு பிப்ரவரியை முடிக்கிறேன்.

இனி மார்ச்சில் பார்ப்போம்.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி....!!!!!!!!!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

நல்ல வேளை தப்பிச்சேன்..ஏதாவது குண்டக்க மண்டக்க எழுதி ஏமாறததிற்கு முன்னால உங்களோட பதிலைப் படித்து விட்டேன்..
எழுதுங்கள் சுந்தர்ஜி...யாராவது ஒரு நாள் ஸ்வாஸத்தை விட்டு விடுவார்களா என்ன? (இது சீரியஸ்)

பத்மா சொன்னது…

தப்பிச்சேன்னு நினைச்சேன் ...விடமாட்டீங்க போல ஹ்ம்ம் ...
உங்கள கைய பிடிச்சு இழுத்து கூப்பிட்டு வந்துட்டாங்களே ...
welcome back:))

ramanaa சொன்னது…

நல்ல வேளை நான் ரெண்டு நாளா ப்ளாக் பக்கம் வரல.

பா.ராஜாராம் சொன்னது…

நேற்றே பார்த்தேன். நான் அவ்வளவு தீட்சண்யம் இல்லாததால், ஒரு மாதிரியான சுணக்கத்தோடையே போனேன். புதுப் பதிவு பார்த்தவுடன், பழசுக்கும் வந்தேன்...

"எந்தச் சாமி புண்ணியமோ" என்று மூச்சு விட்டுக் கொள்கிறேன். :-)

//தப்பிச்சேன்னு நினைச்சேன் ...விடமாட்டீங்க போல ஹ்ம்ம் ...
உங்கள கைய பிடிச்சு இழுத்து கூப்பிட்டு வந்துட்டாங்களே//

அதானே,..பத்மா! :-))

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! கொஞ்சம் லேட்டா வந்ததால் பிழைத்தேன்.. சிரங்கு பிடிச்சவன் கையும்,இரும்பு பிடிச்சவன் கையும் போல் வலைப்பூவை தொடுக்கும்கை சும்மாயிருக்க முடியுமா?
இனிமே இப்படி மனுஷாளைப் பதற வைக்காதீங்க.
உமக்கு தண்டனை "தோப்புக்கரணம்" என்று ஓர் கதையோ கவிதையோ எழுத வேண்டும்.. சொல்லிட்டேன்.

சுந்தர்ஜி சொன்னது…

இதில் தப்பியவர்கள் என் எழுத்தில் மாட்டிக்கொண்டார்கள்.

இதில் மாட்டிக்கொண்டவர்கள் என் எழுத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் லவலேசம் இருந்தாலும் மாற்றிக்கொள்ளவும்.

வேறொரு வலையோடு வேறொரு நாள் சந்திக்கும் வரை அன்பு வணக்கம் கூறாமலும் விடைபெறாமலும் அறுப்பது சுந்தர்ஜி..ந்தர்ஜி...தர்ஜி....ர்ஜி.....ஜி.....

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...