12.2.11

ப்ளீஸ்.சிரிங்களேன்(பத்து தடவை)


ஐயோ! ஸென் பௌத்தமான்னு ஓடாதீங்க. இது ஸென் இல்ல. இல்ல. இல்ல. சொல்ப அல்ப ஜோக்ஸ்.

உங்களுக்குத் தெரியாதது இல்ல. ஜோக்ஸ் சொல்ற மாதிரி சிரமமான விஷயம் எதுவுமில்ல. ஒருத்தர அழ வெச்சுடலாம். ஆனா சிரிக்க வைக்கிறது மஹா கஷ்டம்.

பீடிகை சிகரெட்(இப்போது படத்தைப் பார்க்கவும்)கை போதும். ஜோக்குக்குப் போலாமா?

#அம்பானி வண்டியைத் தலை தெறிக்க ஓட்ட பின்னாடி இருந்த பிரேம்ஜி ”ஏம்ப்பா வண்டிய இப்பிடிப் போட்டுத் தொரத்துற? வூட்டுல ஏதாவது அவசர வேலையா? சொல்லுபா”. அதற்கு அம்பானி” வண்டி வல்லிசா ப்ரேக் புடிக்கல்லப்பா. எங்கேயாவது ஆக்ஸிடெண்ட் ஆவுறதுக்குள்ளாற சீக்கிரமா வூட்டுக்குப் போய் சேந்துடலாம்னுதான்”.

#ரத்தன் டாடா ஒரு ஆட்டோவோட முன்சக்கரத்தைக் கழற்றிக்கொண்டிருப்பதை இன்னொரு ஆட்டோவில் பீடி வலித்தபடிச் சாய்ந்திருந்த லக்ஷ்மி மிட்டல் ”ஏம்ப்பா ஃப்ரண்ட் வீல் பஞ்சரா?” என்று கேட்க இளக்காரமாகச் சிரித்த டாடா” போர்டை நீ பாக்கல போல இருக்கு. இங்க டூ வீலர் மட்டுந்தான் பார்க்கிங் அலௌடு. கழட்டு ஒன்னோட ஃப்ரண்ட் வீலையும்” என்றார்.

#வெளிநாடு போய்த்திரும்பிய சத்யம் ராஜு தன் மனைவியிடம் கேட்டார்,” என்னைப் பாத்தா ஃபாரினர் மாதிரியா தெரியறேன்?”. அவர் மனைவி,” இல்லையே ஏன்? என்றாள். “இல்ல. கொள்ளையடிச்சுட்டு லண்டன்கிட்ட வந்துக்கிட்டிருந்தேன். அப்ப ஒருத்தி என்னப் பாத்து நீ ஃபாரினரான்னு கேட்டா.அதான் டௌட்டா இருந்திச்சு.ஓங்கிட்ட கேட்டேன்.”

#ஒரு தடவை ஹர்பஜன்சிங் தன் கேர்ள் ஃப்ரெண்டோடு ஆட்டோவில் போகும்போது ஆட்டோ ட்ரைவர் கண்ணாடியை அவளைப் பார்க்க வசதியாய் திருப்பிவைத்தார். உடனே வந்தது ஹர்பஜனுக்குக் கோபம். ”என்னோட கேர்ள் ஃப்ரண்டை கண்ணாடி வழியாப் பாக்கலாம்னு நெனச்சியா? வண்டிய நான் ஓட்டறேன். வந்து ஒக்காரு பின்னால”.

#யுவராஜ்சிங்கிடம் இண்டெர்வ்யூவின் முதல் கேள்வி.
ரு கட்டடத்துல பத்தாவது மாடில நீங்க இருக்கீங்கன்னு கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிக்கிது. உடனே என்ன பண்ணுவீங்க?
ற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.

#பிந்தரன்வாலே ஒரு தடவை பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்சனைக்கு ஆதரவா ஒரு கார்ல பாம் வெச்சுக்கிட்டு இருக்கும்போது அவனோட ஃப்ரெண்ட் கேட்டான்.”கார்ல பாமை பொருத்திக்கிட்டிருக்கும்போதே பாம் வெடிச்சுட்டா என்ன பண்றது?”. உடனே “முட்டாள். அப்படி ஏதாவது ஆனா என்ன பண்றதுன்னு இன்னொரு பாம் கைவசம் வெச்சுருக்கேன்” என்று சொல்லி பாமை ஆட்டிக் காட்டினான்.

#(ஃபோனில்)
டாக்டர்! என்னோட மனைவி பிரசவவலியால துடிக்கறாங்க.
மை காட்! இது அவங்களோட முதல் குழந்தையா?
ல்ல. நான் அவங்க புருஷன்.

#ஒரு பெண்ணை ஒரு பையன் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத இடத்தில் (நான் மட்டும் நிமிர்ந்து பார்க்கையில்) சட்டென்று முத்தமிட்டு விட்டான்.
டப்பாவி! என்ன பண்ற நீ?
ச்சையப்பால ஃபைனல் இயர் விஷுவல் கம்யூனிகேஷன்.

இந்த ஜோக்ஸுக்கெல்லாம் சிரிச்சு முடிச்சுட்டீங்கன்னே வச்சுக்குவோம். இப்போ பரிசுக்குரிய கேள்வி.

இந்த இடுகையில் ஆறு பொய்கள் சொல்லியிருக்கிறேன். அதைச் சரியாகவோ கிட்டத்தட்டவோ கண்டு பிடிப்பவர்களுக்கு நீராராடியாவிடம் சொல்லி மத்திய சர்க்காரில் வெகுமதி வாங்கித் தரப்படும்.

ராசா ராடியா நம்பர் ப்ளீஸ்?

25 கருத்துகள்:

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

சிரிச்சுக்கிட்டே இருக்கேன். அதனால் பொய்யைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லை.

மேலும் போன ஒரு பதிவில் சும்மா ஒரு ஆறு பேர்கள் என்று போட்டிருந்தேன். உடனே யார் அந்த ஆறு பேர்கள் என்று கேட்கிறீர்களே என்றீர்கள். [அதில் கூட நம் ரமணா நல்லவேளை நான் ஏழாவது ஆள் என்றாரே!] அது போல இதுவும் இருக்குமோ என்னவோ.

போகிற போக்கைப் பார்த்தால் கோப்பை தினமும் நிரம்பி வழிந்து கொண்டே தான் இருக்கும் போலிருக்கு.

Ramani சொன்னது…

படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்
நீங்கள் சொன்னதற்கான விடையும் தெரியும்.
ஆனால் எனக்கு வெளியிலிருந்து
செய்ய வேண்டிய வேலைகள் கொஞ்சம் இருக்கு.
பரிசுக்கு ஆசைப்பட்டு மாட்டிக் கொள்ள விருப்பம் இல்லை

சிவகுமாரன் சொன்னது…

மூக்கைப் பிடிச்சுக்கிட்டே சிரிச்சேன். (ஒரு தடவை மூக்கை ஓடச்சுக்கிட்டேனே. )

Matangi Mawley சொன்னது…

... sure these people leave us checking the 'status quo' of our 'sense of humour'! i mean... hey- that's our 'survival kit'.

But- off the record, sir.

On a serious note, though it may seem strange- I like Niira Radia. Her efficiency and expertise amazes me. had she been channelized more appropriately (Tata did identify her potential... for what it is...)- she would have been a treasure!

santhanakrishnan சொன்னது…

வெகுமதின்னா?
எந்த மாநில கவர்னர் பதவின்னு சொல்லுங்க அப்புறம் பதில் சொல்றேன்.

G.M Balasubramaniam சொன்னது…

I WAS ONLY SMILING NOT LAUGHING, I MUST ADMIT.

ramanaa சொன்னது…

இந்த முறை இக்கட்டான வலைதான்.
முதலாவதாக ராடியாவின் நம்பர் : 9443570865. அந்த ஆறு பொய்கள் :
1)அம்பானிக்கு வண்டி ஓட்ட தெரியாது.
2)டாடா கழட்டினது சைடு வீல்.
3)யுவராஜிடம் கேட்டது இரண்டாவது கேள்வி.
4)பிந்தரன்வாலே பாம் ஃபிக்ஸ் பண்ணினது ஒரு ஆட்டோல.
5)சத்யம் ராஜு போனது ரஷ்யாவுக்கு.
6)இதுல மொத்தமே அஞ்சு பொய்தான்.
பரிசு எப்போ அப்பா?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

Good Jokes :)

vasan சொன்னது…

இந்த‌ வார ஆவியில் அன‌ன்யாவின் அற்புத‌ வ‌ரிக‌ள் ஜோக்காய்:
அவ‌ர் 'உங்க‌ த‌லைவ‌ரோட‌ ஊழ‌லைக் க‌ண்டுபிடிச்சுட்டாங்க‌ளாமே?'
இவ‌ர் "அட‌ போய்யா! ஊழ‌லைக் க‌ண்டுபிடிச்ச‌தே எங்க‌ த‌லைவ‌ர்தானே!"

கொடுமை என்னவெனில், இது 'ஜோக்' இல்லையென்ற‌ உண்மைதான்,
இதில் ஜோக் என்ன‌வெனில் இது அப்ப‌ட்ட‌மான 'உண்மை' என்ப‌துதான்.
பிர‌ப‌ல‌ ஜோக்குக‌ளில் பிர‌ப‌ல‌ங்க‌ளை ச‌ரியாய் இணைத்திருக்கீறீர்க‌ள்.
கவிதை,க‌லாச்சார‌ம், ஜென், அர‌சிய‌ல்,குழ‌ந்தைக‌ள், ஜோக்
என‌ எல்லா திக்குக‌ளையும் ஈர‌மாக்குகிற‌து 'கைக‌ளில் அள்ளிய‌ நீர்'.
(for the past four days I had a problem to get connected to the Blogspot.)

Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…

Laughed a lot...! :-))

சுந்தர்ஜி சொன்னது…

இந்த முறை இந்த ஜோக்கை சீரியஸா எடுத்துக்கிட்டு அதுக்கு மேலே ஜிகினா கொடுத்த ரமணாவுக்குக் கூச்சத்துடன் முதல் பாராட்டுக்கள். நான் யோசித்த அதே திசையில் யோசித்த அவன் கன்னத்தில் முத்தமிட்டேன்.

நான் செருக நினைத்திருந்த பொய்கள் லிஸ்ட்:
1)அம்பானிக்கு வண்டியோட்டத் தெரியாது.
2)பிரேம்ஜிக்குப் பின்னால் உட்காரத் தெரியாது.
3)ல்க்ஷ்மி மிட்டல் பீடி குடிப்பதில்லை.
4)யுவராஜிடம் கேட்டது ரெண்டாவது கேள்வி.
5)பிந்தரன்வாலே பாமை ஆட்டவில்லை.
6)மொத்தமே ஐந்து பொய்கள்தான்.

ரமணா உன்கிட்டயே ராடியா நம்பர் இருக்கறதால எனக்கும் சிபாரிசுக்கான வேலை இல்லை.என்ன வேணுமோ வாங்கிக்கோ.

சுந்தர்ஜி சொன்னது…

நீங்களே படு ஹ்யூமரான ஆசாமி.நீங்க சிரிக்கலேன்னாதான் ஆச்சர்யம்.

இந்தக் காமெடியவே ஒரு சீரியலாகவே பண்ணலாம்னு தோணுது.

நன்றி கோபு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்க பதிலே ஒரு சுவாரஸ்யமாய் இருந்தது ரமணி சார். ரசித்தமைக்கும் சிரித்தமைக்கும் நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

மூக்குப் பிடிக்க சாப்பிடுவாங்க. நீங்க மூக்குப் பிடிக்க சிரிச்சீங்களா.தமாஷ்தான் சிவா.

Kalidoss சொன்னது…

என்னதான் மரியாதை வேணுமின்னாலும் சுந்தர்ஜி ,அப்படின்னு நீங்க பேர் வைச்சுகிறது 2 much .விலா வலிக்க சிரிச்சேன்னு சொல்ல முடியாது.
ஆனால் சிரிச்சதும் வீலா வல்ச்சது..

சுந்தர்ஜி சொன்னது…

உதாரணமாக இருக்க வேண்டியவர்கள் ஜோக்கர்களாக இருக்கிறார்கள் என்று காட்டவே அவர்களின் பெயர்களை உபயோகப்படுத்தினேன். இது ஒரு டார்க் ஹ்யூமர் அல்லது அவலச்சுமை மிக்க ஹ்யூமர் மாதங்கி.

ராடியாவை நீங்கள் சொல்வது போல் என்னால் பார்க்கமுடியவில்லை. எததனை திறமைசாலியானாலும் தவறான பல நிழல் விஷயங்களுக்குத் துணை போனது மிகக் கேவலமான செயல்.

கருணாநிதி கட்டுவார் வாஜ்பாயிக்கு சப்பைக்கட்டு-ரைட் மேன் இன் ராங் பார்ட்டி என்று. எப்படி சரியான மனிதனால் தவறான இடத்தில் இருக்கமுடியும்?

ராடியாவின் நிலையில் நானிருந்தால் இப்படிச் செய்திருக்கமாட்டேன்.

சாரி மாதங்கி.

சுந்தர்ஜி சொன்னது…

ராடியாவால கொடுக்கமுடியாத பதவின்னு ஒண்ணு இருக்கும்னு நீங்க நினைச்சதே தப்பு மதுமிதா.

சுந்தர்ஜி சொன்னது…

லேசாக உங்களை அசைத்திருக்கிறேன். அடுத்த தடவை சிரிக்க வச்சுடுவேன் பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வெங்கட்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி வாசன்.

அப்பப்பவாவது வாசியுங்க வாசன்.அது போதும்.

சுந்தர்ஜி சொன்னது…

கொச்சு ரவி கூடுதலாயிட்டு சிரிச்சதொக்க சந்தோஷம்.

சுந்தர்ஜி சொன்னது…

:)) என்று சிரித்தமைக்கு நன்றி கௌரிப்ரியா.

Matangi Mawley சொன்னது…

Why say sorry, sir- if we hold different view points?

Neither of us can claim to know the truth of events. What view we hold is shaped by the journals that we have been reading. none of them can give us accurate details. all we read, are a 'spiced-up' and 'fabled' versions of 'truth', cleverly veiled. …to suit their skewed agenda…
May be in the journals I've read, there had been some kind of an element that glorified her 'expertice'. or it is possible, that I read it in a different 'light'. However, let me clarify that when I appreciate somebody’s “ efficiency “ it doesn’t mean I approve of whatever (s)he did… even to accomplish something (basically ) negative/destructive, ‘efficiency’ in execution is required; My dad used to say that Sivadasan was an ‘efficient’ Officer/assistant who could accomplish/deliver , what his boss ordered him to.. that he was ‘efficient’ doesn’t mean , he was ‘good’. for,.he was ready to use his efficiency for something ‘bad’…
" நேர்மை த திறமும் வேண்டும் " என்று பாரதி சொன்னது போல் , நேர்மையும் வேண்டும் ; திறமும் வேண்டும் ; நம்மைச்சுற்றி..திறமை பெருகிக்கொண்டிருக்கிறது..ஆனால் நேர்மைக்கு தான் பஞ்சமாகிக்கொன்டிருக்கிறது..?
the 'right man at the wrong party' is only a rhetoric by a Politician… And , “ There is nothing right or wrong, but thinking makes it so” , just like Vibhashan and Kumbakarnaan had different perceptions of what was to be done – depending on their individual “ value-system” .. a matter of opinion...

Have I made myself clear , Sir ..?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

I was laughing.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

absolutely matangi.

At times we see through different glasses.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...