22.2.11

காளான்


I
இசையின் எல்லை
வெறுமையும்
சில கண்ணீர்த் துளிகளும்.
II
கொய்யாத பூக்களின்
பரவசத்தை 
வண்டு சொல்கிறது
காற்றிடம்.
III
பின்னிரவில்
தவளைகளை
தேவதைகளாக்குகிறது
அதன் சங்கீதம்.
IV
கதவைத் தட்டி
நான்தான் என்றாய்.
நீதான் என
நான் எண்ணாத போது.
V
முட்டை-
வெளிப்புறம் உடைகையில்
உயிர் துறக்கிறது.
உட்புறம் உடைகையில்
உயிர் பிறக்கிறது.
VI
காலடிகள்
யாருடையதாயினும்
சலனமின்றிப்
படிக்கட்டுகள்.
VII
விட்டில் பூச்சிக்கு
உண்டா
காலையும்-மாலையும்?
VIII
காற்றில் அலையும்
நெருப்பின் சுடர்.
வண்ணத்துப்பூச்சி.
IX
சாலையைத்
தோண்டுகையில்
தட்டுப்பட்டது
மரநிழல்களின்
சடலங்கள்.
X
மண்ணைத் துளைக்கிறதா?
மண்ணில் புதைகிறதா?
அந்த மண்புழு.

30 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

தினசரி காணும் நிகழ்வுகளில் உங்கல் கற்பனை விரிவு விசாலம் ஆச்சரியம். வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பத்துமே அருமை.
இருப்பினும் அந்த ஆறாவது,
பத்தில் எனக்குப் பிடித்த முத்து.

//VI
காலடிகள்
யாருடையதாயினும்
சலனமின்றிப்
படிக்கட்டுகள்.//

நிலாமகள் சொன்னது…

ஆயுள் குறைவென்றாலும் அழகும் பயனும் நிறைந்ததென்ற நிரூபணம் தலைப்பில்...

Matangi Mawley சொன்னது…

etha solla, etha vida?

ellaa varikalaiyum quote panni "excellent"... "brilliant"... "stupendofantabulouslyfantasticalawesomeness..." nu sollanum pola irukku! Of all- I found my three favourites- no. 4 (kathavaith thatti...), no. 8 (kaatril aliyum...) and no. 9 (saalaiyaith tondugaiyil...)

But the post, in its entirety reminds me of a view I hold about a 'Kaleidoscope'.

An ever-changing pattern of colourful images, blurring the eyes with beauty beyond imagination when seen in light. Yet, deep down, they are, but broken pieces of glass. A piece of glass- holds together, the bits and pieces of the same 'whole'. But when broken, and seen through the eyes of a Kaleidoscope, each 'part' of the 'whole' is as different as the other! The difference coming together to form a different 'whole', which is, but an Integration of the beauty of the 'parts'! In here- a 'Kalaan...'!

Kudos!

RVS சொன்னது…

ஜி! வாழ்க்கையின் வர்ணஜாலங்களை அற்புதமான சொற்களைக் கொண்டு கவிதைகளில் காண்பித்துவிட்டீர்கள். நன்றி. ;-)

சிவகுமாரன் சொன்னது…

பத்தில் எது என்று தேடிப் பார்க்கிறேன் இன்னது அழகு என்று வேறுபடுத்தி சொல்ல இயலவில்லை. அந்த மண்புழுவைப் போல்தான் துளைத்துக் கொண்டும் புதைந்து கொண்டும் நான் - உங்கள் வார்த்தைகளில் .

vasan சொன்னது…

எது பிடித்த‌து?...
தமிழ்ச்ச‌ங்கப் ப‌த்துப் பாட்டா?
இஸ‌ரேத்தின் ப‌த்துக் க‌ட்ட‌ளையா?
க‌ண்ணென‌த் த‌கும் எண்க‌ள் ப‌த்தா?
சுந்த‌ர்ஜின் இந்த‌க் க‌விதை ப‌த்தா?
நேற்றைய‌ இரவின் தூற‌ல் தீர்ப்பாய்,
நில‌த்தைப் பிள‌ந்து 'பிடித்த‌து' குடை
(-காளான்-)

வினோ சொன்னது…

இன்னும் படித்துக் கொண்டே இருக்கிறேன்.. என் உள்மனதில்... எதை விடுவது, எதை எடுப்பது...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பத்தும் பத்து முத்துக்கள்.

//முட்டை-
வெளிப்புறம் உடைகையில்
உயிர் துறக்கிறது.
உட்புறம் உடைகையில்
உயிர் பிறக்கிறது//

இந்த கவிதை படித்ததும் - கல்லூரி காலத்தில் நான் படித்த இந்த கவிதை நினைவுக்கு வந்தது -

முட்டையிட்ட
கோழி காத்திருந்தது
தன் குஞ்சுக்காக....

மனிதனும் காத்திருந்தான்....

ஆம்லேட்டுக்காக!

க ரா சொன்னது…

எல்லாமே அற்புதம் ஜீ.. நல்மா :)

பாற்கடல் சக்தி சொன்னது…

///காலடிகள்
யாருடையதாயினும்
சலனமின்றிப்
படிக்கட்டுகள்///
வெளியேற இயலா நினைவு சுழல்களுக்குள் இழுக்கும் வரிகள்

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

முத்துக்கள் பத்து

Gowripriya சொன்னது…

எல்லாம் அருமை....

I & VI மிக மிகப் பிடித்தவை

அன்புடன் அருணா சொன்னது…

ஆஹா பூங்கொத்து!

Ramani சொன்னது…

பலவகைப் பட்டவைகளை
தொடர்ச்சியாக இப்படி யோசிக்க முடிகிறதா?
இல்லை ஏற்கெனவே எழுதி வைத்தவைகளை
ஒன்றாக்கிக் கொடுத்துள்ளீர்களா ?
மலைக்க வைத்த படைப்பு
வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி சொன்னது…

ஆறாம் முத்தை அபேஸ் பண்ணிய கோபு சாருக்கு ஒரு செல்ல நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பாலு சார்.நிறைய உங்களை ஆச்சர்யப்படுத்த ஆசைப்படுகிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

காளானின் முடிச்சை அவிழ்த்து விட்டீர்கள். சபாஷ் நிலாமகள்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களை வசீகரித்த வரிகளை எழுத வைத்த அந்தக் கவிதைகளுக்கு என் நன்றி நிலாமகள்.

சுந்தர்ஜி சொன்னது…

உடைந்த பின் ஒருவிதம்.
உடையும் முன் ஒருவிதம்.
உடைந்தவையெல்லாமாய்ச் சேர்கையில் ஒருவிதம்.
இத்தனை விதத்தையும் கலைடாஸ்கோப்பாய்ப் பார்த்த
உங்கள் ரசனை தனி விதம் மாதங்கி.

சுந்தர்ஜி சொன்னது…

ஏதோ கொசுக் கடிச்சு தூக்கம் வராம திண்ணைல உக்காந்து ரெண்டு வரி கிறுக்கினதுக்கு ரொம்பப் புகழறீங்க ஆர்விஎஸ்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் வார்த்தைகள் ஒன்றும் சளைத்ததில்லை சிவா.

சுந்தர்ஜி சொன்னது…

கூச்சமாயிருக்கு வாசன்.

என் தகுதிக்கு மீறிய வார்த்தைகளை எனக்குத் தருகிறீர்கள் அன்பு நிரப்பி.

தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அந்த நிரம்பித் ததும்பும் அன்பை.

சுந்தர்ஜி சொன்னது…

எனக்கும் இப்படி நேர்வதுண்டு வாசிக்கையில்.

சமயங்களில்அது ஒரு தொந்தரவாகப் போய்விடும் வினோ.

சுந்தர்ஜி சொன்னது…

ஓ நலம் ராமசாமி. நீங்களும் தானே?

சென்னையிலிருந்து பேசிய வார்த்தைகளுக்குள் இன்னும் இருக்கிறேன் நான்.

யு.எஸ். போய் செட்டிலாகிவிட்டீர்களா மறுபடியும் மண்ணிலிருந்து தொலைவாக?

சுந்தர்ஜி சொன்னது…

ஆம்லெட் கவிதைப் பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சக்தி.

ரொம்ப நாளாயிடுச்சு உங்களைப் பாத்து.

நல்லாயிருக்கீங்களா சக்தி?

சுந்தர்ஜி சொன்னது…

பாராட்டுக்கு நன்றி திருநாவுக்கரசு.

சுந்தர்ஜி சொன்னது…

பூங்கொத்து ஒரு இனிய அதிர்ச்சி அருணா.

நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

வார்த்தைகளுக்கு நன்றி கௌரிப்ரியா.

தொடர் வாசிப்புக்கும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...