11.3.11

நிழல் சிரிப்பு.



மூக்கொழுக
மேல்ச்சட்டையின்றி

கன்னத்தின்
திருஷ்டிப்பொட்டோடு
அழுதபடி முதலாவது.

வயதுக்கு வந்தபோது
தலைநிறையத் தாழம்பூவும்
முகம்நிறைய வெட்கமும்
பின்னிய கருப்பு வெள்ளைப் படம்.

நெருக்கியடித்து
இஸ்திரி போடாத
தாவணிசட்டையுடன்
ரெட்டைச் சடையோடு
கோபக்கார சாந்தா டீச்சர் பக்கத்தில்
உர்ரென்ற ஒன்பதாம் வகுப்புப் படம்.

டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டிடியூட் சேர-
டிஎன்பிஎஸ்ஸி எழுத-
எடுத்த
பாஸ்போர்ட் புகைப்படங்கள்.

கல்லூரி இறுதிவருடம்
தேக்கடி சுற்றுலாவில்
யமுனாவோடு
முதல் முறையாய்
வனப்போடு தெரிந்த வண்ணப்படம்.

பெண் பார்க்க அவசரமாய்
அம்மாவின் பட்டுப்புடைவையில்
எடுக்கப்பட்ட
முழுஅளவுப்படம்

என எதிலும்
வெளிப்பட்டதில்லை

உடன் தொடர்ந்த
அவள் சாவின் சிரிப்பு.

8 கருத்துகள்:

எல் கே சொன்னது…

துவக்கத்திலேயே இறுதி சோகம் லேசாகத் தெரிகிறது

vasan சொன்னது…

திரும‌ணப்ப‌ட‌மென்ன‌வான‌து?

சிவகுமாரன் சொன்னது…

சாவின் சிரிப்பு ... கண்ணீரை வரவைத்தது

Ramani சொன்னது…

நிகழ்வுகளை அடுக்கிகொண்டு போகப் போக
நானும் முடிவில் ஒரு பெரும் அதிர்வை
எதிர்பார்த்து ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன்
ஆயினும் ஜாக்கிரதை உணர்வு கைகொடுக்கவில்லை
இறுதி வாக்கியங்கள் என்னை அடியோடு
புரட்டிப் போட்டுப்போனது.
உறங்கும் மெல்லியஉணர்வுகளை எழச் செய்து போகும்
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

RVS சொன்னது…

சொல்லப்பட்ட ஒவ்வொரு சம்பவமும் கண்முன் படமாய் விரிந்தது சுந்தர்ஜி! அற்புதம். ;-))

உதிரிலை சொன்னது…

மனம் இறுக்கமுடன் சுமையேற்றிக்கொள்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பெண் பார்க்கும் படலம் வரை OK Sir.

கடைசியில் அவளை இப்படிச் சிரிக்க வைத்துக்கொன்றதில் உங்கள் கவிதை வெற்றியால் சிரிப்பினும், நாங்கள் விரக்தியால் அழுகிறோம்.

விமலன் சொன்னது…

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.சாவின் சிரிப்புகள் எப்பொழுதும் நம்மை பிரமிக்கச்செய்பவனவாகவே/

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...