19.3.11

ஜான் பி ஹிக்கின்ஸ்


அப்போது ஒரு நாள் சக்கையாய் மழை கொட்டித் தீர்த்தது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராஜபாளையத்தின் அருகே தளவாய்புரம் என்ற சிற்றூரின் என் ஐந்து வயதின் ஓர் இரவில் ஆல் இண்டியா ரேடியோவின் 7.15க்கான தமிழ்ச் செய்தியறிக்கை.

கொரகொரப்பும்_பக்கங்களைத் திருப்பும் சத்தங்களும் ஆக்கிரமித்திருக்கும்-பிரும்மாண்ட ஒரு வால்யூம் ரேடியோவின் மங்கி மறுபடி உச்சம் பெறும்-பத்து நிமிடச் செய்தியறிக்கைக்காக காத்திருப்பது வழக்கம். செய்திகளை வழக்கமாக வாசிக்கும் “விஜயம்” நாட்டின் முக்கியமான செய்திகளைச் சொல்லிமுடித்தவுடன் சாப்பிட அனைவரும் தயாராவார்கள்.

தேவையின்றி மின்விளக்குகளை உபயோகிக்கக் கூடாது என்ற சிக்கனமும் இரவில் சிம்னி விளக்கு அல்லது ஹரிக்கேன் லைட் வெளிச்சத்துடன் சுவரில் தெரியும் நிழல் உருவங்களைப் பார்த்த திகிலும் ஆர்வமும் மண்ணெண்ணெய் நெடியுடன் ஏதாவது மிச்சமிருக்கும் சமையலை சாப்பிட்டுவிட்டு தெருக்களில் சிறிது நேரம் உலாத்திவிட்டு படுக்கையைத் தட்டிப் போடும் நேரமும் வானொலியில் அகில் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் ஏதாவதொரு இசைக்கச்சேரி துவங்கும்.

என்னவென்று புரியாமல் கதகதப்பான அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே நிலவொளியில் அசையும் தூங்குமூஞ்சி மரத்தின் இலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே பயமுறுத்தும் நிசப்தத்தில் தவளைகள் கோரஸாகக் குரலெழுப்ப சுவற்றின் இருளில் அவை மோதித் திரும்ப அப்பாவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் போது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அறிமுகம் முடிந்திருக்கும்.

ஜான் பி ஹிக்கின்ஸை அப்போதுதான் முதல் முறையாய்க் கேட்கிறேன். மிகவும் பழக்கமில்லாத குரல்போலத் தெரிந்தாலும் என்னை அந்தக் குரல் ஈர்ப்பதையும் அந்தக் குரலின் பிசுபிசுப்பில் மெல்ல என் ஆர்வம் ஒட்டிக்கொள்ளத் துவங்குவதையும் உணர்ந்தபடியே மெல்லத் தூங்கிப் போனேன்.

வானம் வெறித்திருந்தாலும் எங்கோ தொலைவில் டுமுடுமுவென உருட்டிக்கொண்டிருந்த அவ்வப்போது மென்மின்னலுடன் ஒளிர்ந்து கொண்டிருந்த ரகசியம் பூசப்பட்டிருந்த இரவின் நடுப்புள்ளியில் நான் மீண்டெழும்போது பின்புறத்தென்னையின் கீற்றுகளில் நிலவு பளபளத்தது. அந்தக் கீற்றின் நுனியில் ஹிக்கின்ஸ் பாகவதரின் இசை சொட்டிக் கொண்டிருந்தது.

பின் நாட்களில் ஹிக்கின்ஸ் பாகவதர் பாடிப் பிரபலமான ஸ்ரீ ராகத்தின் எந்தரோ மஹானுபாவுலுவும், தர்பாரி கானடாவில் கோவர்த்தன கிரிதாரி- இந்தோளத்தில் தில்லானாவும்- பந்துவராளியில் சிவ சிவ சிவ என ராதாவும் ஒரு உயர்வானில் சுழலும் கழுகு போல் என்னை வட்டமடித்துக் கொண்டிருந்தன அவர் ஒரு அமெரிக்கர் என்ற தகவலின் ஆச்சர்யத்தோடு .

எனக்குப் 19 வயதும் பாகவதருக்கு 45வயதும் நிறைந்திருந்த 1984ன் ஒரு நாளில் மோட்டார் சைக்கிளை நிதானமின்றிப் படு வேகமாய் ஓட்டிவந்த ஒரு முட்டாள்க் குடிகாரனால் அமெரிக்கச் சாலை ஒன்றில் கொல்லப்பட்டதை அதே வானொலியின் 7.15 மணிச் செய்தியில் சரோஜ் நாராயணசாமியால் கேள்விப்பட்டு மறுபடியும் என் ஐந்து வயதின் மழை பெய்த இரவுக்குப் பயணமானேன்.

ஜான்! மிதந்து செல்லும் காற்றிலும் கரைந்து செல்லும் மழைநீரிலும் பயமூட்டும் இரவுகளின் தனிமையில் தவளைகளின் சப்தத்திற்கு இடையிலும் தூங்குமூஞ்சி மரங்களின் உறக்கத்திற்கிடையிலும் உன்னைத் தேடியபடியேயும் அடைந்தபடியேயும் இருக்கிறேன் ஜான்.

18 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஒரு உயர்வானில் சுழலும் கழுகு போல் என்னை வட்டமடித்துக் கொண்டிருந்தன அவர் ஒரு அமெரிக்கர் என்ற தகவலின் ஆச்சர்யத்தோடு .
அப்படியே பலரின் உணர்வையும் பதிவு செய்து விட்டீர்கள்.. ஒரு பிரமிப்பு உலுக்கிக் கொண்டிருந்த அந்நாட்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆல் இண்டியா ரேடியோ செய்திகள் வாசிப்பது விஜய்ம் .....என்று கம்பீரமாக ஆரம்பித்தால், பிசுரு தட்டாமல், அழகாக, உணர்ச்சிபூர்வமாக,அவர்கள் வாசிப்பது அழகோ அழகாக இருக்கும். மெய் மறந்து கும்பலாக நின்று, எங்கள் தெரு முனை அரசமரத்தடியில்,பின் ட்ராப் சைலண்ட் ஆக கேட்டு மகிழ்வோம்.
யார் வீட்டிலும் அன்று ரேடியோ கிடையாது. பொதுவாக அரசாங்கத்தால் ஆங்காங்கே கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். அதே போல பிறகு சரோஜ் நாராயணஸ்வாமியும். அந்த அருமையான நம் பள்ளிப்பருவ நாட்கள் திரும்பியே வராது, சார்.

Harani சொன்னது…

லயிக்கிறேன் சுந்தர்ஜி. என்னுடைய உயிர் பிரிந்துபோன அப்பா உயிருடன் இருந்தபோது இரவு செய்தி தலைமாட்டருகில் கேட்டபிறகே உறங்குவது வழக்கம். பழைய நினைவுகளுக்குள் நான் போய்க்கொண்டிருக்கிறேன் அதாவது 1977க்கு. கசிகிற மனதுடன்.

RVS சொன்னது…

ஜி... ஒரு குடைராட்டினத்தை நிறுத்துவது போன்று பாடிக்கொண்டிருக்கும் பாடலின் வால்யூம் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து... "இதுவரை நீங்கள் கேட்டது தேன்கிண்ணம்.." அப்படின்னு சொல்லும்போது அப்படியே அது என் மென்னிய முறிக்கிறா மாதிரி இருக்கும். அதுவும் ராத்தி பதினொரு மணிக்கு பால் நிலாவை காட்டித் ததும்பும் குளக்கரையில் பாட்டு கேட்பது பூலோக சொர்க்கம். மீண்டும் இனிமேல் அது வாய்க்காது..

நீங்கள் விளக்கும் பொது அந்தந்த இடங்களில் நான்...

நீங்கள் இதுபோல் தொடர்ந்து இசையையே பரிமாறலாமே... நன்றி. ;-)

Matangi Mawley சொன்னது…

Higgins- avargaloda sangeethaththa polave unga ezhuththum ennai rombave kavarnthathu, sir-ji!

Around `95... `96 la thaan naan enga appa-voda cassette collection-lernthu Higgins avargaloda cassette onna kandu pidichchen. think oru thiruvaiyyaaru kutcheri recording, athunnu. avar kitta yaaro etho keppaa-- avar- "Beshaa"nnu bathil solluvaar. Record aakirunthuthu... "Beshaa" nnu sollra ellaaraiyume enakku romba pidikkum. "daarini thelusukondu" thaan 1st-a naan avar paadi ketta paattu. ananda bhairavi-la kooda avar niraiyaa paadina paattu onnu irukku. paadina vitham- "Beshaa"-vellaam paaththappo- yaaro Degree coffee-nnu thaan ninaichchen. appa solli thaan avar American-nu theriyum.

avaroda maraivu paththi neenga ezhuthirukkara vitham- it made me feel heavy!

Lakshmi சொன்னது…

நான் கூட ஹிக்கின்ஸ்பாகவதர் பாட்டு சின்னவயதில் கேட்ட நினைவு இருக்கு. பதிவுக்கு நன்றி.

raji சொன்னது…

பதிவைப் படித்ததும் நானும் எனது சிறுவயது ரேடியோக்கால
நினைவுகளுக்கு சென்று விட்டேன் ஜி.

மற்றுமொரு தகவல் நான் பிறந்த ஊர் ராஜபாளையம்தான்.

ஹிக்கின்ஸ் இசைத்தட்டுகளில் கேட்டிருக்கிறேன்.
ஆனா ரொம்பநாள் வரையில் அவரைப் பற்றி செய்திகள் எதுவும் எனக்கு தெரியாம
இருந்தது,அப்பறம் ஒரு தடவை கூகுள் மூலம் தெரிஞ்சுண்டேன்.

vasan சொன்னது…

/வானம் வெறித்திருந்தாலும் எங்கோ தொலைவில் டுமுடுமுவென உருட்டிக்கொண்டிருந்த../
எங்க‌வூரில் இதை 'மானம் குமுறுது' என்பார்க‌ள்.
ஜான் விப‌த்தின் இழப்பால் உங்க‌ளின் "ம‌ன‌க் குமுற‌லாய்"
இனி அது என்னுள் அலைய‌லாம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

கொஞ்சம் கரகரத்த குரல் அவருக்கு! நானும் கேட்டிருக்கிறேன்.. நன்றாக இருக்கும்..அது சரி.. உங்க குரலே சூப்பரா இருக்கே..அந்த குரல் ‘கனத்து’க்கு பைரவியிலோ..தோடியிலோ ஒரு அமர்க்களமாய் ஆலாபனை பண்ணலாம்.

சிவகுமாரன் சொன்னது…

ஆச்சர்யம் தரும் செய்தி
தேடி தேடி ரசித்திருக்கிறீர்கள்.
ஆனாலும் எனக்கு இசைஞானம் போதாது.
ஹிக்கின்ஸ் பற்றியெல்லாம் தெரியாது. சிறுவயதில் ரேடியோவில் இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் என்னைக் கவர்ந்தவை. அப்புறம் சரோஜ் நாராயண் சுவாமியின் செய்திகள். (அவர் ஆணா பெண்ணா என்று எங்களிடையே எழுந்த சந்தேகத்திற்கு இன்று வரை பதிலில்லை என்னிடம் )

இன்றைய கவிதை சொன்னது…

அந்தக்காலத்துக்கு எங்களையும் சேர்த்து இழுத்துச்சென்றுவீட்டீர்கள் அருமை சுந்தர்ஜி

எனக்கு அந்த நாட்கள் நினைவில் அழியாதது

சந்தோஷம் என்னன்னா எங்கள் தாத்தாவுக்கு பூர்வீகம் ராஜபாளையம் தான் இப்பவும் வருடத்துக்கு ஒரு முறை மடவர் வளாகம் வைத்தீஸவரனையும் திருப்பதி வெங்கடாஜலப்தியையும் அந்த ஆண்டாளையும் தரிசிப்பது எங்கள் வருடாந்திர வழக்கம்

மிக்க சந்தோஷம்

நன்றி
ஜேகே

கிருஷ்ணப்ரியா சொன்னது…

மனசுக்குள் அழியாத கோலமாய் அமிழ்ந்து கிடக்கும் எத்தனையோ நினைவுகளை உங்கள் பதிவு அசைத்துப் பார்க்கிறது ஜீ.. . சரோஜ்
நாராயணசாமியின் குரலுக்கு எங்கள் வீடே ரசிகர்களாய் இருந்திருக்கிறோம்.... என் பால்ய காலத்துக்குள் சென்று வந்தேன் உங்கள் பதிவைப் படித்ததும்... நன்றி ஜீ....

Ramani சொன்னது…

உன்னதங்களின் உச்சத்தைக்காண
அனுபவிக்க உங்கள் பதிவுடன்
தொடர்ந்து நடந்தாலே போதும் போல உள்ளது
தொடர வாழ்த்துக்கள்

V Mawley சொன்னது…

06 -02 -11 அன்று சென்னை மைலாப்பூர் சாஸ்திரி ஹாலில் , திருச்சி சங்கரன்
( மிருதங்கம் ) அவர்கள் தனது இசைப்பயணத்தை பற்றிய நினைவலைகளை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார் ; அப்போது ஜான் ஹிக்கின்ஸ் தான் , அவரை
U S -ல் ஒரு universityl -ல் Music Dept - ல் நல்ல position இருப்பதாக கூறி அழைத்து சென்றதாகவும் , பின்னாட்களில் ஒருமுறை அவரிடம் , அவருக்கு பக்க வாத்யம் வாசித்த பலர் இருந்த போது, குறிப்பாக தன்னை ஏன் அழைத்தார் , என்று வினவியபோது , ஹிக்கின்ஸ் கூறிய பதில் , " that was my good -fortune "....

V Mawley

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒரு உயர்வானில் சுழலும் கழுகு போல் என்னை வட்டமடித்துக் கொண்டிருந்தன அவர் ஒரு அமெரிக்கர் என்ற தகவலின் ஆச்சர்யத்தோடு .//
பதிவுக்கு நன்றி.

பத்மா சொன்னது…

ஆம் அன்று ஜான் ஹிக்கின்ஸ் ஒரு ஆச்சர்யம் தான் ...அண்ணாமலை பல்கலைகழகத்தில் இசை துறையில் பாடாதவர்களே இல்லை அப்பொழுது ..என் அதிர்ஷ்டம் அவர் பாடியபோது அவர் கச்சேரி நேரில் கேட்டிருக்கிறேன் ..
பிரிட்டிஷ் உச்சரிப்புடன் அவரை அறிமுகப் படுத்திய என் பாட்டி நினைவுக்கு வருகிறார்..
மற்றும் வேஷ்டி சட்டையில் கம்பீரமான ஹிக்கின்சும் ..
பி கு ...நான் மிகவும் சின்ன பெண் அப்போது ..:))

இரசிகை சொன்னது…

//
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராஜபாளையத்தின் அருகே தளவாய்புரம் என்ற சிற்றூரின்
//

sir...

ithuthaan yennoda ooru...:)

இரசிகை சொன்னது…

m.......

1983-la thaan nan pirakkave seithen.

neenga irunthappo,naan ooril illa...:)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...