29.3.11

லீலை.


























1.
எப்போதுதான்
நிறுத்துமோ

ஒரு தடவை இப்பக்கமும்
மறு தடவை அப்பக்கமும்

சாய்வதை
அந்த பொம்மையும்-

இல்லாத எதிரியோடு
சண்டையிடுவதை
அந்தக் குட்டி நாயும்?

2.
போர்த்தி உறங்கும்
மகனிடமிருந்து

பிரித்தெடுக்க
முயல்கிறேன்
உறக்கத்தின் செதில்களை.

மூடியிருக்கும் கண்களில்
சிரிப்புடன் தொடர்கிறது
கனவுகளின் பீழைகள்.

14 கருத்துகள்:

ஹ ர ணி சொன்னது…

லீலைகள் யாவும் கடவுளின் லீலைகள். குழந்தைகள் கடவுளின் நகல்கள். அனுபவிக்கத்தகுந்த வாழ்க்கையின் அனுபவிக்கத்தகுந்த பதிவு சுந்தர்ஜி.

Nagasubramanian சொன்னது…

superb

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வாழ்வியலை நன்கு ரசித்து எழுதியுள்ள ஒரு அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

[”தொந்தி” பார்க்க வாங்க]

அன்புடன் அருணா சொன்னது…

ஆஹா பூங்கொத்து!

க ரா சொன்னது…

fantastic sundarji :)

நிலாமகள் சொன்னது…

தேடிச் சோர்ந்த கண்களில் தென்பட்டது குழந்தையின் நிச்சலன உறக்கம் போன்ற கவிதைகளின் ஊர்வலம்...

மோகன்ஜி சொன்னது…

சாயும் பொம்மையும் இல்லாத எதிரியோடு சண்டையிடும் குட்டிநாயும் அந்த பிஞ்சு மனத்தில் என்னென்ன யோசனைகளை நிகழ்த்துகின்றன என்பதை யாரறிவார்..

கனவுகளைக் கலைப்பது மூர்க்கம் எனத் தோன்றுகிறது. அது 'பிஞ்சா'யினும், 'பெருசா'யினும்...

'பச்ச மொழகா'யை இன்னும் பார்க்கவில்லையே நீங்கள் ?

vasan சொன்னது…

நாய் குட்டியோ, சாயும் பொம்மையோ,
சம‌னம் இல்லையெனில் சாய்த‌ல் தான் விதி.
போர்த்தித் துயிலும், ம‌க‌னின் சிரிக்கும் க‌ண்ணின்,
க‌ன‌வுப் பீழையிலும் க‌விதை வித்தெடுக்கும்,
வித்த‌க‌க் க‌விதான் நீங்க‌ள் சுந்த‌ர்ஜி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஆஹா..அருமை!!

G.M Balasubramaniam சொன்னது…

THAVIRKKA MUTIYAATHA KAARANANGALAAL ENNAAL SIRITHU KAALAM VALAIPPAKKAM VARA MUTIYAVILLAI. INNUM SILA NAATKKAL AAKALAAM. KAVITHIKKAANA KARUVUM ATHANAI VELIKKONTU VARUM VITHAMUM ARUMAI SUNTHARJI. VAAZHTHTHUKKAL.

RVS சொன்னது…

லீலை அருமை..
மஹாலீலை பற்றியும் எழுதுங்கள் ஜி! ;-))

ரிஷபன் சொன்னது…

சபாஷ் சுந்தர்ஜி..

ஹேமா சொன்னது…

பொம்மையாயிருந்தாகும் சரி,பையனாயிருந்தாலும் சரி வாழ்வின் லீலைகளை அவர்களிடமிருந்தே பகிர்ந்து தருகிறீர்கள் சுந்தர்ஜி....பிடிச்சிருக்கு !

சிவகுமாரன் சொன்னது…

பலராலும் கவனிக்கப்படாத வாழ்வின் சுவாரசியமான பக்கங்கள் உங்கள் கண்களில் மட்டும் எப்படி பட்டுத் தெறித்து கவிதையாகிறது சுந்தர்ஜி?
அந்த நிலைகொள்ளா பொம்மையும், சண்டையிடும் குட்டி நாயும் அருமை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...