10.3.11

மதுவந்தியின் தேன்


ஒளியின் கிரணங்கள் இருளுடன் கலக்கத் துவங்கும் ஒரு பொன்மாலையின் துயர்சூழ் பொழுதில் ஆடுகளை மேய்த்தபடி மலையடிவாரத்தின் சரிவுகளில் தளர் நடையுடன் ஒரு பெரும் புழுதிப் படலமும் காய்ந்த மண்ணின் நெடியும் சூழ்ந்து படரச் சரிகிறேன் அந்த மரத்தின் வேர்களில். நிசப்தத்தின் ஆழத்தில் மரத்திலிருந்து உதிரும் இலைகள் சலசலப்பை உண்டுபண்ணுகின்றன.

ஆடுகள் அத்தனையும் இப்போது அதனதன் கிடையில் தங்கள் மேமேயுடன் காச்மூச் தும்மல்களுடன் அமைதியடையத் துவங்குகின்றன. எல்லோரும் உறக்கத்தின் பள்ளத்தில் வீழ்ந்த பின் எட்டிப்பார்க்கும் கள்வனைப் போல் வெளிக்கிளம்புகிறது பௌர்ணமி நிலவின் மதுவும்-எங்கிருந்தோ மிதந்து வரும் கிளர வைக்கும் இசையும்.

என் ஆன்மாவைத் தின்னும் மதுவந்திக்கும் மௌனத்தின் சாலையில் வழுக்கியபடிக்குச் செல்லும் பால்நிலாவுக்கும் துயரைக் கிளப்புதலில் பெருத்த வித்தியாசமில்லை. என்றோ காதலித்த அவளை நினைவு படுத்தியும் மறக்கவைத்தும் கொல்லும் சாரங்கியின் சுருள் இசை. பார்வையற்றவன் தொட்டுணரும் ப்ரெய்லியாய் என் காதுகளின் துணையால் தேடும்போது இசையின் மொழியை உணருகிறேன்.

நந்தா நீ என் நிலா என ஏங்கும் பாலுவின் குரலிலும் கண்டநாள் முதலாய்க் காதல் பெருகுதடி என்று காதலைச் சிந்தும் சுதாவின் குரலிலும் இளஞ்சோலை பூத்ததா என்ற மற்றொரு பாலுவின் பாட்டிலும் இலக்கணம் மாறுதோ என்ற காதலின் மென்மையைக் குழைத்த வரிகளிலும் வானவில்லே வானவில்லே என்று மயக்கும் ரமணாவில் வந்த வரிகளிலும் ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற ஈஸ்வரியின் ரகஸ்யக் குரலிலும் என்னுள்ளில் எங்கோ வின் ஜீவனை உருக்கும் வாணியின் குரலிலும் ஒரே மதுவந்தி எனும்போது தடுமாறிச் சரிகிறேன்.

புரந்தரதாஸின் நரஜென்ம பந்தாகே நாளிகே இதுவாகே என்ற வரிகளின் பூச்சிலும் பாரதியின் நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடியிலும் இந்த மதுவந்திதான் நிறைந்திருக்கிறாள் என்றும் நினைத்தபடியே ஒரே நேரத்தில் பரிபூர்ண நிம்மதியையும் இடையூறையும் தரும் மதுவந்தியின் வேஷத்தை வியந்தபோது கிடையின் எல்லா ஆடுகளும் உறங்கியிருந்தன.

வேகவைத்த மரவள்ளிக் கிழங்கில் உப்பைத் தூவி அதைச் சாப்பிட்டபடியே உறக்கம் பறித்த மதுவந்தியுடன் வயல்வெளியின் திறந்த வானைப் போர்த்தியபடி எல்லா இரவுகளிலும் நான் உலவிக் கொண்டிருப்பதை யாரேனும் நீங்கள் கண்டதுண்டா?

26 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//வேகவைத்த மரவள்ளிக் கிழங்கில் உப்பைத் தூவி அதைச் சாப்பிட்டபடியே உறக்கம் பறித்த மதுவந்தியுடன் வயல்வெளியின் திறந்த வானைப் போர்த்தியபடி எல்லா இரவுகளிலும் நான் உலவிக் கொண்டிருப்பதை யாரேனும் நீங்கள் கண்டதுண்டா?//

அருமையான வரிகள்.

ஆனால் நீங்கள் மட்டும் அவள் நினைவுகளில் உலவிக்கொண்டிருந்தால் யார் பார்க்கப்பிரியப்படுவார்கள்?.

மதுவந்தியுடன் உலவினாலும் திருட்டுத்தனமாகவாவது பார்க்க ஒரு சிலராவது ஆசைப்படலாம்.

ஆமாம், யார் சார் அந்த மதுவந்தி?
பெயரிலேயே கிக் உள்ளதே!

Matangi Mawley சொன்னது…

Madhuvanthi- ennoda one of the favourite raagas. ennoda 1st madhuvanthi anubhavam enga "thala","Deivam..", "God","ma devudu"-- Rahman-oda "ottagaththa kattikko" thaan. :) ofcourse ketta pothu madhuvanthi-nnu theriyaathu. but such a brilliant usage... 1st time madhuvanthi yoda parichchayam aanathu- music class la oru purandaradasar paattu moolamaa thaan-- "bandanene ranga..". itha kutcheri-la laam nan madhuvanthi la kettathe illa. appo thaan intha raagaththinodaiya per therinjuthu.

saarangi- it pulled down my 'ever-flying' mind. took me on a journey into a windy desert-- endless search through the middle of nowhere... inexplicable thoughts...

neeenga mention pannirukkara oru sila songs naan kettathilla. ippo thaan 1st time kekkaren... 'ninnaiye rathi'- naan kalyana vasanthaththila thaan kettirukken. if u have the madhuvanthi version- pl. pass along the link, sir-ji!

"en ullil engo" ngara IR -voda song is also one of my favs. in madhuvanthi.

brilliantly worded....

RVS சொன்னது…

மதுவந்தி மயக்கியது...
நந்தா. நீ என் நிலா.. என்ற மிக மிக அற்புதமான மது என்னை மயக்கியது..
எஸ்.பி.பி யின் பிரம்மாண்டமான கலெக்ஷன் ஒன்று என்னிடத்தில் உள்ளது... அதில் இருக்கும் இந்தப் பாடல் கேட்டு கேட்டு தேய்ந்துவிட்டது..
நீங்கள் ஏன் வாரம் ஒரு ராகம் என்று தலைப்பிட்டு இதுபோல் எல்லோரையும் அசத்தக்கூடாது. இது இந்த இசை பித்தனின் வேண்டுகோள். நன்றி. ;-)))

இராமசாமி சொன்னது…

இசையென்னும் இன்ப வெள்ளம்

ஹேமா சொன்னது…

நீங்கள் உலவும் இடத்தைப் பங்குபோட்டு எங்களுக்கும் தந்துவிட்டு என்னைக் கண்டீர்களா என்கிறீர்களே சுந்தர்ஜி !

G.M Balasubramaniam சொன்னது…

நல்ல இசையுடன் அழகிய பொருள் சார்ந்த வரிகளுடன் காற்றில் தவழ்ந்து வரும் பாடல்களை நானும் ரசிப்பேன். அதன் நதிமூலம் ரிஷி மூலம் எதுவும் தெரியாது. தெரிந்து ரசிப்பதன் சுகம் உங்கள் வரிகளின் மூலம் புரிகிறது. I THINK IT IS TOO LATE FOR ME TO LEARN AND APPRECIATE IN YOUR WAY. I ENVY YOU SUNTHARJI.

santhanakrishnan சொன்னது…

ஆழ்மனதுக்குள் புதைந்து
கிடந்த நினைவுகளைக்
கிளறுகிறது உங்கள் இடுகை.
எங்கு சாரங்கி கேட்டாலும்
ப்ரகாஷ் ஞாபகம் வந்து
விடுகிறது. முப்பது வருடங்களுக்கு
முன்பு கீழவீதியில்
அந்த முட்டைக் கண்களை
உருட்டி உருட்டி
தாடியை உருவி சொன்னவைகள்
மீளுருவம் பெறுகின்றன.
நன்றி சுந்தர்.

மோகன்ஜி சொன்னது…

மதுவந்தி மேவிய பட்டியலை அசைபோடுவதா இல்லை உங்கள்
உலவிலின் பின்னே யாதும் சுவடுபடாமல் பின்தொடர்வதா என்று புரியாமல் திகைத்து நிற்கிறேன்.

ஆர்.வீ.எஸ் கருத்தை வழிமொழிகிறேன்

ராகவன் சொன்னது…

இசை பற்றிய பதிவுகள் எனக்கு எப்போதும் பிடிக்கும்... மதுவந்தியும், பிரவாஹமும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது... நிறைய எழுதுகிறீர்கள் சுந்தர்ஜி. சந்தோசமாய் இருக்கிறது... எனக்கு சங்கீதம் பிடிக்கும், அதனால் எனக்கு பாட பிடிக்கும்... அதே நேரத்தில் பாடுபவர்களை கண்டால், நான் விட மாட்டேன்... பாட சொல்லி வற்புறுத்துவேன்... உங்களிடம் அதே உரிமையில் கேட்கலாம்... இது போல தொடர்ந்து பாடுங்களேன் என்று...
வானை போர்த்தி கிடைக்கும் வயல்வெளி... நல்லாயிருந்தது... என்னால் எழுதவே முடியவில்லை... நேரம் இல்லாமல்... தலையை தின்கிறது வேலை. மிச்சமிருந்தால் பார்க்கலாம்... அதுவும் சமீபமாய் நீங்கள்... வரவேயில்லை என் வலைப்பூவிற்கு... ஏதோ காரணம் இருக்கிறது என்று தெரிகிறது... அது சரியான பின் வந்து போங்கள் என் வலைப்பூவிற்கும்...

அன்புடன்
ராகவன்

சிவகுமாரன் சொன்னது…

நான் இட்ட பின்னூட்டம் என்னவாயிற்று ?

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி! பழைய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. ரவிசங்கரின்சிதார் அல்லாராக்காவின் தபேல - அந்த இரண்டு சங்கீத ராட்சசர்களும்- இசையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர்கள். இருவரும் இணந்து வாசித்துக் கோண்டிருக்கும் போது அல்லாராக்கா கயை உயரே தூக்கிவிடுவார்.ரவி வாசித்துக்கொண்டிருப்பார். சிதாரிலிருந் து தபேலாவின் ஒலி எழும்பும். சிறிது நெரத்தில் ரவி கையினை உயர்த்திவிடுவார். அல்லாராக்காவின் தபேலாவிலிருந்து சிதாரின் ஒலி எழும்பும் ஐயா! சுருதியும்,லயமும் அப்படி இணைந்து நீற்கும்.உங்களிடம் அந்த ஒலிப்பேழை இருந்தால் இடுகையில்போடும்---காஸ்யபன்

சிவகுமாரன் சொன்னது…

வியப்பாய் இருக்கிறது காஷ்யபன் அய்யா சொன்னது. அதையெல்லாம் கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. கிடைக்குமா ?

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி! சௌராசியா,ஷிவ் வர்மா, ஜாகிர் ஹூசைன் ஆகியோர் இளையராஜாவின் இயக்கத்தில் வெளியிட்ட How to name it, Nothing but Wind கேட்டிருக்கிறீர்களா? Pl.do it ---காஸ்யபன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மதுவந்தி மயக்கியது! நல்ல இசை! “நந்தா என் நிலா, நின்னையே ரதியென்று” கேட்டுக் கேட்டு ரசித்த பாடல்கள். பகிர்வுக்கு நன்றி ஜி!

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் எழுத்துக்களில் உள்ள குறும்பை ரசித்தேன் கோபு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

நின்னையே ரதியென்று யேசுதாஸின் குரலில் வெகுநாட்களுக்கு முன் கேட்டது. லிங்க் கிடைத்தவுடன் இணைக்கிறேன் மாதங்கி.

விடுபட்ட என்னுள்ளில் எங்கோ வையும் சேர்த்துவிட்டேன் மாதங்கி. அது என்னோட ஆல் டைம் ஃபேவரிட்டும் கூட,

ரசனைக்கு நன்றி மாதங்கி.

சுந்தர்ஜி சொன்னது…

நிலாவானதால் தேய்ந்து போனதோ அந்தப் பாடல்.

வாரம் ஒரு ராகம் என்ற ஒரு கட்டுப்பாட்டுக்குள் நான் வருவேனா தெரியவில்லை. தோன்றும் போது எழுதி உங்கள் பித்தத்தைத் தணிக்க முயல்கிறேன் ஆர்விஎஸ்.

சுந்தர்ஜி சொன்னது…

அதில் நீந்த வந்தமைக்கு நன்றி ராம்ஸ்.

சுந்தர்ஜி சொன்னது…

ஒரு மயக்க நிலை.என்ன சொல்வது என்று தெரியாத போதையில் உளறிய வரிகள் அவை.கண்டுகொள்ளாதீங்கோ ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

பொறாமைப் படுவது பிடித்திருக்கிறது பாலு சார்.

ஆனாலும் கற்பதற்கு வயதென்ன தடை என்று நான் உங்களுக்குச் சொல்லவா?

கேட்டுக்கொண்டே இருங்கள் இசையை.இசைந்து விடுவீர்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

சாரங்கியையும் ப்ரகாஷையும் பிரித்துப் பார்க்கமுடியுமா மதுமிதா? என்னவொரு நாட்கள் அவை?

அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே!

சுந்தர்ஜி சொன்னது…

சாய்ஸில் விட்டுவிடுங்கள் ஒன்றை மோகன்ஜி.(வெள்ளாட்டுக்குச் சொன்னேன்)

உங்கள் ரசனையை அறிவேன். இரண்டையுமே செய்யுங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

வாத்ஸல்யமான வார்த்தைகளுக்கு உங்கள் பாணியிலேயே கைகளைப் பிடித்துக்கொள்ள நீட்டுகிறேன் ராகவன். கென்யா தொலைவாகத் தெரியவில்லை இப்போது.

நேரமின்மைதான் காரணம் ராகவன். சீக்கிரம் வந்து பொறுமையாப் படிக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நானும் பார்க்கவில்லை சிவா. நம்மிருவருக்கு இடையில் தொலைந்தாலும் இழப்பு எனக்குத்தான்.

சுந்தர்ஜி சொன்னது…

அற்புதமான ரசனை காஸ்யபன் சார். நான் நிறைய ரவிஷங்கரின் கச்சேரிகளைக் கேட்டிருந்தாலும் நீங்கள் சொன்ன கச்சேரியைக் கேட்டதில்லை. வலையில் தேடுகிறேன். கிடைத்தால் பகிர்கிறேன்.

ஹௌ டூ நேம் இட் மற்றும் நத்திங் பட் விண்ட் இரண்டும் கேட்டதுண்டு. விரைவில் பகிர்கிறேன்.

நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

மதுவந்தியில் மயங்கிய வெங்கட்டுக்கு ஒரு ஓ போடுகிறேன்.

நன்றி வெங்கட்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...