2.5.11

ஓர் அறிமுகம்-கமலாதாஸ்
எனக்கு அரசியல்
தெரியாது.
ஆனாலும்
அதிகாரத்திலிருக்கும்
அவர்கள் பெயர்களை
அறிவேன்.
நேருவில் தொடங்கும்
அவர்களை-
வாரத்தின் கிழமைகள்
போலவோ-
மாதத்தின் பெயர்கள்
போலவோ-
மீண்டும் மீண்டும்
சொல்வேன்.

நான் ஒரு
இந்தியன்(ள்).
பழுப்பு நிறம்.
மலபாரில் பிறந்து
மூன்று மொழிகளில்
பேசி-
இரண்டில் எழுதி-
ஒன்றில் கனாக்
காண்கிறேன்.

“ஆங்கிலத்தில்
எழுதாதே.
அது உன்
தாய்மொழியல்ல”
எனச் சொன்னார்கள்
அவர்கள்.

விமர்சகர்களே-
நண்பர்களே-
எனைப் பார்க்கவரும்
மருமகன்களே-
நீங்கள் எல்லோரும்
என்னைத் தனியே
விடக் கூடாதா?
ஏன் நான் விரும்பும்
மொழியில்
என்னைப் பேசவிட
மறுக்கிறீர்கள்?

நான் பேசும் மொழி
எனதாகிறது.
அதன் வடிவங்கள்-
வினோதங்கள்
எல்லாம் எனதே.
எனது மட்டுமே.

பாதி ஆங்கிலத்திலும்
பாதி இந்திய மொழியிலும்
பேசுவது
வேடிக்கையென்றாலும்
அதுதான் உண்மையானது.
என்னைப் போல
அதுவும்
இருக்கிறதைப்
பார்த்ததில்லையா?

என் மகிழ்ச்சிக்கும்
என் செயல்களுக்கும்
என் நம்பிக்கைகளுக்கும்
அது குரல் கொடுக்கிறது.

காக்கைக்குக்
கரைதல் போலவும்-
சிங்கத்திற்குக்
கர்ஜனை போலவும்
எனக்கு அது.

அது மானுட மொழி.
வேறெங்கும்
காண இயலாத
பார்க்கிற கேட்கிற
விழித்திருக்கிற
மனதின் மொழி.

புயலில் சிக்கிய
மரத்தினுடையது போலவோ-
பருவகால மேகமூட்டங்களுடையதைப்
போலவோ-
மழையினுடையதைப் போலவோ-
நிலைத்த முணுமுணுப்புடன்
பற்றி எரியும்
மயானத் தீயினுடையதைப்
போலவோ-
செவிட்டு குருட்டு
மொழியில்லை.

நான் சிறுமியாய்
இருந்தேன்.
நான் உயரமான போது
என் பாகங்களும்
வளர்ந்ததாலும்
ஓரிரு இடங்களில்
மயிர் முளைத்ததாலும்
நான் வளர்ந்துவிட்டதாகச்
சொன்னார்கள் அவர்கள்.

வேறென்ன கேட்க எனத்
தெரியாமல்
அன்பைக் கேட்ட போது
ஒரு
பதினாறு வயது
இளைஞன்
என்னைப்
படுக்கையறையில்
தள்ளிக்
கதவைப் பூட்டினான்.
அவன் என்னை
வீழ்த்தாவிட்டாலும்
என் துயரமான பெண்ணுடல்
வீழ்த்தப்பட்டு விட்டதாகவே
எண்ணியது.
என் மார்பகங்களின்-
பிற உறுப்புகளின் பாரம்
நோகடித்தது என்னை.
வருத்தகரமாய்
குறுகிப் போனேன்
நான்.

பின்னால்
ஒரு சட்டையையும்
என் சகோதரனின்
கால்ச்சட்டையையும்
அணிந்து
என் முடியைக் குட்டையாக
வெட்டிக்கொண்டு
என் பெண்மைத் தன்மையை
மறந்தேன்.
’புடவையை உடுத்து.
பெண்ணாக
மனைவியாக இரு.
பூ வேலைப்பாடுகள் செய்.
சமைப்பவளாக-
வேலைக்காரர்களுடன்
சண்டையிடுபவளாக இரு.
அடங்கிப் போ என்னவளே’
-சொன்னார்கள்.

‘சுவர்களில் உட்காராதே.
திரை போட்ட ஜன்னல்களின்
வழியே எட்டிப்பார்க்காதே.
அமியாகவோ கமலாவாகவோ
அல்லது
இன்னும் நல்லதாக
மாதவிக்குட்டியாகவோ இரு.’
பாத்திரத்தையும்
பெயரையும் காலம்தான்
தீர்மானிக்கவேண்டும்.

‘எல்லோரையும் ஏமாற்றும்
விளையாட்டுக்கள்
விளையாடாதே.
*ஒன்றொடொன்று
தொடர்பில்லாத
பைத்தியத்தோடோ-
அடக்கமுடியாத
*பெண்பித்துப் பிடித்தவனோடோ-
அலையாதே.
காதலால் கைவிடப்பட்டால்
கடுமையாக அலறாதே’.
-சத்தமிட்டார்கள்
பிரிவினையாளர்கள்.

நான் ஒருவனைச்
சந்தித்தேன்.
காதலித்தேன்.
அவனை ஏதும்
பெயர் கொண்டு
அழைக்காதீர்.
காதலுக்காய் அலைகிற
என்னைப் போல
பெண்ணுக்காய் அலைகிற
சராசரி ஆண்தான் அவன்.
அவனில்
பசி கொண்ட ஆறுகளின்
பரபரப்பு.
என்னில் சோர்வற்ற
சமுத்திரத்தின் காத்திருப்பு.

நான் பார்க்கிற
எல்லோரிடமும்
யார் நீ? எனக் கேட்டால்
நான்தான் என்ற பதில்.
எந்த இடத்திலும்
எல்லா இடத்திலும்
தன்னையே நான்
என
அழைத்துக்
கொள்கிறவர்களைத்தான்
பார்க்கிறேன் இந்த
பூமியில்.

அவன்
உறையில் இறுக்கமாய்ப்
பொருந்திய வாளைப் போல
அடைக்கப்பட்டிருக்கிறான்.
வினோதமான
நகரங்களின் தங்குமிடங்களில்
நள்ளிரவில் தனியாய்க்
குடிக்கும் ’நான்’தான் அது.
சிரித்ததும் நான்.
காதலித்ததும் நான்.
பின்பு வெட்கியதும்
தொண்டையில் ஏதோ
குறுகுறுக்க
செத்துக்கிடந்ததும் நானே.

நானே பாபி.
நானே யோகி.
நானே விரும்பப்பட்டவளும்
வெறுக்கப்பட்டவளும்.
எனக்கு உங்களுடையதல்லாத
மகிழ்ச்சியில்லை.
வலிகளுமில்லை.
நானும் என்னை
’நான்’ எனச் சொல்வேன்.

*Schizophrenia-எண்ணத்திற்கும் செயலுக்கும் உணர்விற்கும் தொடர்பற்ற மூளைவியாதி.

*Nympho-பெண்பித்தன்.

இந்த தடவை ப்ரசுரமாகாமல் தோற்றுப்போன வெற்றிகரமான மொழிபெயர்ப்புக்கவிதை உங்களின் ரசனைக்காய்.

கமலாதாஸ் கேரளாவின்-இந்தியாவின் பெண்குரலாய் ஒரு ஆண்குரலின் மொழியில் ஒலித்த ஒரு மாறுபட்ட சிந்தனாவாதியும் கவிஞரும்.

இவரின் இந்தக் கவிதையை 1986ல் மொழிபெயர்த்து எல்லா இதழ்களுக்கும் அனுப்பி வெற்றிகரமாய் பூமராங் போலத் திரும்பி வந்து என்னிடமே போத்தலில் அடைபட்ட பூதமாய் உறங்கியபடிக் கிடக்க இக்கவிதையை உங்களின் வாசிப்பனுபவத்துக்காக இங்கே தந்திருக்கிறேன்.

இந்த மொழிபெயர்ப்பை சிலாகித்து ப்ரகாஷ் எனக்கு ரெண்டு பால் சர்பத்துகள் வாங்கிக்கொடுத்த இனிமை என் நாக்கின் சுவைநரம்புகளில் இன்னமும்.

நீங்களும் படிக்கிறீங்கதானே இதை ப்ரகாஷ்?

ஒரு ஒப்பிடுதலுக்காக இதன் மூலமும் இணைத்திருக்கிறேன்.

I don’t know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I amIndian, very brown, born inMalabar,
I speak three languages, write in
Two, dream in one.
Don’t write in English, they said, English is
Not your mother-tongue. Why not leave
Me alone, critics, friends, visiting cousins,
Every one of you? Why not let me speak in
Any language I like? The language I speak,
Becomes mine, its distortions, its queernesses
All mine, mine alone.
It is half English, halfIndian, funny perhaps, but it is honest,
It is as human as I am human, don’t
You see? It voices my joys, my longings, my
Hopes, and it is useful to me as cawing
Is to crows or roaring to the lions, it
Is human speech, the speech of the mind that is
Here and not there, a mind that sees and hears and
Is aware. Not the deaf, blind speech
Of trees in storm or of monsoon clouds or of rain or the
Incoherent mutterings of the blazing
Funeral pyre. I was child, and later they
Told me I grew, for I became tall, my limbs
Swelled and one or two places sprouted hair.
WhenI asked for love, not knowing what else to ask
For, he drew a youth of sixteen into the
Bedroom and closed the door, He did not beat me
But my sad woman-body felt so beaten.
The weight of my breasts and womb crushed me.
I shrank Pitifully.
Then … I wore a shirt and my
Brother’s trousers, cut my hair short and ignored
My womanliness. Dress in sarees, be girl
Be wife, they said. Be embroiderer, be cook,
Be a quarreller with servants. Fit in. Oh,
Belong, cried the categorizers. Don’t sit
On walls or peep in through our lace-draped windows.
Be Amy, or be Kamala. Or, better
Still, be Madhavikutty. It is time to
Choose a name, a role. Don’t play pretending games.
Don’t play at schizophrenia or be a
Nympho. Don’t cry embarrassingly loud when
Jilted in love … I met a man, loved him. Call
Him not by any name, he is every man
Who wants. a woman, just as I am every
Woman who seeks love. In him . . . the hungry haste
Of rivers, in me . . . the oceans’ tireless
Waiting. Who are you, I ask each and everyone,
The answer is, it is I. Anywhere and,
Everywhere, I see the one who calls himself I
In this world, he is tightly packed like the
Sword in its sheath. It is I who drink lonely
Drinks at twelve, midnight, in hotels of strange towns,
It is I who laugh, it is I who make love
And then, feel shame, it is I who lie dying
With a rattle in my throat. I am sinner,
I am saint. I am the beloved and the
Betrayed. I have no joys that are not yours, no
Aches which are not yours. I too call myself I.

15 கருத்துகள்:

Nagasubramanian சொன்னது…

சுந்தர்ஜி, அருமையான மொழி பெயர்ப்பு.
இது பிரசுரம் ஆகாதது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது :(

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. இத்தனை நல்ல கவிதை பிரசுரமாகவில்லை என்று நினைக்கும்போது கஷ்டமாகத் தான் இருக்கிறது ஜி!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான கவிதை. மொழிபெயர்ப்பும் அருமை.
சில சமயங்களில் நாம் சிறந்ததாக நினைத்து எதிர்பார்ப்பவை பிரசுரம் ஆகாமல் போவதுண்டு. அதே போல பிரசுரம் ஆகும் அனைத்தும் மிகச்சிறந்தவை என்றும் எனக்குத் தோன்றுவதில்லை. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒவ்வொரு நார்ம்ஸ் உள்ளது. ஒன்றில் ரிஜெக்ட் ஆவது மற்றொன்றில் உடனே பிரசுரம் ஆகும். ஒரே வேடிக்கை தான்.


பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

vasan சொன்னது…

அர‌சிய‌ல் தெரியாம‌ல், அர‌சிய‌ல்வாதிக‌ளை அனுக்க‌மாய் தெரிந்திருப்ப‌து ப‌ழக்க‌மில்லாத‌ (வெறி) நாய்க‌ளுட‌ன் அலைவ‌தற்கு ஒப்பாகும்.

க‌ல்லூரி காலத்திய‌ நண்ப‌ர்க‌ளுட‌ன் குடித்த பால்ச‌ர்ப‌த்தின் ருசி நாவிலிருந்து நெஞ்சுக்குப் போய்விட்ட‌து சுந்த‌ர்ஜி.

க‌ணையாழி எழுத்தாளாரா நீங்க‌ள்? நான் அத‌ன் வாச‌க‌த‌ள‌த்திற்கு கூட‌ அப்போது வ‌ந்ததில்லை. வார்த்தைக‌ளின் வ‌லிமையில் தெரிகிற‌து ம‌ண்ணின் வ‌ள‌மும், விதையின் வீரிய‌மும்.

மிருணா சொன்னது…

18 வயதில் ஆங்கிலத்தில் படித்த கவிதை. அழகாக நெருடல்கள் இல்லாமல் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். வடிவங்கள் என்பது திரிபுகள் என்பதாகவும், கதவைப் பூட்டினார்கள் என்பது பூட்டினான் எனவும் வரவேண்டும் என எண்ணுகிறேன். கவிதையை மொழி பெயர்ப்பதில் பல சவால்கள் உள்ளன. அவற்றை இயல்பாக கடந்துள்ள உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

RVS சொன்னது…

அடேங்கப்பா! என்ன ஒரு சரளமான மொழிப் பிரயோகம் ஜி! அற்புதம். மொழிபெயர்ப்பாக இருந்தாலும் நீங்கள் எழுதியது போலவே ஒரு உணர்வு. ;-))

சுந்தர்ஜி சொன்னது…

distortions என்கிற வார்த்தைக்கு முதலில் கசடுகள் அல்லது திரிபுகள் என்றே முதலில் தேர்வு செய்தாலும் கவிதையின் அமைதிக்காக வடிவங்கள் பொருத்தமாய் இருப்பதாய் ஓர் உணர்வு.

அடுத்தது அவர்கள் என்றே பேசிக்கொண்டுவரும் கவிதையில் அவன் என்கிற குரல் சற்று விலக்கமாகப் பட்டதால் பூட்டினானை பூட்டினார்கள் என்றே சமூகத்தின் குறியீடாகப் பார்த்தேன்.

ஒரு மொழிபெயர்ப்பு வெறும் பொருள் சொல்லும் அகராதியாய் மட்டும் மாறிவிடக்கூடாது என்பதிலும் மூலத்தின் பொருளிலிருந்து சிறிய விலக்கம் அதன் அழகைக் கூட்டினால் எடுத்துக்கொள்ளலாம் எனவும் நினைப்பதுண்டு நான்.

1986ல் யோசித்த சில கருத்துக்கள் மாறாமல் இன்னும் செல்லுபடியாவது வளர்ச்சியா தேக்கமா என்றும் புரியவில்லை.

ஆழ்ந்த ரசனைக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி மிருணா.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அவனில்
பசி கொண்ட ஆறுகளின்
பரபரப்பு.
என்னில் சோர்வற்ற
சமுத்திரத்தின் காத்திருப்பு.

பிரமீப்பூட்டும் பிரமாண்ட வார்த்தை பிரயோகம்!
பின்னலிட்ட பாரதியின் வாழ்க்கை பிரவாஹம்!!

தீந்தமிழில் தீட்டிய மொழிமாற்றம் !
கட்டாய திணிப்புகளுக்கு கழுவேற்றம் !!

வாழ்த்துக்கள் சுந்தர்ஜி............

rajasundararajan சொன்னது…

1) //WhenI asked for love, not knowing what else to ask
For, he drew a youth of sixteen into the
Bedroom and closed the door,//

2) //Don’t play at schizophrenia or be a
Nympho.//

இந்த இரு பகுதிகளின் மொழிமாற்றைத் தவிரப் பிற மொத்தமும் மிக நேர்த்தியாக இயன்றிருக்கிறது.

1) உங்கள் மொழிமாற்று, அவள் திருமண பந்தத்துக்குள் அடைக்கப்பட்டது போன்றதொரு தொனியை உண்டாக்குகிறது. ஆனால், அது கன்னிக் காதலின் கல்லடிபட்ட கதை அல்லவா?

2) இங்கொரு கூட்டாளியை இடைப்புகுத்தி அவளைச் சிறுபிள்ளையாக்குகிறீர்கள். ஆனால் அவள் கட்டறுத்தவள் என்பதினால் உற்ற சமூக அச்சத்தின் மீதான நக்கல் அல்லவா அது? அமி, கமலா, மாதவிக்குட்டி இன்னார் கேலிக்குள்ளாவதும் அதுவழியாகத்தானே பொருந்தி வரும்?

santhanakrishnan சொன்னது…

அமி,கமலா,மாதவிக்குட்டி,சுரையா.
சிலசமயம் ஒரு பெண் குஷ்வந்த்சிங்
என எனக்குத் தோன்றும்.
நிறைய பேர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
என்றாலும்.
மொழிபெயர்ப்பு ஏறக்குறைய
மூலத்திற்கு துரோகம் செய்யவில்லை.
மூலத்தையும் கொடுத்த துணிச்சலுக்கு
சபாஷ். இது ப்ரகாஷின் சிஷ்யருக்குமே மட்டுமே முடியும்.
வாழ்த்துக்கள் சுந்த்ர்.

சுந்தர்ஜி சொன்னது…

மீண்டும் வாசிக்கையில் திருமண பந்தம் என்கிற தொனி எழுவதாகவே தோன்றுகிறது ராஜு அண்ணா. மிருணா சொன்னதும் அதுதானோ என்று உணருகிறேன். திருத்தம் செய்து கொள்கிறேன்.

இரண்டாவது குரல் அமியை-மாதவிக்குட்டியைக் கட்டுப்படுத்தும் குரலாகவே எனக்கு ஒலிக்கிறது.

நன்றி ராஜு அண்ணா மற்றும் மிருணா.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

Well Done Well Done Well Done
Well Done Well Done Well Done
Well Done Well Done Well Done
Well Done Well Done Well Done
Well Done Well Done Well Done
Well Done Well Done Well Done
Well Done Well Done Well Done
Well Done Well Done Well Done
Well Done Well Done Well Done
Well Done Well Done Well Done
Well Done Well Done Well Done
Well Done Well Done Well Done

ஹ ர ணி சொன்னது…

தலைவணங்குகிறேன் தோழனே. அழுத்தமான நிறைவான மொழிபெயர்ப்பின் வழியாக கமலாதாஸை அறிந்திருந்த எழுத்திற்குச் சற்றும் குறையாமல் உங்களின் மொழிபெயர்ப்பு. ஞானக்கவிதையின் விளைநிலமாய் உங்களைப் பார்க்கிறேன். என்னுடைய குறையாத அன்பை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன். மறுபடியும் தலைவணங்குகிறேன் இந்தக் கவிதைக்காக.

Vel Kannan சொன்னது…

கைகளை கட்டி கொண்டு வேடிக்கை பார்க்கிறேன்
பவா, சுகுமாரன் மூ லமாக அறிந்த கொண்ட கமலா தாஸ்
என்றுமே வியந்து பார்க்கிறேன்.
சுந்தர் ஜி , மிருணா, ராஜூ அண்ணே ஆக அனைவரின் பகிர்வுக்கும் நன்றி

G.M Balasubramaniam சொன்னது…

கமலா தாஸ் ஒரு வினோத எழுத்தாளினி. அவரைப் பற்றிய எதிர்மறை விமரிசனங்கள்அநேகம். தமிழ் வாசிப்பவர்கள் அவரை அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் அவரது ஆங்கிலக் கவிதையின் உங்கள் மொழிபெயர்ப்பை நேர்மையாக வெளியிடும் உங்கள் குணம் எனக்குப் பிடித்திருக்கிறது. நான் சொன்னதை விட சொல்லாதது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator