I
இது மிகவும் அபூர்வமான ஓர் ஒலிப்பதிவு.
ஏசுதாஸின் ஆதார குருவான 1974ல் மறைந்த செம்பை வைத்யநாத பாகவதர் தன் சீடனின் 33வது பிறந்தநாளுக்காகத் தன் 78ஆவது வயதில் அவருடன் சேர்ந்து 1973ல் கொடுத்த கச்சேரி. எத்தனை அபூர்வமான பெரும் நேர்மையான குரு-சீட உறவின் சாட்சி இது?
ஏசுதாஸுடன் சேர்ந்து பாட ஆரம்பிக்குமுன் இந்த அறிவிப்பைக் கேளுங்கள்.
"இன்றைக்கு நம்முடைய தாஸின் 33வது பிறந்தநாள். அது சம்பந்தமாகத்தான் இன்றைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற கச்சேரி. அதன் விசேஷமாக இந்த வயலினை தாஸுக்குப் பரிசளிக்கிறேன். நிறைய கர்நாடக இசை பாடவேண்டும் என்கிற ஆசையில் இதை அவருக்குப் பரிசளிக்கிறேன். இந்த வயலினை ஏற்பாடு செய்தது நம்முடைய டி.வி.கோபாலக்ருஷ்ணன்” என்று சொல்லிவிட்டு சிறிது தணிந்த குரலில் இன்னொன்றும் சொல்லவேண்டும் என்று முணுமுணுத்தபடியே மிருதங்கத்தின் லயப் பரிசோதனை முடிந்தபின் “ரெடியா? தயவு செய்து சினிமாப் பாட்டு பாடவெண்டும் என்று கேட்கவேண்டாம். கடைசியில் உங்கள் விருப்பப்படி அவரைச் சில பாடல்கள் பாடச் சொல்கிறேன். அதுவரைக்கும் பொறுமையாய்க் கச்சேரியைக் கேளுங்கள்” என்று அவருக்கே உரித்தான வெளிப்படைத் தன்மையோடும் நகைச்சுவையோடும் அறிவித்து விட்டு ஏசுதாஸுடன் இணைந்து இந்தக் கச்சேரியைச் செய்தார்.
கச்சேரிக்கு மிருதங்கம் வாசித்தது டி.வி.கோபாலக்ருஷ்ணன்.
1973ல் கிட்டத்தட்ட இந்தியா முழுமைக்கும் ப்ரபலமாகிவிட்டிருந்தார் ஏசுதாஸ். மலையாளத்திலும் தமிழிலும் பல விருதுகள் சோட்டி ஸி பாத் மூலமாக ஹிந்தியில் அறிமுகம் என்றிருந்த காலகட்டம். அப்போதும் செம்பையுடன் அவர் கொண்டிருந்த மதிப்பும் ஏசுதாஸிடம் செம்பைக்கு இருந்த அன்பும் ஒப்பிடமுடியாதவை.
எத்தனை நினைவுகளையும் பண்புகளையும் ஒரே வரிசையில் காட்டும் நினைவலை இது? மனம் நிறைவால் தளும்புகிறது.
II
இன்று முதல் ப்ளாக்கரில் உள்ள அனைத்து URL முகவரிகளிலும் ஓரெழுத்து குறைந்திருக்கிறது. இனி .காம் இன்று முதல் .இன் என அறியப்படும்.ஆனாலும் .காம் முகவரியில் தட்டச்சினால் அது தானாகவே .இன்னுக்கு எடுத்துச் சென்றுவிடும். இனி உங்கள் முகவரி என்ன என்கிற கேள்விக்கு என்னைப் போல் sundargprakash.blogspot.in என்று சொல்லாமல் அவரவர்கள் முகவரியை காம் நீக்கி இன் சேர்த்துக் கொடுக்கவும்.

5 கருத்துகள்:
நன்றி
எனது நன்றியும் அன்பும்
suvaiyaana virunthu guru seedan pathivu. computer problem. sorry.
ஆஹா..
ஆஹா.... அருமையான விருந்து தான் இது....
நீங்கள் ரசித்ததை எங்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கு எனது நன்றி.
கருத்துரையிடுக