19.6.12

அமுதுமிழும் தமிழ்கீழ்க்கண்டவற்றைப் பதினெட்டு நிமிடங்களில் பொருத்தமாய்ப் பொருத்தவும். 

அ) கர்ணனின் இயற்பெயர் - மிருகண்டூயன்

ஆ) ஜபாகுஸூமம் - கிராம்பு

இ) வீணையில் உறையும் தெய்வம் - செம்பருத்தி

ஈ) மார்க்கண்டேயனின் தந்தை - அர்ச்சுனன்

உ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- வஸுசேஷன்

ஊ) தேவ குஸுமம் -  அபர்ணா.

எ) திருதராஷ்டிரனின் ஒரே பெண் - கண்டகி

ஏ) சாளக்கிராமம் - கச்சபி

ஐ) இலையையும் உண்ணாதவள் - மாதங்கி

ஒ) ஊகம் -  மதம்பிடித்த யானை

ஓ) கும்பகர்ணனின் மனைவி - துச்சலை

ஔ) வழுதுணங்கு - லகான் 

ஃ) வடிகயிறு- காதணி

க) முயலகன் - கத்தரிக்காய்

ங) கடநாகம் - எள்ளுருண்டை

ச) நோலை - கருங்குரங்கு

ஞ) சரஸ்வதியின் வீணை - வச்சிரச்சுவாலை

ட) தாடங்கம் - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி

(முன்-பின் குறிப்பு): 

1) ஒரு வேளை கைகள் அள்ளிய நீரின் வாசகரும், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் அமர்பவரும் ஒரே நேர்க்கோட்டில் வர நேர்ந்தால் இந்தப் பயிற்சி உதவக் கூடும்.

2) இது பதினெண் கீழ்க்கணக்கு அல்ல.

சரியாக விடையைப் பொருத்தி முடித்துவிட்டால் ஒரு குவளை குளிர்ந்த நீர் பருகவும். பின் காத்திருக்கவும். விடை தெரியாவிட்டால் கூகுளில் தேடி எழுத வேண்டாம். கிடைக்காது.
_____________________________________________________________

ஆஸ்தான கோலாகலம் சுவடி எண் 1327 சொல்லும் கால அளவைகள் பற்றி இந்தப் பத்தி. அழகழகான கால அளவுகள்.

இரு கண்ணிமை - ஒரு கைநொடி
இரு கைநொடி - ஒரு மாத்திரை
இரு மாத்திரை-  ஒரு குரு
பதினொரு குரு - ஒரு உயிர்
ஆறு உயிர் - ஒரு வினாழிகை
அறுபது வினாழிகை - ஒரு நாழிகை
ஏழரை நாழிகை - ஒரு சாமம்
மூன்று சாமம் - ஒரு பொழுது
இரு பொழுது - ஒரு நாள்
முப்பது நாள் - ஒரு திங்கள்
பன்னிரெண்டு திங்கள் - ஒரு ஆண்டு.

ஒரு குரு நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இனி யாரிடமும் ஒரு உயிர் வெய்ட் பண்ணுங்கன்னு உயிரை எடுக்கலாம்.
____________________________________________________________________

படித்துக்கொண்டே இருக்கிறேன். மலைப்புத் தீரவில்லை. 

”இந்தக் கணக்கதிகாரம் குண்டூர். வா. சங்கறப்பனார். 
எடுத்தவன் கோவதையை வதை செய்த தேசத்திலே போவான்” என்ற சாபத்துடன் குண்டூர். வா. சங்கறப்பனார் உத்தரவிட சுவடிகளில் பதிவாகியிருக்கிறது கணக்கும், காலமும்.

சுவடி எண் 930ல் ஒரு சுவாரஸ்யமான கணக்கோடு அதன் காலத்தை நமக்குக் காட்டும் மயங்க வைக்கும் மொழி.

”ஒரு செட்டிக்கு 7 ஆண் பிள்ளையளுண்டு. அந்தச் செட்டி சிறிது முத்து ஆசித்தி வச்சு சிவலோகப் பிராத்தியானான். அந்த முத்து மூத்தபிள்ளை கையிலே அகப்பட்டது. அவன் வசத்திலே இருக்கிற பிள்ளையும் ஒருவன் அறிஞ்சு, இரண்டு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. பின்னும் ஒருவன் அறிஞ்சு மூன்று பங்கு வைக்குமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. அந்தச் சேதி நாலு பேருமறிஞ்சு நான்கு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. அந்தச் சேதி அஞ்சு பேருமறிஞ்சு அஞ்சு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. பின்னும் ஒருவன் அறிஞ்சு ஆறு பங்கு வைக்குமிடத்திலும் ஒரு முத்து அதிகமிருந்தது. ஆகப் பின்னே அந்தச் சேதி ஏழு பேரும் அறிஞ்சு ஏழு பங்காகப் பகிருமிடத்தில் மிச்சமில்லாமல் சரியாக இருந்தது.

ஆனபடியினாலே செட்டியார் வச்சிப்போன ஆசித்தி இருந்த முத்து எத்தனை? மொத்த முத்து ---------.”

(சில முடிவுகள்: 

1. செட்டிக்கு ஏழு பிள்ளைகள் என்பதிலிருந்து கணக்கின் மேலும் முத்தின் மேலும் இருந்த ஆர்வம் குடும்பக் கட்டுப்பாட்டின் மீதில்லை என்பது உள்ளங்கை அம்லா.

2. ஒவ்வொருத்தருக்காக செட்டி விட்டுச் சென்ற ஆஸ்தியின் விவரம் தெரிந்தும் யாரும் இன்றைய டி.வி.யின் சீரியல்கள் போல அடுத்தடுத்த சகோதரர்களைப் போட்டுத் தள்ள விரும்பாமல் நேர்மையாய் முத்துக்களைப் பிரித்துக் கொண்ட தன்மை.

3. நல்ல வேளையாக ’மிஞ்சும் முத்தை யார் எடுத்துக்கொள்வது’ என்ற பெரும் பிரச்சினை வராத படிக்கு முன்கூட்டியே ஏழு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட தைரியத்தையும், அவர்களுக்கு ஒரு நாள் முத்துக்கணக்கு தெரிய நேரலாம் என்ற யூகத்தில் மிகச் சரியான எண்ணிக்கையில் முத்துக்களை ஆஸ்தியாக விட்டுச் சென்ற செட்டியின் தொலைநோக்குப் பார்வையையும்  பாராட்டுகிறது கை.அ.நீ. )

விடை தெரிந்தால் முத்துக்குப் பின்னாலிருக்கும் கோடிட்ட இடத்தில் நிரப்புக.

_______________________________________________________

வர்ட்டா?


**************************************************************************
ரு நாட்களுக்குப் பின் ஒரு இளங்காலையில் தமிழுலகத்தையே ஆட்டிப்படைத்த புதிருக்கான விடைகள் பலத்த பாதுகாப்புக்கு நடுவே வெளியாகத் துவங்குகின்றன. 

மனம் மகிழ்வடைந்த மக்கள் தமிழ் பிழைத்தது என கோஷங்கள் எழுப்பியபடியே சமீபத்தில் நிம்மதியாகக் கலைந்துசென்ற ஒரே நிகழ்வு இதுதான் என விக்கிபீடியா தெரிவிக்கிறது.  

அந்த விடைகள்:

அ) கர்ணனின் இயற்பெயர் -வஸுசேஷன் 
ஆ) ஜபாகுஸூமம் - செம்பருத்தி
இ) வீணையில் உறையும் தெய்வம் - மாதங்கி
ஈ) மார்க்கண்டேயனின் தந்தை - மிருகண்டூயன்
உ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- அர்ச்சுனன் (அர்ச்சுனன் பெற்ற சாபத்தின் மறுபிறவி) 
ஊ) தேவ குஸுமம் -  கிராம்பு
எ) திருதராஷ்டிரனின் ஒரே பெண் - துச்சலை
ஏ) சாளக்கிராமம் - கண்டகி (கண்டகி நதியில் வக்ர தந்தி என்ற பூச்சியின் கூடுதான் சாளக்கிராமம். அது சால மரங்கள் நிரம்பிய பகுதியாய் இருந்ததால் சாளக்கிராமம்.) 
ஐ) இலையையும் உண்ணாதவள் - அபர்ணா.(பர்ணா என்றால் இலைதழை. பர்ணசாலையின் origin)
ஒ) ஊகம் -  கருங்குரங்கு
ஓ) கும்பகர்ணனின் மனைவி - வச்சிரச்சுவாலை
ஔ) வழுதுணங்கு - கத்தரிக்காய்
ஃ) வடிகயிறு- லகான் 
க) முயலகன் - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி
ங) கடநாகம் - மதம்பிடித்த யானை
ச) நோலை - எள்ளுருண்டை
ஞ) சரஸ்வதியின் வீணை - கச்சபி
ட) தாடங்கம் - காதணி

செட்டி விட்டுச் சென்ற ஆசுத்தி 301 முத்துக்கள்.

பங்கெடுத்துக்கொண்ட எல்லோருக்கும் நன்றி.

301 என்று ஒரே போடு போட்ட கீதமஞ்சரிக்கும், அப்பாத்துரைக்கும் ராமானுஜம் விருது பகிரப்படுகிறது.

தனியே பதிலளித்த மாதங்கி மற்றும் அவருக்கு நிழலாக உதவிய பெற்றோர்களின் தமிழ் தைரியத்தைப் பாராட்டி அகத்தியர் விருது அளிக்கப்படுகிறது.

மற்றுமொரு பயிற்சியில் சந்திக்கும்வரை நிம்மதியாக இருக்கவும்.  

36 கருத்துகள்:

கே. பி. ஜனா... சொன்னது…

'அமுதுமிழும் தமிழ்' என்ன அழகான தலைப்பு!

சே. குமார் சொன்னது…

அருமையான தலைப்பு...
பொருத்துகவில் சில தெரிகிறது... பல தெரியவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்கிறேன்... விடை வரும் வரை நானும் காத்திருக்கிறேன்.

ஹ ர ணி சொன்னது…

சக்கப் போடு போடு ராஜா..(சுந்தர்ஜி)
உன் காட்டுல மழை பெய்யுது,,,

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,,,

உலகம் ஒருநாள் நீதிபெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்..

என்ன தவம் செய்தேன் (பதிவை அனுபவிக்க)

தேவனின் கோயிலிலே ஆயிரம் தீபங்களே...

சொல்லி அடிப்பனேடா....அடிச்சேன்னா...
நெத்தி அடிதானடா,,,

நான் நிரந்தரமானவன்
எந்தநிலையிலும் மரணமில்லை,,

காலத்தை வென்றவன் நீ,,,
காவியமானவன் நீ...

உங்கள் பதிவு என்னை அத்தனை உற்சாகம் கொள்ளவைக்கிறது சுந்தர்ஜி..

ஆண்டவன் படைச்சான்
எங்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்
(சுந்தர்ஜி பதிவை அனுபவிக்க)

எப்பவும் சீரியசா கருத்துரைக்காம இப்படியும் ஆனந்தமாக சொல்லலாம்ல நண்பா...

கீதமஞ்சரி சொன்னது…

அமுதுமிழும் தமிழ் - தலைப்பைச் சொல்லச் சொல்லி நாவினித்துக்கொண்டிருக்கிறது. தமிழின் அழகும் பெருமையும் சுவடிகளுக்குள் அடங்கிவிடாது, தங்கள் தயவால் எங்கள் எண்ணத்திலும் தஞ்சம். நன்றி சுந்தர்ஜி.

பொருத்துகவில் நான்கைந்துதான் தெரிகிறது. விடை வரும்வரை மனம் குடைந்துகொண்டே இருக்கும்.

முத்துக்களின் எண்ணிக்கை முந்நூற்றியொன்றென்று எண்ணுகிறேன். சரியா என்று அறிய ஆவல்.

அப்பாதுரை சொன்னது…

301

அப்பாதுரை சொன்னது…

பொருத்தமா ஒண்ணு கூட தெரியலிங்களே!
சங்கறப்பனார் முகத்தில விழிக்கறது டேஞ்சர் போல.
சுவாரசியமான பதிவு. இதுவும் சரஸ்வதி மஹால்னா பொறாமையில வெந்துருவேன்.

சுந்தர்ஜி சொன்னது…

தமிழை கடித்து ருசித்தமைக்கு நன்றி திரு. ஜனா. முயன்றால் விடை உங்களுக்கு வசப்படும் என நினைக்கிறேன்.

நன்றி சே.குமார். தெரிந்தவற்றைப் பகிருங்களேன்.

பாட்டெல்லாம் ரொம்ப நல்லாவே இருந்துச்சு பேராசிரியரே. ஆனா நீங்க க்ளாஸ் எடுக்கும்போது இப்பிடி ஒரு கேள்விக்கு உங்க மாணவர்கள் பதில் சொல்லாம கலாசலான்னு பாடி சமாளிச்சா உட்டுடுவீங்களா? இப்படியெல்லாம் நழுவ முடியாது ஹரணி.

க்ளாஸ் கீதமஞ்சரி.

செட்டியின் ஆசித்தியை சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்.

ஸ்வாரஸ்யத்துக்காக உங்கள் பதிலை நிறுத்திவைத்திருக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

அப்பாஜி.அதான் குளிர்ந்த நீர் ஒரு குவளை பருகச் சொன்னேனே? முதல் பத்தி நீங்கலாக ரெண்டாவது மூணாவது பத்திகள் மட்டும் சரஸ்வதி மஹால் சமாச்சாரம்தான்.

முதல் பத்தி கி.வா.ஜ.வுடைய விளக்கங்களிலிருந்து பொறுக்கியவை.

உங்க செட்டி கணக்கும் கரெக்டுங்க ஐயா.பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

நானும் ஹரணியை வழி மொழிந்து
நழுவி விடுகிறேன் TOUGH QUESTIONS,
சுந்தர்ஜி.முதல் கேள்விக்கு நான்கு கூட தேற வில்லை. செட்டிக் கணக்கு
பண்ணியா உயில் எழுதினார். மொழி நடை ரசித்தென். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

நிலாமகள் சொன்னது…

ப‌தினெட்டு பொருத்துக‌'வில் குருட்டாம் போக்கில் பொருத்தி மைன‌ஸ் மார்க் வாங்கிவிட‌க் கூடாதென்ற‌ முன் ஜாக்கிர‌தையுண‌ர்வில்(உறுதியாக‌ ச‌ரியாக‌ தெரிந்த‌வை வெகு சில‌வே என்ப‌தை எப்ப‌டியெல்லாம் ஜோடித்துக் கூற‌ வேண்டியிருக்கிற‌து!) அடுத்த‌ ப‌திவில் உங்க‌ விடைக‌ளை ச‌ரிபார்த்துக் கொண்டால் போச்சு.

சுவ‌டிகால‌ நேர‌ அள‌வுக‌ள் விய‌ப்பிலாழ்த்திய‌து.

செட்டி என்ன‌ ஒரு 49 முத்துக‌ள் வைத்திருப்பாரோ...

vasan சொன்னது…

நல்ல‌ வேளை, நீங்க‌ள் 'சூர்யா' சீட்டுக்கு (கோடி வெல்ல‌லாம்) வ‌ர‌லை. வ‌ந்திருந்தா?
ஹாட்சீட்டுக்கு வ‌ரும்‌ ஒரு ந‌ப‌ர் கூட‌‌ ஆயிர‌ம், இர‌ண்டாயிர‌த்துக்கு மேலே க‌ல்லா க‌ட்ட‌ முடியாது.

ஒரு 'குரு' தோராய‌மாக ந‌ம்ம‌ "நொடி" (செக்கெண்டு "66").

நான் இந்த‌ க‌ணக்குக்கு வ‌ர‌லை சுந்த‌ர்ஜீ.

"அமுதுமிழும்" ஆஹா..காளிதாச‌னுக்கு, ச‌ர‌ஸ்வ‌தி தாம்பூல‌ம் ஊட்டிய‌து ம‌ன‌தில் 'க‌ரை'கிற‌து.

Matangi Mawley சொன்னது…

Sirji ... எனக்கா இந்த list ல தெரிஞ்சது 6... மீதி அப்பாவும் அம்மாவும் சொன்னது... Answer எல்லாமே correct ஆ தெரியாது...But this is what we came up with in 18 minutes...

ANSWERS:

அ) கர்ணனின் இயற்பெயர் - வஸுசேஷன்
ஆ) ஜபாகுஸூமம் - செம்பருத்தி
இ) வீணையில் உறையும் தெய்வம் - மாதங்கி (My name! So I ought to know this)
ஈ) மார்க்கண்டேயனின் தந்தை - மிருகண்டூயன்
உ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- அர்ச்சுனன்
ஊ) தேவ குஸுமம் - . கிராம்பு
எ) திருதராஷ்டிரனின் ஒரே பெண் - துச்சலை (Starts with Du... All names of his kids start with Du...)
ஏ) சாளக்கிராமம் - கண்டகி
ஐ) இலையையும் உண்ணாதவள் - அபர்ணா (Parvati's severe fasting gave her this name I guess)
ஒ) ஊகம் - கருங்குரங்கு
ஓ) கும்பகர்ணனின் மனைவி - வச்சிரச்சுவாலை (... Sarama or something is Vibheeshan's wife's name n Kumbakarna's wife's name will be 'Vajra' Something.. This is the one that matches with the guess)
ஔ) வழுதுணங்கு - கத்தரிக்காய்
ஃ) வடிகயிறு- லகான்
க) முயலகன் - மதம்பிடித்த யானை (Demon under Natajraj's feet?)
ங) கடநாகம் - எள்ளுருண்டை
ச) நோலை - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி
ஞ) சரஸ்வதியின் வீணை - கச்சபி
ட) தாடங்கம் - காதணி (Amma has used this word when she told me the Abirami/Abirama battar's story)

Pls let know if I've passed?

சுந்தர்ஜி சொன்னது…

போகட்டும் பாலு சார். ஒரு நாள் பொறுத்துக்கோங்க. நாளைக்கு பதில் சொல்லிடறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் முன்ஜாக்கிரதை ரசிக்கவைக்கிறது நிலாமகள்.

அடுத்து நம் நீட்டல் அளவைகளை எழுத இருக்கிறேன்.

செட்டியின் ஆஸ்தி 49 எனில் அவை தப்பு முத்துக்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

வாசன்ஜி! நீங்கள் முயற்சிப்பீர்கள் என நினைத்தேன். இப்பிடி ஜகா வாங்கிவிட்டீர்களே? இருந்தாலும் காளிதாஸனை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

கதை சொல்லும் பாரம்பர்யம் தொடர்ந்திருக்கும் வீடுகளில் கிட்டத்தட்ட பதில் தெரிந்திருக்கும்.

மாதங்கி! அசத்தீட்டீங்க குடும்பமா.

உங்க தமிழ் மார்க்- 15/18. அதில் உங்களோடது 6/18. உங்க அப்பா-அம்மாவோடது 9/18.

மேத்ஸ் பேப்பரை ப்ளாங்கா ஆன்ஸர் எழுதாமக் கொடுத்துட்டீங்களே?

விபீஷணனின் மனைவி சராமா இல்லை. சாமை.கும்பகர்ணனின் மனைவி பெயரை யூகத்தில் சொன்னாலும் பதில் சரியே.

தப்பான பதில் எது என்பதை நாளை சொல்லுவேன்.

பாராட்டுக்கள்.பாராட்டுக்கள்.

ஹ ர ணி சொன்னது…

சுந்தர்ஜி...

தபா தபா இப்படிக்கேள்வி கேக்கக்கூடாது ஆங்...எதையும் அனுபவிக்காங்காட்டி லைப் ரிஸ்க் ஆயிடும்பா.. அருமையான செய்தி சொல்லியிருக்கே.. அதை எஞ்சாய் பண்ணணும்பா.. அதுலே கீது பாரு சொகம். உங்க சொகம் எங்க சொகம் இல்லே...சும்மாவா சொன்னாஙக்.. பெரிசுங்கள மதிங்க மதிங்க.. அவஙகள எதுத்து கேக்காதீங்கன்னு.. நமக்கு முன்னாடி வாழ்ந்த பெரிசுங்க பெரிசுங்கதாம்பா.. சரியா எடுத்துக்காட்டிப்புட்டே போ.. நல்லா ஒனக்கு சோக்கான விருது தரலாம்பா.. என் மைண்ட் அனுபவிக்கற சொகத்தைவிட உனக்குவிருது பெரிசு... வுட்டூட்டேம்பா. நல்லாயிருப்பா..

அப்பாதுரை சொன்னது…

என்னமா சமாளிக்கிறாங்க நிலாமகள்!
மாதங்கி impresses, as always. இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்காங்களே!

சுவடியல்லாம் ஓலையா இல்லை துணி, காகிதமா? அதுல எழுத்து நவீன தமிழா இல்லை பழைய வடிவமா? எப்படிப் படிக்கிறீங்க? அப்படியே படிக்க முடியுமா? ஒளியடிக்கணுமா? யாராவது ஏற்கனவே translate/transform செஞ்சு வச்சிருக்காங்களா? சுவடி விவரம் சுவாரசியமா இருக்கும் போலிருக்கே?

சுந்தர்ஜி சொன்னது…

ஹரணி! எப்டியோ ஜூட் விட்டுட்டு விதவிதமா கத சொல்றபா.

இருந்தாங்காட்டியும் குரு வாக்கா இத வெச்சுக்கறேம்ப்பா.

சுந்தர்ஜி சொன்னது…

அப்பாஜி! சுவடின்னதும் ரொம்ப பின்னாடி போயிட்டீங்களே! சரஸ்வதி மஹால்ல நீங்க சுவடிகளைப் பார்க்கலாம். அநேகமா எல்லாத்தையுமே புத்தக வடிவுக்குக் கொண்டு வந்துட்டாங்க.ஆனாலும் ஏராளமான அச்சுப் பிழைகளுடன்.

இன்னொரு வருத்தம் என்னன்னா நம்ம பழைய சொத்துக்கள் எதுன்னு மக்களுக்குத் தெரியாம அவங்க பதிப்பிச்ச மருத்துவம், ஜோதிடம், சமையல் கலை, நாட்டிய சாஸ்த்ரம் இன்னும் விதவிதமான புத்தகங்களையெல்லாம் தள்ளுபடி விலையில் வித்துக்கிட்டிருக்காங்க.

சரஸ்வதி மஹால் உள்ளே நுழையும்போது ஆனந்தமும், வெளியே வரும்போது ரத்தக்கண்ணீரும் வரவழைக்கும் அபூர்வமான ஸ்தலம்.

சுந்தர்ஜி சொன்னது…

பின்னூட்டத்தை மட்டும் கவனித்து விடையறிய முற்படுபவர்கள் பார்வையில் படும் பொருட்டு இப்பின்னூட்டம்.

இரு நாட்களுக்குப் பின் ஒரு இளங்காலையில் தமிழுலகத்தையே ஆட்டிப்படைத்த புதிருக்கான விடைகள் பலத்த பாதுகாப்புக்கு நடுவே வெளியாகத் துவங்குகின்றன.

மனம் மகிழ்வடைந்த மக்கள் தமிழ் பிழைத்தது என கோஷங்கள் எழுப்பியபடியே சமீபத்தில் நிம்மதியாகக் கலைந்துசென்ற ஒரே நிகழ்வு இதுதான் என விக்கிபீடியா தெரிவிக்கிறது.

அந்த விடைகள்:

அ) கர்ணனின் இயற்பெயர் -வஸுசேஷன்

ஆ) ஜபாகுஸூமம் - செம்பருத்தி

இ) வீணையில் உறையும் தெய்வம் - மாதங்கி

ஈ) மார்க்கண்டேயனின் தந்தை - மிருகண்டூயன்

உ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- அர்ச்சுனன் (அர்ச்சுனன் பெற்ற சாபத்தின் மறுபிறவி)

ஊ) தேவ குஸுமம் - கிராம்பு

எ) திருதராஷ்டிரனின் ஒரே பெண் - துச்சலை

ஏ) சாளக்கிராமம் - கண்டகி (கண்டகி நதியில் வக்ர தந்தி என்ற பூச்சியின் கூடுதான் சாளக்கிராமம். அது சால மரங்கள் நிரம்பிய பகுதியாய் இருந்ததால் சாளக்கிராமம்.)

ஐ) இலையையும் உண்ணாதவள் - அபர்ணா.(பர்ணா என்றால் இலைதழை. பர்ணசாலையின் origin)

ஒ) ஊகம் - கருங்குரங்கு

ஓ) கும்பகர்ணனின் மனைவி - வச்சிரச்சுவாலை

ஔ) வழுதுணங்கு - கத்தரிக்காய்

ஃ) வடிகயிறு- லகான்

க) முயலகன் - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி

ங) கடநாகம் - மதம்பிடித்த யானை

ச) நோலை - எள்ளுருண்டை

ஞ) சரஸ்வதியின் வீணை - கச்சபி

ட) தாடங்கம் - காதணி

செட்டி விட்டுச் சென்ற ஆசுத்தி 301 முத்துக்கள்.

பங்கெடுத்துக்கொண்ட எல்லோருக்கும் நன்றி.

301 என்று ஒரே போடு போட்ட கீதமஞ்சரிக்கும், அப்பாத்துரைக்கும் ராமானுஜம் விருது பகிரப்படுகிறது.

தனியே பதிலளித்த மாதங்கி மற்றும் அவருக்கு நிழலாக உதவிய பெற்றோர்களின் தமிழ் தைரியத்தைப் பாராட்டி அகத்தியர் விருது அளிக்கப்படுகிறது.

மற்றுமொரு பயிற்சியில் சந்திக்கும்வரை நிம்மதியாக இருக்கவும்.

G.M Balasubramaniam சொன்னது…

சுந்தர்ஜி, செட்டி கணக்கின் பதில் சரிதானா.? 301 முத்துக்களை ஏழுபேர் பிரித்தால் மீதம் வருகிறதே.?IS THERE ANY CAT IN THE QUESTION.?

சுந்தர்ஜி சொன்னது…

43*7=301. மிச்சம் எதுவுமில்லையே பாலு சார்.

G.M Balasubramaniam சொன்னது…

எண்ணிக்கையில் எங்கோ கோட்டை விட்டு...I AM SORRY சுந்தர்ஜி.301-ல் 280 போனால் மீதி 31 -என்று தவறு செய்து மீதி வருகிறது என்று கூறி விட்டேன். சரியான ....என்ன சொல்ல.....?. .

சுந்தர்ஜி சொன்னது…

இதெல்லாம் சகஜம் பாலு சார்.தப்புப் பண்ணிட்டு நாக்கக் கடிச்சுக்கறது ஒரு தனி சுகம் சார். நான் அடிக்கடி பண்ணுவேன்.

கீதமஞ்சரி சொன்னது…

விடை சரியாக இருப்பதில் மகா சந்தோஷம் எனில் தங்களிடமிருந்து பாராட்டு வாங்கியிருப்பது பெரும் சந்தோஷம். என்னவோ, புதிர் என்றாலே மனம் துள்ளிக்கொண்டு விடை காண முயல்கிறது. பல சமயம் நிலாமகள் போல் சாமர்த்தியமாய் பொறுமை காத்தாலும், சிலபோது தவ்விக்குதித்து வெளிவந்துவிடுகிறது. பொருத்துகவில் ஐந்து மதிப்பெண்தான் எனக்கு. அடிக்கடி சுவடிக்கட்டுகள் பிரிபடட்டும்.

நிலாமகள் சொன்னது…

ஐந்து பேர் பிரித்துக் கொள்ளும் போது ம‌ட்டும் 49 எண்ணிக்கை உதைத்த‌து. மேலும் யோசிக்க‌ சோம்ப‌லுற்று (ச‌ட்டியில் இல்லாத‌தை அக‌ப்பை ச‌மாளிக்கிற‌து... ம‌றுப‌டியும்:) )அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு ப‌ல்ப் வாங்கிக் கொண்டேனே... அப்பாதுரை சாரும் கீத‌ம‌ஞ்ச‌ரியும் தாங்க‌ளும் வாஞ்சையுட‌ன் என்னை ர‌சித்த‌து ம‌கிழ்வை த‌ந்த‌து. க‌ள‌த்தில் இற‌ங்குவ‌தை விட‌ வேடிக்கை பார்ப்ப‌து ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் சுவை கூட்டுகிற‌து ஜி.அதுவும் சான்றோர் ச‌பையில் ப‌வ்ய‌மாக‌வ‌ல்ல‌வா இருக்க‌ வேண்டும்... என்போன்றோர்.

நிலாமகள் சொன்னது…

இரு நாட்களுக்குப் பின் ஒரு இளங்காலையில் தமிழுலகத்தையே ஆட்டிப்படைத்த புதிருக்கான விடைகள் பலத்த பாதுகாப்புக்கு நடுவே வெளியாகத் துவங்குகின்றன.

மனம் மகிழ்வடைந்த மக்கள் தமிழ் பிழைத்தது என கோஷங்கள் எழுப்பியபடியே சமீபத்தில் நிம்மதியாகக் கலைந்துசென்ற ஒரே நிகழ்வு இதுதான் என விக்கிபீடியா தெரிவிக்கிறது.//

:))))

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கீதமஞ்சரி. தொடர்ந்து எழுதுவேன் உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப.

சுந்தர்ஜி சொன்னது…

நிலாமகள் அடக்கமாயிருப்போரிடம்தான் ஆழம் அதிகமிருக்குமென நன்குணர்ந்தவன் நான்.ஏதோ சந்தர்ப்பம் காலம் உங்களுக்கு வாய்க்கவில்லை. இல்லாட்டி பிச்சு உதறியிருக்கமாட்டீங்களா பிச்சு.

என் சேஷ்டையையும் ரசித்த :)))))க்கு ஒரு தனி நன்றி.அது மாதிரியான உயர்வுநவிற்சி எனக்குப் பிடித்த வடிவமாக்கும்.

பத்மா சொன்னது…

ஐயையோ எல்லாத்துக்கும் பதிலும் போட்டுடீங்க போங்க !அடுத்த முறை பாருங்க நான் தான் முதல்.

பத்மா சொன்னது…

அமுதுமிழும் ஆஹா ஆஹா அமுதம்

அப்பாதுரை சொன்னது…

ஆ! விருதா! குடுங்க குடுங்க. நன்றி.

அப்பாதுரை சொன்னது…

GMB சார்.. உங்க வீட்டுல பெஞ்சு இருக்கா?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பத்மா.

அப்பாஜி! சகஜம்தானே இது.பென்ச் பாலு சார் வீட்லயும் இல்லயாம்.சரியான கணக்கு வாத்யாரா இருப்பீங்க போலிருக்கே.

raji சொன்னது…

அம்மாடி!பிரமிச்சுப் போயிட்டேன் ஜி! ஆனா லேட்டா வந்துட்டேன்.பொருத்துகல எனக்கு இரண்டே இரண்டுதான் தெரியலை

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator