ரகசியம் பற்றிய சில குறிப்புகள்I
நீ சொல்லாத ரகசியங்கள் 

மீதான யூகங்கள்
ஏதுமில்லை எனக்கு.

நீ சொல்ல விரும்பாதவற்றின்
மீதும் அப்படியே.

II
ரகசியங்கள் தீட்டுகின்றன 

எல்லோரும் விரும்பும்
வர்ணங்களாலான ஓவியத்தை.

என்றாலும்-
யாரும் விரும்புவதில்லை

தனக்குத் தெரியாமல்
வரையப்படும் ஓவியத்தை.

III

நழுவாத முடிச்சிட்டுத்தான் மறைகிறேன் 
ஒவ்வொரு முறையும்.

ஆனாலும் 
வெட்கங்கெட்டு அவிழ்கின்றன

ரகசியங்களால் நெய்யப்பட்ட
ஆடைகளின் முடிச்சுக்கள்.

IV
நினைவுறுத்துகின்றன-

காற்றைத் துறந்த பலூனைக்
கசிந்த ரகசியங்களும்-

காற்றுப் புகாதவற்றை
உருவாகாத ரகசியங்களும்-

ஊதிப் பருத்தவற்றை
வெடிக்க இருப்பவையும்.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல வரிகள்... பாராட்டுக்கள்...

பிடித்த வரிகள் :
/// யாரும் விரும்புவதில்லை
தனக்குத் தெரியாமல்
வரையப்படும் ஓவியத்தை. ///

பகிர்வுக்கு நன்றி ஐயா !


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
கோவை மு சரளா இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை நண்பரே ..

உள்ளீடுகளில் படியும் படிமங்களை

உணர்தல் எளிதல்ல ...........

எதார்தங்களில் கலந்து கொடுப்பதே வாழ்க்கை .

உங்கள் நடை ரசிக்க செய்கிறது
G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கவிதையும் கோவை .மு. சரளாவின் பின்னூட்டமும் தெரிவிக்கும் ரகசியம் சொல்ல விரும்பாததா.தவறாக யூகிக்க விருப்பமில்லை. கவிதை சிறப்பாக இருக்கிறது என்றால் அது ஒரு UNDERSTATEMENT ஆக இருக்கும்.
வேல்கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
மெல்லிய, வலுவான நூலில் விழுந்த முடிச்சுகள்.

அவிழ்க்கவும் முடியாமல், அறுக்கவும் முடியாமல் தவிக்கிறேன் ஜி.
ரிஷபன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா..

ரகசியமாய் அல்ல.வெளிப்படையாகவே எனது பிரமிப்பும் பாராட்டும்.
நிலாமகள் இவ்வாறு கூறியுள்ளார்…
நான்காவது முத்தாய்ப்பு வெகு அசத்தல்!
விநாயகமூர்த்தி இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு பலூனுக்குள் இவ்வளவு தத்துவமா?அடடா!அற்புதமான கவிதை வாசித்த த்ருப்தி.

வானளவு வாழ்த்துக்கள்.
மதுமிதா இவ்வாறு கூறியுள்ளார்…
ரகசியங்கள் குறித்து
இவ்வளவு
ரகசியங்களா?
ஹேமா இவ்வாறு கூறியுள்ளார்…
ரகசியம்...
பரம ரகசியம்...
கவிதையில் ரகசியம்.

அற்புதமான ரகசியங்களின் தொகுப்பு சுந்தர்ஜி.
பத்மா இவ்வாறு கூறியுள்ளார்…
ரகசிய கவிதைகள் ரசனை.

ரகசியம் வேண்டும் போலவும்,அவை உடனே ரகசியமாய் இல்லாமல் போக வேண்டும் என்பதையும் விழைகிறது உள்ளம்.

ரகசியம் வாதைதான்.
இயற்கைசிவம் இவ்வாறு கூறியுள்ளார்…
ரகசியங்களின் அம்பலம் பிரமிப்பு.
நாணற்காடன் இவ்வாறு கூறியுள்ளார்…
ரகசியம் மிக மிக அருமை தோழர்.
யாழி இவ்வாறு கூறியுள்ளார்…
யூகங்களற்ற ரகசியங்களும், காற்றுப் புகா,வெடித்த பலூன்களும் அருமையான குறியீடு.

அசத்தல் ஜி.
பால கணேஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
இங்கே நான் பார்க்கும பின்னூட்டங்களே பிரமிப்பை ஊட்டுகின்றன என்றால்... கவிதைகளைப் பற்றி நான் என்ன சொல்ல... அருமை ஐயா.
கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
மலைத்து நிற்கிறேன், ரகசியங்களின் ரகசியங்களை இப்படி அப்பட்டமாகப் போட்டுடைத்தக் கவிதைகளைக் கண்டு. நான்காம் கவிதை உச்சம். மனம் நிறைந்த பாராட்டுகள் சுந்தர்ஜி.
Siva sankar இவ்வாறு கூறியுள்ளார்…
பாரட்ட வயது இல்லை
வார்த்தைகளும் இல்லை
திரு வண்ணதாசன் அவர்களின்
ஒரு பக்கம் வந்ததது போல ஒரு உணர்வு
வாழ்க வளமுடன்
தினேஷ்-பாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
அழகு
இரசிகை இவ்வாறு கூறியுள்ளார்…
ssshhhh..!

பிரபலமான இடுகைகள்