கொரேசான் நாட்டின் அரசன் அமீர். அவன் மிகுந்த ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான். அவன் போருக்குப் புறப்பட்டால் அவனுடைய சமையலறைக்கு வேண்டிய பாத்திரங்கள், தட்டுகள் முதலியவை முன்னூறு ஒட்டகங்களில் போகும்.
ஒரு சமயம் அவன் கலீபா இஸ்மாயிலால் சிறை செய்யப்பட்டான். துரதிர்ஷ்டம் வந்தவனுக்கும் பசி இருக்கிறதே! ஆகவே, அமீர் பக்கத்தில் இருந்த தன்னுடைய தலைமைச் சமையற்கானைக் கூப்பிட்டுத் தனக்கு உணவு தயாரிக்கும்படிச் சொன்னான்.
சமையலறையில் ஒரே ஒரு துண்டு இறைச்சி மட்டும் இருந்தது. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்தான் சமையற்காரன். பிறகு கறிக் குழம்பிற்குச் சிறிது சுவையூட்ட ஏதாவது காய்கறி கிடைக்குமா என்று பார்க்க வெளியே சென்றாஆன்.
அந்த வழியாகப் போன நாய் ஒன்று இறைச்சியின் மணத்துக்கு அங்கு வந்து, சட்டியினுள் தலையை விட்டது. சட்டி சுடவே, உடனே தலையை வெளியே இழுத்தது. பரபரப்புடன் தலையை இழுத்தபோது சட்டி தலையில் மாட்டிக்கொண்டது. நாயினால் சட்டியை உதற முடியவில்லை. அது கலவரமடைந்து சட்டியோடு ஓடியது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமீர் விழுந்து விழுந்து சிரித்தான். அப்போது அங்கு அவனைக் காவல் காத்துக் கொண்டிருந்த அதிகாரி,” நீர் வருத்தப்படுவதற்கு எவ்வளவோ காரணமிருக்க, இப்போது ஏன் சிரிக்கிறீர்?” என்று கேட்டான்.
அமீர் அவனுக்கு ஓடுகிற நாயைக் காட்டி, ’இன்று காலையில்தான் என்னுடைய சமையல் சாமான்களைச் சுமக்க முன்னூறு ஒட்டகங்கள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது ஒரே ஒரு நாய் என் மடப்பள்ளி முழுவதையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறது. இதை நினைத்துத்தான் சிரிக்கிறேன்”, என்றான்.
அவ்வளவு கஷ்டங்களுக்கும் இடையில் அவனால் சிரிக்க முடிந்தால், அதை விடச் சிறிய கவலைகளின் போது, நம்மால் ஒரு கீற்று புன்னகைக்க முடியாதா?
============================
கவிஞன் அபு சையத், கடும் நோயுடன் படுத்திருக்கிறான் என்று கேள்விப்பட்ட அவனுடைய நண்பர்கள், அவனுடைய உடல் நலனைப் பற்றி விசாரித்துப் போக வந்தனர். வாசலில் அவனுடைய மகன் அவர்களை வரவேற்றான்.அவனுடைய உதட்டில் குறுநகை தெரிந்தது. நோயாளிக்குக் கொஞ்சம் சுகம் ஏற்பட்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.
நண்பர்கள் எல்லாரும் நோய்வாய்ப்பட்டிருந்த கவிஞனின் அறைக்குள் வந்தார்கள். எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக அவன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் வியப்படைந்தார்கள். அன்று நல்ல வெயில்; அதனால் கவிஞனுக்கு உறக்கம் வந்துவிட்டது. மற்றவர்களும் உறங்கினார்கள்.
மாலை நெருங்கியதும் எல்லாரும் எழுந்தார்கள். அபு சையத் நண்பர்களுக்கெல்லாம் சிற்றுண்டி தருவித்தான். அறையில் ஊதுவத்தி கொளுத்தி வைக்கச் சொன்னான். அறையில் நறுமணம் கமழ்ந்தது.
அபு சையத் சிறிது நேரம் ப்ரார்த்தனை செய்து விட்டுத் தானே இயற்றிய இந்தப் பாடலைப் பாடினான்.
துயரம் வந்த போது உளந்தளறாதே முற்றிலும்
மகிழ்ச்சியான நேரம் வந்து அதை மாற்றிடும்;
எரிக்கும் அனற்காற்று வீசலாம்.
ஆனால் அதுவும் தென்றலாக மாறும்;
கரிய மேகம் எழலாம், ஆனால்
அதனால் வெள்ளம் வராது;
தீப்பிடித்துக் கொண்டாலும் பேழையையும்
பெட்டகத்தையும் தொடாமலேயே வந்து போகலாம்.
வேதனை வரும், போகும்.
துன்பம் வந்தபோது பொறுமையோடிரு,
ஏனெனில் காலம் அற்புதங்களை நிகழ்த்தும்.
இறைவனது சாந்தியிலிருந்து எத்தனையோ
ஆசீர்வாதங்கள் வரும்.
அவனுடைய நண்பர்கள் எல்லாரும் நம்பிக்கயூட்டும் இந்தப் பாடலைக் கேட்டு புதிய மகிழ்ச்சியும், பலமும் பெற்று அவரவர் வீடு போய்ச் சேர்ந்தார்கள். இவ்வாறு நோயாளி ஒருவன் உடல் நலத்துடன் இருந்த தப்னது நண்பர்களுக்கு உதவினான்.
ஒரு தீபத்தின் சுடர் இன்னொரு தீபத்தை ஏற்றுவது போல், துணிவுடைய ஒருவன் பிறரிடத்தில் துணிவை உண்டாக்குகிறான்.
======================
8 கருத்துகள்:
// ’இன்று காலையில்தான் என்னுடைய சமையல் சாமான்களைச் சுமக்க முன்னூறு ஒட்டகங்கள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது ஒரே ஒரு நாய் என் மடப்பள்ளி முழுவதையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறது. இதை நினைத்துத்தான் சிரிக்கிறேன்”//
இதைப்படித்த நானும் சிரித்தேன்.
//இவ்வாறு நோயாளி ஒருவன் உடல் நலத்துடன் இருந்த தனது நண்பர்களுக்கு உதவினான்.//
இரண்டாவது கதையும் நல்லா இருக்கு, சார்.
பகிர்வுக்கு நன்றிகள்.
ஒரு தீபத்தின் சுடர் இன்னொரு தீபத்தை ஏற்றுவது போல், துணிவுடைய ஒருவன் பிறரிடத்தில் துணிவை உண்டாக்குகிறான்.
நம்பிக்கை தரும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
அருமை ஐயா நன்றி
இரண்டு செய்திகளும் அருமை...
வாழ்த்துக்கள் அண்ணா.
ஒரு தீபத்தின் சுடர் இன்னொரு தீபத்தை ஏற்றுவது போல், துணிவுடைய ஒருவன் பிறரிடத்தில் துணிவை உண்டாக்குகிறான்.//
Enthusiasm is really infectious.
A smile does so.
subbu thatha.
அருமையான பகிர்வு....
//துயரம் வந்த போது உளந்தளறாதே முற்றிலும்
மகிழ்ச்சியான நேரம் வந்து அதை மாற்றிடும்;//
மிகவும் பிடித்த வரிகள்.... நான் உங்கள் அனுமதியோடு சேமித்துக் கொண்டேன்!
துன்பம் வரும்போது பொறுமையுடன் இருந்தால் காலம் அற்புதங்களை நிகழ்த்தும்
நம்பிக்கை தரும் கதைகள் . நன்றி சுந்தர்ஜி.
கருத்துரையிடுக