30.11.10

ஆசான்


என் தமிழாசிரியர் ஆரோக்கியசாமியை பற்றி நேற்று என் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

எழுபதுகளின் இறுதி வருடங்களில் என் ஒன்பதாவது பத்தாவது வகுப்புகளின் தமிழ் ஆசிரியராக என்னை ஆசீர்வதித்தவர் இந்த ஜென்மத்தின் என் பெரும் புண்ணியமான திரு.ஆரோக்கியசாமி.

அவர் மாதிரித் தமிழாசிரியர்களைப் பார்ப்பதும் அவர்கள் கற்றுத்தர தமிழ் கற்பதும் பெரும் பாக்கியம். அல்லது பூர்வ ஜென்ம புண்ணியம்.

கம்பராமாயணமும் பாஞ்சாலிசபதமும் அவர் வாயால் கேட்க மணக்கும்.

பகுபத உறுப்பிலக்கணம் அவர் நடத்தி அந்த வகுப்பில் புரியாத மாணவர்கள் இருக்கவாய்ப்பிலை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போதெல்லாம் பகுபத உறுப்பிலக்கணம் சொல்லித்தரப்படுகிறதா-சொல்லித் தருமளவில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா? சந்தேகம்தான்.

ஒரு கணித வகுப்பின் சுவாரஸ்யம் தமிழ் வகுப்பில் பரவும் ஆச்சர்யமும் நிகழும்.

அசை, சீர், நேர் நேர்-தேமா, நிறை நேர்-புளிமா என்று தொடங்கி கூவிளம் கருவிளம் தேமாங்கனி,புளிமாங்கனி என்று அந்த வாய்ப்பாடு எப்போது தமிழ் இலக்கண வகுப்புத் துவங்கும் என்ற பரபரப்பை விதைக்கும்.

சந்திப்பிழையை அவர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்.

சீதாப்பிராட்டியாகவும் சகுந்தலையாகவும் திரௌபதியாகவும் பெண்கள் பாத்திரங்களில் அவர் புகுந்து வெளிப்படுவதைக் காணாத கண்கள் வெறும் புண்களென்றுதான் சொல்வேன்.

என் எதிர்காலம் குறித்தும் என் நாளையக் கல்வி குறித்தும் திட்டமிடுதலில் என் பதிமூன்று வயது மகனின் முதிர்ச்சி எனக்கு அப்போது இருந்திருக்குமானால் தமிழை நான் இன்னும் அதிகமாய் உணர்ந்திருக்கும் பேறு கிடைத்திருக்கும்.

இப்போது ஆசிரியனாய் நான் ஒரு நாளேனும் வாழவேண்டுமென்கிற என் தாகம் தீர்ந்திருக்கும்.

இரு ஆண்டுகள் மட்டுமே - மணிக்கணக்கில் அதிகம் போனால் எழுபத்து ஐந்து மணிநேரங்கள் மட்டுமே நிகழ்ந்த அவரின் உறவால் என்னால் தமிழில் சிந்திக்கவும் எழுதவும் பிழையின்றிப் பேசவும் என் 45வயது வரை விடாப்பிடியாய்த் தமிழைப் பிடித்துத் தொங்கவும் முடியுமானால் அவரின் ஆளுமை என்ன என்று நான் வகுப்பெடுக்கத் தேவையில்லை.

அவரைத் தேடிப் போய்ப் பார்த்து அவரை ஆரத் தழுவி தமிழின் மேல் எனக்கு இத்தனை ஈடுபாடும் ஆனந்தமும் ஏற்படக்காரணமாயிருந்த போதிப்பின் பாதங்களில் வீழ்ந்துகிடக்க விரும்புகிறேன்.

நான் எழுதிய கவிதைகளைக் காட்டி அதில் திக்குமுக்காடி என்னை உச்சிமுகர விழைகிறேன்.

எனக்குத் தெரியும் எப்போதாவது இப்படி வருவாயென்று அலட்சியமும் பெருமையும் ததும்ப என்னைப் பார்க்க தாகம் கொள்கிறேன்.

இந்த வயதில் அவரின் கீழ் அமர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணாக்கனின் கூச்சங்களை உதறி மறுபடியும் அவரின் தமிழில் குளிக்க நினைக்கிறேன்.

இதையெல்லாம் கொஞ்சமும் விரும்பாதவராய் என் ஆசான் என்னை விட்டுச் சென்றுவிட்டார்.

எனக்கு மீனைத் தராது மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்த-
என்னை காலத்தின் கைகளில் பாறையாய் அல்லாது
கூழாங்கல்லாய் மாற்றக் காரணமாயிருந்த-
அந்த மஹானுபாவனுக்காய்-
இந்த வரிகளில்
நான் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறேன்.

7 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

மனம் தொடுவதாய் இருந்தது எழுத்து.. இது போல வேலை கிடைத்ததும் பார்க்க நினைத்த ஆசிரியர் இறந்து போன துயரம் எனக்கும் உண்டு.

நிலாமகள் சொன்னது…

அற்புதமான நினைவஞ்சலி! நெகிழ வைத்த எழுத்துகள். சில சமயம் சிலரை சந்தித்தால் பரவாயில்லை என்ற பேரவா எழும்போதே காலன் நம்மை முந்திக்கொண்டு அங்கு சென்று விடுவது பெருஞ்சோகம்.ஆரோக்கிய சாமி ஐயா உங்களுள் தமிழ் விதைத்த வகுப்பறை நோக்கி மானசீகமாய் வணங்கி நிற்கிறேன்...

ரிஷபன் சொன்னது…

நல்லாசிரியருக்கு என் அஞ்சலியும்.
சந்தோஷமாய் இருக்கிறது ஒரு விதத்தில்.. நல்ல விஷயங்களைப் பற்றி படிக்கவே முடியாதோ.. என்கிற குறை தீர்ந்தது.. கூடவே அகக்கண்ணும் திறந்தது.. நல்லவர்களை இருக்கும் போதே சிலாகிக்க வேணுமாய்..

vasan சொன்னது…

மாண‌க்க‌ன் த‌யாராகும் போது குரு கிடைக்கிறார்.
குரு தேடி மாணாக்க‌ன் கிடைப்ப‌தில்லை எனக் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.
அன்றைய குரு, மாணாக்க‌ர்க‌ளின் ப‌ர‌ந்த‌ உற‌வு ம‌காபார‌த்தைப் போல் எங்குமில்லை.
ஒரே குரு, ப‌ல‌ப்ப‌ல‌ வ‌கையாய் மாண‌வ‌ர்க‌ள். மானசீக‌மாய் க‌ற்ற‌வ‌னுக்கு
வ‌லக்கை பெருவிர‌ல் காணிக்கையாய் போன‌ துய‌ர‌ம். குருவின் தூக்க‌ம்
க‌லைய‌க் கூட‌தென‌ தொடை வ‌லி தாங்கிய‌‌வ‌னுக்கு, க‌ற்ற‌ வித்தை அகால‌த்தில் வில‌க‌ச் சாப‌ம் ப‌ரிசாய். க‌ற்பித்த‌வ‌னையே, த‌ரும‌ம் த‌வ‌றிக் கொன்ற‌ த‌ர்ம‌ன். இன்று ஆசிரிய‌ர்க‌ளில் ப‌ல‌ர் க‌ட‌மைக்காய், க‌ட‌னுக்காய், கூலிக்காய், குடுப‌த்திற்காய் தொழில் புரிகின்றன‌ர்.
உங்க‌ளின் தேட‌லுக்கு உக‌ந்த‌ குரு கிட்டியிருக்கிறார்.
"தீதும் ந‌ன்றும் பிற‌ர் செய்ய‌ வாரா

Vel Kannan சொன்னது…

குருவுக்கும் உங்களுக்கும் வந்தனம்

MANIAJITH007 சொன்னது…

நிச்சயமாக எனது ஆசிரியர்களை நினைக்கயில் இப்போது மிஞ்சுவது நினைவுகளும் கண்ணீரும்

ஹேமா சொன்னது…

குருவை நினைக்கும் மனிதிற்கே
என் வணக்கங்கள் !

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator