
I
விடை பெறுகிறேன்.
உதிர்வின் சுவை
உதிர்வின் சுவை
அறியாது உதிரும்
பழுத்த இலைபோல
மரத்திலுமில்லாது
மண்ணையும் தொடாது
காற்றில் மிதந்தபடியே
நிகழட்டும் என் விடைபெறல்.
II
நினைத்ததை மறப்பதும்
நினைக்காததைச்
சொல்வதுமாகப்
படர்கிறது முதுமையின்
சலிப்பூட்டும் இசை.
திறக்க மறுக்கிறது
நினைவின் துருப்பிடித்த தாழ்.
மூடவியலாது திறந்துகிடக்கிறது
மறதியின் நெடுங்கதவு.
5 கருத்துகள்:
நாற்பதில் எப்படி, என்பதுகளின் முதிர் ஞானம்!!
எல்லாவற்றிலும், "டபுள் புரமோஷனா", சுந்தர்ஜி?
'அப்போதைக்கு' இப்போதே சொல்லி வெச்சாச்சா ...
முதல் பகுதி அருமை.கதவும் தாளும் உங்கள் கவிதைகளில் அடிக்கடி வருவதாக எழுதப்படக் காத்திருக்கும் புதிய படிமங்கள் புகார் செய்கின்றனவாம்.கவனியுங்கள்.
வசந்தமும்
இலையுதிர் காலமும்
வாழ்வின்
கொண்டாட்டம்?
காற்றில் மிதந்தபடியே ஒரு விடைபெறல்....எவ்ளோ அழகாயிருக்கும் !
கருத்துரையிடுக